தமிழ் சினிமா - சிந்துபாத் திரைவிமர்சனம்


விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் விசயத்தில் சிக்கில் நிலவுகிறது. அப்படித்தான் தற்போதும். இந்த சிந்துபாத் வெளியாக வேண்டிய நாளில் வராமல் படம் தள்ளிபோய் இன்று களத்தில் இறங்கியுள்ளது. படம் எப்படி என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.
அதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார். அஞ்சலி பேசினால் ஊரே கேட்கும் என்பது போல சத்தமான குரல். ஆனால் இவர் செய்யும் அட்டகாசம் குறும்புத்தனம்.
இப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின் பால் காதலில் விழுகிறார். இதற்கிடையில் வேலைக்காக தாய்லாந்து செல்கிறார். அங்கு ஒரு பெரும் சமூக விரோத சம்பவமே நடைபெறுகிறது.
அஞ்சலி அதில் சிக்க விசயம் தெரிந்து அதிர்ச்சியான விஜய் சேதுபதி அவர் இருக்கும் இடத்தை தேடி பயணப்படுகிறார். அங்கு இவரும் வேறொரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள இருவரும் போன காதலி என்ன ஆனார், என்ன பிரச்சனை, சமூக நீதி கிடைத்ததா, வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிந்துபாத்.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படியானவருக்கு கையில் சிக்கியது இந்த சிந்துபாத். படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்த படத்திலும் காட்டியுள்ளார். காது கேளாமை என்றாலும் அவரின் செய்கை, நடந்துகொள்ளும் விதம் என கேரக்டரில் ரியல் பிரதிபலிப்பு.
அவருடன் இப்படத்தின் மூலம் அவரின் மகனும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்பாவை போல பிள்ளை என்பது சரியாக தான் இருக்கிறது. சிறு பையன் என்றாலும் நடிப்பை உள்வாங்கி கடைசிவரை தன் அப்பாவுடன் கதையில் டிராவல் செய்கிறார். மகனுக்கு சேதுபதி நல்லா கிளாஸ் எடுத்திருப்பார் போல.
அஞ்சலி பற்றி சொல்ல வேண்டாம். அனுபவம் வாய்ந்த நடிகை. அவரின் திறமைக்கு இப்படம் ஒரு நல்ல வாய்ப்பு. சத்தம் போட்டு பேசுவது அவரின் நேச்சுரல் ஸ்டைல் போல. சில இடங்களில் அவரின் ரியாக்சன் அங்காடி தெரு படத்தின் பார்த்ததை போல உணரலாம்.
இவர்களோடு பலரும் அறிந்த விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல அவரும் தனக்கான இடத்தை படத்தில் ஃபில் பண்ணி விடுகிறார்.
படத்தின் இயக்குனர் அருண் குமார் சிந்துபாத் மூலம் நவீன அழகு மருத்துவம் என்ற பெயரில் உலகளவில் நடக்கும் பெரும் அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
தாய்லாந்து, தென்காசி என ஒளிப்பதிவாளர் காட்சிகளை படம் பிடித்த விதம் இயற்கையாக அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.
யுவனின் இசை படத்தின் ஓப்பனிங் தீம் மூலம் எண்ட் வரை கதைக்கு பொருத்தமான உணர்வுகளை தருகிறது. பாடல்களும் ஓகே..

கிளாப்ஸ்

விஜய் சேதுபதியின் சின்ன சின்ன ரியாக்‌ஷன் கூட இம்பிரஸன்.
அஞ்சலியின் எமோஷலான நடிப்பு. இருவருக்குமான ரொமான்ஸ் சூப்பர்.
சூர்யா விஜய் சேதுபதியின் குட்டி குட்டி காமெடி செய்கை படத்தில் எனர்ஜட்டிக்.

பல்பஸ்

படம் நீண்ட கால அளவாக சிலருக்கு தெரியலாம். அதனால் பொறுமையாக கடைசி வரை பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் சிந்துபாத் தாமதாக வந்தாலும் சரியான அட்டம்ட். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வை காட்டிய இயக்குனருக்கு நன்றி. நன்றி  CineUlagam






No comments: