கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினெட்டு ]

  


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

     கற்பகதருவாய் விளங்கும் பனைமரத்தை தமிழ்நாடு மாநில


மரமாய் 
பெருமைப்படுத்தி நிற்கிறது. பனை என்றாலே கொடை என்னும் எண்ணந்தான் மனதில் எழுகிறது. கொடைக்குக் கர்ண ணன் போல கற்பகதருவும் வள்ளல் தன்மையினைக் கொண்டதா கவே அமைந்திருக்கிறது. மக்களுக்கு எந்தவகையில் பயன் பட லாமோ அந்தவகையில் பயன்பட்டு நிற்கத் தயாராகவே இருப் பேன் என்றுதான் பனை உறுதி மொழியினை எடுத்திருக்கிறது போல் தெரிகிறதல்லவா ! அந்த அளவுக்கு அது கொடுக்கும் பயன்பாடு அளவிறந்து அமைந்திருக்கிறது என்பதைக் கருத்திருத்தல் அவசியமேயாகும்.

  சாதாரண கங்குமட்டையே கைத்தொழிலுக்கான தும்பினை


அளித்தது. கங்கு மட்டையின் தும்பினால் பலர் தொழில்களைப் பெற்றனர். வருமானத்தையும் பெற்று வாழ்க்கைக்கு ஆதாரமும் ஆக்கி நின்றனர். அதுமட்டுமல்ல வெளி நாடுகளும் விரும்பி வாங்கி வருவாய்க்கும் வழிவகுத்தது. இந்தியா
,  இலங்கை நாடுகளின் பொருளாதாரத்திலும் ஒரு பங்களிப்புக்கு இடமாகியும் இருந்தது என்பதையும் பார்த்தோம். சாதாரண கங்குமட்டைக்குள்ளும் கைக் தொழிலுக்கான மூலப்பொருளை அதாவது தும்பை வைத்திருக் கும் பனையை பாராட்டியே ஆக வேண்டும் அல்லவா !

  கங்குமட்டையினை அளித்துவிட்டு - கங்கு மட்டை கொடுக்கும் கொடையினைப் பனையின் மட்டை பார்த்தபடியே இருக்கும். அதற்காகத் தானும் ஏதாவது கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றி விடும்.பனமட்டையும் தன்னைக் கொடுத்து - உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராள சிந்தை யுடன் கேட்டு நிற்கும். காய்ந்த மட்டை வேலியில் நிற்கும். வீட் டுக் கூரையில் அமர்ந் துவிடும். ஏன் விறகாகவும் ஆகி நிற்கும்.

  காய்வதற்கு முன்னிருக்கும் பச்சை மட்டை - என்னை என்னவும்


செய்யுங்கள் என்றபடி இருக்கும். அந்தப் பச்சை மட்டைக்குப் பாதுகாப்பாய் 
இரு பக்கமும் கறுத்தக் காவலர் இருப்பர். இவர்களை கருக்கு என்று அழைக்கிறோம். இதனால் கருக்கு மட்டை என்றும் பெயரைத் தாங்கி நிற்கிறது பனை மட்டை. பச்சைப் பனை மட்டை கருக்குடன் இருக்கும். நாரினை எடுக்கும் முன்பாக மட் டையின் இரண்டு பக்கங்களிலும் காவலர் போல இருக்கின்ற கருக்கினை கத்தியைப் பயன்படுத்தி அரை அங்குல அகலத்தில் பிரித்து எடுக் கிறார்கள். நார்களை எடுப்பதற்கு இம் முதற் படி அவசியமானதாக அமைகிறது, தரமுடையதாக நார்களை எடுக்க வேண்டுமானால் இப்படிச் செய்வது கட்டாயம் ஆகிறது

  பனை மட்டையிலிருந்து கிடைக்கும் நாரானது மூன்று வகையாக


அமைகிறது.
 முதலாவது அகணிநார். இது மட்டையின் உட்பக்கத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. இரண்டாவது புறணி நார். இந்த நார் பனை மட்டையின் புறப்பகுதியிலிருந்து உரித்தெடுக்கப்படுகிறது. மூன்றாவதாக வருவதுதான் சோத்தி நாராகும். இது பனை மட்டையின் நடுப்பகுதியிலிருந்து உரித்து எடுக்கப்படுகிறது.

  முதலாவதாக வருகின்ற அகணிநாரின் பயன்பாடு பல விதங்களில் அமைகிறது.அகணி நாரானது நல்ல வலிமை மிக்கதாக இருக்கிறது. இதனால்த்தான் இது முதலாந்தர நாராய் முன்னிற்கிறது எனலாம்.

   பனை மரத்தைப் பயன்படுத்தி படுப்பதற்கு கட்டில்கள்


செய்யப்
படுகின்றன. இப்படிச் செய்யப்படும் கட்டில் களின் மேல் பகுதி பனம் நார்கள் கொண்டு பின்னப்படுகிறது. பனம் நார் கொண்டு கட்டில் செய்வது ஒரு தொழிலாகவே தமிழ் நாட்டில் நடைபெறுகிறது என்பதை கருத்திருத்தல் அவசியமாகும். இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பனைத் தொழிலினை நம்பி ஏறக்குறைய முப்பது ஆயிரத்துக்கு மேற் பட்ட குடும்பங்கள் இருப்பதாக அறிய முடிகிறது.இவர்கள் அனைவரதும் வாழ்வாதாரமே பனை யாகவே இருக்கிறது. பனையின் பொருட்களை அந்தந்தக் காலங்களில் உற்பத்தி செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தில்த்தான் அவர்கள் சீவியம் நடக்கிறது

என்பதும் மனங்கொள்ளத்தக்
கதாகும்.திருச்செந்தூர்நாசரேத்சாத்தான்குளம்,உடன்குடிதிசையன்னவிளைஏரல், ஓட்டப்பிராம்அந்தோணியார்புரம்வேம்பார்ஆகிய பகுதிகளில் பனைத் தொழிலை நம்பி வாழ்பவர்கள் பலர் இருந்து வருகிறார்கள்.பனை நார் கட்டி லைச் செய்வதில் அக்கறை உள்ளவர்களாய் இங்குள்ள மக்கள் விளங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

  பனை நார் கட்டிலுக்கு உரிய மூலப்பொருட்கள்  - தென்காசிதிரு ச்செந்தூர்ரல் சுற்று வட்டாரங்களில் கிடைப்பதாக இங்குள்வர்கள் தெரிவிக்கிறார்கள்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை என்னும் இடத்தைச் சேர்ந்தவர்


தினேஷ் குமார். இவர் ஒரு சுற்றுலா த்துறை வழிகாட்டியாக இருந்தார். ஆரம்பத்தில் சென்னையில் வேலைபார்த்த இவருக்கு நாகர் கோவில் பகுதியில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது.சுற்றுலா வழிகாட்டியாக இவர் இருப்பதால் பல இடங்க ளுக்கும் செல்லும் அருமையான வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.இப்படிப் பல இடங்களைச் சுற்றிவந் தவர் -
  கன்னியாகுமரிதிருநெல்வேலி, தூத்துக்குடிஇராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் விளை யும் கற்பக தருவாம்  பனைமரங்களின் எண்ணிக்கையானது குறைந்து வருவதை  அறியும் வாய்புக்கிட் டியது.

     சுற்றுலாத்துறை வழிகாட்டியான இவருள்ளத்தில் பனையும் அதைச் சார்ந்த தொழிலும்அதில் ஈடுபடும் மக்களும் பற்றிய எண்ணம் உதயமானது.கிராமப் புறங்களில் பனம்


பொருள்பற்றிய விழிப்புணர்வானது குறைந்து கொண்டே வருவதை அவரறிந்து கொண்டார்..அதுமட்டு மன்றி 
பனைத் தொழிலினை நம்பியி ருக்கும் தொழிலாளர்களுக்கு சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காததால் - பனைத் தொழிலினை விட்டு வேறு வேலைகளுக்குப் போகும் நிலை அதிகரித்திரிப்பதையும் மனமிருத்தினார். பனை தொடர்பான இந்த நிலை அவரிடம் ஒரு உத்வேகத்தை எழுச்சி பெற்றிட வைத்தது.நலிவடைந்து வரும் பனந்தொழிலையும்அதில் ஈடுபட்டுழைத்த தொழிலாளரையும் தாங்கி அவர்களுக்கு ஆதரவுக் கரங்கொடுக்க அவர் செயலில் இறங்கினார்.

  ஆர்வம் மேலிட்டதால் தினேஷ் குமார் தன்னுடைய


மனைவியையும் இணைத்துக்கொண்டு - பல விஷயங்களைத் தேடித் தேடிப் பெற்றுக்கொண்டார். பல இடங்களுக்கும் நீண்ட பயணங்களையும் மேற் கொண்டார் .நிறைவில் பனை நார் கட்டில் விற்பனையில் ஈடுபட்டார்.பத்தாம் வகுப்புவரையில் படித்தவர் தான் தினேஷ் குமார்.இவரின் நல்ல எண்ணத்தால் - பனையின் தொழிலையே நம்பியிருக்கும் நாகர் கோவில் அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பதினைந்து பேர்  வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் நல்லதொரு நிலை ஏற்பட்டது..நகரப்புறத்தில் உள்ளவர்கள்
  பனை நார் கட்டில்களின் மகத்து வத்தை அறியாமல் இருக் கிறார்கள். அத்துடன் அவர்களிடம் பனை நார் கட்டில்களை கொண்டு செல்லுவதும் சவாலாகவே இருப்பதாகவும் தினேஷ் குமார் தெரிவிக்கின்றார்.நம்பிக்கையினை விடாமல் பல்வேறு வடிவங்களில்வண்ணங்கள் கொண்டதான அமைப்பில் பனை நார் கட்டில்களை உற்பத்தி செய்வதில் பெரும் ஆர்வத்தை காட்டி வருகிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். இலாப த்தை எதிர்பார்க்காமல் பனந்தொழிலில் கொண்ட அக்கறையினால் செய்து வருவதாகவும் அவர் தெரிவி க்கிறார்.

  பனை நார் கட்டிலைப் பிரபலப் படுத்துவதும் இந்தத் தொழிலை


நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினைக் கொடுப்பது மட்டுமே 
,  என்னுடைய தற்போதைய இலக்கு என்கிறார் தினேஷ் குமார்.இந்தத் தொழிலில் மிகுந்த ஆர்வமுடைய இவர் நூற்றுக்கு மேற்பட்ட பனை நார் கட்டில்களை விற்பனையும் செய்திருப்பதாய் மகிழ்வுடன் தெரிவிக்கின்றார்.

  செயற்கைப் பொருளான பிளாஸ்டிக்கில் செய்யப்படும் பெரிய கதிரைகளில் நீண்ட நேரம் இருந்து எழும் பொழுது - இருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தால் அந்த இடமும் சூடாக இருக்கும். நம்முடைய உடலும் சூடாகவே  ஆகியும் இருக்கும்.இவ்வாறு வருகின்ற உடல் சூட்டால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் வந்து விடுகிறது.ஆனால் பனை நார் கட்டிலில் நீண்ட நேரம் உறங்கினாலும்பனை நார் கதிரைகளில் நீண்டநேரம் அமர்ந்திருந்தாலும் உடல் சூடாகவே மாட்டாது.

  பனைப் பொருட்கள் உடலுக்குக் குளிர்ச்சியையே தருகின்றது என்று கூறும் தினேஷ்குமார் - சுற்றுலா வழிகாட்டி வேலையினை


சனி ஞாயிறு தினங்களில் மட்டுமே பார்ப்பதாயும் மற்றைய ஐந்து நாட்களுமே பனை நார் தொழிலிலேயே கவனத்தைச் செலுத்துவதாய் தெரிவிக்கிறார். இணைய வழிவாயிலாகவே விற்பனையில் ஈடுபடுவதாகவும் 
பனை நார் கட்டில்களைத் தானே - தேவையானவர்களுக்கு நேரே சென்று கொடுப்பதாகவும் தெரிவிக்கிறார்.தமிழ் நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களும் இவரின் பனை நார் கட்டில்களை விரும்பி  வாங்குவதற்கு விருப்புடன் இருப்பதாகவும் தன்னிடம் தருமாறு கேட்ப தாகவும் தெரிவித்துப் பெருமைப்படுகின்றார்.இப்படி ஒரு நல்ல வெளிச்சம் பனை நார் தொழிலில் தென்படு வதால் - இத் தொழிலை மேலும் வலுப்படுத்தவும் பல பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்கவும் திட்ட மிட்டமிட்டிருப்பதாக தினேஷ் குமார் தெரிவிக்கிறார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தாகும் !

  இந்தியாவில் தென் மாவட்ட்டங்களில் பனை நார் கட்டில்கள்


பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. இப்படியான கட்டில்கள் பனையோடு தொடர்புடைய
  மக்களின் பெருமையினை எடுத்துக்காட்டும் விதத்தில் - இவர்களின் வீடுகளில் இருக்கும். பனை நார் கட்டில் என்பது தமிழருக்கே உரித்தானதுதான் என்று தான் எண்ண வேண்டி இருக்கிறது.இந்தத் தொழில் நுட்பம் வேறெங்கும் இல்லை என்றே சொல்லலாம். இந்த வகையில் தமிழ் நாட் டின் அதாவது தென் தமிழகம் உலகினுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்றும்  அறியக்கூடியதாக இருக்கிறது,

  நெல்லை மாவட்டதில் பனை நார் கட்டில்களை வேகமாகப் பின்னுகிறார்கள் என்றும் அதே வேளை குமரி மாவட்டத்தில் இந்த வேகம் அதிகமாய் இருப்பதாகவும் அறிய முடிகிறது.பனை நார் கட்டிலானது தனித்தன்மை வாய்ந்தது.  சிறியதாய் வகிர்ந்து வைத்திருக்கும் பனை நார்களை கட்டில் சட்டங்களில் பின்னி எடுப்பதுதான் பனை நார் கட்டிலாய் அமைகிறது.கட்டில்


சட்டங்களில் பாவுகளை வலதும் இடது மாகப் பிரித்து நாற்பத்து ஐந்து பாகை கோணத்தில்
 செல்லும். தொய்வாக அமைந்திருக்கும் இந்தப் பாவு களை ஊடறுத்துச் செல்லும் நேர் பாவு அனைத்தையும் சீராக்கி விடும் தன்மை வாய்ந்ததாய் இருக்கும். கட்டிலில் ஓட்டைகள் தெரியும்.இப்படிப் பின்னப்படும் பின்னல்களை சக்கரக் கண்ணி என்று அழைக்கி றார்கள்.ஏறக்குறைய நான்கு முதல் ஐந்து அடி நீளம் மட்டுமே கொண்ட இந்த பனை நார்கள் முடிச்சுகள் இடப்பட்டே இணைக்கப்படுகின்றன.இப்படி இந்த நார் இருக்கிறதே என்று எண்ணி விடாதீர்கள்இதன் பலமே அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

  பனை நார்க் கட்டில் என்பது நல்லதொரு வரப்பிரப்சாதம் என்றுதான் கருத வேண்டும். இதன் தொழில் நுட்பமானது எங்களுக்கே உரித்தான தனித்துவமான ஒரு தொழில் நுட்பமே ஆகும்.சிறிய வயதில் நீராட்டி விட்டு சாம்பிராணி புகையினைப் பிடிப்பதை மறந்துவிட முடியுமா அப்படிச் சாம்பிராணிப் புகையினைக் காட்டும் பொழுது கட்டிலில் விடுவார்கள்.அந்த அனுபவத்தை நினைத்துப்பார்க்க வேண்டும்,பிரசவம் ஆகிய பச்சை உடம்புப் பெண்களுக்குப் படுப்பதற்கு இதமாய் பனை நார் கட்டில் இருக்கிறது.அது மாத்தி ரமல்ல நோயில் இருக்கும் முதியவர்களுக்கும் மிகவும் பொருத்தமாய் அமைகிறது பனை நார் கட்டில். இவர்களுக்கு மட்டுமல்ல - யாவரும் ஆனந்தமாய்ஆரோக்கியமாய் படுத்து உறங்கவும் பனை நார் கட்டி ல்கள் கைகொடுத்து நிற்கின்றன என்பது முக்கியமாகும்.பனை நார் கட்டிலில் இருக்கும் - நெகிழும் தன்மை,இவற்றில் கிடைக்கும் காற்றோட்டம் ,  ஆகியன தருகின்ற சுகத்துக்கு ஈடில்லை எனலாம்.

 

No comments: