ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


300 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான்!

இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்!

262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்

பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்!

பிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.

தடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்!

வாய்ப்பினை தக்க வைத்த பாகிஸ்தான்!

பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா மே.இ.தீவுகள்?

வெளியேறத் தயாரான மேற்கிந்தியத்தீவுகள்

கிரிக்கெட்டில் விராட்டின் புதிய மைல்கல்!

203 ஓட்டத்துக்குள் சரணடைந்த இலங்கை!

நிதானமாக ஆடி முடித்த தென்னாபிரிக்க ; கைநழுவிப் போன அரையிறுதி வாய்ப்பு!

பாகிஸ்தானுக்கு 228 ஓட்டங்களை இலக்காக வைத்த ஆப்கான்

வாய்ப்பினை கைவிடாத பாகிஸ்தான்!

போல்ட் ஹெட்ரிக் ; வெற்றி ஆஸி.வசம்! 

அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடித்த இங்கிலாந்து!

முதல் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்து!


300 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான்!

23/06/2019 தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 308 ஓட்டங்களை குவித்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் உல்ஹாக் 44 (57) ஒட்டத்தையும், பகர் ஜமான் 44 (50) ஓட்டத்தையும், பாபர் அசாம் 69 (80) ஓட்டத்தையும், இமாட் வஸிம் 23 (14) ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 4 (4) ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹேல் மொத்தமாக 55 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடனும் அட்டமிழந்ததுடன், சர்ப்ராஸ் அஹமட் 2 ஓட்டத்துடனும், ஷெடப் கான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சல் தென்னாபிரிக்க அணிசார்பில் லுங்கி நிகடி 3 விக்கெட்டுக்களையும், இம்ரான் தாகீர் 2 விக்கெட்டுக்களையும், பெஹ்லுக்வேயோ மற்றும் மக்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
photo credit :icc
நன்றி வீரகேசரி 









இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்!

23/06/2019 தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது.
309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 49 ஓட்டத்தனால் தோல்வியைத் தழுவியது.
அணி ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
தென்னாபிரிக்க அணி சார்பில் அசிம் அம்லா 2 (3) ஓட்டத்துடனும், டீகொக் 47 (60) ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி 63 (79) ஓட்டத்துடனும், மக்ரம் 7 (16) ஓட்டத்துடனும், வேன் டெர் டஸ்ஸன் 36 (74) ஓட்டத்துடனும், டேவிட் மில்லர் 31 (37) ஓட்டத்துடனும், கிறிஸ் மோரிஸ் 16 (10) ஓட்டத்துடனும், ரபடா 3 (7) ஓட்டத்துடனும், லுங்கி நிகிடி 1 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பெஹ்லுக்வேயோ 46 (32) ஓட்டத்துடனும், இம்ரான் தாகீர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷெடப் கான் மற்றும் வஹாப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் அமீர் 2 விக்கெட்டையும், ஷாஹீன் அஃப்ரிடி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 
photo credit : icc
நன்றி 
வீரக
நன்றி வீரகேசரி 









262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்

24/06/2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 262 ஓட்டங்களை குவித்துள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 16 (17) ஓட்டத்தையும், தமீம் இக்பால் 36 (53) ஓட்டத்தையும், சகில் அல்ஹசன் 51 (69) ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 3 (10) ஓட்டத்தையும், மாமதுல்லா 27 (38) ஓட்டத்தையும், முஷ்பிகுர் ரஹும் 83 (87) ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் ஹசேன் 35 (24)ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் சைபுதீன் 2 (2) ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் முஜிபுர் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும், குல்படின் நைப் 2 விக்கெட்டுக்களையும், மொஹமட் நபி மற்றும் டூவ்லட் சத்ரான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி 







பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்!
24/06/2019 பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.
263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குல்படின் நைப் 47 (75) ஓட்டத்தையும், ரஹ்மத் ஷா 24 (35) ஓட்டத்தையும், ஹஷ்மதுல்லா ஷாஹிடி 11 (31) ஓட்டத்தையும், அஷ்கர் ஆப்கான் 20 (38) ஓட்டத்தையும், மொஹமட் நபி டக்கவுட்டுடனும், இக்ரம் அலி கில் 11 (12) ஓட்டத்துடனும், நஜிபுல்லா ஸத்ரான் 23 (23) ஓட்டத்துடனும், ரஷித் கான் 2 (3) ஓட்டத்துடனும், டூவ்லட் சத்ரான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன் சாமியுல்லா ஷின்வாரி 49 (51) ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார். 
பங்களாதேஷ் அணிசார்பில் அசத்தலாக பந்து வீசிய சகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுக்களையும், முஷ்தாபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டினையும், ஹசேன் மற்றும் சைபுதீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த தோல்வி ஆப்கானிஸ்தான் அணி தொடரில் பெற்றுக் கொண்ட ஏழாவது தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி 









பிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து!

25/06/2019 இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 285 ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் பிஞ்ச் மொத்தமாக 116 பந்துகளை எதிர்கொண்டு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 2 ஆறு ஓட்டங்கள் 11 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 100 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 53 (61) ஓட்டத்தையும், உஷ்மன் கவாஜா 23 (29) ஓட்டத்தையும், ஸ்மித் 38 (34) ஓட்டத்தையும், மெக்ஸ்வெல் 12 (8) ஓட்டத்தையும், ஸ்டோனிஸ் 8 (15) ஓட்டத்தையும் பட்லர் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், அலெக்ஸ் கரி 38 (27) ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டாக் 4 (6) ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஜோப்ர ஆச்சர், மார்க்வூட், பென் ஸ்டோக், அடில் ரஷித் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 
photo credit : icc
நன்றி வீரகேசரி 











இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.

25/06/2019 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் முதலாவது அணியாக காலடி எடுத்து வைத்துள்ளது. 
ஐ.சி.சி. 12 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆரம்பானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்தது.
286 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுக்களையும் 26 ஓட்டத்துக்குள் இழந்தது. முதலாவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ஜேம்ஸ் வின்ஸ் டக்கவுட்டுடனும், 3.3 ஆவது ஓவரில் ரூட் 8 ஓட்டத்துடனும், 5.5 ஆவது ஓவரில் இயன் மோர்கன் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
4 ஆவது விக்கெட்டுக்காக பெயர்ஸ்டோவுடன் பட்லர் சற்று நேரம் தாக்குப் பிடித்து நின்றாட இங்கிலாந்து அணி 13 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடந்தது. இந் நிலையில் 13.5 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ 27 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க மறுமுணையில் பட்லர் 27.2 ஆவது ஓவரில் ஸ்டோனிஸுடைய பந்து வீச்சில் கவாஜாவிடம் பிடிகொடுத்து 25 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (124-5).
இதனிடையே பெயர்ஸ்டோவின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய பென்ஸ்டோக்ஸ் மைதானத்தில் சற்று நேரம் தாக்குப் பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் அவர் 36 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 115 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 89 ஓட்டத்துடன் ஸ்டார்க்குடைய பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய ஏனைய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி இறுதியாக 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 64 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. 
அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் 5 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டாக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி













தடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்!

26/06/2019 கிரேண்ட்ஹோம் - ஜேம்ஸ் நீஷமின் இணைப்பாட்டம் காரணமாக சரிவிலிருந்து மீண்ட நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக 237 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் மழை காரணமாக போட்டி சற்று நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு பாகிஸ்தான் பந்துகளை எதிர்கொள்வது பெரும் சவாலாக அமைந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 83 ஓட்டத்துக்குள் ஐந்து விக்கெட்டுக்களை பறிகொடுத்து நிலைகுலைந்தது.
1.1 ஆவது ஓவரில் மார்டின் குப்டில் 5 ஓட்டத்துடனும், 6.2 ஓவரில் முன்ரோ 12 ஓட்டத்துடனும், 8.6 ஆவது ஓவரில் ரோஸ் டெய்லர் 3 ஓட்டத்துடனும், 12.3 ஆவது ஓவரில் டொம் லெதம் ஒரு ஓட்டத்துடனும், 26.2 ஆவது ஓவரில் கேன் வில்லியம்சன் 41 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து 6 ஆவது விக்கெட்டுக்காக கிரேண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் நிதானமாக துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தனர்.
இதனால் நியூஸிலாந்து அணி 35 ஓவரில் 132 ஓட்டத்தையும், 40 ஓவரில் 152 ஓட்டத்தையும், 45 ஓவரில் 184 ஓட்டத்தையும் பெற்றிருந்த நிலையில் 47.4 ஆவது ஓவரில் கிரேண்ட்ஹோம் மொத்தமாக 71 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 64 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் மிட்செல் சாண்டனர் 5 ஓட்டத்துடனும், ஜேம்ஸ் நீஷம் மொத்தமாக 112 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஒட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களையும், மெஹமட் அமீர் மற்றும் ஷெடப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
photo credit : icc
நன்றி வீரகேசரி











வாய்ப்பினை தக்க வைத்த பாகிஸ்தான்!

27/06/2019 நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது.
ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் மழை காரணமாக போட்டி சற்று நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது.
238 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 241 ஓட்டங்களை பெற்று, நியூஸிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் உல்ஹாக் 19 ஓட்டத்துடனும், பக்கர் ஜமான் 9 ஓட்டத்துடனும், மொஹமட் ஹப்பீஸ் 32 ஓட்டத்துடனும் ஹரிஸ் சொஹேல் 76 பந்துகளில் 2 ஆறு ஓட்டம், 4 அடங்கலாக 68 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் பாபர் அசாம் மொத்தமாக 127 பந்துகளில் 11 நான்கு ஓட்டம் அடங்கலாக 101 ஓட்டத்துடனும் சர்ப்ராஸ் அஹமட் ஐந்து ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட், லொக்கி பெர்குசன் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி எதிர்கொண்ட 7 போட்டிகளில் 3 இல் வெற்றியை சந்தித்து 7 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை தக்க வைத்துள்ளதுடன் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் அரையிறுதிக்கு நுழைவது பெரும்பாலும் உறுதியாகிவிடும். 
photo credit : icc
நன்றி வீரகேசரி











பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா மே.இ.தீவுகள்?

27/06/2019மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 268 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே ஆரம்பமானது
இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
ஆரம்ப வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த நிலையில் 5 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ரோகித் சர்மா 18 ஓட்டத்துடன் கேமர் ரோச்சின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 
2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலியுடன், ராகுல் கைகோர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவர இந்திய அணி 10 ஓவர்கள் நிறைவில் 47 ஓட்டத்தையும், 15 ஓவர்கள் நிறைவில் 67 ஓட்டத்தையும், 20 ஓவர் முடிவில் 97 ஓட்டத்தையும் பெற்றது.
இந் நிலையில் 20.4 ஆவது ஓவரில் ராகுல் ஹோல்டருடைய பந்து வீச்சில் மொத்தமாக 68 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 48 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
ராகுலையடுத்து வந்த விஜய் சங்கரும் 26.1 ஆவது ஓவரில் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேதர் யாதவ் 7 ஓட்டத்துடன் வெளியேறினார். இதனால் இந்திய அணி 28.5 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.
இதனிடையே விராட் கோலி 27.3 ஆவது ஓவரில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து 5 ஆவது விக்கெட்டுக்காக தோனி மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இதனால் இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டத்தையும், 35 ஓவர்கள் முடிவில் 166 ஓட்டத்தையும் பெற்றது.
எனினும் 38.2 ஆவது ஓவரில் விராட் கோலி மொத்தமாக 82 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 72 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் பாண்டியா களமிறங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி 40 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 186 ஓட்டத்தையும் 42 ஆவது ஓவரின் முடிவல்  200 ஓட்டங்களையும், 45 ஆவது ஓவரின் முடிவில் 224 ஓட்டத்தையும் பெற்றது.
இதன் பின்னர் தோனி மற்றும் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க பாண்டியா 48.2 ஆவது ஓவரல் மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த மொஹமட் ஷமி அதே ஓவரின் ஐந்தவாது பந்து வீச்சல் டக்கவுட்டுடன் ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவல் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் தோனி மொத்தமாக 61 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 56 ஓட்டத்துடனும், குல்தீப் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 3 விக்கெட்டுக்களையும், ஹோல்டர் 2 மற்றும் ஷெல்டன் கொட்ரல் தலா 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc

நன்றி வீரகேசரி












வெளியேறத் தயாரான மேற்கிந்தியத்தீவுகள்

27/06/2019 இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்தது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய  அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது.
269 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வீச்சுகளில் நிலைகுலைந்து 34.2 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 6 ஓட்டத்துடனும், சுனில் அம்ரிஸ் 31 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் 5 ஓட்டத்துடனும், நிகோலஷ் பூரன் 28 ஓட்டத்துடனும், ஹோல்டர் 6 ஓட்டத்துடனும், பிரித்வெய்ட் ஒரு ஓட்டத்துடனும், சிம்ரன் ஹெட்மேயர் 18 ஓட்டத்துடனும், பேபியன் ஆலன் டக்கவுட்டுடனும், ஷெல்டன் கொட்ரல் 10 ஓட்டத்துடனும், உதேஷன் தோமஸ் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், கேமர் ரோச் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி 4 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் சஹால் தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் எதிர்கொண்ட 7 போட்டியில் ஐந்தில் தோல்வியடைந்து மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை இழந்தது. 
photo credit : icc
நன்றி வீரகேசரி











கிரிக்கெட்டில் விராட்டின் புதிய மைல்கல்!

28/06/2019 இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் சாதனை மைல்கல் ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
மேற்கிந்தியத்தீவுகளுடனான மான்செஸ்டரில் நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டியில் விராட் கோலி மொத்தமாக 82 பந்துகளை எதிர்கொண்டு, 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 72 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதனிடையே விராட் கோலி 24.4 ஆவது ஓவரில் 37 ஓட்டங்களை பெற்றதுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு 20) மொத்தமாக 20 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்ற வீரர் என்ற சாதனையை பதிவுசெய்தார்.
இதற்கு முன்னர் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாராவுக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை பெற தலா 453 இன்னிங்ஸுகள் தேவைப்பட்டன. ஆனால் விராட் கோலி 417 இன்னிங்ஸுக்களை மாத்திரம் எதிர்கொண்டு இந்த சாதனையை புரிந்துள்ளார். 
30 வயதாகும் விராட் கோலி இதுவரை மொத்தமாக 224 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 11,159 ஓட்டத்தையும் 131 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 6,613 ஓட்டத்தையும், 62 இன்னிங்ஸ்களை எதிர்கொண்டு 2,263 ஓட்டத்தைதையும் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ஓட்டங்களை விரைவாக பெற்ற வீரர் பட்டியலில் டெண்டுல்கர் மற்றும் லாரா ( 453 இன்னிங்ஸ்) இரண்டாவது, மூன்றாவது இடங்களிலும், ரிக்கி பொண்டிங் (464 இன்னிங்ஸ்) நான்காவது இடத்திலும், ஏ.பி.டி.வில்லியர்ஸ் (483 இன்னிங்ஸ்) ஐந்தாவது இடத்திலும், ஜக் கலீஸ் (491 இன்னிங்ஸ்) ஆறாவது இடத்திலும், ராகுல் ராவிட் (492 இன்னிங்ஸ்) ஏழாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி விராகேசரி 









203 ஓட்டத்துக்குள் சரணடைந்த இலங்கை!

28/06/2019 தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 203 ஓட்டத்துக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெற்று வருகிறது.
இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் விக்கெட் முதல் பந்துக்கே பறிபோனது. இதன் பின்னர் களமறிங்கிய ஏனைய வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன டக்கவுட்டுடனும், குசல் பெரேரா 30 (34) ஓட்டத்துடனும், அவிஷ்க பெர்னாண்டோ 30 (29) ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 23 (51) ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 11 (29) ஓட்டத்துடனும், தனஞ்சய டிசில்வா 24 (41) ஓட்டத்துடனும், ஜீவன் மெண்டீஸ் 18 (46) ஓட்டத்துடனும், திஸர பெரேரா 21 (25) ஓட்டத்துடனும், இசுறு உதான 17 (32) ஓட்டத்துடனும், மலிங்க 4 (2) ஓட்டத்துடனும் ஆட்டமிந்ததுடன் சுரங்க லக்மால் 5 (7) ஓட்டத்துடன் ஆட்டமிக்காதிருந்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரபடா 2 விக்கெட்டுக்களையும், பெஹ்லுக்வேயோ மற்றும் டுமினி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
photo credit : icc
நன்றி வீரகேசரி









நிதானமாக ஆடி முடித்த தென்னாபிரிக்க ; கைநழுவிப் போன அரையிறுதி வாய்ப்பு!

29/06/2019 அம்லா - டூப்பிளஸ்ஸின் பிரிக்க முடியாத இணைப்பாட்டத்தினால் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாபிரக்க அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டம் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமானது. 
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியானது 37.2 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிக்கை கடந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில் டீகொக் 15 ஓட்டத்துடன் மலிங்கவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்ததுடன் அசிம் அம்லா மொத்தமாக 104 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டத்துடனும், டூப்பிளஸ்ஸி மொத்தமாக 103 பந்துகள‍ை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 96 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி மொத்தமாக எதிர்கொண்ட 7 போட்டிகளில் 3 தோல்வியை சந்தித்ததுடன் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பும் கைநழுவிப் போனது. 
photo credit : icc
நன்றி வீரகேசரி










பாகிஸ்தானுக்கு 228 ஓட்டங்களை இலக்காக வைத்த ஆப்கான்

29/06/2019 இடம்பெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 36ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
விக்கெட் வீழ்த்திய வஹாபை பாராட்டும் சக வீரர்கள்
லீட்ஸில் உள்ள ஹொடிங்லே மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 228 ஓட்டங்களை பாகிஸ்தானின் வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, அஸ்கர் அப்கான் மற்றும் நஜிபுல்லா ஷட்ரான் ஆகியோர் தலா 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். அத்துடன், ரஹ்மற் ஷா 35 ஓட்டங்களையும் இக்ரம் அலி கில் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக, ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இமட் வசீம் மற்றும் வஹப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அத்துடன் ஷதாப் கான் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி 228 ஓட்டங்களை நோக்கித் துடுப்பெடுத்தாடிவருகிறது.  நன்றி வீரகேசரி 










வாய்ப்பினை கைவிடாத பாகிஸ்தான்!

30/06/2019 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 36 ஆவது போட்டி நேற்றைய தினம் லீட்ஸ் மைதானத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு குல்படின் நைப் தலைமையிலான  ஆப்கானிஸ்தான் மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து, 227 குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹமட் ஷா 35 ஓட்டத்துடனும், குல்படின் நைப் 15 ஓட்டத்துடனும், ஹஷ்மதுல்லா ஷாஹிடி டக்கவுட்டுடனும், இக்ரம் அலி கில் 24 ஓட்டத்துடனும், அஷ்கர் ஆப்கான் 42 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 16 ஓட்டத்துடனும், நஜிபுல்லா ஸத்ரான் 42 ஓட்டத்துடனும், சாமியுல்லா ஷின்வாரி 19 ஓட்டத்துடனும், ரஷித் கான் 8 ஓட்டத்துடனும், அஹிட் ஹசான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், முஜிபுர் ரஹ்மான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், வஹாப் ரியாஸ், இமாட் வஸிம் தலா 2 விக்கெட்டுக்களையும், ஷெடாப் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
228 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் ஜமான் டக்கவுட்டுடனும், இமாம் உல்ஹக் 36 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 45 ஓட்டத்துடனும், மொஹமட் ஹப்பீஸ் 19 ஓட்டத்துடனும், ஹரிஸ் சொஹேல் 27 ஓட்டத்துடனும், சர்ப்ராஸ் அஹமட் 18 ஓட்டத்துடனும், ஷெடாப் கான் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், இமாட் வஸிம் 49 ஓட்டத்துடனும், வஹாப் ரியாஸ் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா2 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி












போல்ட் ஹெட்ரிக் ; வெற்றி ஆஸி.வசம்! 

30/06/2019 நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று மாலை 6.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வோர்னர் 16 ஓட்டத்துடனும், பிஞ்ச் 8 ஓட்டத்துடனும், உஷ்மன் கவாஜா 88 ஓட்டத்துடனும், ஸ்டீவ் ஸ்மித் 5 ஓட்டத்துடனும், ஸ்டொனிஸ் 21 ஓட்டத்துடனும், மெக்ஸ்வெல் ஒரு ஓட்டத்துடனும், அலெக்ஸ் கரி 71 ஓட்டத்துடனும், மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், பேட் கம்மின்ஸ் 23 ஓட்டத்துடனும், நெதன் லியோன் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுடனும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கேன் வில்லியம்சன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
250 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 86 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. 
நியூஸிலாந்து அணி சார்பில் மார்டின் குப்டில் 20 ஓட்டத்துடனும், ஹென்றி நிக்கலஷ் 8 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் 40 ஓட்டத்துடனம், டெய்லர் 30 ஓட்டத்துடனும், டொம் லெதம் 14 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் டக்கவுட்டுடனும், ஜேம்ஸ் நீஷம் 9 ஓட்டத்துடனும், மிட்செல் சாண்டனர் 12 ஓட்டத்துடனும், இஷ் சோதி 5 ஓட்டத்துடனும், லொக்கி பெர்குசன் டக்கவுட்டனும் ஆட்டமிழந்ததுடன், டிரெண்ட் போல்ட் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டாக் 5 விக்கெட்டுக்களையும், ஜேசன் பெஹ்ரெண்டோர்ப் 2 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ், நெதன் லியோன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 
இப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் உஸ்மான் காஜாவையும், மிட்செல் ஸ்டார்க்கையும், ஜேசன் பெஹ்ரெண்டோர்பையும் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க வைத்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
இத் தொடரில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது ஹெட்ரிக் சாதனை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
photo credit : ‍icc
நன்றி வீரகேசரி












அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடித்த இங்கிலாந்து!

30/06/2019 ரோய் - பெயர்ஸ்டோவின் அதிரடியான ஆரம்பத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்லாந்து அணி 337 ஓட்டங்களை குவித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் ரோய் - பெயர்ஸ்டோ ஆரம்ப வீரர்களாக களமறங்கிய இந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சின்னாபின்னமாக்கி அணிக்கு நல்லதொரு அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 10 ஓவரில் 47 ஓட்டத்தையும், 20 ஓவரில் 145 ஓட்டத்தையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது. இதனிடையே 15.3 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ ஒரு ஆறு ஓட்டத்தை விளாசியதுடன் அரைசதம் கடந்தார்.
மறுமுணையில் ரோய் 16.4 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 22.1 ஆவது ஓவரில் மொத்தமாக 57 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்கலாக 66 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 
இதனால் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட் 160 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரூட்டுன் ஜோடி சேர்ந்தாடிய பெயர்ஸ்டோ 26 ஆவது ஓவரில் சதம் விளாசினார்.
30 ஆவது ஓவரின் நிறைவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 202 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வந்தது. இந் நிலையில் 31.4 ஆவது ஓவரில் பெயர்ஸ்டோ மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 10 நான்கு ஓட்டம், 6 ஆறு ஓட்டம் அடங்கலாக 111 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
பெயர்ஸ்டோவின் வெளியேற்றத்தைதயடுத்து ஆடுகளம் நுழைந்த அணித் தலைவர் இயன் மோர்கன் 33.4 ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ராகுலிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார் (207-3).
இதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக ரூட்டுன் பென் ஸ்டோக்ஸ் கைகோர்த்தாடிவர இங்கிலாந்து அணி 40 ஓவர்களின் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 245 ஓட்டங்களை குவித்தது.
எனினும் 44.1 ஆவது ஓவரல் ரூட் மொத்தமாக 54 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 44 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (277-4). 5 ஆவது விக்கெட்டுக்காக பட்லர் களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர, பென்ஸ்டோக்ஸ் 46 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார்.
அத்துடன் இங்கிலாந்து அணியும் 46.2 ஓவரில் 300 ஓட்டங்களை தொட்டதுடன் அதிரடியான ஆட்டத்தை ஆரம்பித்த பட்லர் 46 ஆவது ஓவரின் முடிவில் மொத்தமாக 8 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 20 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய பிளன்கட்டுடன் கைகோர்த்த பென்ஸ்டோக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.4 ஆவது ஓவரில் மொத்தமாக 54 பந்துகள‍ை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
 இறுதியாக இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 337 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் பிளன்கட் எதுவித ஓட்டமின்றியும், ஜோப்ர ஆச்சர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் மொஹம் ஷமி 5 விக்கெட்டுக்களையும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி











முதல் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்து!

30/06/2019 இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 31 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடரில் இந்திய அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை குவித்தது.
338 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பில் கே.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
2.3 ஆவது ஓவரில் இந்திய அணி 8 ஓட்டங்களை பெற்றபோது ராகுல் எதுவித ஓட்டமின்றி டக்கவுட்டுடன் கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இருப்பினும் 2 ஆவது விக்கெட்டுக்காக விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தாட இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தது.
அதன்படி 10 ஓவரில் 28 ஓட்டத்தையும், 20 ஓவரில் 83 ஓட்டத்தையும் இந்திய அணி பெற்றது. இதனிடையே 19 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விராட் கோலி அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 28.2 ஆவது ஓவரில் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் களமிறங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி 30 ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 152 ஓட்டத்தையும், 35 ஓவரில் 188 ஓட்டத்தையும் பெற்றது. 
இதனிடையே ரோகித் சர்மா 34.4 ஆவது ஓவரில் சதம் விளாசினார். எனினும் அவர் 36.1 ஆவது ஓவரில் மொத்தமாக 109 பந்துகளை எதிர்கொண்டு 102 ஓட்டத்துடன் கிறிஸ் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார் (198-3)
தொடர்ந்து களமிறங்கிய பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க மறுமுணையில் ரிஷாத் பந்த் மொத்தமாக 29 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 32 ஓட்டத்துடன் 39.1 ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரிஷாத் பந்தின் வெளியேற்றத்தையடுத்து தோனி மற்றும் பாண்டியா இணைந்து இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க போராடினர்.
இந் நிலையில் பாண்டியா 44.5 ஆவது ஓவரில் மொத்தமாக 33 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் அடங்கலாக 45 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
45 ஆவது ஓவரின் நிறைவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 267 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆடுகளத்தில் தோனி 16 ஓட்டத்துடனும் கேதர் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர். வெற்றிக்கு 30 பந்துகளில் 71 ஓட்டம் என்ற கடினமான நிலை இருந்தது.
இறுதியாக 18 பந்துகளுக்கு 57 என்ற நிலையும், 12 பந்துகளுக்கு 51 என்ற நிலையும் 6 பந்துகளுக்கு 44 என்ற நிலையும் இருந்தது. எனினும் இந்திய அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.
தோனி 42 ஓட்டத்துடனம், கேதர் யாதவ் 12 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்ததுடன் பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் பிளன்கட் 3விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
photo credit : icc
நன்றி வீரகேசரி 




No comments: