பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்டிருந்த தில்லைநாதன்


28/06/2019 எஸ்.தில்­லை­நா­தனின் மரணம் எம்­மத்­தி­யி­லி­ருந்து பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்ட மூத்த ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை அப­க­ரித்துச் சென்­று­விட்­டது.
அரை­நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான கால­மாக ஊட­கத்­து­றையில் சேவை­யாற்­றிய தில்­லை­நாதன் 1960களின் முற்­கூறில் அச்சு இத­ழி­யலில் பணி­யாற்றத் தொடங்­கி­யி­ருந்­தாலும், பிற்­கா­லத்தில் இலத்­தி­ர­னியல் ஊட­கத்­து­றை­யிலும் தனது முத்­தி­ரையைப் பதித்­தவர். மும்­மொ­ழி­க­ளிலும் வள­மான ஆற்­றலைக் கொண்ட அவர் வீர­கே­ச­ரியில் ஒரு இளை­ஞ­னாக 1960களில் சேர்ந்தபோது இலங்­கையின் தமிழ்ப் பத்­தி­ரிகை உலகில் பழுத்த அனு­ப­வமும், அறி­வாற்­றலும் உடை­ய­வர்­க­ளாக விளங்­கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவ­நா­யகம், கே.சிவப்­பி­ர­காசம் போன்­ற­வர்­களின் வழி­ந­டத்­தலில் பணி­யாற்றும் அதிர்ஷ்­டத்தைக் கொண்­டி­ருந்தார். ஒரு அலு­வ­லகச் செய்­தி­யாளர் என்ற வகையில் அந்த நாட்­களில் இள­மைத்­து­டிப்­புடன் தில்­லை­நாதன் செயற்­பட்ட பாங்கு முன்­னு­தா­ர­ண­மா­ன­தாகும்.

ஏனைய செய்­தி­யா­ளர்கள் கையாளத் தயங்­கிய சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்கள் தொடர்பில் செய்தி சேக­ரிப்­பதில் அசா­தா­ர­ண­மான துணிச்­ச­லுடன் செயற்­ப­டு­வதில் பெய­ரெ­டுத்­தவர் தில்­லை­நாதன். அலு­வ­லகச் செய்­தி­யா­ள­ராக, அர­சியல் மற்றும் இரா­ஜ­தந்­திர விவ­கார நிரு­ப­ராக, பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ள­ராக, அர­சியல் விமர்­ச­க­ராக பத்­தி­ரிகைத் துறையின் பல பரி­மா­ணங்­க­ளிலும் தனது திற­மையை வெளிக்­காட்டி ஏனைய ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக அவர் விளங்­கினார்.
வீர­கே­ச­ரியில் சேவை­யாற்­றிய பிறகு தின­பதி, இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம், சக்தி தொலைக்­காட்சி, எப்.எம் 99 வானொலி ஆகி­ய­வற்றில் இணைந்து பல வரு­ட­காலம் பணி­யாற்­றி­யதை அடுத்து லேக்­ஹவுஸ் நிறு­வ­னத்தின் தின­கரன் பத்­தி­ரி­கையில் பிர­தம ஆசி­ரி­ய­ராகப் பணி­யாற்றும் வாய்ப்பு தில்­லை­நாதனுக்குக் கிடைத்­தது. பத்­தி­ரி­கைத்­து­றையில் எப்­போதோ உயர் பத­வியை அடைந்­தி­ருக்க வேண்­டிய அவர் தனது மனதில் பட்­ட­வற்றை வெளிப்­ப­டை­யாகத் துணிச்­ச­லுடன் கூறி­விடும் சுபாவம் கார­ண­மாக முகா­மைத்­து­வத்­துடன் முரண்­பட வேண்­டி­யி­ருந்­தது. அந்த சுபா­வத்­தினால் பல சந்­தர்ப்­பங்­களில் சக­பா­டி­களின் அதி­ருப்­திக்குக் கூட அவர் ஆளா­கி­யதை நான் நேரடி அனு­ப­வத்தின் ஊடாகக் கண்­டி­ருக்­கிறேன். ஆனால் அவர் அதற்­காக சிறிதும் வருத்­தப்­பட்­ட­தில்லை. எதையும் நேர்­மை­யீ­ன­மாக மறைத்­துப்­பேசும் பழக்கம் தனக்­கில்லை என்று அவர் கூறி­வி­டுவார்.
ஊடக நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும் போது வெறு­மனே செய்­தித்­துறைப் பணி­யுடன் தம்மைக் கட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளாமல் ஏனைய ஊழி­யர்­களின் நலன்­க­ளிலும் அவர் கவனம் செலுத்தி, அவர்­களின் உரி­மை­க­ளுக்­காகக் குரல் கொடுத்­தவர் தில்­லை­நாதன். வீர­கே­ச­ரியில் பணி­யாற்­றிய காலத்தில் ஊழியர் நலன்­புரிச் சங்­கத்தைப் பல தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் ஆரம்­பிப்­பதில் முன்னாள் பிர­தம ஆசி­ரியர் காலஞ்­சென்ற சிவப்­பி­ர­காசம், வீர­கே­ச­ரியின் முன்னாள் பொது முகா­மை­யாளர் காலஞ்­சென்ற எஸ்.பால­ச்சந்­திரன், மூத்த பத்­தி­ரி­கை­யாளர் எஸ்.எம்.கார்­மேகம், முன்னாள் பிர­தம ஆசி­ரியர் காலஞ்­சென்ற எஸ்.நட­ராசா, முன்னாள் துணை ஆசி­ரியர் ஈ.பி.டேவிட்ராஜ், மூத்த ஊட­க­வி­ய­லாளர் திரு­மதி அன்­ன­லட்­சுமி ராஜ­துரை, மூத்த பத்­தி­ரி­கை­யாளர் காலஞ்­சென்ற பொன்.இரா­ஜ­கோபால் ஆகி­யோ­ருடன் சேர்ந்து முன்­ன­ணியில் நின்­றவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
ஊட­கத்­து­றையின் பல அமைப்­புக்­க­ளிலும் அவர் பல வரு­ட­காலம் உறுப்­பி­ன­ராக இருந்து, ஊட­கத்­து­றையின் மேம்­பாட்­டுக்­காகத் தனது பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்­கிறார். இறு­தி­யாக இறக்கும் நேரத்தில் கூட தில்­லை­நாதன் இலங்கைப் பத்­தி­ரிகைப் பேர­வையின் உறுப்­பி­ன­ராக இருந்தார்.
தில்­லை­நாதனுடன் பத்­தி­ரி­கைத்­து­றையில் ஒரே அலு­வ­ல­கத்தில் பணி­யாற்­றக்­கூ­டிய வாய்ப்பு எனக்குக் கிடைக்­க­வில்லை என்ற போதிலும், வீர­கே­ச­ரியின் பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ள­ராக 1980களின் பிற்­ப­கு­தி­யிலும், 1990களின் முற்­ப­கு­தி­யிலும் நான் பணி­யாற்­றிய போது இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன தமிழ்­சே­வையின் சார்பில் அவர் செய்தி சேக­ரிக்க வந்­த­போது பாரா­ளு­மன்ற பத்­தி­ரி­கை­யாளர் கல­ரியில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்­தது. பாரா­ளு­மன்ற செய்தி சேக­ரிப்பில் புதி­ய­வர்­க­ளாக இருந்த என்னைப் போன்­ற­வர்­க­ளுக்குப் பல விட­யங்­களை அவர் கற்­றுத்­த­ருவார். அவர் முன்­ன­தாக வீர­கே­ச­ரியில் பணி­யாற்­றிய போது பாரா­ளு­மன்றச் செய்­தி­யா­ள­ராகத் தனக்குக் கிடைத்த அனு­ப­வத்­தையும் பின்­னாளில் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் செய்­தி­யாளர் என்ற வகையில் பெற்ற அனு­ப­வத்­தையும் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் ஒரு நூலாக வெளியிட்­டி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
பார்ப்­ப­தற்கு கடு­மை­யா­ன­வ­ராக இருந்­தாலும் பழ­கு­வ­தற்கு இனி­ய­வ­ரான தில்­லை­நாதன் அவர்கள் பழைய தலை­முறைத் தமிழ்ப் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் குழாமில் எஞ்சியிருந்தவர்களில்  ஒருவராக எம்மத்தியில்  விளங்கினார். அந்தத் தலைமுறையினரிடம் காணக்கூடியதாக இருந்த கடமையுணர்வும், பொறுப்புணர்வும் என்றென்றைக்கும் முன்மாதிரியானவை ஆகும். அவர்களில் பலர் பணியாற்றிய பாங்கை வெறுமனே அவதானித்ததன் மூலமாகவே என்னைப் போன்ற பலர் சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பத்திரிகைத்துறையில் ஆர்வத்துடன் செயற்படக்கூடியதாக இருந்தது.
தில்லைநாதனின் மறைவு இலங்கை ஊடகத்துறைக்கு ஒரு பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த ஆனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-வீரகத்தி தனபாலசிங்கம்
நன்றி வீரகேசரி 

No comments: