தமிழ் சினிமா - கென்னடி க்ளப் திரை விமர்சனம்

கென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி உள்ளது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார்.
அந்த சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட அப்போது பாரதிராஜாவின் முன்னாள் மாணவர் கோச் சசிகுமார் அந்த அணியை வழி நடத்துகிறார்.
மாநில அளவிலான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கென்னடி க்ளப்பை சார்ந்த ஒரு பெண் இந்திய அணிக்கு செலக்ட் ஆகின்றார். ஆனால், அவர் இந்திய அணியில் விளையாட ரூ 30 லட்சம் லஞ்சம் கேட்கின்றனர்.
இதனால் அந்த பெண் விளையாட முடியாமல் போக தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கின்றார். இதை தொடர்ந்து அந்த க்ளப் என்ன ஆனது, சசிகுமார் பாரதிராஜா கனவை நிறைவேற்றினாரா இது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

சுசீந்திரன் கடந்த சில வருடங்களாகவெ தனக்கான இடத்தை தொலைத்து வெற்றிக்காக போராடி வந்தார், அந்த சமயத்தில் அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதமே கபடி, இதே நிலை தான் சசிகுமாருக்கும்.
அதனாலேயே இவர்கள் வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் சொல்லி அடித்திருக்கிறார்கள், சசிகுமார் ஒரு கோச்சாக மனதில் நிற்கின்றார், தன் அணிக்காக வேலையே தூக்கி எறியும் இடம் விசில் பறக்க வைக்கின்றார்.
 அதே நேரத்தில் பாண்டியநாடு படத்தில் பார்த்த பாராதிராஜா இதில் மிஸ்ஸிங், ஏதோ அவர் படம் முழுவதும் வந்தும் பெரிதாக மனதில் நிற்கவில்லை, கபடி ஆரம்பித்த கதையில் தொடங்கி அது வளர்ந்து தற்போது எப்படி ஒரு விளையாட்டு அரசியலாக மாறியுள்ளது, இதன் பின் எப்படி பணம் விளையாடுகின்றது என்பதை தெளிவாக காட்டியுள்ளனர் படத்தில் ஹீரோயின் என்று தான் யாருமில்லை, நடித்தவர்கள் அனைவருமே ஹீரோயின் தான், கபடி காட்சிகள் அனைத்தும் அத்தனை தத்ரூபம், அதில் ஒரிஜினல் கபடி வீராங்கனைகளையே நடிக்க வைத்தது பாராட்டத்தக்கது.
அதிலும் டுவின்ஸாக நடித்திருக்கும் இருவர், பாராதிராஜா மகளாக வருபவர், சாப்பாடு தான் முக்கியம் மானம் முக்கியமில்லை என வெகுளியாக சொல்லும் பெண் என பலரும் மனதை கவர்கின்றனர்.எப்படியும் இந்த மாதிரி விளையாட்டு போட்டி படம் என்றாலே கிளைமேக்ஸ் சீட்டின் நுனிக்கு வர வைப்பார்கள், படத்தில் ஆரம்பத்திலிருந்து பெரிதும் அப்படி எந்த காட்சி இல்லை என்றாலும், கிளைமேக்ஸில் கண்டிப்பாக அனைவரும் சீட்டின் நுனிக்கு வருவது உறுதி.
படத்தின் ஒளிப்பதிவு நாமே கபடி அரங்கில் சென்ற அனுபவம், டி.இமான் பின்னணியில் கலக்கியுள்ளார், ஆனால், விஸ்வாசம் ஹாங் ஓவர் இன்னும் போகவில்லை போல.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம், சொல்லி அடிக்கும் ஹிட் மெட்ரீயல்.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
படத்தில் நடித்திருக்கும் கபடி வீராங்கனைகள்.

பல்ப்ஸ்

பாராதிராஜா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். கிளைமேக்ஸ் வேண்டுமென்ற வைக்கப்பட்டது போன்ற டுவிஸ்ட்.
மொத்தத்தில் இந்த கென்னடி க்ளப் நம்பி இந்த களத்தில் அனைவரும் இறங்கலாம்.
நன்றி  CineUlagam
No comments: