அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 44 – டங்கா – சரவண பிரபு ராமமூர்த்தி டங்கா – தோற்கருவி

இரும்பு அல்லது மரத்தாலான உடல்பகுதி கொண்டது டங்கா. முரசின் அமைப்பில் இருக்கும். முகங்கள் தோலால் மூடி


இருக்கும். குச்சிக்கொண்டு முழக்கப்படும். இதை டமாரம் என்றும் சிலர் அழைக்கிறார்கள்(டமாரம் என்று வேறு ஒரு இருமுக தோலிசைக்கருவியும் உண்டு). இரு கருவிகள் சேர்ந்தது இந்த டங்கா. டங்கி என்றும் சில இடங்களில் பெயர் வழங்குகிறது. போர், அரச ஊர்வலங்களில் இந்த கருவிகள் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தன. அரசர்களின் காலத்திற்குப் பிறகு இக்கருவிகள் பெரும்பாலும் கோவில் விழாக்களில் தான் பயன்பாட்டில் உள்ளது. சென்ற நூற்றாண்டில் காஞ்சி பெரிய சங்கராச்சார்யாரின் ஊர்வலங்களில் டங்காவும் அதைச் சுமந்து செல்லும் மாடுகளும் இருந்தன. பெரும்பாலும் இந்த இசைக்கருவி காளை மாடு, குதிரை மீது கட்டி இசைக்கும் வழக்கம் இருந்தது. கோவில் சிற்பத் தொகுதிகளில் நாம் இந்த சிற்பங்களை இன்றும் காணலாம். டங்கா பற்றிய குறிப்புகள் பிற்கால இலக்கியங்களில் உள்ளன.

 

மதுரை மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் விழா


நாட்களில் காளை மாடு மீது டங்கா வைத்து ஊர்வலமாக செல்வதை நாம் இன்றும் காணலாம். சென்ற மாதம் இந்த கோவிலின் டங்கா மாடு இறந்து விட்டது. சில ஆண்டு முன்பு வரை மதுரையில் டங்கா இசைக்கருவி யானையின் மீதும் வைத்து இசைக்கப்பட்டது. காஞ்சிபுரம் வரதராசர் மற்றும் காமாட்சியம்மன்  கோவில்களிலும் டங்கா உள்ளது. காமாட்சியம்மனின் மாசி மக பெருவிழாவில் சென்ற ஆண்டு வரை குதிரை மீது வைத்து டங்கா ஊர்வலம் நடைபெற்றது. இந்த வருடம் நிறுத்திவிட்டார்கள். வரதாராசர் கோவிலில் குதிரை மீது வைத்து விழா நாட்களில் டங்கா இசைக்கும் வழக்கம் இப்பொழுதும் உள்ளது. பெரும்பாலும் பெயர் அளவில் தட்டப்படும் என்று சொல்லலாம்.

 

கொங்கு நாட்டிலும் பல இடங்களில் காளை மாடு மீது டங்கா வைத்து இசைக்கும் வழக்கம் உள்ளது. பழனி முருகனின் தைப்பூச காவடி பயணங்களில் நாம் கிராமப்புர மக்கள் காளை மாடு மீது டங்கா வைத்து இசைத்து வருவதை பாரம்பரியமாக்க கடைபிடிக்கிறார்கள். இவையன்றி இப்பகுதிகளில்  காளை மாடுகளின் மீது வைத்து இசைக்கப்படும் சிறுமுரசு என்னும் இசைக்கருவியும் உண்டு.இதுவும் டங்காவை ஒத்து இருக்கும்.

 

மிக அரிதாக கை விட்டு என்னும் அளவில் மட்டுமே டங்காவின் பயன்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. வெகு விரைவில் இக்கருவி அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

-சர


வண பிரபு ராமமூர்த்தி

 நன்றி:

  1. பல்லடம் திரு க.பொன்னுசாமி அவர்கள்வரலாற்று ஆய்வாளர்பல்லடம்

  





No comments: