அவசிய மின்றி போகாதே
ஆபத்து அங்கு காத்திருக்கு
இஞ்சியை மஞ்சளை மறவாதே
ஈரமாய் தொண்டையை வைத்துவிடு
உலாபோதல் நினைப்பை விட்டுவிடு
ஊரது நலத்தை உணர்ந்துவிடு
எச்சிலை வெளியில் துப்பாதே
ஏற்காத எதுவும் உண்ணாதே
ஐயம் வந்தால் வாங்காதே
ஒன்றையும் தொட்டிட விரும்பாதே
ஓரிடம் தேர்ந்து இருந்துவிடு
ஒளடதம் இப்போ அதுவாகும் !
கட்டாயம் மிளகை சேர்த்துவிடு
காஷாயம் நன்றாய் குடிக்கநினை
கிட்டவே நிற்பதைத் தவிர்த்துவிடு
கீரை உணவில் சேர்த்துவிடு
குடிக்க மதுவை எண்ணாதே
கூடிக் கும்மாளம் அடிக்காதே
கெட்டித் தனமாய் நடந்துவிடு
கேடுகள் உன்னை அணுகாது
கைகளை நாளும் கழுவிவிடு
கொதிக்க வைத்தே நீரைக்குடி
கோரமாய் கொரனோ வருகிறது
கெளரம் பேணிட மறக்காதே ! ( கெளரம் - சுத்தம் )
சங்கடம் இப்போ நிறைந்திருக்கு
சாவாய் கொரனோ வந்திருக்கு
சித்திரம் வரைய சுவர்வேண்டும்
சீலமாய் இருத்தல் சிறப்பாகும்
சுத்தம் என்பது முக்கியமே
சூழ்ந்து இருளாய் இருக்கிறது
செல்லும் பாதை சீராக
சேமமாய் இருக்க எல்லோரும்
சைவ உணவை நாடிடுவோம்
சொற்களைக் கவனமாய் கேட்டிடுவோம்
சோம்பலை தவிர்க்கப் பயிற்சிசெய்வோம்
செளக்கியம் எங்கள் சொத்தாகும் !
No comments:
Post a Comment