பொது வேலி பொட்டு காதல் . பொன் குலேந்திரன் – கனடா


முன்னுரை

யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம்.அதுவும் கிடுகு வெலியில் பொட்டு ( சிறு கதவு)  வைத்து   முன் வாசல்  வழியே பலர் பார்க்க போகாமல் பொட்டின் வழியே ரகசியமாய் போய் வருவது  ஒரு  யாழ்ப்பாணக் கலாச்சாரமமாக  ஒரு காலத்தில் த்தில் இருந்து வந்தது . இப்போ தொழில் நுட்பம் முன்னேறிய   காலத்தில்  இந்த குறுக்கு  வ வழி மறைந்திருகலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது.)
****

 யாழ்ப்பாண  நகரில் இருந்து  வடக்சே   போகும்  பருத்தித்துறை  வீதியில்  நீர்வேலி  கிராமம் பத்து  கி மீ தூரத்தில் உள்ளது. இந்த  ஊரின்  எல்லைகளாக தொண்டமான் ஆற்றையும், செம்மணியும்  இருப்பதால்  இந்த பெயர் இவ்வூருக்கு வந்திருக்கலாம். வலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்  என்ற விளக்கமும் உண்டு.
சிவந்த மண்ணை கொண்ட யாழ்குடாநட்டில்  வேலிஎன்று முடியும்  ஊர் பெயர்களில் நீர்வெலியும்  ஓன்று. நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமமும்  சத்பித  அத்தியார் பாடசாலையுமாகும் . செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு.யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர்.இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய்நீர்வேலி ,சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது.அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாராஜசேகரனின் இளையமகனான பண்டாரம் மன்னனின் முதன் மந்திரியாக இருந்த அவரது மாமனாரான அரசகேசரி என்பவர் ,இந்த இராசவீதி வழியிலே ஒரு விசேடமான இடம் இருப்பதாகவும், அந்த இடத்தில் ஒரு தான் தோன்றியான தீர்த்தம் இருப்பதாகவும் கனவு கண்டார்.அடுத்த நாளே அதைப்பற்றி ஆராயும் பொருட்டு தான் கனவு கண்ட இடத்துக்கு வந்து ஆராய்ந்தபோது தான் கண்ட கனவின்படி அங்கு புனிதமான அந்த நீரூற்றைக்கண்டு வியந்து அதிசயப்பட்டார். அந்த ஊற்றிலிருந்து வெளிப்படும் தீர்த்தமானது  அமிர்தம் போலவும், நல்லநீர்ப் பெருக்கோடும் இருப்பது கண்டு ஆனந்தப்பட்டார். அப்புண்ணிய தீர்த்தத்தை திருமஞ்சனமாகக் கொண்டு ஒரு விநாயகப்பெருமானுக்குரிய ஆலயமமைத்து பிரதிஷ்டை செய்தார். அரசகேசரி என்ற மந்திரியால் 16 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதால் இவ்வாலயம் அரசகேசரிப் பிள்ளையார் கோவில் என வழங்கப்படலாயிற்று
நீர்வேலி கிராமத்தின்   சிவந்த மண்ணில் வாழை  தோட்டங்களுக்கு குறைவில்லை இடைக்காட்டு வெங்காயம் , மீசாலை மாம்பழம், மட்டுவில் கத்தரிக்காய் , உரும்பிராய் மரவள்ளி போல் நீர்வேலி பல சாதி வாழைப் பழங்களுக்கு பிரபல்யமானது. வெளி ஊர்களில் இருந்து கலியாண வீடு, மரண வீடு, வீடு குடிபுகுதல்,  சாமத்திய சடங்கு   போன்ற வைபவங்களுக்கு  வீட்டுவாசலில்  வாழை  மரம்    கட்ட நீர்வேலிக்கு வாழை  மரம்    வாங்குவதற்கு  வருவார்கள்.
  
அமைச்சர் அரசகேசரி மரபு வழியில்  வந்த  இரு  குடும்பங்களில்
ஓன்று முதலியார்  அரசரத்தினம்  குடும்பம் மற்றது   அரசரத்தினத்தின் ஒரே சகோதரி அரசவள்ளி குடும்பம் . ஊரில் அவர்களை அரசு . வள்ளி குடும்பம் என்று  அழைத்தார்கள். அரசவள்ளியின் கணவன்  குணரத்தினம்  ஒரு அரசு  சார்புள்ள அரசியல்வாதி. அரசரத்தினம்   அரசவள்ளி  ஆகியோரின் ன தந்தை    முதலியார் அரசலிங்கம்  நீர்வேலியில் அத்தியர் பாடசாலையை  இலங்கை சுதந்திரம்  பெற முன் தோற்றுவித்த  முதலியார் அருணாசலத்துக்கு   உதவியாக இருந்தவர்  . தான்  அரகேசரி  மந்திரி  வழி வந்தவன்  என்று பெருமை முதலியார் அரசலிங்கத்க்கு இருந்தது,
பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர் ஊயர்  சாதி  செல்வந்தர் என்பதால் முதலியார் பட்டம் கிடைத்தது  அவர்  இரு கோவில்களுக்கு  தர்ம கர்த்தாவாக இருந்தவர்  . செல்வத்துக்கு குறைவிள்லை. அரசகேசரி  பிள்ளயார் கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்தவர்   அவருக்கு பின் அந்த பதவி மகனுக்கு  கிடைத்தது . அதோடு  அரசரத்தினமும் அவரின் சகோதரியின் கணவன்  குணரத்தினமும் அரசியல்  கொள்கையில் எதிரானவர்ள் இதனால்  அரசவள்ளி ,அரசரத்தினம்,  குடும்பங்களுக்கு இடையே போட்டியும் போறாமையையும்  உருவாகியது. ஆரம்பத்தில்  ஒற்றுமைய்க இருந்த இரு குடும்ங்களும்   அரசியல் காரணத்தால்  எலியும் பூனையும் போலானார்கள் .

முதலியார் அரசலிங்கம் உலகில் இருந்து விடை பெறமுன் மகனுக்கும் மகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க ஆளுக்கு பக்கத்து பக்கத்தில் 300 அடிகள் நீளமும் 200 அடிகள்அகலமும் , அதாவது  416  குழிகள் உள்ள பருத்தித்துறை பாதை அருகே ஒரே மாதிரியான காணியில் இரு வீடுகளைக் கட்டிக் கொடுத்து, இருவர் பேரிலும் உயில் எழுதி வைத்துப் போனார். அதோடு இரு குடும்பங்களுகும்  ஒரு பொதுக் கிணறு. நீண்ட தென்னம் கிடுகு வேலி இரு காணிகளையும் பிரித்தது. பங்கு கிணறு, வேலி பற்றிய சொத்து விபரம் அவர்களுக்கு இடையே சண்டை வராமல் இருக்க உயிலில் எழுதி இருந்தது. அந்த விபரத்தில் தென்னோலை கிடுகு போட்ட 300அடிகள் நீளம் உள்ள பொது வேலி இருவருக்கும் சொந்தம்.
வேலியை இருவரும் முறை எடுத்து சில வருடங்களுக்கு ஒரு தடவை புது கதியால்கள் போட்டு, தென்னம் கிடுகால் அடைக்க வேண்டும். அந்தவேலை நடக்கும் பொதுஅரசரத்தினம் மனைவி  பார்வதியும், அரசவள்ளியும் பிரசன்னமாகி இருப்பார்கள் , காரணம் கதியால்கள் போடும் போது ஒருவர் காணியை ஒருவர் சில அங்குலம் ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு . அவ் நீண்ட வேலியில் உள்ள பூவரசு, கிளுவை . முள் முருக்கை ஆகியவை வேலிக் கதியால் மரங்களில் அந்த சிவந்த மண்ணில் செழிப்பாக வளரும் . அம் மரங்களில் உள்ள இலை குளைகள் வெட்டுபவன். அவர்களின் தூரத்துச் சொந்தக்காரனான கோப்பாயை சேர்ந்த குஞ்சன் என்ற குஞ்சிதபாதம். இலைகளை விற்று வரும் பணம் இரு சகோதரங்களுக்கு  சரி பாதியாகப் போய் சேரும். வேலியை மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை முறை எடுத்து மாற்ற வேண்டும். மழைக்காலங்களில் வெலிக்கு கதில்கால்கள் போடப்படும். அதற்காக பூவரசு, கிளுவை, முட் கிலுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மாரி காலத்தில் அம் மரங்களின் குழைகளை வெட்டி தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைக்க  குஞ்சன்  எடுத்து செல்வான் . அதே நேரம் கதிகால்களைக் கொண்டு வேலிகளின் இடைவெளிகளை அடைப்பர். கிலுவை மரத்தில் நைதரசன் அதிகளவில் காணப்படுகிறது. இதனைத் தோட்டத்தில் புதைத்தலானது நைதரசன் பசளை போடுவதற்குச் சமமானது.
****
இரு குடும்பங்களும் ஒற்றுமையாக இருந்த காலத்தில் அரசரத்தினத்தின்  மகன்  மகேசனும். அரசவள்ளியின் மகள்  மாலதியும் அத்தியார்  கல்லூரியில் கல்வி பயின்றனர். ஒன்றாகவே  இருவரும்  கை கோத்த  படியே  செல்வதை பார்த்து மறைந்த முதலியார்  அரசலிங்கதின் மனைவி முத்தழகி  இரசிப்பாள்.  தான்  கண்  மூட முன்  தன் பேரனுக்கும் பேத்திக்கும்  பிறந்த போதே  தன்  இரு பிள்ளைகளும், கணவனும் முடிவு எடுத்தபடியே  திருமணம் செய்து வைக்க  விரும்பினாள்.

ஒரு காணியில் இருந்து மறு காணிக்கு செல்வதற்காக இரு வீடுகளின் பொது   வேலியில் சிறு புகு வழி விடப்பட்டிருஇருந்தது   . அதை “வேலிப்பொட்டு” என்று குறிப்பிடுவர். இந்த வேலிப்பொட்டு வழியே மகேசனும், மாலதியும் சிறு வயதில் அடிக்கடி  ஒரு காணியில் மறு  காணிக்கு  ஓடிப் பிடித்து  விளையாடுவர்கள்.  இரு குடும்பங்களின்  வீட்டுகாரிகளும் அடிக்கடி கோப்பித் தூள். சர்க்கரை. சமைத் உணவு, மிளகாய்தூள்   போன்றவற்றை  வேலிபொட்டின் மூலம்   பறிமாரிகொளவார்கள். அந்தப் பொட்டின் சிறு ஒலைப் படலை எப்போதும் திறந்தே இருக்கும்    மகேசனின் நாய்  ரரஜாவும் மாலதியின் நாய்  ராணியும் கூட அந்த படலையைப்  பாவித்து சுதந்திரமாக போய்  இரு  காணிகளிலும் மலசலம் கழித்து வந்தன    மகேசனுக்கும்  மாலதிக்கும்    வருங்காலத்தில் தங்கள் பெற்றோருக்கு இடையே அரசியல்  போட்டியும்  பகமையும் வரும் என்று எதிர்பார்ககவில்லை. இருவருக்கும்  குழந்தை  மனசு. அரசியல்  என்றால்  என்ன என்று அறியதாவர்கள் .
இருவர்களுக்கு கிடையே  வெலி பொட்டுவழியே  காதல் மலரத்  தொடங்கியது . இருவரும்   பொட்டுவழியே ஓடி ஒளித்து  விளையாடினர்கள் மகேசன் வீட்டுகாணியில் காய்த்த இதரை வாழைப்பழமும்  மாலதி  வீட்டுககாணியில்  காய்த்த  கதலி    வாழைப்பழமும் மாலதி   வீட்டு   காணியில் அடி வளவில் உள்ள வேப்பம்  மரத்தில் தொங்கிய ஊஞ்சலில் இருந்து ஆடியபடிடையே பகிர்ந்து சுவைத்தனர்     .
இந்த இரு காணிகளில் வாழைதோட்டங்கள், நெல்லி . நாவல் மா  போன்ற பழ மரங்கள்  இருந்தன . வெப்ப  மர ஊஞ்சலில் மாலதியை வைத்து மகேசனும், மகேசனை  வைத்து மாலதியும்  மாறி மாறி ஆட்டுவார்கள்   வீட்டில் செய்த உணவை பெற்றோருக்கு தெரியாமல் வேலி பொட்டு வழியே பரிமாரிக்கொண்டனர்.
. பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் மகேசன் வேலி பொட்டு வழியே மாலதியின் வீட்டுக்கு வந்து வேப்பம் மர ஊஞ்சல் ஆடி , பாடி, பேசி மகிழ்வர்.  


ஐரு குடும்ப்னக்ளின் பிரிவின் பின் மகேசனுக்கும் மாலதிக்கும்  ரோமியோ ஜூலியட் போன்ற காதல் வாழ்க்கை. நினைவூட்டியத்து  மாலதியும் மகேசனும்  சந்திக்க கூடாது என்று இரு பெற்றோர்களும் தங்கள்  பிள்ளைகளுக்கு தடைவிதித்தனர். என்ன தடை வந்தாலும் சந்தர்ப்பம் வரும்போது அந்த இரு  உள்ளங்களும் தங்கள் காதல்  வளர வேலி பொட்டின் உதவியை  நாடினர் . முன் வாசல் வழியே போய் சந்திப்பதை  தவிர்த்தனர்
நிலமை அத்துமீறி ப் போவதை  அறிந்த அரசவள்ளியும்  கணவரும்  மகளுக்கு திருமணம்  பேசத் தொடங்கினாள்
அதேபோல் மகேசனுக்கும்  அவனின்  பெற்றோர் கொழும்பில் பெண் பார்த்தனர்
****
அன்று அரசகேசரிப் பிள்ளையார் ஆலயத் தேர் த் திருவிழா . பக்கத்தில்  இருந் ஊர்வாசிகளும்  நீர்வேலி  ஊர்  சனங்களும் குழுமி   இருந்தனர்  அரசரத்தினம் குடும்பமும் குணரத்தினம் குடும்பமும் அந்த தேர்த்  திரு திருவிழாவில்  பங்கு பற்றி கொண்டனர் . குணரத்தினத்தின்  அரசியல் கட்சி   ஆதரவாளர்கள்   தண்ணீர்  பந்தல்  நடத்தினர்
திருவிழாவுக்கு  போகமுன் அரசவள்ளி மாலதியைப் பார்த்து  “ என்ன  மாலதி நீ   தேர்த் திருவிழாவுக்கு  வரவில்லையா”?

“இல்லை அம்மா”
“ஏன் வரவில்லை”?
“எனக்கு இரு நாட்களில்  ஏ லெவல் இறுதி பரீட்சை  இருக்கு நான் படிக்க வேணும். கோவிலுக்கு வந்தால்  முழு நாளும் வீணாகி   போய் விடும்  . நீங்கள் இருவரும்  என்னை  நினைத்து சாமியை  கும்பிட்டு  வாருங்கள்” மாலதி  தனக்கு  முன்  இருந்த  புத்தகத்தை  பாரத்தபடியே  தாயுக்கு பதில்  சொன்னாள்
“நானும்  உன் அப்பாவும்  வீடு திரும்ப இரவாகி விடும். நான் நேற்று  சமைத்த  சாப்பாடு குளிர்  பெட்டியில் இருக்கு அதை  எடுத்து சூடாக்கி  போட்டு  சாப்பிடு . படிக்கிறன்  என்று பட்டினி இருக்காதே, இது அரசவள்ளியின்   பதில்
“சரி அம்மா என்னை பற்றி யோசிக்க வேண்டாம்  எனக்கு இப்ப பத்தொம்பது  வயசு . நான்   சின்ன பிள்ளை இல்லை  அம்மா . எது சரி எது பிழை  எண்டு  எனக்கு தெரியும்  அம்மா   “, மாலதி சற்று கோபக் குரலில்  பதில் சொன்னாள்.
சரி  சரி  நீ உன் இஷ்டப்  படி செய் . ன்னகள் இல்லத நேரம்  அடுத்த வீட்டுக்கு  அந்த   வேலி பொட்டாலை போறதில்லை “  அரசவள்ளியும்  கோபமாக மகளுக்கு பதில்  சொனாள்.
அரசரத்தினம் வீட்டில் பார்வதி  மகன் மகேசனை  எவ்வளவோ    கெஞ்சி  கேட்டும் அவன் கோவிலுக்கு  அவர்களோடு  கோவிலுக்குப் போக மறுத்து விட்டான்.  சோதனைக்கு படிக் வேண்டும் என்று கரணம் சொல்லி பெற்றோர்களை கோவிலுக்கு அனுப்பி விட்டான்.
நானும்  உன் அப்பாவும்  கோயிலுக்கு போன  பிறகு  நரர் அடுத்த வீட்டுக்  அந்த பொட்டாலே போறதில்லை . உன்  பெயரிலை நீ சோதனை பாஸ் செய்ய வேண்டும்   என்று அர்ச்சனை  செய்து கொண்டு வாறன் . இட்டலியும்  சாம்பாரும்  செய்து வைத்திருக்கிறான்  பசித்தால்  எடுத்து சாப்பிடு .  நாங்கள்   திரும்பி   வர  நேரமாகும் முன் கதவை  பூட்டிக்  கொண்டு திறப்பை  கொண்டு போறம் “மகனிடம் இருந்து  பதிலை  எதிர்பார்க்காமல்   காலை   எட்டு மணிக்கு  அரசர்ததின்மும்  பார்வதியும்  கோவிலுக்கு  போனார்கள்
****

தேர் திருவிழா முடிந்து  குணரத்தினமும் அரசவள்ளியும்  அர்ச்சனை  செயத வெள்ளி தட்டுடனும்  காளாஞ்சியுடனும்  வீடு திரும்ப மாலை  ஆறு  மணியாகி விட்ட்து  .
“மாலதி நாங்கள்  கோவிலாலை வந்திட்டம். கோயிலிலை ஒரே சனம் . நீ   எங்கை  இருகிறாய் ? சப்பிட்டாயா” உரத்த குரலில் மகளை  கூப்பிட்டாள் வள்ளி. பதில் வரவில்லை.  இரு தடவைகள்  வள்\\\\\ளி கூப்பிட்டாள். பதில் வரவில்லை. மாலதியின் அறைக்கதவு திறந்து இருந்து, பின் வளவில் இருந்த பொது  வேலி பொட்டின்   படலை  திறந்து இருந்தது.
“ஓகோ தன் அத்தான் மகேசனிடம் போட்டாள் போல இருக்கு. அவளுக்கு பல தடவவைகள்  அவரும்  நானும் எச்சரித்தனாங்கள் கள்  அடுத்த  வீட்டை போக வேண்டாம்  என்று எங்கள்   இரு குடும்பங்களுக்கு  இடையே  பேச்சு  வார்த்தை  இல்லை என்று  மாலதிக்கு  நல்லாய் தெரியும்  அப்படி தெரிந்து  இருந்தும் இவளுக்கு   அந்த   வீட்டிலை  என்ன வேலை’?  வள்ளி கோபத்தில்  சத்தம் போட்டாள் “ வள்ளி  புறு புறுததாள். 

குணரத்தினம் மனைவியின் கோபத்தை  கண்டு  “வள்ளி  கொஞ்சம்  பொறு அவசரப்  படாதே மாலதியை   வீட்டில்  தேடிப் பாக்கிறான்”  என்று  சொல்லிய படியே  மாலதியின்  அறைக்குள் போனான் . மாலதி  படித்ததுக்கு அறிகுறிகள்  இருக்கவில்லை . அவள் மேசையில் ஒரு கடிதம்  மட்டும் இருந்தது. அதை எடுதுக்கோண்டு வள்ளியிடம் வந்தார்
“என்ன  கடிதம் குணம் கையிலை “
“இது மாலதி  எழுதிய கடிதம் போல இருக்கு . கொஞ்சம் பொறு  என்ன எழுதிருக்கிறாள் என்று  பார்ப்போம்”

“ கெதியிலை  வாசியுங்கோ . என்ன எழுதி இருக்கிறாளோ  தெரியாது   வள்ளி அவசரப்  பட்டாள் .
குணரத்தினம் கடிதத்தை  வாசிக்க ஆரம்பித்தான்
என் அன்புள்ள அம்மாவுக்கும் , அப்பாவுக்கும்
இந்த கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியை  தரலாம். நம்  குடும்மும் அத்தான் குடும்பமும் இப்போஎதிரிகள் .  நானும் அத்தான் மகேசனும்  எதிரிகள் இல்லை  எங்கள்  இரண்டு பேரின்  உறவு  சிறு  வயது முதல்  கொண்டே இருந்து  வரும் உறவு.  எங்கள்  இருவரின் காதல் நேறு அல்லது இன்று ஆரம்பித்தது இல்லை. எங்கள் உறவை பற்றி குறைவாக மதிப்பிட  வேண்டாம் .  எங்கள் பொது  வேலி பொட்டும், அடிவளவு வேப்ப மரத்து   ஊஞ்சலும்     எங்கள் இருவரினது  காதலைப்  பற்றி  கதை  கதையாக சொல்லும்   என்னையும் அத்தானையும்   பிரிக்க நீங்களுமம் அப்பாவும் எனக்கு     கலியாணம்  பெசுகிறீர்ககள் என்று எனக்கும்  அத்தானுக்கும்   . தெரியும். அவரை இந்தியாவுக்கு படிக்க அனுப்ப  அவரின்  பெற்றோர் திட்டம்  போட்டு இருகிக்கிறார்கள்  என்று அவர் சொன்னார்.  நாங்கள் இருவரும்  இப்பொ   மைன்ர்கள் இல்லை . நாங்கள்  இருவரும் எங்களுக்கு என ஒரு வாழ்க்கை அமைத்து  வாழத்  தீர்மானித்து  விட்டோம் . இது  பற்றி நாம் இருவரும் கொழும்பில் உள்ள சந்திரன் சித்தப்பாவிடம் பேசி முடிவெடுத்து விட்டோம். அவர் எங்களை   கொழும்புக்கு  வரச்சொல்லி  இருகிறார்.   தான் எங்கள்  இருவரினது,  திருமணத்தை  செய்து  வைப்பதாக வாக்குறுதி    தந்திருக்கிறார்    நங்கள்  இருவரும்  மத்தியானம்  ரயிலில் கொழும்புக்குபோறோம் .  திருமணத்தின்  பின் எங்கள்  இருவருக்கும் தன் பிஸ்னஸ் நிறுவனத்தில் வேலை போட்டு  தருவதாக  சொல்லி இருக்கிறார்  எங்கள் காதலுக்கு  சித்தப்பாவும்  சின்னம்மாவும் ஆதரவு தருகினம் . காரணம்   அவர்கள் இருவரும்  எங்களைப்  போல் வேலி பொட்டு வழியே காதலித்தவர்கள் .  இனி  எங்கள்  இருவரை பற்றி  நீங்கள்  கவலை பட வேண்டாம்.
இப்படிக்கு மாலதி

“ பார்த்தியலா உங்கள் தம்பி சந்திரனின் வேலையை  அவனும்  அவண்டை மனுசியும் தான் இவர்கள் இருவரின் காதலுக்கு உதவி செய்து  இருக்கிறார்கள்  எங்கிடம் ஒரு வார்த்ததை கூட இதை பற்றி  அவர்கள் சொல்லவில்லை”  வள்ளி பொருமினாள்.
“வள்ளி இது சிறுசுகள்  மனம் ஒத்து  செய்த   முடிவு  அதுகள் இரண்டும் மேஜர்கள்.அதுகளுக்கு இப்ப சட்டம் தெரியும்”,
 அந்த  நேரம் வீட்டு  வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்டது வாசலில் அரசரத்தினமும் பார்வதியும் கையில் ஒரு கடிதத்தோடு  நின்றனர்
“ குணம் என்  மகன் மகேசன் உனது  மகள்  மாலதியோடு வீட்டை விட்டு கடிதம்  ஓன்று எழுதி  வைத்து  போய் விட்டான் “ அரசு  சொன்னார் .
 அது சரி அண்ணா  உனக்கு எப்படி தெரியும் இந்த விசயம்   . இந்த மாலதி எழுதிய கடிதத்தை பார்.  தமையனிடம் மாலதியின் கடிதத்தை  வள்ளி  கொடுத்தாள்  அரசு மகேசன் எழுகிய கடிதத்தை  வள்ளயிடம் கொடுத்தார்
அதை  வள்ளியிடம் இருந்து  வாங்கி வாசித்து  விட்டு குணரத்தினம் சோன்னான்.”இரண்டு ஒரே மாதிரயான  கடிதம் இவர்கள் இரண்டு  பெரும் வடிவாக பிளான் செய்து கடிதம் எழுதி வைத்து விட்டு  கொழும்புக்கு  என் தம்பியிடம்  போயிருக்கினம்.  அது ரெண்டும் இப்ப மேஜர்கள்  இது எங்கள் இரு   குடும்பங்களும்  விட்ட பெரிய பிழை”   என்றான் குணரத்தினம்
 “ இனியாவது எங்கள் குடும்பககள் பகையை  மறந்து, அரசியலை  மறந்து எங்கள்   பிள்ளைகளின்  நல்ல வருங்காலத்துக்கு எங்கள் இரண்டு குடும்பமும்  ஒன்று  சேர்ந்து இருப்பம்”  என்றாள் பார்வதி
அதை  ஆமோதித்தாள் வள்ளி. அரசரத்தினமும் குணரத்தினமும் ஒருவரை ஒருவர்  இறுகத் தழுவிக் கொண்டனர் . தூரத்தில்  அரச கேசரி  பிளையார்  கோவில் மணி ஓசை  கேட்டது  .

******

















No comments: