யாழ். பல்கலை நினைவுத் தூபி உடைப்பின் பின்னணியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்?


தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி உடைப்புத் தொடர்பில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் அரசாங்கத்தின் கட்டளைக்கு அமைவாக இராணுவத்தின் உதவியுடன் பல்கலைக்கழக துனைவேந்தரின் ஆலோசனைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டுள்ளது.

அரச திணைக்களமாக இருக்கலாம்,அரச நிறுவனங்களின் பணிப்பாளர்களாக இருக்கலாம் இவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் ஒரு ஏஜேன்டுகலாக இருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற நிகழ்வு என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மத்தியில்



அச்சத்தை ஏற்படுத்திய நிகழ்வாக இதனை நாங்கள் பார்க்கின்றோம்.

தமிழர்கள் தனித்தவமாக தமது அடையாளங்களுடன் இலங்கையில் வாழ முடியாது என்பதற்கு மிகப்பெரிய ஒரு உதாரணமாக குறித்த சம்பவத்தை பார்க்க முடியும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இலங்கையில் தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் இனப் படுகொலையால் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள் ஆகியோரை நினைவு கூறுவதற்கான ஒரு நினைவிடத்தையே இலங்கை அரசு இடித்துள்ளது.

உண்மையில் இதன் பிண்ணனியில் பல்வேறு விடயங்கள் உள்ளதாக நான் சந்தேகப்படுகின்றேன். என்னிடம் சிலர் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத்தில் முன்னாள் வடக்கு ஆளுனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஒட்டோபா சட்ட சபையில் ஒரு சட்டமாக முன் மொழிவதற்கு விஜய் தணிகாசலம் என்பவர் முன் மொழிந்துள்ளார்.

அதனை நிறை வேற்றக்கூடாது என்ற கருத்தை முன் வைத்தார். என்னைப் பொருத்த வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடம் உடைக்கப் பட்டமைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் பேசியதற்கும் இடையில் நேரடி தொடர்புகள் உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

அவர் பேசிய ஒரு வார காலத்தினுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் உடைக்கப்பட்டுள்ளது என்றார்.    நன்றி IBC Tamil

No comments: