இலங்கைச் செய்திகள்


ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்

இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்

இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது!

மார்ச் 17 முதல் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை

மேலும் 04 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 166

இடர் வலயங்களில் ஊரடங்கு தொடரும்; ஏனைய இடங்களில் நாளை காலை தளர்த்தப்படும் 


ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்






ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்-SriLankan Airline Temporarily Suspend all Flights-April 08-April 21
சரக்கு விமானங்கள் சேவையில்; தேவையேற்படும் போது விசேட விமானங்கள் செயற்படும்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீ லங்கன் விமான சேவையானது, ஏப்ரல் 08 முதல் 21ஆம் திகதி வரை தனது அனைத்து விமான பயண சேவைகளையம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அறிவித்தலொன்றை விடுத்துள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது சேவைகள் செயல்படும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 08 முதல் 2020 ஏப்ரல் 21 வரை தனது அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தி வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயணிகளுக்கு தெரிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.
எயார்லைன்ஸ் தொடர்ந்து விமானசேவை நிலைமைகள் மற்றும் பல்வேறு மட்டங்களாலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்து வருவதோடு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் முன்னறிவித்தலுடன் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பே அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது.
தேவைப்படுமானால், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இக்காலகட்டத்தில் விசேட விமானங்களை இயக்க விமான நிறுவனம் தயாராக உள்ளது.
ஆயினும், எயார்லைன்ஸின் சரக்கு சேவை விமானங்கள் அதன் உலகளாவிய வலையமைப்புடம் இடம்பெறும் என்பதோடு, தேவைப்படும் போது விசேட விமானங்களும் தொடர்ந்து இயங்கும்.
விமான நிறுவனம் அதன் நான்கு தசாப்த காலப்பகுதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், இது உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான சேவை வழங்குனர்களாலும் எதிர்கொண்டுள்ள மிகக் கடினமான மற்றும் துரதிர்ஷ்டவசமான காலமாகும்.
எயார்லைன்ஸின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்த சூழ்நிலைகளில் சிரமத்திற்குள்ளான அதன் மதிப்புமிக்க பயணிகளுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்கும் நோக்கில், மீள் பதிவு மற்றும் மீள வெளியீடு கொள்கையை செயல்படுத்தியுள்ளது, இச்சேவையை www.srilankan.com இல் பெறலாம்.
மேலதிக தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடந்த காலத்திலும், தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்து, ஒரு தேசிய விமான சேவை வழங்குனராகு தனது கடமையை நிறைவேற்றி வருவதன் மூலம் சக இலங்கையர் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கும், மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்குமான பணிகளை செய்து வருகிறது. அத்துடன் நாட்டின் தேவை கருதி எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் வழிநடத்த விமான நிறுவனம் முழுமையாக தயாராக உள்ளது. அதன் மூலம் COVID 19 ஐ எதிர்த்து போராடும் இலங்கையின் முயற்சிகளில் அது பங்கு வகிக்கின்றது.நிலவும் இருண்ட காலத்திலிருந்து மீண்டு, விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் புதிய பயண அனுபவத்தை வழங்க, விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது.   நன்றி தினகரன் 












இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்






இலங்கையில் 3ஆவது கொரோனா மரணம் பதிவு; 73 வயது நபர்-3rd COVID19 Death Reported-Total Deaths 03
இன்று அடையாளம் காணப்பட்ட மருதானையைச் சேர்ந்தவர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.
இன்று (01) பிற்பகல் 5.00 மணியளவில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட மூவரில் ஒருவரான மருதானையைச் சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்73 வயதான குறித்த நபர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (01) உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவரை IDH வைத்தியசாலைக்கு மாற்றிய வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் நீரிழிவு, அதிர இரத்த அழுத்தம், நீண்ட கால சிறுநீரக இயக்க பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கொண்டவர் எனவும், அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நேற்றுமுன்தினமும் (30) நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது.
60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.
இரண்டாவது மரணம் நேற்றுமுன்தினம் (30) மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார்.
இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.
இதேவேளை கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.
அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் மூவரும் என இலங்கையர் 06 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 146 ஆகும்.
இன்றையதினம் (01) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம் காணப்பட்டிருந்ததோடு, 4 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 146 பேரில் தற்போது 122 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 03 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 146

குணமடைவு - 21

சிகிச்சையில் - 123

மரணம் - 03

மரணமடைந்தவர்கள் (06)

இலங்கையில் - 03

ஏப்ரல் 01 - ஒருவர் (03)

மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

வெளிநாட்டில் - 03

லண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)குணமடைந்தவர்கள் - 21


ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)


கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 146

ஏப்ரல் 01 - 03 பேர் (146)

மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்
Patients distribution in Sri Lanka COVID - 19 Distribution in SL Akurana Bandaragama (PCnt 7) Bandarawela Battaramulla (PCnt 2) Batticaloa Beruwala (PCnt 9) Boralesgamuwa Dankotuwa (PCnt 7) Dehiwala (PCnt 2) Gampaha (PCnt 1) Gothatuwa Ja-Ela (PCnt 6) Kalutara (PCnt 2) Kelaniya (PCnt 1) Kolonnawa (PCnt 3) Maharagama (Pcnt 2) Mahawewa  MC Colombo (11) MC Galle MC Ratnapura (PCnt 2) Nattandiya (PCnt 6) Nugegoda (PCnt 4) PS Matara PS Rathnapura (PCnt 1) Puttalam Rathmalana (PCnt 4) Udubaddawa Uduvil Warakapola Wattala (Pcnt 2) Wellawaya Kandakadu QC (PCnt 25) Vavuniya QC (PCnt 3) Galkanda QC (PCnt 2) Batticaloa QC (PCnt 3)










இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது!





இலங்கையில் 4ஆவது கொரோனா மரணம் பதிவானது-4th COVID19 Patient Passed Away-58 Yr Old Male
- 58 வயதான நபர்; IDH இல் மரணம்
- உலக அளவில் மரணித்தோர் 50 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4ஆவது நபர் மரணமடைந்துள்ளார்.
இன்று (02) இரவு 9.30 மணியளவில் இவர் மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த நபர் நியூமோனியா காய்ச்சல் நிலை உக்கிரமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமான மரணம் 50,230 ஆக பதிவாகியுள்ளது.
வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை (981,221) நெருங்கியுள்ளது.
இலங்கையில் முதலாவது கொரோனா தொற்றின் காரணமான மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானது.
60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்திருந்தார்.
இரண்டாவது மரணம் கடந்த திங்கட்கிழமை (30) மொஹமட் ஜமால் எனும் நீர்கொழும்பு, போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஒருவர் மரணமடைந்திருந்தார். இவர் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (01) 3ஆவது மரணம் பதிவானது. 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஒருவர், IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார். இவரும் அதே தினம் அடையாளம் காணப்பட்டு, அதே தினமே மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 55 மற்றும் 70 வயதுடைய இரு இலங்கையர் லண்டனில் மரணமடைந்திருந்தனர்.
இதேவேளை மார்ச் 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்திருந்தார்.
அதற்கமைய உலகளாவிய ரீதியில் 3 பேரும், இலங்கையில் 4 பேரும் என இலங்கையர் 07 பேர் கொரோனா தொற்றினால் இது வரை மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 151 ஆகும்.
அதற்கமைய, இன்றையதினம் (02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை எவரும் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்படவில்லை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 151 பேரில் தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 04 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 251 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அடையாளம் - 151
குணமடைவு - 21
சிகிச்சையில் - 126
மரணம் - 04

நன்றி தினகரன் 













மார்ச் 17 முதல் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை




மார்ச் 17 முதல் 2,961 கைதிகள் பிணையில் விடுதலை-2961 Prisoners Released on Bail On Presidents Advice
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 19 சிறைக்கைதிகள் கடந்த ஏப்ரல் 01ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர் (படம்: கல்லடி குறூப் நிருபர் - உதயகாந்த் உதயகுமார்)

- ஜனாதிபதியின் கண்காணிப்பு விஜய கோரிக்கைக்கு நிவாரணம்

- நாட்டின் சுகாதார நிலையும் கருத்தில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2,691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி, சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கையின் பேரில் நிவாரணம் வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளை கொண்ட குழு கைதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரையை ஜனாதிபதியின் செயலாளரிடம் முன்வைத்திருந்தது.
தண்டப் பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தில் பெரும் பகுதியை நிறைவுசெய்துள்ள, மிகவும் பாரதூரமான சுகாதார காரணங்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் மற்றும் பிணை வழங்குதல் அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் தொடர்பில் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் உள்ள சிறைக்கைதிகளுக்கான இட வசதி பத்தாயிரம் பேருக்கானதாகும். எனினும் இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன் போது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 











மேலும் 04 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 166




மேலும் 04 பேர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் 166-4 More COVID19 Patients Identified-Total up to 166
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (04) இரவு 10.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162 இலிருந்து 166 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் (04) 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 03 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 166 பேரில் தற்போது 134 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது வரை 05 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் தற்போது 273 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அடையாளம் - 166
குணமடைவு - 27

சிகிச்சையில் - 134
மரணம் - 05

நன்றி தினகரன் 














இடர் வலயங்களில் ஊரடங்கு தொடரும்; ஏனைய இடங்களில் நாளை காலை தளர்த்தப்படும் 



இடர் வலயங்களில் ஊரடங்கு தொடரும்; ஏனைய இடங்களில் நாளை காலை தளர்த்தப்படும்-Curfew in High Risk Zone Continues-Other Districts Will Be Lifted Apr06-6pm
- மீண்டும் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்
- திங்கள் (06) முதல் வெள்ளி (10) வரை வீட்டிலிருந்து வேலை பிரகடனம்
- தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறவொ, நுழையவோ தடை

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (06) காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். இம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
நாளை ஏப்ரல் 06 ஆம் திகதி திங்கள் முதல் 10 ஆம் திகதி வெள்ளி வரையான வேலை நாட்கள் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்திய வராமும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






No comments: