சுமிதா எனும் நடன மங்கை - செ பாஸ்கரன்
அவள் அழகி 
அழகி என்பதை விட 
இளைஞர்களின் மனதில் 
இடம்பிடித்தவள் 
கண்கள் கவிதை பேசும் 
உதடுகள் புன்னகைக்கும் 
எவரும் ரசிக்கும்படி 
அழகாய் பிறந்திருந்தாள் 
ஆதரவற்று நின்றவளை 
காமுகர்கள் விரட்டலும்  
வறுமையின் துரத்துதலும் 
அவள் ஆடைகளைக் குறைத்தது 
அவள் சினிமாவில் நடித்தாள் 
சினிமா அவளிடம் நடித்தது 
உயரத்திற்கு கொண்டுசெல்வதாய் 
உறுதியளித்தது 
வழமை போலவே 
அவளும் வஞ்சிக்கப்  பட்டாள் 
தற்கொலை முடிவானது 
கண்களால் பேசிய அழகி 
சில்க் சுமிதா 
கண்கள் மூடிக்கொண்டது 
சினிமா கொன்றுபோட் ட 
பெண்கள் பட்டியலில்  
அவள் பெயரும் 
சேர்ந்து கொண்டது 
சினிமாவை மாற்றிப் போட்ட
ஒரு நடன மங்கையை 
சினிஉலகம் மறந்து கொண்டது 
அவள் ஆட்டக்காரியல்ல 
அப்பாவி மட்டுமே. 

அவரின் பிறந்தநாள் 2 டிசம்பர் 1960 

No comments: