ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை வாழ்வும் பணிகளும் - காணொளி மெய்நிகரில் வெளியீடு


அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா  செல்வத்துரை அவர்களின் வாழ்வையும்  பணிகளையும்  சித்திரிக்கும்   காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது.

அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம்                  ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த  ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது.

சிறந்த புகைப்படக்கலைஞருமான ஓவியர் செல்வத்துரை அவர்கள், இலங்கையில் புகழ்பூத்த யோகர் சுவாமிகள், நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஆகியோருடனும் நெருக்கமாக  உறவாடியவர். அத்துடன் அவர் தனது புகைப்படக்கருவியினால் இவர்களை எடுத்திருந்த படங்களே இன்றளவும் ஊடகப்பரப்பிலும் நூல்களிலும் பதிவாகிவருகின்றன.

கொழும்பில்    1965 ஆம் ஆண்டு  பல வாரங்கள் நடைபெற்ற உலக விஞ்ஞானக் கைத்தொழில் கண்காட்சியில்,  இலங்கைத் தொழிற்சாலைகள்  அரங்கிலும் ஓவியர் செல்வத்துரை நாடெங்கும் சென்று எடுத்து சேகரித்த படங்களும் இடம்பெற்றன.

அக்காலத்தில் கொழும்பில் அவர், PLATE  என்ற ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தில்  அவர் பணியாற்றியவேளையில், அங்கு எடுக்கப்பட்ட கறுப்பு – வெள்ளை படங்களை வண்ணக்கலருக்கு மாற்றி புகழ்பெற்றவர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை யோகர் சுவாமிகளின் தீவிர
பக்தரான செல்வத்துரை, அவரையும் தனது கெமராவினால் படம் எடுத்தவர். குறிப்பிட்ட கறுப்பு – வெள்ளைப்படத்தையும்


தூரிகையினால் வண்ணப்படமாக்கினார்.

அந்தப்படத்தை யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரும் பின்னாளில் தேசிய கடதாசி ஆலைக்கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் விளங்கிய                            ( அமரர் ) கே. சி. தங்கராசா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

1946 ஆம் ஆண்டில் அகில இந்திய ரீதியில் நடைபெற்ற புடவை டிசைன் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு சுமார் ஐந்தாயிரத்து எழுநூறு டிசைன்கள் வந்திருக்கின்றன. பின்னர் முதல் கட்டத் தேர்வுக்குரியதாக இரண்டாயிரத்து ஐநூறு டிசைன்கள் தெரிவாகியிருக்கின்றன. இதில் ஓவியர் அய்யாவின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.


1947 ஆம் ஆண்டில் லண்டனில் விக்ரோரியா அல்பர்ட் மியூசியத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில், இந்தியப்பிரிவிலும் அவரது ஓவியங்கள் வைக்கப்பட்டன.

1956 இல் கொழும்பு கலாபவனத்தில் நடந்த ஓவியக்கண்காட்சியிலும் அவருடைய ஓவியத்துக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஓவியர் – புகைப்படக்கலைஞர் செல்வத்துரை பற்றிய ஆவணக் காணொளிக்கான பிரதியை எழுத்தாளர்                                லெ. முருகபூபதி எழுதியுள்ளார்.

அதற்கான குரல் வடிவம் திருமதி சரண்யா மனோசங்கர்.

கன்பரா திரு. தாமோ பிரமேந்திரன் ஆவணப்பதிவை
மேற்கொண்டுள்ளார்.

           அவுஸ்திரேலியா  இரவு 9-00 மணி

       இலங்கை – இந்தியா  மதியம் 3-30 மணி

    இங்கிலாந்து – அய்ரோப்பா  முற்பகல் 11-00 மணி


          கனடா – அமெரிக்கா காலை 5-00 மணி

மெய்நிகர் இணைப்பு : Zoom ID

Join Zoom Meeting

Meeting ID: 857 0740 6429
Passcode: 348744

No comments: