கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்
இரணைதீவில் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவை மையம் மீள திறப்பு
கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமல்ல
கொரோனா சடலங்கள் அடக்கம்; தற்காலிக ஏற்பாடே இரணைதீவு
இலண்டன் போராட்டத்துக்கு ஆதரவு?; கலையரசன் எம்.பி. உள்ளிட்ட 09 பேருக்கு நீதிமன்ற தடையுத்தரவு
மூவின நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் பேரணி யாழ். வந்தடைவு
கொவிட்-19: இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
கொவிட்-19 உடல்களை அடக்க இரணைதீவில் இடம்
கொவிட்-19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்காக, கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட, இரணைதீவை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (02) கொழும்பிலுள்ள, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட, தொழில்நுட்ப குழுவினால் குறித்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இரணைதீவில் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி, இரணைதீவில் கொவிட்-19 உடல் அடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது
இரணைதீவு மக்களும் கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பங்குத் தந்தையர்களும், சிவில் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.
கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவு பகுதியை தெரிவு செய்துள்ளதாக நேற்றைய தினம் (02) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
குறித்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும், அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்கு அறிவித்தல் ஏதுமின்றி இரகசியமாக சென்ற குழு அதற்கான சிபாரிசினை வழங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் கொவிட்-19 உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பூர்வீக குடிகளாக இருந்து வரும் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு இறுதியில் வட மாகாண ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.
(பரந்தன் குறூப்நிருபர் - யது பாஸ்கரன்) - நன்றி தினகரன்
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய விசா சேவை மையம் மீள திறப்பு
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020 மார்ச் 13ஆம் திகதியிலிருந்து மூடப்பட்ட இல. 145, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்பமையமானது 2021 மார்ச் 3ஆம் திகதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்ப மையத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 09.00 மணி முதல் 13.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சுற்றுலா விசா தவிர்ந்த ஏனைய அனைத்து வகை விசா விண்ணப்பங்களும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர்கள் IVS விண்ணப்ப மையத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துவதன் மூலம் தங்களது விசாவழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை (பாஸ்போட்) தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது IVSவிண்ணப்ப மையத்தில் புதன்கிழமைகளிலும் அல்லது தூதரகத்திலிருந்து வேலை நாட்களில் 17.00 முதல் 17.30 மணிவரை நேரடியாக தமது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அவசர தேவைகளுக்கான விண்ணப்பதாரர்கள் புதன்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 09.00 - 1200 மணிவரை நேரடியாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் விசா விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இலத்திரனியல் விசா விண்ணப்பம், மற்றும் பல்வேறு வகை விசாக்களுக்கு தேவையான ஆவணங்கள் மேலும் பிற தேவைகள் குறித்த தகவல்களுக்கு துணைத் தூதரகத்தின் இணையத்தளமான "cgijaffna.gov.in" இல் உள்ள "விசா" மெனுவைப் பார்வையிடவும். நன்றி தினகரன்
கொரோனா சடலங்கள் அடக்கம் செய்ய இரணைதீவு பொருத்தமான இடமல்ல
ஜனாதிபதி, பிரதமரிடம் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு
கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதையடுத்து சிறுபான்மையின மக்கள் மத்தியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியாருடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இரணைதீவு பிரதேசத்தில் நீண்ட தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விதிமுறைகளை உள்ளடக்கிய சுற்று நிருபத்தை வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
மாகாண சபைகளின் பிரதான செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண சுகாதார பணிப்பாளர், பிரதேச சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உரிய அரச அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்று இந்த விடயத்தை ஆராய்ந்து வருகிறது. இக்குழு, மாகாண மட்டத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடங்களை அடையாளம் காணவுள்ளது. இடங்கள் அடையாளங்காணப்பட்ட பின்னர் அந்த தகவல்கள் எனக்கு அனுப்பப்படும். இந்த இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே, சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொருத்தமான இடமாக இரணைத்தீவு உள்ளமையால் மாத்திரமே இந்த இடத்தை தெரிவுசெய்துள்ளோம் என்றார். நன்றி தினகரன்
கொரோனா சடலங்கள் அடக்கம்; தற்காலிக ஏற்பாடே இரணைதீவு
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒவ்வொரு மாகாணங்களில் உரிய இடங்கள் அடையாளம் காணப்படும் வரை தற்காலிகமாகவே இரணை தீவில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொவிட் 19 வைரஸ் இடைவேளைக்குப் பின்னர் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் செலுத்தி வருவதையும் கடற்படையினர் அங்கு நிலைகொண்டிருப்பதையும் கடற்றொழில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 25,000 அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இத் தீர்மானம் தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்துமெனவும் எடுத்துரைத்துள்ளார்.
இக்கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையினால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
லண்டனில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் அம்பாறை மாவட்டத்தில் உண்ணாவிரதத்தையும் பேரணியையும் நடத்தலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று(3) புதன்கிழமை முதல் ஒன்பது பேருக்கு பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த.கலையரசன், திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் வில்சன் கமலராஜன், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபன், பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் சுபோ, கல்முனைமாநகரசபைஉறுப்பினர் ராஜன் மற்றும் தர்சன், கல்முனை தா.பிரதீபன், திருக்கோவில் செல்வராணி ஆகிய 09பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவுப்பத்திரம் நேற்று(3) பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் இந்த 09பேருக்கும் நேற்று 03ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 07ஆம் திகதி வரை இந்தத்தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது. இக்காலப்பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டி நடைபவனி மேற்கொள்ள இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பொலிஸ்பிரிவிலிருந்து மக்களை ஒன்றுதிரட்டி திருக்கோவில், காரைதீவு, கல்முனை வரை பிரதான வீதியூடாகவும் நகரங்களிலும் உண்ணாவிரதமும்,நடைபவனியும் நடத்துவதற்கு இந்த 09பேரும் ஆயத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றத்துக்கு நேற்று(3) அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
குறிப்பிட்ட இக் காலப்பகுதியில் மக்களை ஒன்றுதிரட்டி பேரணி நடத்த ஏற்பாடுசெய்வது கொரோனா நோய் பரவுதலை அதிகரிக்கும் என்பதால் 1979ஆம்ஆண்டின் 15ஆம் இலக்ககுற்றவியல் சட்டத்தின்படி தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாகநீதிவான் இந்தத்தடையுத்தரவைப்பிறப்பித்துள்ளார். இந்த எதிர்ப்புநடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களை விலக்குவதற்காக திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு கட்டளையிடப்படுவதாகவும் தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காரைதீவு குறூப் நிருபர் - நன்றி தினகரன்
மூவின நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் பேரணி யாழ். வந்தடைவு
கொவிட்-19: இன்று 7 ஜனாஸாக்கள் நல்லடக்கம்
- இரு தினங்களிலும் 16 ஜனாஸாக்கள் அடக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யும், சுகாதார நடைமுறையின் கீழ், இரண்டாவது நாளான் இன்று ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மாநகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நேற்று (05) வெள்ளிக்கிழமை மற்றும் இன்று (06) சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களின் பதினாறு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், இன்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த ஐந்து ஜனாஸாக்களும், நாரங்கொடயை சேர்ந்த ஒருவர் மற்றும் கொழும்பைச் சேர்ந்த ஒருவருமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பிரதேசம் தொடர்ந்தும் இராணுவத்தினரில் பாதுகாப்பில் உள்ளதுடன், ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்) - நன்றி தினகரன்
No comments:
Post a Comment