ஆலாலசுந்தரரை அகத்தினில் இருத்துவோம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .. ..... அவுஸ்திரேலியா

 

  இறைவன் மீது தோழமை உணர்வுடன் இப்பூவுலகில்


வாழ்ந்தவர் தான் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரர் பூமியில் பிறந்த வரலாறு தேவ உலகுடன் எம்பெருமான் சிவனுடன் இணைந்த வரலாறாகக் கருதப்படுகிறது. இறைவனுக்குத் தேவ உலகில் அணுகு தொண்டராக இருந்தவர் - மனந்தடுமாறி பேரின்பச் சூழலை மறந்து சிற்றின்பத்துக்குள் மனதினைச் செலு த்திய காரணத்தால் பூவுலகில் பிறவி எடுக்கும் நிலைக்கு ஆளா கிறார். தேவ உலகில் இவரின் சிந்தையினைக் கலைத்த பெண்களும் பூவுலகில் பிறக்கும் நிலை ஏற்படுகிறது. சிற்றின்ப ஆசைகளுக்கு உரிய இடம் பூவுலகமே ஆனதால் சுந்தரரின் சிற்றின்ப உணர்வு களைப் பகிர்வதற்கு - அவருக்குச் சலனத்தை ஏற்படுத்திய பெண்களே துணையாகவும் வந்து அமைகிறார்கள். அவர்களை மணந்து சுந்தரர் தான் வந்தவேலை முடிந்தவுடன் - எங்கு முன்னர் இருந் தாரோ அங்கேயே போகிறார் என்பதுதான் ஆலாலசுந்தரரின் வரலா றாய்ப் படிக்கின்றோம்.

 


 கதைகளை நம்பலாமா என்று எண்ணத் தோன்றுகிறது. கதைகள் எப்படி இருந்தாலும் கதைகளூடாகப் புலப்படுகின்ற கருத்துக்களை த்தான் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். காமனையே தகனம் செய்த இடத்தில் காதலுக்கு இடமே இல்லை. காதல் கொண் டால் தண்டனை அனுபவிக்க வேண்டும்தண்டனைதான் பூவுலகில் வந்து பிறப்பது. பூவுலகுதான் காதலுக்கும் சிற்றின்பத்துக்கும் ஏற்ற இடமாகும்.சிற்றின்பத்தை அனுபவிக்கும் வேளை பேரின்பம் பற்றிய புரிதல் வரும். வருவதற்கு பேரின்ப மயமான அந்தப் பெரும் பொ ருளை பரம்பெருளைப் பற்ற வேண்டும். பற்றும் நிலையும் பல இருக்கிறது. அதில் ஒரு நிலை நட்பு நிலையாகும். அதாவது அந்தப் பரம்பொருளை நண்பனாகக் கொண்டு அவனிடம் அடைக்கலம் புகுவ தேயாகும். அதைத்தான் ஆலாலசுந்தரர் இப்பிறவியில் கையாண்டார்.

     சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர மார்க்கம்

         தாதாமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும்
         நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம்
         நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்

என்று சிவஞானசித்தியார் - இறைவன்மீது அடியார் கொள்ளும் பக்தி நிலை பற்றிக் காட்டுவது நோக்கத்தக்கது.

  அந்தணராய் பிறந்தார்.அரசனாய் வளர்ந்தார்.ஆடம்பரமான


வாழ் வினை வாழ்ந்தார். அப்பரைப் போலவோ மணிவாசகரைப் போல வோ ஆலாலசுந்தரர் வாழ்ந்தவராகத் தெரியவில்லை. சுந்தரரைக் காட்டும் அத்தனை படங்களுமே அவர் அணி மணிகளுடன் ஆட ம்பரமாய் அரசிளங்குமரனாகவே இருப்பதாகவே அமைந்திருக்கி ன்றன. அப்பரையோ மணிவாசகரையோ காட்டும் படங்கள் அத்த னையும் எதுவுமே இல்லாத துறவுக் கோலத்தில் இருப்பதாகவே அமைந் திருப்பதையும் காணமுடிகிறது.ஆனாலும் சுந்தரர் இறை வனின் நண்பனாக விளங்கி - தான் விரும்பிய அனைத்தையும் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக் கொண்டார் என்றும் அவரின் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

  சுந்தரருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்


மணக்கோலத்தில் வருகிறார். பெண்வீட்டாரும் வருகிறார்கள். அந்த ஆனந்தமான வேளையில் சிவபூஜையில் கரடி புகுந்தாற்போல - ஒரு கிழப்பிரா மணர் உள்ளே வந்து விடுகிறார். புதிய புரட்சியை அவர் உருவாக்கி விடுகிறார். "திருமணம் செய்ய இருக்கும் மணமகன் சுந்தரன் - தனக்கு அடிமை " என்று ஒரு குண்டைப் போட்டு விடுகிறார். திருமணத்தை காண வந்தவர்கள் திகைக்கிறார்கள் ! மணமகன் அடிமையா ? என்ன வினோதம் என்று யாவரும் முணுமுணுக்கி றார்கள். வந்த கிழப்பிராமணரோ பிடித்த பிடியாக " சுந்தரன் எனக்கு அடிமை " என்று அடித்துச் சொல்லி - அதற்கான எழுத்து ஆதார த்தையும் காட்டுகிறார். சபையினரால் எதுவுமே செய்ய முடிய வில்லை. மணமகன் கோலத்தில் இருந்த சுந்தரர் " நீர் என்ன பித்தனா அல்லது பேயனா - மனிதனுக்கு மனிதன் அடிமையா ? " இது முறையற்றது என்று துள்ளிக் குதிக்கிறார்.ஆனாலும் கிழப்பிரா மணரின் பக்கம் வலுவாய் இருப்பதால் யாவரும்

அவரையே பார்த்தபடி செயலற்று நிற்கிறார்கள். உஷாரான கிழப்பிராமணர் " இந்த வழக்கினைத் தீர்க்க இந்த இடம் பொருத்தம் அல்ல - நான் இருக்கும் திருவெண்ணை நல்லூர்தான் பொருத்தம் என்று கூறி " சுந்தரர் பின் தொடர திருவெண்ணை நல்லூர் செல்கிறார். அங்குள்ள கோவிலுக்குள் சென்ற அந்தணர் மறைகிறார். அனைவரும் திகைக் கின்றனர். எம்பெருமான் காட்சி தருகிறார். சுந்தரர் தெளிவு பெறு கிறார். " என்னை எப்படிப் பேசினாயோ அப்படியே சொற்றமிழால் சுந்தரா பாடு - உன் பாட்டே எனக்கு உகந்த அர்ச்சனை ஆகும் " என்கிறார் இறைவன். சுந்தரர் வாயிலிருந்து செந்தமிழ் அருவியாய் பெருக்கெடுக்கிறது. இறைவனை எந்தவார்த்தையால் திட்டினாரோ அதே வார்த்தையையே வைத்து
 

 

      பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

     எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
      வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணை நல்லூர் அருட்துறையுள்
      அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

 

என்று மனங்கசிந்துருகிப் பாடிப்பரவி நின்றார். நாயேன் பலநாளும் உன் நினைப்பின்றி இருந்தேன்.அதனால் பேயாய் திருந்தேன்,நீ பொன்னாய் மணியாய் வயிரமாய் இருக்கின்றாய் நானோ உன்னை மறந்தே இருந்திருக்கிறேன்.ஊனாய்உயிராய்உடலாய்உலகாய்வானாய்நிலனாய்கடலாய்மலையாய்நீயே இருக்கிறாய். நானோ உனை அறியாமல் இருந்து விட்டேன்.

என்று தம்மைத் தடுத்தாட்கொண்ட நிலையில் சுந்தரர் மெய்யுருகிச் செந்தமிழால் பரம்பொருளைப் பாடி நிற்கிறார்.உனக்கு நான் ஏற்க னவே அடியவன் என்பதை மறந்துவிட்டேன் . நீ வந்து தெளிவு படுத்தி என்னை உனது மீளா அடைமையாய் ஆக்கி - என்னை மீட்டெடுத்தாயே பரம் பொருளே என்று ஏங்குவதும் இரங்குவதும் சுந்தரர் நிலையால் வெளிப்பட்டு நிற்கிறது எனலாம். ஆண்டவனின் பரீட்சை அடியவனைக் கடைத்தேற்றியதை இங்கு கண்டு தெளிகி றோம்.

  திருமணம் தொடக்கத்தில் இப்படியெல்லாம் நடந்திருக்குமா


என்று கேள்விகள் கேட்டு குழம்புவதில் பயனில்லை. தனது அடியானைத் தடுத்தாட் கொள்ள நடந்த ஒரு அற்புதம் என்றுதான் இதனைக் கொள்ள வேண்டும். எங்களுக்கும் இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப் பங்களை அந்தப் படைத்தவன் செய்து காட்டியிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்தால் சுந்தர் கதை நன்றாகவே விளங்கும் என எண் ணுகிறேன்.

 

இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தர் பின்னர் சங்கிலியார் பரவையார் என்னும் பெண்களை மணமுடிக்கிறார். பூவுலகில் அனுபவிக்கும் இன்பங்களை அனுபவிக்கிறார். அவரின் விருப்பங் களுக்கு ஆண்டவனும் நண்பனாய் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதும் சுந்தரர் வரலாற்றால் அறிந்து கொள்ளுகின்றோம்.

  சுந்தரர் பற்றிய கதைகள் பலவற்றைக் கேட்கும் நாம் - சுந்தரரின் முக்கியத்துவம் பற்றி நோக்குவதுதான் மிகவும் அவசியமாகும். அவற்றையே அகம் இருத்துவதுதான் முறையானதாகும் என்று கருதுகிறேன்.சுந்தரரின் தடுதாட் கொண்ட கதையில் மனம் லயிக்கும் நாங்கள் சுந்தரரின் பங்களிப்பை பற்றிப் பெரிதும் பார்ப்பதே இல்லை. " பித்தா பிறை சூடி " என்னும் பதிகத்தையும் " மீளா அடிமை உனக்கே ஆளாய் " என்னும் பதிகத்தையும் பாடி நிற்கும் அளவிலேயே சுந்தரரை விட்டு விடுவோம்.ஆனால் அதற்கு அப்பாலும் சென்று சுந்தரரை நாம் பார்க்க வேண்டும் என்பதுதான் எனது மனக்கிடக் கையாகும்.

  சம்பந்தர் அப்பர் காலம் போல் சுந்தரர் காலம் அமையவில்லை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் புறச்சமயங்களின் எதிர்ப்பலைகள் நிறையவே இருந்தன. அவர்களின் பணிகள் அனைத்துமே - புறச்சமயங்களின் எதிர்ப்பினின்று சைவத்தை "மேன்மை கொள் சைவமாக " மிளிர்ந்திடச் செய்ய வேண்டும் என்னும் வகையிலே அமைந்தது எனலாம். அதற்காகவே அவர்கள் அடியவர்கள் புடைசூழ பக்தியென்னும் புரட்சியை சமூகத்தில் நடத்திக் காட்ட வேண்டிய வர்களாகவே செயற்பட்டார்கள். ஆனால் சுந்தரர்காலம் அப்படி இல்லாத காரணத்தால் சுந்தரரின் பக்திப் பாடல்கள் நோக்கும்போக் கும் வித்தியாசமாய் அமைந்தது என்பது கருத்திருத்த வேண்டியது முக்கிய.ம் எனலாம்.

  சுந்தரர் இக இன்பங்களில் திளைத்தவராகவே இருந்திருக்கி ன்றார்.ஆனால் எந்த நிலையிலும் இறைவனை மறவாதவராக இறைபுகழ் பாடுபவராக இருந்திருக்கிறார் என்பதும் நோக்கத் தக்கது.துறவையோ வெறுப்பையோ அவரது பக்திப் பனுவல்கள் காட்டுவதாக இல்லை எனலாம்.இயற்கையினை மிகவும் நேசித்துப் பாடுகிறார்.இரந்து நின்று பாடிப் பரிசில் பெறும் நிலையினை அவர் சாடுகிறார்.தனக்கு வேண்டியவற்றை இறைவனிடம் நண்பனாய் கேட்டே பெறுகின்றவராய் சுந்தரர் இருக்கின்றார்.

 

              தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்

              சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
              பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
              புகலூர் பாடுமின் புலவீர்காள்
             இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
              ஏத்த லாம்இடர் கெடலுமாம்
              அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
              கியாதும் ஐயுற வில்லையே

என்று வித்தியாசமாய் சிந்தித்துப் பாடுவது சுந்தரரின் முக்கியத்துவம் எனலாம்.அதாவது " தம்மையே புகழ்ந்து இச்சையான முறையில் பேசினாலும் , சார்ந்து நின்றாலும்,பொருள்தர மனம் வராத பொய்மைமயான வாழ்வு உடைய செல்வரைப் பாடாமல், சிவனுடைய கோவிலைப் பாடுங்கள்,இந்தப் பிறப்புக்கு உரிய உணவும் உடையும் பெறலாம்;மறுமையில் சிவகதியும் கிடைக்கும். ஐயம் இல்லை " என்பதேயாகும்.

வீரத்தின் மிடுக்கு இல்லாத செல்வனை - வீமன் அருச்சுனன் என்று புகழ்வதில் எந்தப் பயனுமில்லைகொடுக்க மனம் இல்லா தவனைப் பாரி என்று புகழ்ந்து கூறினாலும் கொடுபவர் இல்லை. மூத்துத் தளர்ந்து உடல் நடுங்கும் கிழவனாகிய செல்வனை - மலை போன்ற தோள் உடையவன் என்று புகழ்ந்து வாழ்த்துவதால் பயன் இல்லை.வஞ்ச நெஞ்சனை கொடியவனைபாவியைகெட்டவனை சாது என்று கூறிப் பாடுவதால் பயன் இல்லை.ஈயாத உலோபியை வள்ளல் என்றும் கல்வி இல்லாதவனைக் கல்வி வல்லவன் என்றும் புகழ்ந்து காலம் கழிக்காதீர்.எம்பெருமான் சிவனைப் பாடிப் பயன் பெறுங்கள் " என்று காட்டும் பாங்கு சுந்தரரின் வித்தியாசமான சிந்தனையினையினை வெளிக்காட்டி நிற்கிறதல்லவா !

  சம்பந்தர்அப்பர்மணிவாசகர் செய்யாத ஒரு காரியத்தைச் சுந்தரர் செய்து தமிழ்ப் பக்திப் பரப்பில் முக்கியத்துவத்தைப் பெற்று நிற்கிறார். தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் எனத்தொடங்கும் " திருத்தொண்டத் தொகையினை " அளித்தமை எனலாம்.சுந்தரரின் இந்தக் கொடை மட்டும் கிடைக்கா விட்டிருந்தால் - நாங்கள் ஏற்றிப் போற்றிக் கொண்டாடும் சைவத்தின் அறுபத்து மூவரும் வந்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் இறை அனுபவங்களையும் நாம் அறியும் வாய்ப்பும் எமக்கு வாய்த்திருக்காது. அந்த பெருவாய்ப்பினை நாம் இன்று பெற்றிருப்பதற்கு அத்திவாரமே சுந்தரர்தான் என்பதை மனமிருத் துதல் அவசியமாகும்.

  சுந்தரரின் திருத்தொண்டர் தொகை இல்லையேல் - பெரியபுராணம் வந்திருக்காது. சேக்கிழார் என்னும் தெய்வப்புலவர்செந்தமிழ் புலவர் - இறை அடியார்களை எங்கள் கண்முன்னே கொண்டுவந்து காட்டி யிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. சிந்தாமணியில் மூழ்கிய சோழ மன்னனும் சிவனின் திருவருளை அறிந்திருக்க மாட்டான்.

  பெரியபுராணம் என்னும் சைவத்தமிழ் காப்பியம் இன்று சைவவ த்துக்கே பெரும் பொக்கிஷமாய் திகழ்கிறது என்றால் அதற்கு மூலகாரணமே ஆலாலசுந்தரர் தான் என்பதை மறுத்துரைத்துவிட முடியாது. ஆலயங்கள் தோறும் அடியார்களின் திருவுருவச் சிலைகள் வைக்கப்பட்டு உரிய காலங்களில் குருபூஜை செய்யப்பட்டுதிருவீதி உலா வருவதற்கும் ஆலாலசுந்தரப் பெருமானே அடித்தளம் இட்டார் என்பது பெரு முக்கியத்தைத்தை உணர்த்து கிறதல்லவா !

 

        தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்

        நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றே
        ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்
        தான்படிக்கும் அனுபங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

 

          ". வாழி திருநாவலூர் வந்தொண்டர் பதம் போற்றி  "


No comments: