நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம்
.
நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில்
கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம்
பிள்ளைகள் வெளிநாடுகளில்
சமகால கொரோனோ தொற்றினால் ஒரு வார காலத்தில் கணவனும் மனைவியும்
இறந்துள்ள துயரச் சம்பவம் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் நடந்துள்ளது.
நடராஜா கருணாலிங்கம் ( வயது 75 ) என்னும் மின்சார தொழில் நுட்பவியலாளர்
கடந்த 11 ஆம் திகதி கொரோனோ தொற்றினால் மரணமடைந்ததையடுத்து, அவரது
மனைவி ஜெயலக்ஷ்மி ( வயது 75 ) நேற்று 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
இவர்களது ஒரு மகன் அவுஸ்திரேலியாவிலும் ஒரு மகள் இங்கிலாந்திலும்
வசிக்கின்றனர்.
இந்த அடுத்தடுத்த மரணங்களினால் இவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும்
ஆழ்ந்த சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.
சமூக இடைவெளிபேணவேண்டிய சூழலில் இறுதி நிகழ்வுகளும் நடைபெறவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment