பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 8கட்டடத் தொழிலாளியாக கல்லையும் மண்ணையும் சுமந்து தன் தங்கையை வக்கீலுக்கு படிகக வைக்கிறாள் அக்கா. தன் கல்லூரி மாணவர்களுடனும் தன் காதலனுடனும் பிக்னிக் செல்கிறாள் தங்கை. அங்கே ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்வதை தூரத்திலிருந்து பார்த்து அதிர்ச்சியடைகிறாள். சில காலம் கழித்து காதலனின் அண்ணனான நீதிபதி தன் அக்காவை திருமணம் செய்ய விரும்புவதாக அறிந்து உவகை கொள்கிறாள். அக்காவுக்கும் நீதிபதிக்கும் திருமணம் நடக்கிறது. அக்கா புருஷனைப் பார்த்த தங்கைக்கு பேரதிர்ச்சி!

எந்த கொலைகாரனை தூரத்தில் கண்டாலோ அவனே அக்கா கணவனாக முன்வந்து நிற்கிறான். இதுதான் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த அக்கா தங்கை படத்தின் மூலக் கதை.

ஆங்கிலப் படம் ஒன்றின் கதையைத் தழுவி பூவை கிருஷ்ணன் எழுதிய கதை முதலில் வில்லன் வீரப்பாவிடம் கிருஷ்ணனால் கொடுக்கப்பட்டது. ஆனால் வீரப்பா படத்தை தயாரிப்பதில் கால தாமதம் செய்ததால் அதே கதையை சின்னப்பா தேவிரிடம் மீண்டும் சொன்னார் கிருஷ்ணன். தேவருக்கு கதை பிடித்துவிட்டது. வீரப்பாவிடம் இருந்து கதையை வாங்கி தேவரிடம் கொடுத்து கதைக்கான நன்மானத்தைப் பெற்றுக் கொண்டார் 
பூவை கிருஷ்ணன்.

தேவர் வசனகர்த்தா ஆருர்தாஸிடம் இணைந்து கதையை மேலும் மெரு
கூட்டி படமாக்கினார். கதையை செப்பனிட்டு வசனம் எழுதும் போதே அக்கா தங்கையாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை பண்ணி அவர்கள் பேசுவது போலவே வசனங்களை எழுதினார் ஆடூர்தாஸ். தான் நினைத்த நடிகைகள் யார் என்பதையும் தேவரிடம் சொன்னார். அக்கா வேடத்திற்கு சௌகார் ஜானகி. தங்கை வேடத்திற்கு கே ஆர் விஜயா. ஆரூர்தாஸின் மனத்தெரிவு தேவருக்குப் பிடி;துவிட்டது.
சௌகார் விஜயா இருவரையும் ஒப்பந்தம் செய்து படத்தை தயாரிக்கத் தொடங்கி விட்டார். கதாநாயகனாக ஜெய்சங்கரும், அவரின் அண்ணனாக நீதிபதியாக மேஜர் ச
ந்தரராஜனும் நடித்தார்கள். இவர்களுடன் நாகேஷ் விஜயலலிதா தேங்காய் சிPனிவாசன் ஆகியோரும் இடம் பெற்றார்கள்.
விறுவிறுப்பான படத்தின் கதைக்கு ஆரூர்தாதஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். படிப்ப வேறு பண்பு வேறு படிப்ப ரத்தத்தில் வந்து கலப்பது பண்பு ரத்தததிலே 
ஊறுவது, நீதியின் பலத்திலேயே உனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அதேயளவு என் தாலியின் பலத்திலே எனக்கும் நம்பிக்கை இருக்கு போன்ற பல துடிப்பான வசனங்களை உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார் ஆரூர்தாஸ்.

சங்கர் கணேஷ் இசையமைப்பில் ஆடுவது வெற்றி மயில், குருவிகளா குருவிகளா பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மாறிவரும் சொஸைட்டி ஆகிய நான்கு பாடல்களும் இனிமையாக அமைந்தன.

சௌகார் ஜானகி கே ஆர் விஜயா இருவரும் பாத்திரத்தின் தன்மை அறிந்து உணர்ச்சிகரமாக நடித்திருந்தார்கள். சுந்தரராஜனுக்கு மாறுபட்ட வேடம், வித்தியாசமான மேக்அப் அளவுடன் தன் பங்கை செய்திருந்தார். இவர்கள் கூவரை சுற்றியே கதை அமைந்ததால் ஜெய்சங்கருக்கு படத்தில் வேலை குறைவுதன்.

போட்டோகிராப்பாராக வருகிறார் நாகேஷ். கொலை செய்யப்படும் பெண்ணின் கண்களில் கொலைகாரனின் முகம் தெரிவதை புகைப்படம் மூலம் நிரூபிக்கிறார். பாராட்டும் பெறுகிறார்.

எம் ஏ திருமுகம் டைரக்ட் செய்த அக்கா தங்கை 1969ம் ஆண்டு வெளிவந்து நூறு நாட்கள் ஓடி ரசிகர்களை கவர்ந்தது. அது மட்டுமன்றி தமிழக அரசின் 69ம் ஆண்டிற்கான இரண்டாவது சிறந்த படம் என்ற விருதினையும் பெற்றுக் கொண்டது.No comments: