இரக்கமுள்ள அன்பர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்



உலகெங்கும் தோன்றியிருக்கும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலினால், இலங்கையில்  நிலவும் ஊரடங்கு உத்தரவு மற்றும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, அன்றாடம்  தேவைப்படும் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும்  நலிவுற்ற மக்களுக்கு உதவும் பணியில், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையமும்   (Centre for Child Development)  -   வவுனியா  நலிவுற்ற மக்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பும்,  ( VOLUNTARY ORGANIZATION FOR VULNERABLE COMMUNITY DEVELOPMENT ) மலையக சமூக அபிவிருத்தி நிறுவனமும்(Plantation Community Development Organization) ஈடுபட்டுவருகின்றன.
குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புகள், அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்புகளாகும்.
நீண்டகாலமாக இயங்கிவரும்  இந்த அமைப்புகள் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகும்.
முன்னர் நீடித்த போரினால் பெற்றவர்களை, குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்து, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியம் மற்றும்  புகலிட நாடுகளின்  தன்னார்வ அமைப்புகளின் ஆதரவுடனும்  இவை இயங்கி  வருகின்றன.
இந்த அமைப்புகள், அண்மையில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் அசாதாரண நிலைமைகளினால், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வேளைகளில், நலிவுற்ற மக்களின் தேவைகளின் நிமித்தம் உலர் உணவுப்பொதிகளை வழங்கிவருகின்றன.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்  இந்த அமைப்புகளின் ஊடாக வழங்கிவரும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ்,   மாணவர்களுக்காக வழங்கிய 2020 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதியுதவியை தாமதமின்றி வழங்கியிருக்கும் இந்த அமைப்புகள்,  தற்போது,  உலர் உணவுப்பொதிகளை வீடு வீடாகச்சென்று வழங்கி வருகின்றன.
இந்த மனிதாபிமான சேவைகளுக்கு உதவ விரும்பும் அன்பர்கள், மேலதிக விபரங்களுக்கு  தொடர்புகொள்ளலாம்.  
திரு. முருகபூபதி ( தலைவர் ) 0416 625 766
செல்வி  விதுஷினி விக்னேஸ்வரன் (செயலாளர்) 0428 216 222
செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி ( நிதிச்செயலாளர்) 0402 034 152
           CEYLON STUDENTS EDUCATIONAL FUND ( Inc)
                Bank: Commonwealth Bank BSB: 063 111  
                                      A/C No: 1063 4651 
        kalvi.nithiyam@yahoo.com                   www.csefund.org







No comments: