தியாகி தீலீபனின் 34ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

 ஒஸ்ரேலியாவின் முக்கிய தலைநகரங்களில் தியாகி திலீபனின் 34 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், செப்ரம்பர் மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழி ஊடாகவும், அடேலயிட் பிரிஸ்பன், பேர்த் ஆகிய இடங்களில் மண்டப நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது. 





தற்போதைய கொரோனா வைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 34வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இணையவழி ஊடாகவும் அடேலயிட் பிரிஸ்பன் பேர்த் ஆகிய இடங்களில் மண்டப நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது.

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Time: 26-09-2021 Sunday 6pm (Canberra, Sydney, Melbourne)
Contact: 0401 842 780, 0433 002 619

EVENT Youtube Advertisement Link: Thiyagi Thileepan Australian memorial/தியாகி திலீபன் அவுஸ்திரேலிய நினைவேந்தல் நிகழ்வுகள்:



























No comments: