எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா பேசுகிறார்

 கனடாவில் வதியும் எழுத்தாளரும் ஆசிரியருமான ஶ்ரீரஞ்சனி


விஜேந்திரா அவுஸ்திரேலியா வந்திருக்கிறார். 

அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் வீடியோஸ்பதி காணொளித் தளத்துக்காகவும் வானலையில் சந்தித்திருந்தோம்.
அந்த நேர்காணலின் இணைப்பு

ஶ்ரீரஞ்சனியுடனான   இலக்கிய சந்திப்பும், அவரது புதிய சிறுகதைத் தொகுதி "ஒன்றே வேறே" நூலின் அறிமுக அரங்கும் மெல்பனில்  
இம்மாதம் 30 ஆம் திகதி  ( 30-10-2022 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
சங்கத்தின் தலைவர்,  எழுத்தாளர் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்களின் தலைமையில் 
மெல்பனில் வேர்மன் தெற்கு சமூக இல்லத்தில் (Vermont South Community House – Karo bran Drive,   Vermont South, Vic – 3133 )  நடைபெறும். 

 தொடர்ந்து சிட்னியில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி (05.11.202) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நிகழும் இலக்கிய சந்திப்பு  2022 நிகழ்விலும்
சக எழுத்தாளர்களின் நூல் நயப்புகளோடு ஶ்ரீரஞ்சனியின் "ஒன்றே வேறே" சிறுகதைத் தொகுதி குறித்த பகிர்வும், 
Toongabbie Community Centre (244 Targo Rd, Toongabbie NSW 2146 )  அரங்கில் இடம்பெறும்.

No comments: