மறைக்கப்பட்ட மர்மங்கள் வரிசையில் கொரோனா - Sena Paskaran

.

உலகில் பல மர்மங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொண்டிருக்கும்.  இது அரசியல் ரீதியாகத்தான் நடக்கின்றதா அல்லது இயல்பாக நடக்கின்றதா என்று மக்கள் பெரிதாக குழம்பிக் கொள்வதில்லை , ஏன் என்றால் மக்கள் பார்ப்பது உலக வல்லரசுகளால்  கொடுக்கப்படுகின்ற செய்திகள்.  எதை தாங்கள் கொடுக்க வேண்டுமோ அதைத்தான் மக்கள் பார்க்க வேண்டும் என்ற நியதி எம்மக்களுக்கு எழுதப்படாத விதியாக இருந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நினைப்பதை  மட்டும்தான் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும் இதுவே உண்மை என்றும் அவர்கள் நம்ப வைத்து விடுவார்கள். அவர்களுடைய தேவைகளுக்கேற்ப மக்களுக்கு வழிகாட்டிகளாக, மேய்ப்பர்கள் ஆக இருந்து கொண்டிருப்பது இந்த வல்லரசுகள்தான்.  தம்முடைய ஆதிக்கத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது,  அது எடுப்பதுதான் முடிவு,  அது சொல்வதுதான் சரி மற்றவர்கள் மௌனித்துக்  கொண்டிருப்பார்கள். ட்  57 ஆண்டுகளுக்கு முன்பு John F Kennedy  நவம்பர் மாதம் 22ஆம் தேதி 1963 ஆம் ஆண்டு கொல்லப்படுகின்றார் விசாரணைகள் துரிதப்படுத்தப்படுகின்றது எப்படி இறந்தார் என்று தொலைக்காட்சிகள் சொல்லவேண்டியதை சொல்லி முடித்தது.  மரணத்தின் பின்புலம் மறைந்து கொண்டது .  டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி 1989 ஆம் ஆண்டு பாரத பிரதமராக வரஇருந்த ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார் எப்படி இறந்தார் என்று அவர்களுடைய விசாரணை முடுக்கி விடப்படுகிறது ஆண்டுகள் ஓடி செல்லுகின்றது குற்றவாளிகள் என்று சிலர் கைது செய்யப்படுகின்றார்கள் 22 பேர் இருந்து 14 பேராக குறைக்கப்பட்டு ஏழு பேராக மாற்றப்பட்டு அத்தனை பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு பின்பு 3 பேருக்கு தூக்கு தண்டனை என்று மாற்றப்பட்டு பின்பு அதுவும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.  ஒரு மாபெரும் நாட்டினுடைய அரசும் , அரசு எந்திரமும் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது ஆனால் மக்கள் பலருக்கும் பல பெயர்கள் அரசியல் சம்பந்தமான பல பெரியவர்களின் பெயர்களில் வந்துகொண்டே இருந்தது. அதை பற்றி எல்லாம் எந்தவிதமான கணக்கிலும்  எடுக்காமல் சாமிகளை எல்லாம் சாதாரணமாக உலாவ விட்டு விட்டு அப்பாவிகளான சிலரை மட்டும் அடைத்து வைத்தார்கள் இதுதான் இந்த தொலைக்காட்சிகள் இந்த விசாரணைகள் அரச இயந்திரங்கள் போன்றவை செய்கின்ற மிகப் பெரிய சாதனைகள். மக்கள் இதனை நம்பித்தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை. எந்த பொழுதுபோக்கை நாம் பார்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதே இவர்கள் அல்லவா ஆகவே இவர்கள் கொடுக்கின்ற விடயத்தை, இவர்கள் கொடுக்கின்ற  தீர்ப்பை மட்டும்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதுதான் ஜனநாயக அரசு சொல்கின்ற தீர்ப்பு . இத்தனை கட்சிகள் பலம்பொருந்திய கட்சிகள் இருந்தும் அந்த விசாரணையை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை,  யாரோ ஒரு சிலருடைய தூண்டுதலுக்கு யாரோ ஒரு சிலருடைய தேவைக்காக அந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டு கொண்டிருந்தது இன்றுவரை அதற்கு முடிவில்லாமல் சென்று கொண்டுதான் இருக்கின்றது.              இன்றும்  அதே சாமிகள் இந்தியாவினுடைய அரசியல் தீர்மானத்தை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 அடுத்து தமிழ்நாடு என்ற மாபெரும் நிலப்பரப்பு அதை பல வருடங்களாக பெண்ணொருத்தியாக  ஆண்டுகொண்டிருந்த செல்வி ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் நன்றாக இருக்கின்றார் நன்றாக உறங்குகின்றார் நன்றாக சாப்பிடுகின்றார் என்ற செய்திகள் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அடித்தள மக்களுக்கும்  நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தது,  திடீரென்று ஒரு நாள் முட்டி போட்டு உடைக்கப்பட்டது போல  தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அரசு எந்திரங்களும் யாருக்காகவோ  சோககீதம் இசைத்தது அம்மா மரணித்து விட்டார் என்று அறிவித்துக் கொண்டிருந்தது, அம்மாவின் பிள்ளைகள் அப்பாவிகள் ஆதரவாளர்களே கதறிக்கொண்டும்  கண்ணீர் வடித்துக் கொண்டும் இந்த வர்ண ஜாலங்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள்,  எவராலும் எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை. எப்படி இறந்தார் என்ற செய்தி எவருக்கும் தெரியாது எவருக்கும் சொல்ல முடியாது மிகப்பெரிய வல்லரசு நாடான அந்த நாட்டின் தலைவர் கூட வந்து சென்று ஒரு சில நாட்களில் இந்த நிகழ்வு நடக்கின்றது பலர் கூறுகிறார்கள் காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல் நடந்து இருக்கலாம் என்று,  எதுவும் நடந்து இருக்கலாம் ஆனால் இப்படி ஒவ்வொரு காலகட்டங்களிலும் காகம் இருக்கும்போது பனம்பழம் விழுந்ததா என்ற கேள்வி எவருக்குமே ஏற்படுவதில்லை.  ஏற்பட்டாலும் நமக்கேன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவது தானே மனித இயல்பு,  அந்த இயல்போடு அவற்றையெல்லாம் கடந்து நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்,  இதை  இந்த வர்ண தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அரசு எந்திரங்களும் நன்றாகவே அறிந்து வைத்துக் கொண்ட ஒரு விடயம்,  அந்த காரணத்தினால்தான்  வழமையாக எந்தவிதமான கூச்சமும் வெட்கமும் இல்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது.  இதுதான் என்றும் தொடர்ச்சியாக corporate world செய்து கொண்டிருக்கின்ற  செயல் . தொழில்நுட்பத்தின்  உச்சத்தை அடைந்து விட்டோம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் இந்த உலகமே அடங்கிவிட்டது என்று பூரிப்போடு சந்தோஷத்தோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்ற யாரோ ஒருவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான் ஏதோ ஒரு தேவைக்காக என்பதை ஒரு நிமிடம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. இத்தனை வசதிகளையும் இலவசமாக தருகிறார்கள் என்ற சந்தோஷம் சிந்தனையை கழட்டி வைத்துவிட்டு அவர்கள் சொல்லுகின்ற அவர்கள் நினைக்கின்ற பாதையில் செக்கு மாடுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது இந்த உலகம்.   இவர்களால்  இன்று கட்டவிழ்த்து விடப்பட்டது தான் கொரோனா  வைரஸ். தானாக வந்ததா, இல்லை  வெளவ்வாலில் இருந்து  வந்ததா, பாம்பில் இருந்து வந்ததா,  மக்களிடம் இருந்து  எத்தனை காட்சிகள் அவர்களே தந்துவிட்ட சோசியல் மீடியாக்களில் அவர்களுக்கு இன்பத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. தாங்கள் செய்ய வேண்டிய குழப்பங்களை,  பயங்களை  எல்லாம்,  கைகளில் வைத்துக் கொண்டிருக்கின்ற சின்னக் கருவியால்  இந்த மனித கூட்டமே செய்து கொண்டிருக்கின்றது.  அவர்கள் எந்த பொய்யைச் சொல்ல வேண்டுமென  நினைக்கின்றார்களோ  அந்த பொய்யை பல மடங்காகப் பெருகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று அவர்கள் ஒரு புறத்தில் குதூகலித்து கொண்டிருக்கின்றார்கள்.  உயிரியல் ஆயுதங்கள்  இருக்கின்றது அதற்கான மையங்கள் இருக்கின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் மக்களுக்கும் இல்லை அரசுகளுக்கும் இல்லை ஆனால் இது எங்கிருந்து வந்தது,  எவன் இதைக் கொண்டு வந்தான்,  எதற்காக இந்த வேளையிலே கொண்டுவந்தான் என்ற கேள்வியும் ஆராய்ச்சியும் தான் இப்பொழுது முக்கியமாக இருக்கின்றது.  ஆனால் அதை இவர்களில் யாரும்  செய்யப் போவதுமில்லை உலக அதிசயங்கள் எல்லாம் மக்களுக்காக காட்டிக் கொண்டிருக்கும்,  சாகசங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சிகள் அல்லது வானொலிகள் எடுத்துவைக்க போவதுமில்லை.  ஆனால் இன்று ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது நம்  மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கிறார்கள். இது தங்களுக்கு துன்பம் தருவதாக  இதை பரவவிட்டவனும் அழுது கொண்டிருக்கிறான் பரவிய நாடுகளும் அழுதுகொண்டு இருப்பதாக கூறுகின்றன .  பரவியது உண்மை,  மரணங்கள் உண்மை. ஆனால் பரப்பியவன் யார் என்ற விசாரணை,  அந்த விசாரணையின் பின் தண்டனை கொடுத்தல் என்பது நடைபெற முடியாத உண்மை  என்பது எல்லோருக்கும் தெரியும். 

 இல்லாத ஆயுதங்கள் இருப்பதாக நாடு ஒன்று அழிக்கப்பட்டது. அந்த நாட்டிலே என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டது என்பது பலருக்கு தெரியாது ஆனால் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் பரீட்சித்துப் பார்த்த களம் தான் அந்த நாடு. இதேபோல் தான் இன்று இந்த ஆயுதம் சோதித்து  பார்க்கப்படுகின்றது. மனித  மரணம்  என்பது அல்லது மனிதர்கள் இறப்பது  என்பது அவர்களுக்கு துன்பம் தருபவை அல்ல,  தாங்கள் நினைப்பவை நடக்க வேண்டும் அதற்கு எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டாலும் அதற்காக வருத்தப்பட போனதில்லை corporate world அவர்கள் முடிவுதான் உலக முடிவு , அவர்களுடைய அதிகாரம் தான் உலகத்தை மாற்றும் அதிகாரம்.  இந்த வைரஸ்கள் சைனா நாட்டிலிருந்து பரவியது என்று அமெரிக்க வல்லரசு அதிபர் கூறுகின்றார்.  உலக மக்களுடைய தொலைக்காட்சிகளில் சைனாவில் இருந்து வந்த வைரஸ் என்ற அடைமொழியோடு இந்த வைரஸை பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது,  அமெரிக்க ராணுவத்தினன் ஒருவன் மூலம் தான் வந்ததாக சைனாவில் இருந்து கூறப்பட்ட்து ,  ஆக மொத்தம் எங்கே இருந்து வந்தது என்பது நன்றாக மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.  ஏன் வந்தது என்பதும் நன்றாக மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.  இந்த ஆயுதத்திற்கு மாற்று நிச்சயமாக உலகத்தில் கிடைக் கத்தான் போகின்றது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தான் போகின்றது. இழப்புக்கள் ஏற்படும் என்பது சர்வ நிச்சயம். இறுதியாக வானொலிகள் தொலைக்காட்சிகள் கூறுகின்ற பொய்கள் நாங்கள் அற்புதமான விஞ்ஞான உலகத்திலே முன்னேறிக் கொண்டு விட்டோம் இந்த வைரஸை அழிப்பதற்கான மருந்துகளை கண்டுபிடித்து விட்டோம், இப்போது அழித்துக் கொண்டிருக்கின்றோம்,  அது  அழிந்துகொண்டிருக்கிறது முற்றுமுழுதாக இதை அழித்து விடுவோம் என்று  மார்தட்டிக் கொள்ளும்  நிகழ்வு என்றறோ  ஒருநாள் அவர்களால் வெளியிடப்படும். அப்போது அவர்கள் பணத்திலும், பலத்திலும் நன்றாக பெருத்திருப்பார்கள்  அதற்காக காவு கொள்ளப்பட்ட அப்பாவி மக்கள் காவு கொள்ளப்பட்டது மட்டும்தான் அதை பற்றி எவருக்குமே எந்தவிதமான அக்கறையும் இருக்காது.  உலக வல்லரசு,  ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறது  வீட்டுக்குள் இருந்து கொண்டே உலகத்தை எப்படி எல்லாம் முடக்கி விடலாம் என்ற மார்க்கத்தை கண்டுபிடித்து விட்டது.  இது எப்போது வேண்டுமானாலும் இனிவரும் காலங்களில் பயன்படுத்தக்கூடிய  ஒன்றாகத்தான் நிச்சயமாக இருக்கும்.  

ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்ற அளவிலேயே வானூர்திகள்,  நீர்மூழ்கிகள் அணு ஆயுதங்கள் இவற்றையெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தவர்கள் அவற்றில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் விற்பன்னராக மாறிக்கொண்டிருந்த காரணம்தான் புதிதாக ஒரு ஆயுதம் அந்த ஆயுதம் வடிவமைக்கப்பட்டு விட்டது.  இந்த விடயம்கூட இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் வேண்டுமானால் விக்கிலீக்ஸ் போன்ற ஒன்றினால் கசிய விடப்படும்.  உலகம்  மனிதாபிமானம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றன. கொடுமைகளை  வெளிக்கொணர்ந்த ஒரு மனிதன் மனித உரிமைக்காக வாடிக்கொண்டிருக்கின்றான் . அந்த மனிதன்  வெளிக்கொண்டுவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்த விடயங்களுக்காக இன்றும் சிறையிலே வாடிக் கொண்டிருக்கிறார் விக்கிலீக்ஸின் எழுத்தாளர் Julian Assange.  இப்படித்தான் ஒவ்வொரு நாடுகளிலும்,  இந்தியா,  இலங்கை சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் பல ஆய்வாளர்கள் பல எழுத்தாளர்கள் பல சிந்தனையாளர்கள் இவற்றையெல்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரிந்தும்  கூட பேச வேண்டிய விடயங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள்,  எந்த பாதுகாப்பும் இல்லை,  ஏதாவது நடந்தால் கேட்பதற்கு எவருமில்லை. மிருகத்தை வதை செய்தால் அதற்கு ஒரு சட்டம் இருக்கின்ற உலகம்,  பறவைகள் துன்புறுத்தப்பட்டால்  அதற்கு ஒரு சட்டம் வைத்திருக்கின்ற உலகம் ,   உலக மனித உரிமைகள் சடடம் என  இப்படி எல்லாவற்றுக்குமே பாதுகாப்புக்காக சட்டம் வைத்துக் கொண்டிருக்கின்றன.  இந்த  உலக அமைப்புக்கள் ஏன் இந்த ஒரு மனிதனுக்கு அடைக்கலம் தர அல்லது அவனை வெளிக்கொண்டுவர முன்வரவில்லை என்ற ஒரு கேள்வி நிச்சயமாக உங்களுக்குள் எழும், அதுதான் corporate world எஜமான விசுவாசம்.  அதேபோல்தான் இந்த கொரோனா  வைரஸ் இதுவும் யாரோ ஒருவருக்கு யாரோ ஒருவரின் தேவைக்காக பிரம்மாஸ்திரம் செய்யப்பட்டிருக்கிறது விசாரணை இன்றி திரையில் சுபம் போடப்படும் . 

யாவும் கற்பனை 

செ .பாஸ்கரன் 

1 comment:

கன்பரா யோகன் said...

புதிய திசையிலான சிந்தனைகள். கேள்விகளை எழுப்பும் கருத்துக்கள். வாழ்த்துக்கள் பாஸ்கரன்.
(கன்பரா யோகன் )