கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து ஒன்று ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா

 

  பனங்கொட்டையினைப் பாத்தியில் அடுக்கி அதனை ஒழுங்காக


மூடிய பின்னர் அது மண்ணின்கீழ் கிழங்கினை விடத்தொடங்குகிறது என்பதற்கு அறிகுறியாக
 பனங்கொட்டையைன் மேற்பகுயியில் மேலெ ழுந்து பச்சையாக இலை வரும். அப்படி வந்துவிட்டதென்றால் கிழங்கு வர ஆரம்பிக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ளுவோம். பாத்தியிலே அடுக்கப்பட்ட  பனங்கொட்டைகளுள் சில கிழங்கினைத் தராமல் மேலே இலையினைக் காட்டிவிட்டு நின்று விடும் . அப்படி அமைகின்ற பனங்கொட்டைகளும் பயனளி க்காமல் போய்விடுவதும் இல்லை என்பதுதான் முக்கிய நிலையாகும். கிழங்கினைத் தரா விட்டாலும் அந்தப் பனங்கொட்டைகளுக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கத்தானே செய்யும். அதனால் எப்படியும் தன் னால் ஏதாவது செய்து உதவிட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தால் " பூரான் " என்னும் சுவையான ஒன்றை கிழங்குக்கு ஈடாக பனங்கொட்டை தந்து தன்னையும் ஓரங்கட்ட விடாமல் செய்து நிற்கிறது என்பதை கருத்திருத்தல் வேண்டும்.

  கிழங்கினைத் தராமல் இருக்கின்ற பனங்கொட்டைகளை


இரண்டாகப் பிளந்தால் அங்கே கட்டிப் பொன் போல் ஒன்று எம்மைப் பார்த்து மலர்ந்து நிற்கும்.திரட்சியாய் அமைந்திருக்கும் அதனையே நாங்கள் பூரான் என்று மகிழ்வுடன்
 வாயூறப் பார்த்து நிற்போம். கடினமான பனங் கொட்டைக்குள் மென்மையான அதுவும் இனிப்புச் சுவையான பூரான் அமைந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ! கடினமான  உள்ளத்திலும் கனிவு இருப்பதைக் காண்கிறோம் அல்லவா அதுபோலத்தான் கடினமாய் இருக்கும் பனங்கொட் டைக்குள்ளும் கனிவாய் சுவையாய் பூரான் என்னும் ஆச்சரியம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா ! பூரான் சுவையினைத் தருவதுமட்டு மல்ல அது சத்துக்கள் கொண்ட ஒப்பற்ற இயற்கை உணவாகவும் விளங்குகிறது என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.பூரானில் 17.2 விகித மாச்சத்து   11 விகித உயிச்சத்து சி  ஒரளவு புரதம் ,கொழுப்பு சர்க்கரைச் சத்து, அஸ்கார்பிக் அமிலம், கல்சியம்மக்னீசியம்பொஸ்பரசு ஆகியன இருக்கிறதாம். அது மட்டுமன்றி ஒட்சியேற்றியாகவும் தொழிற்பட்டு - புற்றுநோய்இதயநோய் ஏற்படுவதனைத் தடுக்கும் வல்லமையான அன்டி ஒக்சிடென்ட் மற்றும் பினோலினையும் கொண்டிருக்கிறது என்பதும் கருத்திருத்த வேண்டியது முக்கியமாகும்.

 

     சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூரானை


விரும்புகிறார்கள் என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.பூரானைத் தனியாகவும் சுவைத்து மகிழலாம்.
 அதேவேளை பூரானை - பிட்டுஅப்பம் என் பவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம் பூரான் என்றாலே இனிப்புச்சுவையினையே தரும் என்பது அதனைச் சுவைத்தவர்கள் அனைவருக்குமே தெரியும். அப்படி இனிப்பான பூரானை மேலும் சுவையாக்க இனிப்பா க்க -  பதனீரைப் பதப்படுத்த கொதிக்கவைக்கும் பொழுது வருகின்ற அந்தப் பாகினுள் ஈர்க்கிலே பூரா னைக் குத்தி  அமுக்கி எடுத்துச் சுவைக்கும் ஒரு நிலையும் காணப்படுகிறது. சுவையினைத் தந்து நிற்கும் பூரான் சில மணி நேரங்கள் அதாவது இரண்டு தொடக்கம் மூன்று மணி நேரத்துக்குள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனைச் சுவைக்கவே முடியா நிலைக்கு அது வந்து விடுகிறது என் பதும் குறிப் பிடப்பட

வேண்டிய தகவலேயாகும். குளிரூட்டிகளில் வைத்துப் பயன் படுத்தலாம் என்றும் அறிந்திட முடிகிறது. ஆனால் அதுவும் நீண்டதாக அமையாது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும். அதனால் அதனைப் பதப்படுத்தி தகரங்களிலோ அல்லது போத்தல்களிலோ உரிய முறையில் வைப்பதால் குறிப்பிட்ட ஒரு காலத்துக்குப் பயன்படுதலாம்
, பலரும் பூரானின் சுவையினைச் சுவைத்து மகிழமுடியும் என்னும் ஒரு சிந்தனையும் இன்று ஏற்பட்டிருக்கிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கதேயாகும். இப்படியான் பூரான்  புலவரின் போற்றுதலுக்கும் ஆளாகி " புத்தமுதம் " என்னும் சிறப்புப் பெயரினையும் வெற்றிருக் கிறது என்பதும் மனங்கொள்ளல் வேண்டும்.

 

              சீராய் முளைத்தபனங் கொட்டைதனைச் சுட்டுவெட்டிப்

              பூரானை யுண்பரது புத்தமுதாம் - ஆரெரியில்

              வேகவையா துண்ணலாம் வேண்டுநறும் பிட்டுக்கும்

 

  பனக்கொட்டை இன்னுமொரு பெயரினைத் தனக்காக்கிக்


கொள்ளுகிறது. அந்தப் பெயர்தான் " ஊமல் " என்பதாகும். கிழங்கினைத் தந்த பின்பும் பனங்கொட்டையானது தன்னுடைய உருவினைக் குலைய விடா மல் அப்படியே காட்சிதரும்.அந்த நிலையிலும் எப்படியாகினும் உதவிட வேண்டும் என்னும் எண்ணமே அதனுள் மேலோங்கி நிற்கிறது என்பது கருத்திருத்த வேண்டியதேயாகும். அப்படியான நினைவுகள் வரு வதற்கு அடிப்படைக் காரணமே அது வந்த இடமேயாகும். கற்பகதருவாய் மண்ணில் வந்த பனையின் வள்ளல் தன்மை என்றுமே 
எந்தவொரு நிலையிலும் உதவிடும் பாங்கினுக்கே இட்டிச் செல்லுவதாய் அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கு கருத்திருத்த வேண்டிய விடயம் ஆக இருக்கிறதல்லவா !

  ஊமல் என்னும் பெயரினைத் தாங்கியவுடன் பனங்கொட்டையானது எப்படி யெல்லாம் உதவி நிற்கிறது


என்பதைப் பார்ப்பது அவசியம் அல்லவா ! ஊமல் என்றதும் எங்கள் எல்லோருக்கும் மனதில் உடனே தோன்றுவது புகையிலைக் குடில்தான். புகையிலையினைப் பதப்படுத்தி எடுப்பதற்கு என்று அமைக்கப் பட்ட புகையிலைக் குடிலின் மேற்பகுதியில் புகையிலைகளை கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். தொங்க விடப்படும் அந்தக் குடில் மண்ணினால் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு போறணையின் நுட் பத்தில் அக்குடில் அமைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் நெருப்பு வைக்கும் வண்ணம் அந்த அமைப்பு இருக்கும். அங்கேதான் ஊமல் வந்து சேரும். அந்த ஊமலில் நெருப்பினை மூட்டி அது எரிந்து மேலே தொங்க விடப்பட்டிருக்கும் புகையிலையினைச் சரியான பதத்திற்கு வாட்டி உலர்த்தி எடுக்கும்.ஊமல் எரியத் தொடங்கினால் அதிலிருந்து வருகின்ற வெப்பம் மிகவும் சிறந்த வெப்பமாகவே   காணப்படும். அதுமட்டுமல்ல அதனால் புகையும் ஏற்படுவதில்லை என்பதும் நோக்கத்தக்கதாகும்.

     ஊமல் எனும்பொழுது - புகையிலைக்குப் புகைபோட


எரிப்பதுதான் என்று மட்டுமே எண்ணி விடக்கூ டாது. ஊமலைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார்கள். ஆராந்து பார்ப்பது என்பது மிகவும் சிறப்பான ஒரு நிலை யாகும். அப்பொழுதான் அதில் பலவற்றைக் காணக்கூடியதாக அமையும். அந்த வகையில் ஊமலில் - தூய பைரோலிக்னியசம் 
34.60 விகிதம்தார் 6.40 விகிதம்கரி 24.40 விகிதம் வாயுக்களும் கழி வுகளும் 34.60 விகிதம் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தியாகும்.ஊமலின் எடையில் 4.7 விகிதம் அசிட்டிக் அமிலமும், 1 விகிதம் நப்தா பைரோலிக்னியச அமிலமும் காணப்படுகிறது என்பதும் நோக்கத்தக்கதாகும்.

  ஊமல் என்று நாங்களெல்லோருமே சாதாரணமாக எண்ணி நிற்பதில் எவ்வளவு பொதிந்துபோய் இரு க்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது எமக்கெல்லாம் திகைப்பாகவே இருக்கிறதல்லவா ஊமலை முழுமையாக எரிக்காமல் கரியாய் வரும் பதத்தில் எடுத்துப் பலநிலைகளில் பயன்படுத்தலாம் என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.அப்படிப் பதமாக எடுக்கும் ஊமற் கரியானது பொன் வேலை செய்வார் க்கும்தங்கத்தில் ஆபரணங்கள் செய்வார்க்கும் பயன்பட்டு நிற்கிறது. அதேவேளை கடினமாய் இருக்கும் இரும்பினைக் கொண்டு  வேலை செய்யும் தொழிற் பட்டடைகளுக்கும் கைகொடுத்து நிற்கும் வகையில் ஊமற் கரியானது இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

  ஊமல் ஒரு விலைமதிப்பான பொருளாகவும் இருக்கிறது என்பதையும் மனமிருத்துதல் வேண்டும். ஊம லிலே அசிட்டிக் அமிலம் காணப்படுகிறது.இதனால் ஊமலினை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பதும் முக்கிய நிலையாகும். ஊமலைக் கொண்டு அசெட்டிக் அமிலம் பெறப்பட்டால் அது இறப்பர் தொழிலுக்கு பெரிதும் உதவிடும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இறப்பர் பாலாகவே எடுக்க ப்படுகிறது. அப்படி எடுக்கும் அந்தப்பாலினை கட்டியாக்குவதற்கு இந்த அசெட்டிக் அமிலமே தேவைப்படு கிறது. இறக்குமதி ஆக்கப்பட்டே அசெட்டிக் அமிலம் இறப்பர் தொழிலில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலை யில் - இலவசமாய்இலகுவாய் கிடைக்கும் எங்கள் கற்பகதருவின் ஊமலினைக் கருத்தில் எடுத்தால் இறக்குமதிச் செலவும் மிஞ்சும். எங்கள் சொந்தப் பொருளே மூலப்பொருளாகவும் மாறிடும் அல்லவா !

  ஊமலிலிருந்து ஊக்கிய கரியினையும் எடுக்கலாம். இவ்வாறு எடுக்கும் ஊக்கிய கரியானது பல நிலை களில் பயனாகி நிற்கிறது என்றும் அறியக் கூடியதாக இருக்கிறது. தொழிற்சாலைகளில் நீரினைச் சுத்தம் செய்யவும்வேறு திரவ உணவுகளைச் சுத்தமாக்கவும்வடிசாலைகளில் மதுசாரத்தைச் சுத்திகரிக்கவும்பயன்படுத்தப்படுகின்றதுஇவ்வாறு பயன்படும் இது விலை உயர்ந்த  பொருளாகவும் அமைகிறது என்பதும் கருத்திருத்த வேண்டியதேயாகும்.திரவ உணவுகளைச் சுத்தஞ்செய்வதோடு அதில் காணப்படும் தேவைய ற்ற மணங்களையும் அகற்றவும் கூடியதாக இருக்கிறது. இந்தக் கரியிலுள்ள நுண்ணிய துவாரங்களால் எல்லாவிதமான அழுக்குகளும் மணங்களுமே உறிஞ்சி எடுக்கப்பட்டு நீக்கப்படுகின்றது என்பது நோக்கத் தக்கதாகும்,

  கரியாகிப் பலன் கொடுக்கு முன்னும் உதவியே நிற்கிறது ஊமல் என் பதையும் கருத்தில் எடுக்க வேண் டும். ஊமலை இராண்டாகப் பிளந்தால் அதனுள்ளே கொப்பராத் தேங்காய்மாதிரிக் காய்ந்தபடி காணலாம். அதனை பனம்பருப்பு என்றும் சொல்லுவார்கள். இது மஞ்சளும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்ப டும்.இதனை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதும் நோக்கத் தக்கதாகும். இந்தப் பனம் பருப் பிலே சுக்கிரோஸ் 0.38 விகிதமும்பிரக்டோஸ் 1.46 விகிதமும் குளுக்கோஸ் 3.21 விகிதமும் இருக்கிறதாக அறிய முடிகிறது.

  இப்படிச் சத்துக்கள் நிறைந்திருக்கும் பனம்பருப்பினை வெளியே எடுத்து அதனைக் காயவிட்டு பின்னர் பிழிந்து எடுப்பதன் மூலம் அதிலிருந்து எண்ணெயினைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இப் படிப் பெறப்படும் எண்ணையினை எங்களின் உணவுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதும் மன மிருத்த வேண்டிய கருத்தாகும்.

 ஊமல் கொடையினைப் பிளந்து அதிலிருக்கும் பருப்பை நீக்கிய பின் பனங்கொட்டையினது புறப்பகு தியினைச் சிரட்டை என்றும் சொல்லுவார்கள்.

 

   அருகக் கடவு ளடியார் தலைபோல்

   மருவு மயிர்முழுது மற்ற - கருவூமல்

 

கானப்படுகிறதாய் ஒரு கற்பனையில் ஊமலினைத் தாலவிலாசம் என்னும் நூல் பார்க்கிறதாகச் சொல்லப்படுகிறது.

  ஊமலிருந்து கரி , எண்ணெய் , அசெட்டிக் அமிலம் , என்னும் நிலையினையும் கடந்து . மேலும் பல பொருட்கள் வந்து குவிகின்றன என்பதும் நோக்கத்தக்கது.சித்த மருத்துவத்தில் குளிகை செய்யும் வழக்கம் இருக்கிறது என்பதை யாவரும் அறிவோம். அப்படிச் செய்யப்படும் குளிகைகள் வைத்துப் பயன்படுத்தும் பெட்டிகள் செய்வதற்கு ஊமல் பயனாகி நிற்கிறது என்றால் ஆச்ச்சரியமாக இருக்கிறதல்லவா ! குளிகை களுக்கு மட்டுமல்லாது சித்தமருத்துவத்தில் பயனாகும் செந்தூரத்தை வைத்துப் பாதுகாக்கவும் பெட்டியாக ஊமல் இருக்கிறது என்பதும் நல்ல செய்தியாக இருக்கிறதல்லவா ! பஸ்பம் என்பதும் சித்தமருத்துவத்தில் முக்கியமானது. அந்தப் பஸ்மத்தை அடைத்து வைக்கும் பெட்டியாகவும் ஊமலினாலாகிய பெட்டி இருந்தி ருக்கிறது.வைத்தியரிடம் மாத்திரைகளை வாங்கி வருபவர்கள் அதனைத் தங்கள் வீடுகளில் பக்குவமாக ப்பாதுகாத்து வைக்கும் பெட்டியினையும் ஊமல்தான் தந்திருக்கிறது. இவற்றைவிட - மூக்குப்பொடி வைக் கும் பெட்டி, வெடி மருந்து வைக்கும் பெட்டி, சிறிய மின் சாதனங்களை வைப்பதற்கான பெட்டி என்னும் வகையிலும் பெட்டிகள் இருக்கின்றன என்பதும் நோக்கத்தக்கதாகும்.

 

ஆகு முலர்ந்தகொட்டை யூமலால் - பாகமாய் 

புல்லு நெருப்பிட்டுப் புறமகற்றிப் பொன்னிருப்புக் 

கொல்லருக்குத் தூராக் குணக்கரியாம் - செல்வருக்கு

மூக்கிடுதூள் வைக்க மொழியு மருத்துவர்கட்

காக்குங் குளிகை யடைத்து வைக்கத் - தாக்கியே

பஞ்சுவைத்துச் சக்கிமுக்கி யால்நெருப்புப் - பண்ணுதற்கு

மஞ்சிகையு மாகு மதுரமொழி - வஞ்சியே 

 

ஊமலினால் என்ன என்ன செய்திருக்கிறார்கள் என்பதை எங்கள் தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவரும் அழகுதமிழால் அகமிருத்தச் செய்து நிற்கிறார்.

    ஊமலினை மூலப்பொருளாகக் கொண்டு திருஷ்டிப் பொம்மைகள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமன்றிப் பலவித அழகான பொம்மைகள்சிறிய நிலையிலான அகப்பைகள்மேசையிலே வைக்கும் காகிதங்களுக் கான பாரந்தாங்கிகள்என்றெல்லாம் செய்யப்படுகின்றன.

  பனங்கொட்டையினைப் பலநிலைகளில் பயன்பாட்டுக்கு உட்படுத்தும் நிலையும் தற்போது ஏற்பட்டிருக் கிறது. பனங்கொட்டையிலிருந்து மென்மையான நார் எடுக்கப்படுகிறது. இதனைக் கொண்டு கம்ப ளிகள் ஆசனமெத்தைகள்,மென்மையான கயிறுமாடுகளுக்கான மூக்கணாங்கயிறுஎன்று பொருள்களின் உற்ப த்தி விரிவடைந்தே செல்கிறது. மென்மையான நார்களில் துகள்கள் கிடைக்கின்றன. அதனையும் பயனா க்கி தலையணைகள்படுத்துறங்குவதற்கான மெத்தைகள் என்றும் பொருட்கள் வந்து அமைகின்றன என் னும் பொழுது வியப்பாகவே இருக்கிறதல்லவா !

No comments: