இலங்கைச் செய்திகள்


படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 

நல்லூரில் நடமாடும் பொலிஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!!

இலங்கை விடயத்தில் ஐ.நா. கவலை !

தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் இராணுவத் தளபதி

புதிய இராணுவதளபதி விவகாரம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்- அமெரிக்கா

சவேந்­திர சில்வா நியமனம் ; அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு குறித்து தூதுவர் விளக்கம்

சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது  – ஐரோப்பிய ஒன்றியம்

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் நல்லிணக்கம்,  பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நலிவடையும் - கனடா , ஜெர்மன் கண்டனம் 

சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா

சவேந்திர சில்வா நியமனம்- ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் அதிருப்தி

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை 

சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர் கூறுவது என்ன ?

ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்



படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 




21/08/2019 இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக  இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புலமைச் சொத்­துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 
அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 
கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இவரின் மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காலை 11 மணிக்கே மனை­வியும் அவரின் இரு பிள்­ளை­களும் அவரை பார்­வை­யிட்­டுள்­ளனர். 
அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்சட்டம் மற்றும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பயங்­கர விளைவு இது. வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் நீண்­ட­கா­ல­மாக யாழ். மாவட்­டத்தின் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யா­கப்­பணி புரிந்­தவர். தற்­போது கிளி­நொச்சி மாவட்ட பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­ச­ராக இருக்­கின்றார். இவர் துணிச்சல்மிக்­கவர். மக்­க­ளுக்­கா­கப் ­ப­ணி­யாற்­று­பவர். இதனால் இரா­ணுவ, பொலிஸ் புல­னாய்­வா­ளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சி­களும் இவரின் கைதுக்கு கார­ண­மாக இருக்­க­லா­மென நாம் கரு­து­கின்றோம். 
குறிப்­பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தியில் யாழ். மாவட்­டத்தில் சுமார் 300க்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஆனால் இரா­ணுவ,பொலிஸ் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் இவர்கள் தற்­கொலை செய்து கொண்­ட­தாக, விபத்தில் இறந்­த­தாக தெரி­வித்து அந்த விதத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அப்­போது சட்ட வைத்­திய அதி­கா­ரி­யாக இருந்த சிவ­ரூபன், பல மர­ணங்கள் அடித்­துக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன, சைலன்சர் துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளன, நவீன முறை­க­ளைப் ­ப­யன்­ப­டுத்­திக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­த­துடன் சர்­வ­தே­சத்­துக்கும் தெரி­யப்­ப­டுத்­தினார். அத்­துடன் இரு தட­வைகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­பா­கவும் இவர் சாட்­சியம் வழங்­கினார். 
2006ஆம் ஆண்டு அல்­லைப்­பிட்­டியில் ஒரு வீட்­டுக்குள் இருந்த மக்கள் இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­ல­பட்­டனர். இதில் பலர் காய­ம­டைந்­தனர். அப்­போது அவர்­களை அங்­கி­ருந்து கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் இருந்­தது. 
இத­னை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தின் நீதி­ய­ர­ச­ரா­க­வி­ருந்த ஸ்ரீநிதி நந்­த­சே­க­ர­னுடன் இணைந்து அப்­போது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்த சிவ­ரூபன் அங்கு சென்று காயப்­ப­ட­ட­வர்­களை  மீட்டு வந்து சிகிச்­சை­ய­ளித்த வர­லாறு  அவ­ருக்­குண்டு. இதற்­காக அவரை அமெ­ரிக்கா அழைத்து விசேட விருது வழங்­கி­யது. 
இவ்­வா­றான துணிச்சல் மிக்க வைத்­தி­யரின் பணியை முடக்­கு­வ­தற்­கா­கவும் தமி­ழர்­களின் பல படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­ய­மாக இருப்­ப­த­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வீட்டில் வைத்து கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக  ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்­துத்தான் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்­களைக் கொல்­வோம், அழிப்போம், நீங்கள் எங்கள்  அடி­மைகள்  என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது.  இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை. 
நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை  என்றார்.  நன்றி வீரகேசரி 









நல்லூரில் நடமாடும் பொலிஸ் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனம்!!

21/08/2019 நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது. 25 திருவிழாக்களில் இன்று 16ஆம் திருவிழாவாகும்.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  18ஆம் திருவிழா கார்த்திகை உற்சவம் நடைபெறுகின்றது. அன்றைய தினம் முதல் சிறப்பு உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் அதிகளவு அடியவர்கள் நல்லூரில் திரள்வர்.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்த பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவின் இரண்டு வாகனங்கள் இன்று நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளுக்கு வருகை தந்துள்ளன.  நன்றி வீரகேசரி 











இலங்கை விடயத்தில் ஐ.நா. கவலை !

21/08/2019 இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­வ­தாக, ஐ.நா.பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்­டரஸ் தெரி­வித்­துள்ளார். 
ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் சார்பில், அவரது பேச்­சாளர் ஸ்டீபன் டுஜாரிக்  இதனை குறிப்­பிட்­டுள்ளார்.   
நியூ­யோர்க்கில் நேற்று முன்­தினம் நடந்த நாளாந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.
“இலங்­கையின்  இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.
ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம், ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்ள அறிக்­கையை நீங்கள் பார்த்­தி­ருப்­பீர்கள். எமது தரப்பில், இந்த நிய­மனம் குறித்து நாங்­களும் கவ­லை­ய­டை­கிறோம்.
ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில்,நிறுத்­தப்­பட்­டுள்ள அனைத்து பணி­யா­ளர்­களும், மிக­உ­யர்ந்த மனித உரிமை தரங்­க­ளுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விட­யத்தில், ஐ.நா உறு­தி­யுடன் உள்­ளது.
ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்கும் அனைத்து சிறி­லங்கா சீருடை பணி­யா­ளர்­களும் விரி­வான மனித உரி­மைகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.” என்றும் அவர் தெரி­வித்தார்.
இதே­வேளை  இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து,   ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம்  அறிக்கை  வெ ளியிட்­டுள்­ளது. . அதில்   குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது :
போர்க்­குற்­றங்கள் மற்றும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்­கை­களில் அடுத்­த­டுத்து குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இலங்கை இரா­ணு­வத்தின் உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ருவர், இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சேல் பச்லெட் வெகு­வாக அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.
சர்­வ­தேச மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்­வாவும் அவ­ரது படை­ய­ணியும் பல்­வேறு குற்­றங்­களைப் புரிந்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள போதி­லும்­கூட, அவர் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து நான் மிகுந்த கவ­லை­ய­டை­கின்றேன் என்று ஆணை­யாளர் பச்லெட் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.
சவேந்­திர சில்வா இரா­ணுவ அலு­வ­லகப் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்ட போது, அது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும் என்று மிச்சேல் பச்லெட் கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரின் போது சமர்ப்­பித்த தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­தி­யுத்­தத்தின் போது லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா 58 ஆவது படைப்­பி­ரி­விற்குத் தலை­மை­தாங்­கினார். அவ­ரது அந்தப் படை­யணி சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டங்­களை மீறும் வகை­யி­லான குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ர­ணைகள் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
சவேந்­திர சில்­வாவின் இப்­ப­தவி உயர்­வா­னது, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30(1) தீர்­மா­னத்தின் பின்­ன­ணியில் நீதி­யையும், பொறுப்­புக்­கூ­ற­லையும் நிறை­வேற்­று­வதில் இலங்­கைக்குக் காணப்­படும் பற்­று­று­திக்குக் குந்­தகம் விளை­விப்­ப­தாக அமையும் என்றும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் கவலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். 
அத்தோடு இது நல்லிணக்கப்பொறிமுறைகளை மங்கச்செய்வதுடன், குறிப்பாக போரினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்களின் பார்வையில் பெரும் பாதிப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புத் தேவை ஏற்படுவதுடன், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இலங்கை தொடர்ந்து பங்களிப்பை வழங்குவதற்கான இயலுமையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  நன்றி வீரகேசரி 











தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் இராணுவத் தளபதி

21/08/2019 இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (21) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பெறுப்போற்றுக்கொண்டார். 
 23 ஆவது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட நிலையில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.   நன்றி வீரகேசரி 











புதிய இராணுவதளபதி விவகாரம் - இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை பாதிக்கும்- அமெரிக்கா

21/08/2019 இலங்கையின் இராணுவதளபதியாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டுள்ளதால் இலங்கையுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் பாதிக்கப்படலாம் என அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவின் நியமனம் நல்லிணக்க முயற்சிகளிற்கு நிரந்தரமான தாக்கத்தை செலுத்தும் என இராஜாங்க திணைக்கள அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடுமையான அரசியல் சூழ்நிலையில் தேசிய உணர்வுகளை பயன்படுத்தினால் நன்மையடையலாம் என சில தரப்பினர் கருதுகின்றனர் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
தெளிவான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ள ஜெனரலிற்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் தேசிய உணர்வை பயன்படுத்த முயல்வது  துரதிஸ்டவசமானது எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இராணுவ தளபதி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர் என்றால் இலங்கையுடன் வலுவான  இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் எங்கள் முயற்சிகள் மட்டுப்படுத்தப்படலாம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மூதலீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரி எச்சரித்துள்ளார்.
இலங்கை சமூகத்தில் துருவமயப்படுத்தலிற்கு வழிவகுக்க கூடிய சூழல் காணப்படுவதாக முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் முதலீடு செய்வதற்கு தயங்கலாம் எனவும் அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவின் நியமனத்தினால் மில்லேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பு மூலம் வழங்கப்படுகின்ற நிதிஉதவிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











சவேந்­திர சில்வா நியமனம் ; அமெ­ரிக்­காவின் நிலைப்­பாடு குறித்து தூதுவர் விளக்கம்

21/08/2019 இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது தொடர்­பாக தாம் வெளி­யிட்ட அறிக்கை அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்தும் நோக்­கி­லா­னது என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அலய்னா டெப்லிட்ஸ் தெரி­வித்­துள்ளார்.
அமெ­ரிக்க தூதுவர் கொழும்பில் தனது இல்­லத்தில் நேற்று சில ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­தித்துப் பேசினார்.
இதன்­போது,  இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கவலை தெரி­வித்து அமெ­ரிக்க தூத­ரகம் வெளி­யிட்ட அறிக்கை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது.
அதற்கு அமெ­ரிக்க தூதுவர், பதி­ல­ளிக்கும் போது, “ இது எனது நாட்டின் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வது மட்­டு­மே­யாகும்.
ஒரு நாட்­டுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறு­வ­தற்கும்,   அதன் செயல்கள் குறித்து கவலை தெரி­விப்­ப­தற்கும் இடையில் வித்­தி­யாசம் உள்­ளது.
அமெ­ரிக்­காவின் கொள்கைகளையும் முடிவுகளையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை” என்று அவர் கூறினார்.   நன்றி வீரகேசரி 











சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான  முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது  – ஐரோப்பிய ஒன்றியம்

20/08/2019 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.
Image result for ஐரோப்பிய ஒன்றியம்
சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இன்று  செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கையின் இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் நிலைப்பாட்டை நாங்களும் பகிர்ந்துகொள்கின்றோம்.
சவேந்திர சில்வாவிற்கு இராணுவத் தளபதியாகப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமையின் மூலம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருந்த வாக்குறுதி தொடர்பில் தற்போது சிக்கல்நிலை தோன்றியுள்ளது. 
அத்துடன் தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது.  நன்றி வீரகேசரி 










சவேந்திர சில்வாவின் நியமனத்தால் நல்லிணக்கம்,  பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் நலிவடையும் - கனடா , ஜெர்மன் கண்டனம் 

20/08/2019 சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கும் கனடா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள், இந்நியமனம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நலிவடையச் செய்வதாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. 
Image result for canada and german png
லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச, உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகள் பலவும் தமது கண்டங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகம் வெகுவாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒருபகுதியை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட், 'உண்மையிலேயே இவ்விடயம் மிகுந்த அவதானத்திற்குரியது' என்றும் பதிவிட்டிருக்கிறார்.  நன்றி வீரகேசரி 












சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா

20/08/2019 இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக  கனடா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது.
அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 












சவேந்திர சில்வா நியமனம்- ஐநா மனித உரிமை ஆணையாளர் கடும் அதிருப்தி

20/08/2019 இலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையணியில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்  தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையினால் யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை  இலங்கையின் புதிய  இராணுவதளபதியாக நியமித்தமை குறித்து மனித உரிமை ஆணையாளர் கடும் கரிசனம் வெளியிட்டுள்ளார்.
சவேந்திர டி சில்வாவிற்கு எதிராகவும் அவரது படையணிக்கு எதிராகவும் சர்வதேச சட்டங்கள் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறியதாக  பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்ட்டுள்ள போதிலும் இலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின்படி நீதி பொறுப்புக்கூறலை  ஊக்குவிப்பதற்கான இலங்கையின்  உறுதிமொழிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவேந்திரசில்வாவிற்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வு நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது,என தெரிவித்துள்ள  மிச்சல் பச்லெட் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்கள் மத்தியில் இது கடு;ம் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையின் பாதுகாப்பு துறை சீர்திருத்தத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் அமைதிப்படையின் நடவடிக்கைகளிற்கு பங்களிப்பு செய்வதற்கான இலங்கையின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி 










இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை 

19/08/2019 இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
Image result for usa flag
இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.
 இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும்.
குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.  நன்றி வீரகேசரி 











சவேந்திர சில்வா விவகாரம் ; அமெரிக்கக் குடியுரிமை ; கோத்தாபயவிற்கு எதிரான வழக்கு குறித்து அமெரிக்கத் தூதுவர் கூறுவது என்ன ?

23/08/2019 இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன. நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார்.
கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்வா விடயத்தில் பெருமளவு ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாடுகளினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. 
முப்பது வருடகால யுத்தத்தின் போது அதில் சம்பந்தப்பட்ட தரப்பினராலும் கொடூரங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக அடிவரை விசாரித்தறிய வேண்டிய தேவையிருக்கிறது, அதுவே இப்போதிருக்கம் சவால்களில் ஒன்று. உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை முழுமையாகக் கையாள்வதற்கு செயன்முறையொன்று தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறை இலங்கையின் இறைமையை மீறுவதாக மக்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அதுபற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
'அமெரிக்காவின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை. புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து தொடர்பிலும் இதையே நாம் செய்தோம். இலங்கையின் நற்பெயர், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் கடப்பாடு ஆகியவை குறித்து நாம் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றோம். அவரை நியமியுங்கள், இவரை நியமியுங்கள் என்று நாம் கூறவில்லை. இந்த விடயத்தில் எனது நிலைப்பாட்டை மாத்திரம் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.
'எதைச் செய்ய வேண்டுமென்று ஒரு நாட்டிற்குக் கூறுவதற்கும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் குறித்து எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கூறுவதாக மக்கள் வியாக்கியானப்படுத்திக் கொள்வார்கள் என்று நீங்கள் கூறுவது சரியானதே. என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூறவில்லை. தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை இங்குள்ள அரசாங்கமும், மக்களும் தான் தீர்மானிக்க முடியும். எமது அக்கறைகளையும், ஏனைய நாடுகளின் அக்கறைகளையும் இலங்கை அரசாங்கமும், மக்களும் கருத்தில் எடுப்பார்களெ நிச்சயமாக நம்புகின்றேன்'
கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம்
கேள்வி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் இப்போது ஒரு அமெரிக்கப் பிரஜை இல்லையா?
பதில் : முதலில் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் நாம் குறிப்பிட்ட சில அந்தரங்கச் சட்டங்களைக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்டவர்களின் விவகாரம் குறித்து நாம் கருத்துச்சொல்ல முடியாது. கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் குறித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு ஊடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. குடியுரிமையைக் கைவிடுவதென்பது ஒரு நிர்வாகச் செயன்முறை ஆகும். சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இறுதியில் குடியுரிமையைக் கைவிடலாம்.
இறுதியாக வெளியிடப்பட்ட பதிவேட்டில் கோத்தபாயவின் பெயர் இருக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். குடியுரிமை இழப்புத் தொடர்பில் பெயரைப் பட்டியலிடும் விடயத்தில் சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய நிலைவரத்தைக் கொண்டதாக இருக்க முடியும். இந்த விடயத்தில் திட்டவட்டமான ஒரு செயன்முறை இருக்கிறது என்பது தெளிவானது. அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்க விரும்புகின்ற ஒருவர் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். அவற்றைப் பெறும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் கிரிமினல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கிறாரா, இல்லையா, வரிக்கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தியிருக்கிறாரா, இல்லையா என்ற பரிசீலனைகளை மேற்கொள்வர். அதன் பின்னர் அந்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது தொடர்பில் சத்தியப்பிரமாணத்தைச் செய்துகொள்ள வேண்டும்.
சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய தகவல்களைத் தருவதாகவும் இருக்கலாம். அதனால் அடுத்த காலாண்டுக்கு அல்லது அதையும்விடப் பின்னரும் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
கேள்வி : அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில் : வழக்குகள் கிரிமினல் வழக்குகளா? சிவில் வழக்குகளா? என்பதைக் குறித்ததே இந்த விடயம். குடியுரிமையைத் துறப்பதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக கிரிமினல் முறைப்பாடுகள் இருக்கக்கூடாது. முன்னர் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அவை சிவில் வழக்குகளே.
கேள்வி : கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை அமெரிக்கா ஆதரித்ததாக முறைப்பாடுகள் இருந்தன. இத்தடவை கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா ஆதரிப்பதாக ஒரு கதை உலவுகிறது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்? 
பதில் : நாங்கள் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுவதில்லை. தீர்மானத்தை எடுப்பது இலங்கை மக்களைப் பொறுத்தது. நாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் செயன்முறையை நாங்கள் ஆதரிக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் அவ்வாறு ஆதரிக்கின்றோம். ஜனநாயக செயன்முறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய விரும்புகின்றோம். பலம் பொருந்தியதும், ஆற்றல் மிக்கதுமான தேர்தல் ஆணைக்குழுவொன்று உள்ளது. அதன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
கேள்வி : 2015 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை நீங்கள் வரவேற்றீர்கள். இத்தடவை?
பதில் : அரசாங்க மாற்றத்தை வரவேற்பதற்கும், கொள்கைகள் மாற்றத்தை வரவேற்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.
கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த போது மௌனம் சாதித்தது. இவ்விருவருக்கும் எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் இருக்கின்றன. விசனத்தை வெளிப்படுத்துவதில் அமெரிக்கா ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கிறது?
பதில் : இராணுவத் தளபதி ஒரு அரசாங்க அதிகாரி. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வர ஆசைப்படும் ஒருவர். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரை நியமிப்பதற்கும், உத்தியோகபூர்வ பதவியில் அரசாங்கம் ஒருவரை நியமிப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.
கேள்வி : நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறீர்கள். அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? 
பதில் : நான் ஒரு வருடத்திற்கு முன்னரே இலங்கைக்கு வந்தேன். சில தடவைகள் ராஜபக்ஷவை சந்தித்திருக்கிறேன். அரசியல் கட்சிகள், குழுக்களை பரவலாகச் சந்திப்பதன் ஓரங்கமே அதுவாகும். அரசியல் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன். தங்களது தலைவர்களைப் பற்றி இலங்கை மக்கள் தீர்மானமொன்றை எடுக்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அரசியல்வாதிகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், இணக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எமது கொள்ககைளை, எமது நோக்குகளை, உறவு முறைக்கான நம்பிக்கைகளை வழங்கிக் கொள்வது முக்கியமாகும். அதனால்தான் நாம் பல்தரப்பட்டவர்களுடனும் தொடர்பில் இருக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சு மிகவும் சுமூகமானதாக அமைந்திருந்தது.  நன்றி வீரகேசரி 










ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு போராட்டம்

24/08/2019 யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஓ.எம்.பி அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று பிற்பகல் 12 மணிமுதல் 1மணிவரையும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் தொடர்ந்து 917ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.
ஓ.எம்.பி ஒரு போலி அமைப்பு.
இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னோடி நிமல்கா பெர்னாண்டோவும் சுமந்திரனும்  ஆவார். சுமந்திரன் முன்னணி புலம்பெயர்ந்தோர் குழுக்களான , எல்லியஸ் ஜெய்ராஜாவின் யு.எஸ்.ரி பக் (USTPAC) ,  பாதர் இம்மானுவேலின் ஜி.ரி .எஃப் (GTF ) டாண்டன் துரைராஜா வின்   தமிழ் கனேடிய காங்கிரஸ் ஆகியவை நிமல்கா மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் சேர்ந்து  ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர்.  
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நிமல்கா காணாமல் போனார். ஆனால் அவர் சிங்களவர்களின் நிகழ்ச்சி நிரலை, அதாவது உள்ளூர் விசாரணைக்கு  ஊக்குவிக்க பணிபுரிந்தார்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்க நடிகை ஜோலி ஏஞ்சலினா பார்க்க விரும்பி நிமல்காவை  கேட்டுக் கொண்டார். நிமல்கா போர்க் குற்றவாளிகளின்  ஆமி கொமாண்டரின் மனைவிகளை ஜோலி ஏஞ்சலினாவுக்கு அழைத்துச் சென்றார்.
ஆட்சி மாற்றம்  விதிமுறை முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு முன், கடைசியாக OMP ஐ சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறார்கள் .
OMP என்பது நிமல்கா மற்றும் சுமந்திரனின்  சாதனம் ஆகும், இது UNHRC ஐ உள்ளூர் விசாரணையை நம்ப வைக்கும் சாதனம் .
நிமல்கா OMP யை  எப்படியாவது தமிழர்களுக்கு தேவை என்று காட்ட வேலை செய்ய தனது கடைசி தரம்  முயற்சிக்கிறார்.
தெற்கில் இன்னும் சில நிலங்களை சீனாவுக்கு அடமானம் வைப்பதன் மூலமும், காணாமல் போன ஒவ்வொருவரின் பெற்றோருக்கும் 5000 ரூபாயைக் கொடுத்து வழக்கை மூடுவதே  நிலம்ல்கா யோசனை. காணாமல் போனவர்கள்,  நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் கண்டறிய எங்கள் சாதனம்.  நமது அரசியல் எதிர்காலம் மற்றும் எங்கள் வாழ்வாதாரம்  காணாமல் போனவர்ககளில் தங்கியுள்ளது.
காணாமல் போனவர்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் பேசவில்லை. இது பற்றி கதைத்தால் கொழும்பில் அது அவர்களை காயப்படுத்துகிறது. அவர்களின் லஞ்சம் ரணிலால் நிறுத்தப்படும்.
OMP ஒரு நெருக்கடி. இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு இலங்கை உள்ளூர் விசாரணையைப் பெற நம்பகமான OMB ஐ உருவாக்குவதாக நிமல்க்காவும் சுமந்திரனும்  உறுதியளித்துள்ளனர்.
OMP குழப்பம் என்பதால், நிமல்கா, சுமந்திரான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மை அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.
இன்று யாழ்ப்பாணத்தில் OMP என்ன செய்வது என்பது UNHRC இல் சில நம்பகத்தன்மையைக் கொண்டுவருவதாகும்
எனவே, நாம் அனைவரும், இந்த போலி OMP உருவாக்கத்தை எதிர்ப்போம். எங்கள் எதிர்கால  சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் நேசிக்கும் ஒவ்வொரு தமிழரும் OMP ஐ நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
போராட்டத்தின் இறுதியில் இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயலாளர் கே. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 







No comments: