காணக்காணே (Kaanekkaane) மலையாளத் திரைப்படம் என் பார்வையில் - கானா பிரபா

 


"காணாக்காணே" மலையாளத் திகில் படம் சோனி லைவ் இல் வெளியாகியிருக்கின்றது.


ஒரு நீதிமன்ற வழக்கு குறித்து தன்னுடைய மருமகனது ஊருக்கு வரும் பால்மத்தாய் என்ற தாசில்தாரர் தன்னுடைய மகளின் மரணத்தில் எழும் மர்மங்கள், கூடவே பயணிக்கும் உணர்ச்சி மிகு போராட்டமுமாக இரட்டை அடுக்குகளோடு பயணிக்கும் படமிது.

சுராஜ் நகைச்சுவை நடிகன் என்ற எல்லையைக் கடந்து அவரை எல்லாமுமாகப்பார்க்கும் மனோ நிலைக்கு ரசிகர்களைத் தயார்படுத்தி விட்டார் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம்.

வயதான தாசில்தார் ஆக, தன் மகளின் இழப்பை நினைத்து மருகுவதாகட்டும் தன்மருமகன் வீட்டில் கிட்டிய ஒரு சின்னத் தடயத்தை வைத்துத் தனியாளாக அந்தமர்மத்தைத் துரத்துவதாகட்டும் வெகு இயல்பானதொரு நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்.

டொவினோ தாமஸ் & ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி முன்பே மாய நதி படத்தில் நடித்தவகையில் பிரபலமானவர்கள். ஆனால் இந்தப் படத்தில் தனித்தனியாகத் தம் உணர்வுக் கொந்தளிப்பைக் காட்டுவதில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்கிய மனு அசோகன், கதாசிரியர்கள் பாபி & சஞ்சய் தத்தம் படைப்புகளில் முன்பே தனித்துவத்தைக் காட்டியவர்கள்.  இதற்கு முந்திய படைப்பான "உயரே" வழியாக இந்தக் கதாசிரியரும் இயக்குநருமாக இணைந்து ஒரு வெற்றியைக் கொடுத்து விட்டு மீண்டும்  ஒரு புதுமைப் படைப்பில் வெற்றி கண்டிருக்கின்றார்கள்.

இந்தப் படம் குறித்த எனது பார்வை வீடியோஸ்பதி YouTube தளத்தில்


No comments: