கோத்தாவின் பெயரை நானே முன்மொழிந்தேன்: "ராஜ­பக்ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை ஈடு­ப­டுத்­தப் போ­வ­து­மில்லை"


"தமிழ்த் தரப்­புக்கள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து தேசிய பிரச்­சி­னைக்­கான யோசனைத் திட்­டத்­தினை முன்­மொ­ழிய வேண்டும்"


ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­காக எமது குடும்­ப­த்தி­லி­ருந்து பெயர்கள் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போது  தற்­போ­தைய சூழலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முன்னாள் பாது­காப்­புச் ­செ­ய­லாளர் கோத்­தா­ப­யவின் பெயரை நானே முன்­மொ­ழிந்தேன் என்று  முன்னாள் சபா­நா­ய­கரும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ வீர­கே­ச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

"சு.கவை மீட்­ப­தற்கு பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணை­வதே ஒரே­வ­ழி­யாகும்"
கேள்வி:- முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாகக் கூடி­ய­வர்கள் என முன்­மொ­ழி­யப்­பட்­ட­வர்­களில் மிகப்­பொ­ருத்­த­மா­னவர். தற்­போ­தைய சூழலில் சட்டம் ஒழுங்­கினை நேர­டி­யாகக் கையா­ளக்­கூ­டி­ய­வரும், பயங்­க­ர­வா­தத்தின் மிலேச்­சத்­த­னத்­தினை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­ரு­மான நேர்­மை­யான ஒரு­வரின் தலை­மைத்­து­வமே நாட்­டிற்கு தேவை­யா­க­வுள்­ளது. அது­மட்­டு­மன்றி அவர், பாது­காப்பு மற்றும் நிரு­வாகத் துறையில் அனு­ப­வத்­தினைக் கொண்­டி­ருக்­கின்றார். கடந்த காலத்தில் நக­ர­அ­பி­வி­ருத்தி, சுகா­தாரம் உள்­ளிட்ட விட­யங்­களில்  நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான விட­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­மையே அவர் பொருத்­த­மா­னவர் என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்­றது. கேள்வி: -கோத்­தா­பய வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்­டதை அடுத்து நாட்டில் மீண்டும் ராஜ­ப­க் ஷவின் குடும்ப ஆட்சி மீண்டும் தலை­தூக்கும் என்று எச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- தனி­யொ­ரு­வரால் அவர் தெரி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக கட்­சித் ­த­லை­வர்­களின் ஏகோ­பித்த தீர்­மா­னத்­து­ட­ னேயே  அவர் தெரி­வு­செய்­யப்­பட்டார். அது­மட்­டு­மன்றி அவரின் வழி­காட்­டுதல் மற்றும் பங்­கு­பற்­று­த­லுடன் வியத்­க­மவின் ஊடாக பல்­வேறு செயற்­றிட்­ட ங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 


அந்தச் செயற்­றிட்­டங்கள் நாட்டின் எதிர்­கா­லத்­தினை மையப்­ப­டுத்­தி­ய­தாக உள்­ளன. மேலும் வியத்­கம ஊடாக நாட்டை பொறுப்­பேற்­ற­வுடன் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் தொடர்­பாக பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய அனு­ப­வங்­களைக் கொண்­டி­ருக்கும் ஒரு­வரின் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­ட­போது அதற்கு அனை­வரும் ஆத­ர­வ­ளித்­தி­ருந்தோம்.  

அமெ­ரிக்­காவில் கெனடி, புஷ், சிங்­கப்­பூரில் லி குவான்யூ ஆகி­யோரின் பரம்­ப­ரை­யினர் ஆட்­சியில் இருந்­தி­ருக்­கின்­றார்கள். அங்கு குடும்ப ஆட்­சி­யென்ற விமர்­சனம் எழுந்­தி­ருக்­க­வில்­லையே. காரணம், நாட்டை நிரு­வ­கிக்கும் வினைத்­தி­றனும், அனு­ப­வமும் தான் முக்­கி­ய­மா­கின்­றது.


நீண்­ட­கா­ல­மாக அர­சியல் பேசிக்­கொண்­டி­ருப்­பது மட்டும் அனு­ப­வ­மல்ல. ராஜ­பக் ஷ குடும்பத்­தி­ன­ரைப்­பொ­றுத்­த­வ­ரையில் நாட்­டுக்­கா­கவும், மக்­க­ளுக்­கா­கவும் சேவை புரிந்­துள்­ளார்கள். அதனை மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். ஆகவே குடும்ப ஆட்சி என்று விமர்­சிப்­பதை ஏற்க முடி­யாது. மக்கள் சேவையில் குடும்­பத்­தி­ன­ராக செயற்­ப­டு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. ஆனால் அர­சியல் ஊடாக குடும்­பத்­தி­னரை வலுப்­ப­டுத்­து­வதே தவ­றா­னது. 

கேள்வி:- தாங்­களும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க தயார் என்று கூறி­யி­ருந்த நிலையில் ராஜ­பக் ஷ குடும்­பத்­தினுள் கோத்­தா­ப­ய­வையே கள­மி­றக்­கு­வ­தென்று எந்த அடிப்­ப­டையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது?
பதில்:- ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் எமது குடும்­பத்­தி­னுள்­ளேயே ஒன்­றுக்கு மேற்­பட்ட பெயர்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தன. அச்­ச­ம­யத்தில் நாம் கலந்­து­ரை­யா­டினோம். இறு­தி­யாக எனது பெயரும், கோத்­தா­ப­யவின் பெயரும் இருந்­தன. அச்­ச­ம­யத்தில் கோத்­தா­ப­யவின் பெயரை நானே முன்­மொ­ழிந்தேன்.
கேள்வி:- கோத்­தா­பய ராஜ­பக் ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றிய காலத்தில் தானே வெள்­ளைவேன் கலா­சாரம், ஊட­க­வி­ய­லா­ளர்கள் அச்­சு­றுத்­தல்கள், காணா­ம­லாக்­கப்­படும் சம்­ப­வங்கள், படு­கொ­லைகள் நிகழ்ந்­தி­ருக்­கின்­ற­னவே? 
பதில்:- ஜே.வி.பி.கிளர்ச்சி காலத்தில் அவர்­களை எதிர்த்­த­வர்கள் அனை­வரும் கொலை செய்­யப்­பட்­டார்கள். மர­ணச்­ ச­டங்கை கூட நடத்­த­மு­டி­யாத நிலைமை இருந்­தது. 1983இல் கண்­முன்னே நபர்­களை ரயர்­களில் வைத்து எரித்­தார்கள். பட்­டப்­ப­க­லிலே வெள்­ளை­வேன்­களில் கடத்தி கண்­முன்னே படு­கொலை செய்­தார்கள். 


அது­பற்றி ஏன் பேச­வில்லை. எமது காலத்தில் வெள்­ளை­வேன்கள் இருந்­த­தாக கூறு­ப­வர்கள் பாதாள உலகக் குழுக்­களை அதி­க­ளவில் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்­தமை பற்றி ஏன் கூறு­கி­றார்கள் இல்லை. நாம் அவ்­வாறு செயற்­பட்­ட­மைக்கு எந்­த­வி­த­மான சாட்­சி­களும் இல்லை. சாட்­சி­க­ளின்றி குற்­றச்­சாட்­டுக்­களை வைப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. தற்­போது பாதாள உல­கக்­குழு தலை­வி­ரித்­தாடும் நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.  
கேள்வி:- இறு­திப்­போரின் போது மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மா­னச்­சட்ட மீறல்கள் குறித்து பொறுப்­புக்­கூ­ற­வேண்­டி­ய­வர்­களில் கோத்­தா­பய முக்­கி­ய­மா­ன­வ­ராக உள்­ளாரே?
பதில்:- ஈராக்கில் சதாம் உசை­யினை அவ­ரது நாட்­டிற்குள் நுழைந்த படைகள் எவ்­வாறு கையாண்­டன. குற்­றச்­சாட்­டுக்­களில் கைதாகும் நபர்­களை மேற்­கு­லத்­தினைச் சேர்ந்த பொலிஸார் எவ்­வாறு நடத்­து­கின்­றனர். மனித உரி­மைகள் பற்றிக் கதைப்­ப­வர்கள் ஏன் அந்த விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­தா­தி­ருக்­கின்­றனர்.


கடந்த நான்­கரை வரு­டங்­களில் அர­சாங்கம் தமக்கு எதி­ரான அல்­லது சவா­லான தரப்­பினர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி அர­சியல் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

கேள்வி:- தங்கள் மீது எவ்­வி­த­மான சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­களும் காணப்­ப­டாத நிலையில் வேட்­பாளர் தெரிவில் உங்­க­ளுக்கு ஏன் அதி­க­ளவு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை? 
பதில்:- நாட்டின் எதிர்­கா­லத்­தினைக் கருத்­திற்­கொண்டு அர­சி­யலில் நேர­டி­யாக ஈடு­ப­டாது நிரு­வா­கத்­திறன் மிக்க ஒருவர் தலை­மை­யேற்க வேண்டும் என்­பது பெரும்­பான்­மை­யி­னரின்  விருப்­பாக இருந்­தது. குறிப்­பாக, எதிர்­கால சந்­த­தி­யி­ன­ரி­னதும், புத்­தி­ஜீ­வி­க­ளி­னதும் கோரிக்­கை­யாக இருந்­தது. 
கேள்வி:- கோத்­தா­ப­யவின் அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்டு விட்­டதா? 
பதில்:- அவ­ரு­டைய இரட்­டைக்­கு­டி­யு­ரிமை நீக்­கப்­பட்டு விட்­டது. அந்­நாட்டுப் பிர­ஜை­யாக இருந்­த­போது அவ­ருக்கு வழங்­கப்­பட்ட சிறப்பு உரி­மைகள் அனைத்தும் நீக்­கப்­பட்டும் விட்­டன. ஆனால் அந்­த­வி­ட­யத்­தினை பூதா­க­ர­மாக்கி எதிர்த்­த­ரப்­பினர் பொது­மக்­களை உள­ரீ­தி­யாக குழப்பும் முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றார்கள். 
மேலும் குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டாலும் ஆவ­ணத்தில் பெயர் இடம்­பெ­று­வ­தற்கு சில காலம் செல்­லலாம் என்று அமெ­ரிக்­கத்­தூ­து­வரே கூறி­யி­ருக்­கின்றார் அல்­லவா. 
கேள்வி:- கோத்­தா­ப­ய­வுக்கு நெருக்­கடி நிலை­மைகள் ஏற்­பட்டால் இறுதி நேரத்தில் ஷிரந்தி ராஜ­பக் ஷ அவ­ருக்கு பதி­லாக பெய­ரி­டப்­ப­டு­வாரா? 
பதில்:- எதிர்க்­கட்­சிகள் இவ்­வாறு பல இட்­டுக்­க­தை­களை கூறி பிர­சாரம் செய்து வரு­கின்­றார்கள். அத்­துடன் ராஜ­பக் ஷ குடும்­பத்தில் எவரும் தமது பாரி­யாரை தேர்­தல்­களில் ஈடு­ப­டுத்­த­வு­மில்லை. ஈடு­ப­டுத்­தப்­போ­வ­து­மில்லை. 
கேள்வி:- கோத்­தா­ப­ய­வுக்கு எதி­ராக வழக்­குகள் உள்ள நிலையில் இறுதி நேரத்தில் நெருக்­க­டிகள் ஏற்­பட்டால் அவ­ருக்கு பிர­தி­யீ­டாக நீங்கள் பொறுப்பை ஏற்கத் தயா­ராக இருக்­கின்­றீர்­களா? 
பதில்:- அவ­ருக்கு எந்­த­வி­த­மான நெருக்­க­டி­களும் ஏற்­ப­டாது. அர­சியல் பழி­வாங்­கல்­களே நடை­பெ­று­கின்­றன. இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை கொண்­டி­ருந்தார் என்­ப­தற்­காக கீதா குமா­ர­சிங்­கவின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையை பறித்­த­வர்கள் எந்த அடிப்­ப­டையில் பிறிதொரு நாட்டின் குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வரை மத்­திய வங்கி ஆளு­ந­ராக நிய­மித்­தார்கள்.  மோச­டிகள் இடம்­பெற்ற பின்­னரும் அவர் மீது ஏன் நட­வ­டிக்கை எடுக்­கா­தி­ருக்­கின்­றார்கள். இது­பற்­றியும் நாம் சிந்­திக்க வேண்டும். 
கேள்வி:- கோத்­தா­ப­ய­வுக்கு தமிழ், முஸ்லிம் தரப்­புக்­களின் ஆத­ரவு கிடைக்கும் என்று நம்­பிக்கை கொண்­டி­ருக்­கின்­றீர்­களா? 
பதில்:- தமிழ், முஸ்லிம் தரப்­புக்கள் ஐ.தே.கவுடன் இருந்­தாலும் கிராம மட்ட மக்­களின் மனங்­களில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. கடந்த நான்­கரை வரு­டங்­களில் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் சார்பில் செயற்­பட்­டதை விடவும் தமது அதி­கா­ரங்­களை தக்­க­வைப்­ப­தற்­கா­கவே போரா­டி­யுள்­ளது. வழங்­கிய எந்த வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­க­வில்லை. 
கேள்வி:- போரை நிறை­வு­செய்த உங்கள் தரப்பால் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு உங்­க­ளது காலத்தில் தீர்­வினை எட்­ட­மு­டி­யாது போனதேன்?
பதில்:- போரை நிறை­வுக்கு கொண்­டு­வந்­ததும் நாம் 12 ஆயிரம் போரா­ளி­களை புனர்­வாழ்­வ­ளித்து விடு­தலை செய்­தி­ருந்தோம். அபி­வி­ருத்­திப்­ப­ணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். 30 வரு­டங்­க­ளாக பயங்­க­ர­வா­தத்தின் பிடியில் இருந்த பிர­தே­ச­மொன்­றுக்கு எடுத்த எடுப்­பி­லேயே அனைத்­தையும் வழங்கி விட முடி­யாது. பிரி­வினை கோரி­ய­வர்கள் எந்த வகையில் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­பதை அவ­தா­னிக்க வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 
அதனால் நாம் முதலில் மாகாண சபைத் தேர்­தலை நடத்­தி­யி­ருந்தோம். அதில் அதி­கா­ரத்­தினைக் கைப்­பற்­றி­ய­வர்கள் மாகாண சபை முறை­மை­யினால் செய்­யக்­கூ­டிய விட­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு முன்­னெ­டுத்­தி­ருந்தால் அதற்கு அப்பால் செல்­வது பற்றி பேசி­யி­ருக்­கலாம். 
தென்­னி­லங்­கைக்கும், வட­ – கி­ழக்­கிற்கும் இருந்த அவ­நம்­பிக்­கையை போக்கி நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பும் பணி­களை ஆரம்­பித்தோம். இதற்கு மாகாண சபை­களைப் பயன்­ப­டுத்தி செயற்­பா­டு­களை பிர­தி­ப­லித்­தி­ருக்க வேண்டும். ஆனால் வெ வ்வேறு தீர்­மா­னங்­களை அங்கு நிறை­வேற்றி தென்­னி­லங்கை மக்கள் மத்­தி­யி­லி­ருந்த அவ­நம்­பிக்­கையை அதிகரிக்கும் செயற்­பா­டு­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. தமிழ் மக்­களின் தலை­வர்கள் கொழும்­பிலோ அல்­லது வெளி­நா­டு­க­ளுக்கோ சென்று தம்மைப் பாது­காத்­துக்­கொள்­வார்கள். சாதா­ரண மக்­களின் நிலை­மை­களை யோசித்துப் பார்க்க வேண்டும். 
மேலும் தமிழ் தரப்­பினைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வெ வ்வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்ட பிர­தி­நி­திகள் இருக்­கின்­றார்கள். தேசியப் பிரச்­சினை விட­யத்தில் நாம் ஒரு­த­ரப்­பினை மட்டும் கவ­னத்தில் கொள்ள முடி­யாது. அனைத்து தரப்பினது கருத்­துக்­க­ளையும் உள்­வாங்க வேண்டும். அல்­லது தமிழ்த் தரப்­புக்கள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து அவ்­வா­றான யோசனைத் திட்­டத்­தினை முன்­மொ­ழிய வேண்டும். இல்­லாது விட்டால் காலம் நகர்ந்­து­கொண்டு தான் இருக்கும். 
கேள்வி:- தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வ­கை­யான தீர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பது உங்­களின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது?
பதில்:- நாடு பிள­வ­டை­யாத வகையில் அனை­வரும் இலங்­கையின் பிர­ஜைகள் என்ற மனோ­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்டு சக­வாழ்­வுடன் வாழ்­வ­தற்­கான சமத்­து­வ­மான வாழ்வு உரி­மைகள் அனை­வ­ருக்கும் கிடைக்­கப்­பெற வேண்டும். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தி­னையும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினையும் முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்­காக அர­சியல் பிர­தி­நி­திகள் இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட வேண்டும். 
கேள்வி:- பொது­ஜன பெர­மு­னவின் உறுப்­பு­ரி­மையை பெற்று விட்­டீர்­களா? 
பதில்:- இன்­னு­மில்லை.
கேள்வி:- எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக இருக்கும் மஹிந்த ராஜ­பக் ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்­தினையும் ஏனை­ய­வர்கள் உறுப்­பு­ரி­மை­யையும் பெற்­றுள்ள நிலையில் அவர் உள்­ளிட்ட குழு­வி­னரின் எதிர்க்­கட்சித் தலைமை மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை கேள்விக் குறி­யா­கி­யி­ருக்­கின்­றதே?
பதில்:- நாட்டின் வளங்­களை மக்­கள்­சொத்­தாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கை­களை கைவிட்டு ஐ.தே.வின் திறந்த பொரு­ளா­தார கொள்­கைக்கு சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வ­ளித்­தது. இதனை மக்கள் விரும்­ப­வில்லை. இத­னா­லேயே மக்கள் பொது­ஜன முன்­ன­ணிக்கு பேரா­த­ரவு வழங்­கி­னார்கள். தற்­போது மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பேச்­சுக்கள் நடை­பெற்­றுள்­ளன. இதில் கூட்­ட­ணிக்­கான கொள்கை ரீதி­யான இணக்­கப்­பா­டுகள் எட்­டு­கின்­ற­போது எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் எழாது. பண்­டா­ர­நா­யக்­கவின் உண்­மை­யான கொள்­கை­களை பின்­பற்­று­வார்­க­ளாயின் பொது­ஜன பெர­மு­ன­வுடன் அவர்கள் கூட்­டணி அமைத்­துக்­கொள்ள வேண்டும். 
கேள்வி:- பண்­டா­ர­நா­யக்­க­வுடன் இணைந்து உங்­க­ளு­டைய தந்­தை­யாரும் ஆரம்­பித்த சுதந்­தி­ரக்­கட்­சியை பாது­காக்க வேண்­டிய கடமை உங்­களுக்கும் இருக்­கின்­ற­தல்­லவா? 
பதில்:- தேர்­த­லொன்றில் பொது­மக்கள் கட்­சி­யொன்றை நிரா­க­ரித்­தார்கள் என்றால் மீண்டும் அக்­கட்சி எழு­வ­தற்கு குறிப்­பிட்ட கால­அ­வ­காசம் அவ­சி­ய­மா­கின்­றது. கொள்­கையின் அடிப்­ப­டையில் கட்­சியைப் பாது­காப்­பது என்றால் பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னேயே இணைந்து கொள்ள வேண்டும். இல்­லா­து­விட்டால் அத்­த­ரப்­பி­ன­ருக்கு கடி­ன­மான நிலை­மை­களே ஏற்­படும். 
கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மையை மஹிந்த மீண்டும் ஏற்­றுக்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்­பங்கள் இருக்­கின்­ற­னவா? 
பதில்:- மஹிந்த தான் தலை­மைத்­து­வத்­தினை ஏற்­க­வேண்­டி­ய­தில்லை. சு.கவின் கொள்­கையில் உறு­தி­யாக நின்று நாட்டின் வளங்­க­ளையும் பிர­ஜை­க­ளையும் பாது­காக்­க­வல்ல நம்­பிக்­கை­யான மக்கள் செல்­வாக்கு மிக்க ஒருவர் உரு­வா­கின்­ற­போது அவர் அக்­கட்­சிக்கு தலை­மையை வகிக்க முடியும். கடந்த கால தேர்­தல்­களின் போது சுதந்­தி­ரக்­கட்சி தனது கூட்­டணி பெய­ரையும், சின்­னத்­தி­னையும் கூட மாற்­றி­யுள்ள நிலையில் தற்­போது பொது­ஜன பெர­மு­னவில் இணை­வ­தற்கு அது­கூட தடை­யாக இருக்­காது.
கேள்வி:- சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்தால் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பாத்­திரம் என்­ன­வாக இருக்கும்?
பதில்:- இந்த விடயம் குறித்து கட்­சி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய பின்னர் மஹிந்த ராஜ­ப­க் ஷவே இறு­தி­யான முடி­வினை எடுப்பார். 
கேள்வி:- ஜனாதிபதி மைத்திரி உங்கள் தரப்புடன் இணைவது என்பதற்கு அப்பால் அவர் குறித்த நம்பிக்கைத்தன்மை எவ்வாறுள்ளது? 
பதில்:- எமது தரப்பினருடைய நம்பிக்கை என்பதற்கு அப்பால் மக்களின் நம்பிக்கை தான் முக்கியமாகின்றது. 
கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பியும் களமிறங்கியுள்ள நிலையில் உங்களுடைய வாக்குவங்கியில் சரிவு ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றனவா?
பதில்:- 2015இல் ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவே செயற்பட்டது. அதன்பின்னரும் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறே செயற்பட்டு வருகின்றது.  ஆகவே அவர்கள் போட்டியிடுவதால் ஐ.தே.கவுக்கு கிடைத்த வாக்குகளே இல்லாது போகப்போகின்றன. 
கேள்வி:- ரணில், கரு, சஜித் ஆகிய மூவரில் யார் உங்களுக்கு சவாலான வேட்பாளர் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- யார் வேட்பாளராக களமிறங்கினாலும் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் வளங்களையும், வருமான மூலோபாய செயற்றிட்டங்களையும் விற்பனை செய்யும் கொள்கையே பின்பற்றப்படப்போகின்றது. அதேநேரம், மத்தியவங்கி மோசடிக்கும் இம்மூன்று பேரும் பொறுப்புக்கூறவேண்டியவர்களே. ஆகவே இவர்களை மக்கள் அங்கீகரிப்பார்களா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. 
கேள்வி:- இலங்கையில் நகரும் பூகோள அரசியல் நிலைமைகளை பார்க்கின்றபோது ராஜபக் ஷ தரப்பினருக்கு சீனா ஆதரவாக இருக்கின்றது என்ற தர்க்கரீதியான கருத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- அவ்வாறில்லை. எமது காலத்தில் வேகமான அபிவிருத்திக்கு சீனா உதவியிருந்தது. அதேபோன்று ஏனைய நாடுகளும் ஆதரவு வழங்கியிருந்தன. 


வல்லாதிக்க நாடுகளை மட்டும் மையப்படுத்தி செயற்பட்டமையால் பல நாடுகளில் உள்நாட்டு நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். ஆகவே அனைத்து நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை சம அளவிலேயே பின்பற்றுவதே சிறந்த இராஜதந்திர அணுகுமுறையாகும். 
நேர்­காணல்:- ஆர்.ராம்
படப்பிடிப்பு : எம்.எஸ்.சலீம்
நன்றி வீரகேசரி 25/08/2019

No comments: