சிட்னியில் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்புசிட்னி, தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் வருடாந்திர இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 18ம் நாள் வெண்ட்வொர்த்வில் ரெட் கம் அரங்கத்தில் சிட்னியில் தமிழை நேசிக்கும் ஆர்வலர்களின் பங்களிப்புடன் இனிதே நடந்தேறியது. விழாவிற்கு அமைப்பின் தலைவர் அனகன் பாபு தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார்.  விழாவில் தமிழிசை ஆராய்ச்சியாளர் மம்மது அவர்கள் இசைத்தமிழ் என்ற தலைப்பிலும், ஓவியர் மருது அவர்கள் ஓவியத்தமிழ் என்ற தலைப்பிலும் மற்றும் நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் இயல் தமிழ் என்ற தலைப்பிலும் பேசி வந்திருந்தவர்களை கவர்ந்தனர். விழாவில் மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜோடி மெக்கே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருந்தினர்களை சமூக பிரமுகர்களுடன் இணைந்து கௌரவித்தார். விழா அமைப்பின் செயலாளர் கர்ணன் சிதம்பரபாரதி அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.No comments: