நவராத்திரியை முன்னிட்டு இப்பாமாலை சமர்ப்பணம்
கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணைசெய்வாயே தாயே
உள்ளமதில் என்று உறுதிநிறை தாயே
உன்கமல பாதம் எனக்குத்துணை அம்மா
வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்
வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் சரணம் எனக்கம்மா
வாதமது செய்யும் மனமகல வேண்டும்
போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும்
கருணையுடன் என்னைக் காத்திடுவாய் தாயே
No comments:
Post a Comment