ஈழத்துப் படைப்பாளி டென்மார்க் சண் கலைத்துறையில் 50 ஆண்டுகள் - கானா பிரபா

 



சிங்களத் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய காமினி பொன்சேகா, தமிழகத்தின் தியாகராஜன், தீபா, ஸ்வப்னா ஆகியோரோடு, ஈழத்துக் கலைஞர்களையும் இணைத்து அவரே தயாரித்து, இசையமைத்து இயக்கிய “இளைய நிலா” திரைப்படம் துரதிஷ்டவசமாக 1983 இனக் கலவரச் சூழலில் திரையிடாமல் முடங்கிப் போனதோடு ஆக்கிய அவரே அப்படத்தின் முழுமையான வடிவத்தைப் பார்க்க முடியாமல் போன அவலம் நிகழ்ந்தது.
இதில் ஷண் அவர்களின் இசையில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் முதல் தடவையாக இலங்கையில் நிகழ்த்திய பாடல் ஒலிப்பதிவு அது. பின்னர் “வசந்த கீதங்கள்” என்ற பாடல் தொகுப்பில் ஏழு பாடலக்ளைத் தானும், தன் சகோதரி எஸ்.பி.சைலஜாவுடனும் பாடிய போதும் ஒரு சதமேனும் அதற்கான பணமாகப் பெறாது மறுத்த பண்பாளர் எஸ்பிபி என்று வியக்கிறார்.
இதன் YouTube காணொளித் தொடுப்பு
இன்னும் பல அந்தக் காலத்துச் சுவையான நனவிடை தோய்தலோடு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நான் நிகழ்த்தும் “யாதும் ஊரே” நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.

No comments: