உலகச் செய்திகள்


கொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்!

சீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்

குளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்!

மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா!

இத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி!

சீனாவில் துக்கதினம் அனுஷ்டிப்பு

ஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு அமுல் 

கொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு?கொரோனா வைரஸ் எட்டியும் பார்க்காத அதிர்ஷ்ட தேசங்கள்!


எறும்புதின்னியில் இருந்து பரவியதா கொரோனா வைரஸ்?
விஞ்ஞானிகளின் ஆய்வில் புதிதாக தோன்றியிருக்கும் சந்தேகம்!


கொரோனா தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதே கொரோனா தொற்று நோயால் ஒருவர் கூட பாதிக்கப்படாத தேசங்களும் பூமிப் பந்தில் இருக்கின்றனவடக்கு பசுபிக் கடற்பிராந்தியத்தில் 18,000 பேரை மக்கள் தொகையாக கண்ட சின்னஞ்சிறு தேசம் பலாவ் தீவுகள் குடியரசு. இந்த தேசத்தில் இதுவரை ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இத்தனைக்கும் பசிபிக் பிராந்திய நாடுகள் பலவும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.
இதேபோல் சுமார் 1 இலட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை. மேலும் சொலமன் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத தேசங்களாகும். அதேநேரத்தில் பசுபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இவை தவிர அண்டார்டிக்கா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதைத்தான் உலகம் விசித்திரங்களால் நிறைந்தது என்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் 'பங்கோலின்' எனப்படும் எறும்பு தின்னியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
''எங்கோ ஒரு தவறான பன்றி, எங்கோ ஒரு தவறான வெளவாலை சந்தித்து விட்டது. இந்த வைரஸில் வெளவால் மற்றும் பன்றியின் டி.என்.ஏக்கள் இருக்கின்றன. இது வெளவாலிடம் இருந்து மட்டும் வரவில்லை. பன்றியிடம் இருந்தும் வந்துள்ளது.''
இது 2011இல் 'கன்டேஜியன்' என்ற ஆங்கிலப் படத்தில் வரும் வசனம்.
உலகில் பல நாடுகளை பாதிக்கும் பெயர் தெரியாத வைரஸ் ஒன்று குறித்து மருத்துவர்கள் பேசிக் கொள்ளும் வசனம். ஒரு வைரஸ் எப்படி உருவானது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் போது, இந்த வசனம் பேசப்படும். 9 வருடங்கள் கழித்து இந்த படத்தின் வசனம் தற்போது உண்மையாகி இருக்கிறது.
ஆம், தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கும் இந்த வசனத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் டி.என்.ஏ இயற்கையான ஒரு வைரஸ்தான் இது என்பதற்கான ஆதாரங்களை உலக விஞ்ஞானிகள் அடுக்குகிறார்கள்.
இந்த வைரஸ் வெளவாலிடம் இருந்து வந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதே சமயம் இது எறும்பு தின்னி என்று தமிழில் அழைக்கப்படும் பங்கோலின் விலங்கிடம் இருந்தும் வந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
பங்கோலின் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகை எறும்பு தின்னி உயிரினம் ஆகும். வெளவாலிடம் எப்படி கொரோனா வைரஸ், நிப்பா வைரஸ் கலங்கள் அதிகம் உள்ளதோ அதேபோல், பங்கோலினிலும் மிக அதிக அளவில் வைரஸ் கலங்கள் இருக்கின்றன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்த பங்கோலின் சீனர்களின் உணவு கலாசாரத்தில் மிக முக்கியமான ஒன்று. சீனர்கள் அதிக அளவில் இதை உட்கொள்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பங்கோலினை மிக கவனமாகக் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை வளர்ப்பது தொடங்கி உணவாக சமைப்பது வரை அனைத்திலும் மிக அதிக கவனம் அவசியம். இதை குறிப்பிட்ட வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும். இந்த பங்கோலின் மூலம் மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதையும் மீறி சீனாவில் கள்ள சந்தையில் பங்கோலின் அதிகம் விற்பனை ஆகிறது. மலேயான் வகை பங்கோலின் ஆகிய இனங்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அனுமதி இன்றி பல இடங்களில் பங்கோலின் விற்பனை ஆகிறது. இதைத் தடுக்க சீன அரசு பெரிய அளவில் முயன்றது.
ஆனாலும் சீன அரசின் கட்டுப்பாட்டை மீறி இந்த பங்கோலின் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பங்கோலினிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் உள்ளது. பொதுவாக கொரோனா குடும்பத்தில் உள்ள 7 வைரஸில் 5 வைரஸ்கள் வெளவாலிடம் காணப்படுகின்றன.
தற்போது ஊழுஏஐனு -19 ஐ பரப்பி வரும் ளுயுசுளு - ஊழுஏ -19 வகை கொரோனா வைரஸும் வெளவாலிடம் காணப்படுகிறது. ஆனால், ஆனால் ஒரு சில விஷயங்களில் மாற்றம் உள்ளது. அதுதான் பங்கோலின் மீது சந்தேகத்தை வர வைத்துள்ளது. வெளவாலிடம் காணப்படும் கொரோனா வைரஸ் மனிதரிடம் உடம்பிற்குள் சென்றால் உடனே அறிகுறி ஏற்படும். சார்ஸ் வைரஸ் பரவிய போது கூட இப்படி உடனே அறிகுறி ஏற்பட்டது.
அதேபோல் இந்த பழைய சார்ஸ் வைரஸ் மூலம் மனிதர்களின் எதிர்ப்பு சக்தி கலங்களை ஏமாற்ற முடியாது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவுகிறது, மனித எதிர்ப்பு சக்தி கலங்களை ஏமாற்றுகிறது. இந்த முறை கொரோனா வைரஸ் பரிணாமம் ஆகி உள்ளது. இங்குதான் பங்கோலின் மீது சந்தேகம் வருகிறது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் டி.என்.ஏ அப்படியே பங்கோலின் உடன் ஒத்துப் போகிறது. கொஞ்சம் வெளவால் டி.என்.ஏ, அதிகமாக பங்கோலின் டி.என்.ஏ இதில் காணப்படுகிறது. 90மூ இதில் பங்கோலின் டி.என்.ஏ இருப்பதை உறுதி செய்து உள்ளனர்.
இந்த பங்கோலின் மற்றும் வெளவால் இடையே எங்கேயோ ஏற்பட்ட சந்திப்பு இந்த வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். வெளவால் , பங்கோலின் மற்றும் வேறு சில விலங்குகள் சிலவற்றின் டி.என்.ஏ (கொஞ்சமாக இருக்கிறது) இதில் இருக்கிறது.
அதனால் பங்கோலின் சந்தையில், பிற விலங்குகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் வெளவால்கள் , பங்கோலின் ஒன்றாக வைத்து சந்தைக்கு கொண்டு வரப்பட்ட போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம். அதாவது எங்கோ ஒரு தவறான வெளவால் ஒரு தவறான பங்கோலினை சந்தித்து விட்டது.
'கன்டேஜியன்' படத்தில் சொன்னது போலவே இங்கு நடந்துள்ளது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் பன்றிக்கு பதில் இங்கு பங்கோலின். அவ்வளவுதான். இதில் சமைக்கப்பட்ட உணவு மூலம் இந்த வைரஸ் வேறு சிலருக்கு பரவி இருக்கலாம். அல்லது பங்கோலின் விற்கப்பட்ட வுஹன் சந்தையில் அன்று இருந்தவர்கள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம்.
வுஹன் சந்தைக்கு அன்று சென்றவர்களில் 27 பேருக்குத்தான் உலகில் முதலில் கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு சீன மருத்துவர்கள் கொடுக்கும் 'தியரி' இதுதான். ஆனால் போகப் போக செய்யப்படும் ஆராய்ச்சிகள் இதன் பின்னால் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வரலாம். உண்மையில் கொரோனா எப்படி வந்தது, எது மூலம் பரவியது என்ற உண்மை போக போகத் தெரிய வரும்.
அது வரை இந்த கொரோனா வைரஸ் குறித்த நிறைய செய்திகள் உலா வரும். சமயங்களில் இந்த வைரஸ் எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்!  நன்றி தினகரன் சீனாவில் மீண்டும் இயங்கத் தொடங்கிய இறைச்சிச் சந்தைகள்


கொரோனா வைரஸ் பிரச்சினைக்குக் காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்பு தின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் இறைச்சி சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு சந்தைதான் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என்று நம்பப்படுகிறது, இங்கிருந்துதான்  வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. சீனாவில் தொடங்கி அமெரிக்கா வரை பல இலட்சக்கணக்கான மக்களை கடுமையாக பாதித்ததுடன் சுமார் 42000மக்கள் இந்த கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
வுஹானில் வனவிலங்குகளை விற்கும் ஒரு கடல் உணவு சந்தையில் இருந்துதான்  கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியதாக உலக சுகாதார அமைப்பு ஜனவரி 12அன்று தெரிவித்து இருந்தது. டிசம்பரில் தொடங்கி தற்போது நான்கு மாதங்கள் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 25முதல் சீனாவில் லொக்டவுன் திரும்பப் பெறப்பட்டது. தற்போது முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டது.
பெய்ஜிங் உட்பட அனைத்து நகரங்களுமே இயல்பு நிலைக்கு வந்து விட்டன. கொரோனாவுக்குக் காரணமான வுகானில் கூட இயல்பான போக்குவரத்து காணப்படுகிறது. வைரஸை வென்று விட்டதாக சீனா பெருமிதத்துடன் உள்ளது. பிரச்சினை முடிந்து விட்டதாக சந்தோஷத்தில் உள்ளது.
ஆனால் சீனாவைத் தவிர உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனா வைரஸை தடுக்க வழி தெரியாமல் திணறி வருகின்றன, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் மிக மோசமாக உள்ளன. அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் வுஹான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைக்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கத்தையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாகக் கருதப்படும் வெளவால்கள், எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் வனவிலங்கு சந்தைகள் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் ஒரு வெளவாலிடம் இருந்துதான் மனிதர்களுக்கு பரவியது என்று விஞ்ஞானிகள் நம்புவதால் இந்த சந்தைகளை மீண்டும் திறப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார்கள். சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55வயதான கடல் உணவு சந்தையைச் சேர்ந்த ஒரு பெண் மூலமே முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு காரணமானதாக கருதப்படும் வெளவால்கள, எறும்புதின்னிகள், நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகளை உயிருடன் விற்கும் சந்தைகள், கடல் உணவு சந்தைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அப்படியே மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக அமெரிக்காவில் இருந்த வெளியாகும் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும், சந்தைகள் அனைத்தும் காவலர்களின் கண்காணிப்புக் கண்களின் கீழ் செயல்படுகின்றன. இருப்பினும் இறைச்சியாக வெட்டி விற்கப்படும் நாய்கள், மற்றும் முயல்கள் போன்ற கொல்லப்பட்ட விலங்குகளை யாரும் விற்பனை செய்வதில்லை. உயிருடன் மட்டுமே விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.பல விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் சீனாவின் வனவிலங்கு சந்தைகளுக்கு தடை விதிக்க அழைப்பு விடுத்துள்ளனர், ஆனால் சீனா இப்போது மீண்டும் திறந்துள்ளதால் தவறுகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. (ONE INDIA TAMIL)  நன்றி தினகரன் 
குளிர் நாடுகளிலேயே அதிக உயிரிழப்புகள்!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தையும் தாண்டி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 859,295 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் பார்த்தால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்றுமுன்தினம் உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12,428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்க கொரோனாவால் 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவதாக அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 748 பேர் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 4053 பேர் இறந்துள்ளனர். அங்கு நேற்றுமுன்தினம் மட்டும் 24,742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 188530 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதிக இறப்பில் 3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 748பேர் உயிரிழந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 8464பேர் உயிரிழந்துள்ளனர். 95923 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் புதிதாக 7967பேர் பாதிக்கப்பட்ட்டனர்.
பிரான்சில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 499 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3523 ஆக அதிகரித்தது. பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் 5212 8பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 7578 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் ஒரேநாளில் 381 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 3009 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25150 ஆக உயர்ந்தது. பெல்ஜியத்தில் நேற்றுமுன்தினம் மட்டும் 192பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 705ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் புதிதாக 845பேர் பாதிக்கப்பட்டதால் 12595 ஆக அதிகரித்துள்ளது.
நெதர்லாந்தில் மார்ச் 31ம் திகதியான நேற்றுமுன்தினம் மட்டும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1039 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12595 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானில் நேற்றுமுன்தினம் 141 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு  கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2898 ஆக உயர்ந்தது. ஈரானில் நேற்றுமுன்தினம் 310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,   மொத்தமாக 44605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் நேற்றுமுன்தினம் 130 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்தது.அங்கு 4923பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,  மொத்தமாக 71808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் அனைத்துமே மிகுந்த குளிர் பிரதேசங்கள் ஆகும். மேற்கண்ட நாடுகள் எல்லாமே 15 பாகை செல்சியஸ்க்கும் குறைவான வெப்ப நிலை உள்ள நாடுகள் ஆகும். அதேநேரம் வெயில் அதிகம் உள்ள நாடுகள் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை.இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. குளிர் பிரதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது பாதிப்பும் பெரிதாக இல்லை.   நன்றி தினகரன் 
மூன்றாம் உலக நாடுகளை விடவும் மோசமான நிலையில் அமெரிக்கா!


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தோல்வி!
அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. மூன்றாம் உலக நாடுகளை விட மிக மோசமாக அமெரிக்காவின் நிலை உள்ளது என்று உலக நாடுகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 8 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
உலகம் முழுக்க மொத்தம் சுமார் 38 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் அதிகமாக 101,739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 11519 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 164,359 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். 3197 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் அதிகமாக நியூயோர்க்கில் 67,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1392 பேர் பலியாகி உள்ளனர்.
அடுத்ததாக நியூ ஜெர்சியில் 16,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 198 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியாவில் 7,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்க அரசு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வி அடைந்து வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த தெரியாமல் அந்நாடு திணறி வருகிறது. இது மிக மோசமான தோல்வி. அமெரிக்காவின் உண்மையான பலம் இப்போதுதான் தெரிகிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இந்த வைரஸ் தாக்குதலை அமெரிக்க சரியாக எதிர்கொள்ளாததற்கு  ட்ரம்பின் அலட்சியம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதமே அமெரிக்காவிற்கு கொரோனா பாதிப்பு குறித்து எச்சரிக்கப்பட்டது. பெப்ரவரி 15ம் திகதிதான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா வந்தது. ஆனாலும் கூட, நிறைய காலம் இருந்தும் கூட அமெரிக்கா கொரோனாவிற்கு எதிராக சரியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யவில்லை.  முதல் 10 நோயாளிகளின் உறவினர்கள் யாரும் சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் சந்தித்த நபர்கள் யார் என்று சோதனை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கே சென்று வந்தார்கள், எப்படி கொரோனா வந்தது என்று கூட சோதனை செய்யவில்லை.
அதே போல் மோசமான மருத்துவ வசதியும் அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அங்கு பொது சுகாதாரம் மிக மோசமான நிலையை உள்ளதை இந்த கொரோனா வெளிப்படையாக உலகிற்கு காட்டியுள்ளது. மக்களுக்கு போதுமான காப்புறுதி வசதிகள் இல்லை. அதேபோல் போதிய எண்ணிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை. மிக முக்கியமாக பல்வேறு துறைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. அதேபோல் தற்போதும் கூட கொரோனாவிற்கு சோதனை செய்ய அமெரிக்கா பெரிய கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.அமெரிக்காவின் ஊநவெநசள கழச னுளைநயளந ஊழவெசழட யனெ Pசநஎநவெழைn (ஊனுஊ) என்று அழைக்கப்படும் மத்திய நோய் கட்டுப்பாட்டு நிலையம் மட்டும்தான் கொரோனா சோதனைகளை செய்யும் என்று கட்டுப்பாடு இருந்தது. அதாவது 50 மாநிலங்களில் கொரோனா சோதனை செய்ய முடியாது. அட்லாண்டாவில் மட்டும்தான் கொரோனா சோதனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
இன்னொரு பக்கம் அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கு கவர்னர்கள், செனட்டர்கள் உள்ளனர். இவர்களுக்கும் இடையிலும் கருத்து வேறுபாடு, முடிவு எடுக்கும் அதிகாரத்தில் குழப்பங்கள் இருந்தன. கொரோனாவிற்கு எதிராக யார் சொல்வதை யார் கேட்பது என்று குழப்பம் இருந்தது. இந்த மோசமான அரசியல் போட்டியும், இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.  நன்றி தினகரன் இத்தாலியில் இருந்து ஆறுதல் தரும் செய்தி!


கொரோனா வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு தற்போது தாக்கம் சற்று குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் ஆறுதல் தருவதாக உள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது இத்தாலியில்தான்.ஆனால் ஆரம்ப கட்டத்தில் மக்கள் அதன் தீவிரத்தை உணரவில்லை. அலட்சியமாக இருந்து விட்டனர். உலகம் முழுவதும் இன்று வைரஸ் வேகமாகப் பரவியதற்கு இந்த ஐரோப்பிய நாடுகள்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
இத்தாலியில் ஏப்ரல் 2-,ம் திகதி வரை 1,10,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,155 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் மருத்துவ, சுகாதார அதிகாரிகள். இதில் சொல்ல முடியாத வேதனை என்னவென்றால், முதியோர் இல்லங்களில் யாருக்குமே எந்த பரிசோதனையும் எடுக்காமல் அவர்கள் அப்படியே உயிரிழந்தனர். ஆஸ்பத்திரிகளிலும் இடமில்லை.. வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு முன்னுரிமையை மருத்துவமனைகள் தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வயதானவர்களால் ஆஸ்பத்திரிக்கும் செல்ல முடியாமல், அம்புலன்சும் உரிய நேரத்தில் கிடைக்காமல் அவதிப்பட்டதும் நடந்தது. அதனால் மொத்த பலியானோர் எண்ணிக்கை என்பதை அதிகாரபூர்வமாக கணிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது அதாவது மார்ச் 21 இற்குப் பிறகு, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சின்னதாக ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தினமும் நடத்தப்படும் சோதனைகளின் எண்ணிக்கையயும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் நாடு முழுவதும் இது ஒரே மாதிரியாக இல்லை. பிராந்தியத்துக்குப் பிராந்தியம் இதில் மாறுபாடுகள் உள்ளன.
பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை, சோதனைகளின் எண்ணிக்கை என்பது தினமும் மாறக் கூடிய ஒன்று. அதை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது என்றும் இந்த எண்ணிக்கை அளவு தினமும் மாறிக் கொண்டே இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இத்தாலியில் நோய்த் தாக்கம் திடீரென குறையக் காரணம் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் திட்டம்தான். அதை இத்தாலி தீவிரமாக கடைப்பிடித்து வருவதால் நோய் பரவல் சற்று கட்டுப்பட்டுள்ளது. அதேசமயம் அருகாமை நாடுகளில் இதே போல கடைப்பிடித்தாலும் கூட அங்கு பரவல் குறையவில்லை. அதிகரித்தபடியேதான் உள்ளது.
மார்ச் 10ம் திகதி முதல் இத்தாலியில் லொக் டவுன் அமுலில் உள்ளது. வியாழக்கிழமையன்று இத்தாலியில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 760 ஆக இருந்தது. புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4668 ஆக இருந்தது. அதற்கு முதல் நாள் அது 4782 ஆக இருந்தது.
தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிர்ச்சி தரும் நிலையில், தற்போது இத்தாலியில் வரும் பலி எண்ணிக்கை குறைவு என்ற செய்தி சற்று ஆறுதலையே தருகிறது.   நன்றி தினகரன் 
சீனாவில் துக்கதினம் அனுஷ்டிப்பு

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சீனா இன்று (04) தேசிய துக்கதினத்தை அனுஷ்டித்துள்ளது.
இன்றையதினம் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அந்நாட்டில் 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு பொதுமக்கள் தாம் இருக்கின்ற இடங்களில் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தியுள்ளதோடு, வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஒலி எழுப்பி துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 
சீனாவின் ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த  டிசம்பர் மாதம் உருவாகிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக் காரணமாக அந்நாட்டில் சுமார் 3,300 பேர் உயிரிழந்துள்ளதோடு, உலகின் முதல் கொரோனா நோயாளி வூஹான் நகரில் பதிவாகியிருந்தார்.  நன்றி தினகரன் ஒரே நாளில் அமெரிக்காவில் 1,480 பேர் பலி

கடந்த 24  மணித்தியால காலப்பகுதியில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 1,480 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொவிட் -19 தொற்று உலகளாவிய ரீதியில் ஆரம்பித்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதி வரை, 24 மணித்தியால காலப்பகுதியில் இடம்பெற்ற அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளமை இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையில் குறித்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,406ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 277,467ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது வரையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் 59,193 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 10, 99,572 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.     நன்றி தினகரன் 


சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு அமுல் 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில் சிங்கப்பூரில் வரும் 07ஆம் திகதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை பிரதமர் லீ சியங் லூங் வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு  கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும் என்ற நிலையை மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதுரை 65 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1,114 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  நன்றி தினகரன் 


கொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு?
கொவிட் 19 என்கிற வைரஸ் உலகம் முழுதும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கோரத்தாண்டவம் புரியவைத்தது கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்றுவரை அதற்கு முடிவே இல்லாமல் ஆட்டிப்படைக்கின்றது.
இன்று வரை சீனா முதற்கொண்டு ஐரோப்பியா மத்திய கிழக்கு,ஆசிய நாடுகள் வரை இதன் தாக்கம் குறையாமல் மக்கள் குருதிகளை குடித்துக் கொண்டு சவப்பெட்டிகளால் நிறைந்து பிணக்குவியல்களை குவித்துக் கொண்டு வருகின்றது.குறைந்தது இவ்வைரஸ் உலக நாடுகளில் இருநூறு பிராந்தியங்களை தற்பொழுது முகிழ்த்துக் கொண்டுள்ளது அத்தோடு உலக வாழ் மக்களுக்கு இன்னோரன்ன பாடங்களையும் புகட்டியுள்ளது. உலக பொருளாதாரத்தை முற்றாக வீழ்த்தி ஆட்டம் காண வைத்து உலகத் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளது. இக் கொவிட்-19 வைரஸ் உலகத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் என பல்வேறாலும் அழைக்கப்ட்டாலும் அதனை சீனா திறமையாக முகம் கொடுத்து வெற்றிக் கண்டுள்ளது. தற்பொழுது சீனாவில்  இந்த கொடிய வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி சென்றுள்ளது.அண்மையில் பீஜிங் நகரில் ஐம்பதற்கு மேற்பட்டோர் வைரஸினால் தாக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின அவை உண்மைதான்.அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த சீன தேசத்தினை சார்ந்தவர்கள் என சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தற்பொழுது இவ்வைரஸின் ஆரம்ப கேந்திர மையமாக விளங்கிய ஹூவான் நகரில் மிக வேகமாக இக் கொடிய வைரஸ் குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இம்மாதம் தொடக்கம் சீனா ஹ{வான் நகரத்தில் எந்த வித புதிய தொற்று நோயார்களும், மரணமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தனிக்கட்சி அரசியல் நிலைப்பாடே காணப்படுகிறது ஆகவே முடிவுகளை எடுப்பதிலும் அதனை செயல் வடிவில் கொண்டு வரவும் இலகுத்தன்மை காணப்படுகிறது.

மிக வேகமாக பரவி வருகின்ற பொழுது வல்லரசு நாடான அமெரிக்க உட்பட மேலைத்தேய நாடுகள் சீனாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதும் அவர்களை பாரதூரமாக விமர்சித்ததும் அறியக்கூடியது,
அத்தோடு இந்நோய் தொற்று காரணமாக சீனாவின் சிறந்த பொருளாதாரக் கொள்கை வீழ்ச்சிகாண போகின்றது என்ற சிந்தனை அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளும் பகற்கனவு கண்டதோடு நம்பிக்கையுடனும் இருந்தது.
ஹூவான் நகரம் உட்பட சீனாவின் முக்கிய நகரங்களை அந்நாட்டு அரசுகள் முழுமையாக முடக்கி மக்களை கட்டாயத்தின் பேரில் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து இல்லச்சிறைப்பிடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததோடு அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்து வெற்றியும் ஈட்டியது.
இவ்வாறு சீன அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி கட்டளையை பார்த்து அந்நாட்டு மக்களின் சிவில் உரிமைகள் உட்பட மனித உரிமைகள் முழுமையாக மீறப்படுகின்றது என அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது.
இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த கட்டளையை சீன அரசு நிறைவேற்றி சாதனைக்கண்டுள்ளது என்றே கூறவேண்டும்.
சீனாவுக்குப் பிறகு ஈரானே அதிக வைரஸ் தாக்குதலுக்கு உள்வாங்கப்பட்டது மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கொடிய கொவிட்-19 என்கிற வைரஸ் அதிகபடியாக தாக்கியது ஈரானையே ஆகும்.
ஈரானில் காணப்படுவது தெய்வீககோட்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஜனனாயகமாகும் ஆகையினால் ஈரானில் வைரலாக பரவிய வைரஸை தடுத்துக்கொள்வதற்கு அந்நாட்டு உயர் அதிகாரிகள் சுகாதார துறையை சார்ந்தவர்களின் பெரும் உதவியை நாடியதோடு பாதுகாப்பு துறையினரினதும்,காவல் துறையினரிதும உதவியை  முழுமையாக பெற்றுக்கொண்டிருந்தது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்கா நிவ்யோரக்; நகர வைத்தியசாலை முழுவதும் நிரம்பி  நிர்க்கதியாக்கப்பட்டு காணப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களையும் மரணித்தவர்கiளையும் வைப்பதற்கும் இடமில்லாமல் இருந்தப்போதும் கூட டொனல்ட் ட்ரம்ப் அவர்கள் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்காதது கேள்விக் குறியாகவே உள்ளது. இத்தாலிக்கு பிறகு அமெரிக்காவே கொவிட் 19 இல் அடுத்தக்கட்டமாக அதிகளவு தாக்கப்போகின்றது  என்ற எதிர்வு கூறலை உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது என ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த வைரஸ் ஒழிப்புக்குழுவின் தலைவர்,தொற்று நோய் ஒழிப்பு குழுவின் நிறைவேற்று அதிகாரி அன்டனி போஷிப் அவர்கள் சி.என்.என்.செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும் என பல்வேறுபட்டவர்களாலும் எதிர்வு கூறப்பட்டு வருகின்றது.அக் கொடிய வைரஸ் பரவலை   கட்டுப்படுத்த உலக முழுவதுமாக ஏரத்தாழ மூன்று பில்லியன் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ளனர் அத்தோடு தனிமைப்படுத்தவும் பட்டுள்ளனர்.உலக ஜனனாயக வரிசை நாடுகளிலே முக்கியமான நாடான எமது அயல் நாடு இந்தியாவும் தற்பொழுது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது. தொடச்சியாக 21 நாட்கள் நாடளாவிய ரீதியில் தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயராது பாடுபடுவது போற்றத்தகுந்தது.
உலக மக்களாகிய நாம் அனைவரும் தற்பொழுது இக்கட்டான பாரிய ஆபத்தினை ஏற்படுத்துகின்ற கால சூழ்நிலையில் சிக்கியுள்ளோம். ஆகவே மிக உன்னிப்பாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.
ஏறத்தாழ மூன்று பில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், பெற்றோலிய வளங்களின் பயன்பாடு மிக குறைந்துள்ளது, வாகனங்களின் இரைச்சலிருந்து நாடு நிம்மதியாக இருக்கின்றது, நச்சு புகைகளின் அளவு குறைந்துள்ளது, இயற்கை தாய் பாதுகாக்கப்பட்டுள்ளாள்,வன விலங்குகள் நிம்மதியாக வாழ்கின்றன, விபத்துக்கள், உயிரிழப்புக்கள்,போட்டி,பொறாமை இன்மை என பல்வேறு நலன்களும் இதனால் ஏற்பட்டுள்ளன.தனித்திருப்போம் கொரோ னாவை ஒழிப்போம் நாட்டைக் காப்போம்.
ஜயகுமார் ஷான், மொனறாகலை    -  நன்றி தினகரன் 
No comments: