மெல்பனில் Dare to Differ நூல் வெளியீட்டு அரங்கு


அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக வதியும் சமூகப்பணியாளரும்,  தமிழ் அமைப்புகளில் அங்கம் வகித்திருப்பவருமான  சபாரத்தினம் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதியிருக்கும் Dare to Differ நூலின் வெளியீட்டு அரங்கு  இம்மாதம் 26 ஆம் திகதி ( 26-02-2022 )  சனிக்கிழமை மாலை  3-00 மணிக்கு மெல்பனில் Glen Waverley Community Centre மண்டபத்தில் ( 692-724 ,  Waverley Road, Glen Waverley 3150 ) நடைபெறும்.


திருமதி பிருந்தா கோபாலனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நூல்வெளியீட்டு அரங்கை,   திருமதி பாக்கியம் அம்பிகைபாகர், திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி தொடக்கிவைப்பர்.

அவுஸ்திரேலிய பூர்வகுடி மக்களை நினைவுகூர்ந்தவாறு, இலங்கை உட்பட உலகெங்கும் போரினால் மறைந்தவர்களுக்கும் கொவிட் பெருந்தொற்றினால் இறந்தவர்களுக்கும்  அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எழுத்தாளர் திரு. முருகபூபதி, வழக்கறிஞர் திரு. ஜே பிள்ளைஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து,  எழுத்தாளர் சட்டத்தரணி  ‘பாடும் மீன் ‘ சு. ஶ்ரீகந்தராசா,  கலாநிதி ஆனந்த ஜெயசேகரம், திரு. ஜூட் பிரகாஷ், ஆகியோர் நூல் நயப்புரை நிகழ்த்துவர்.

நூலாசிரியர் திரு. சபாரத்தினம் சுந்தரமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துவார்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

                                               tamilforumaustralia@gmail.com

 

No comments: