.
ஜெமினி, ஜெய்சங்கர் என்று இரண்டு கதாநாயகர்களைக் கொண்டு படம் உருவானது இவர்கள் இவருடன் பத்மினி, வாணிஸ்ரீ நாகேஷ் பாலையா பாலாஜி சுருளிராஜன் எஸ் என் லக்ஷ்மி ஆகியோரும் படத்தில் நடித்தனர். இவர்கள் எல்லோரும் இடம்பெற்ற படத்தில் ரசிகர்களை கவரும் வண்ணம் நடித்து ஸ்கோர் பண்ணியவர் பத்மினி தான்.
வழக்கமான குடும்பபாங்கான பாத்திரங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கும் பத்மினி இந்தப்படத்தில் துடுக்குத்தனம் மிக்க பெண்ணாக அலட்சியமான தெனாவட்டான பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.
நடக்கும் ஸ்டைலில் சேரிப்புற பாசை என்று வித்தியாசமான பத்தினியை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டியது அதுமட்டுமன்றி வழக்கமாக நடனமாடும் பத்மினி இதில் குண்டு மணியுடன் சிலம்பு சண்டை போடுகிறார்.
அண்ணன் தம்பிகளாக வரும் ஜெமினி ஜெய்சங்கர் இருவருக்கும் உணர்ச்சிகரமாகவும் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. வாணிஸ்ரீயின் நடிப்பு சுமார்தான் வில்லனாக வரும் பாலாஜிக்கு படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை, நாகேஷ் தன் பங்களிப்பில் தவறவில்லை,
வசனங்களால் தனது அனுபவ முத்திரையை பதித்திருந்தார் சோலைமலை கண்ணதாசனின் பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார் மௌனம் தான் பேசியது கல்லுக்கு நீதி சொல்ல முடியாது பாடல்கள் கருத்துடன் ஒலித்தன
வசனகர்த்தாவாக முத்திரை பதித்த சோலைமலை டைரக்டராக தொடர்ந்து திகழக்கூடிய எதிர்காலத்தை எதிர்காலம் படம் அமைத்துக் கொடுக்கவில்லை
No comments:
Post a Comment