உலகச் செய்திகள்


வட கொரியா ஜப்­பா­னுக்கு மேலாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தனை

சசிகலா , தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஓதுக்கி வைப்பு : முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

ஈராக்கில் தலை துண்டித்த நிலையில் 500 உடல்கள் கண்டுபிடிப்பு

அமெ­ரிக்­க வெள்ள அனர்த்தம் இர­சா­யனத் தொழிற்­சா­லையில் வெடிப்­புகள்

கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி

 மருத்துவராகும் கனவுடன் பயணித்த அனித்தாவிற்கு தற்கொலையா முடிவு ?








வட கொரியா ஜப்­பா­னுக்கு மேலாக ஏவு­க­ணையை ஏவிப் பரி­சோ­தனை

30/08/2017 வட கொரி­யா­வா­னது வட ஜப்­பா­னுக்கு மேலாக ஏவு­க­ணை­யொன்றை நேற்று ஏவிப் பரி ­சோ­தித்­துள்­ளது. இதனால் பிராந்­தி­யத்தில் பெரும் பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது. 
இதனை தனது நாட்­டுக்கு முன் ­னொரு போதும் இடம்­பெ­றாத வகை­யி­லான அச்­சு­றுத்­த­லொன்­றாக ஜப்­பா­னியப் பிர­தமர் ஷின்ஸோ அபே குறிப்­பிட்­டுள்ளார்.
அந்த ஏவு­க­ணை­யா­னது ஜப்­பா­னிய ஹொக்­கெய்டோ தீவைக் கடந்து சென்று கடலில்  விழுந்­துள்­ளது.
இந்­நி­லையில் மேற்­படி ஏவு­க ணைப் பரி­சோ­தனை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபை அவ­சரக் கூட்­ட­மொன்றைக் கூட்டும் என  எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
வட கொரி­யா­வா­னது இதற்கு முன்­னரும் ஒரு தொகை ஏவு­கணைப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டுள்ள போதும் அந்­நாடு  அணு ஆயு­தத்தை ஏந்திச் செல்லும் வல்­ல­மையைக் கொண்­டது என நம்­பப்­படும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஏவு­க­ணையை ஜப்­பா­னுக்கு மேலாக ஏவிப் பரி­சோ­திப்­பது இதுவே முதல் தட­வை­யாகும்.
 இதற்கு முன்­னரும் இரு தட­வைகள் வட கொரிய ஏவு­க­ணைகள் ஜப்­பா னைக் கடந்து சென்ற போதும்,  அவை தாக்­குதல் ஏவு­க­ணைகள் அல்ல  செய்­ம­தி­களை ஏந்திச் செல்­லக்­கூ­டிய ஏவு­க­ணைகள் என வட கொரியா தெரி­வித்­தி­ருந்­தது.
இந்நிலையில் தற்போது ஏவப் பட்ட ஏவு­கணை வட கொரிய தலை­ந­க ருக்கு அரு­கி­லி­ருந்து கிழக்கு நோக்கி ஏவப்­பட்­ட­தாக தென் கொரிய இரா­ணுவம் கூறு­கி­றது.
அந்த ஏவு­கணை 2,700 கிலோ­மீற் றர் தூரம் பய­ணித்­த­தா­கவும் அது ஹவஸோங் -–12 ரக ஏவு­க­ணை­யொன்­றெனத் தோன்­று­வ­தா­கவும் அது ஆகக் கூடி­யது சுமார் 550 கிலோ­மீற்றர் உயரம் வரை சென்று ஜப்­பா­னிய கடற்­க­ரை­யி­லி­ருந்து 1,180  கிலோ ­மீற்றர் தூரத்தில் வட பசுபிக் சமுத்­தி­ரத்தில் விழுந்­த­தா­கவும்  ஆரம்ப கட் டத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
அமெ­ரிக்க மற்றும் ஜப்­பா­னிய படை­யினர் கூட்­டி­ணைந்து ஹொக்­கெய்­டோவில்  இரா­ணுவப் பயிற்­சி­களை பூர்த்தி செய்­துள்ள நிலையில் இந்த ஏவு­கணை ஏவும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அதே­ச­மயம்  அமெ­ரிக்க மற்றும் தென் கொரி­யாவைச் சேர்ந்த  பல்­லா­ யி­ரக்­க­ணக்­கான படை­வீ­ரர்கள் பங்­கே ற்கும் வரு­டாந்த இரா­ணுவப் பயிற்­சி கள் தென் கொரி­யாவில் இடம்­பெற்று வரு­கின்­றன.
வட கொரி­யா­வா­னது இந்த இரா­ணு வப் பயிற்­சி­களை சின­மூட்டும் செயற்­பா­டா­கவே நோக்கி வரு­கி­றது.
இந்­நி­லையில் தென் கொரிய ஜனா­தி­பதி மூன் ஜே – இன், வட கொரி­ய­ஏ­வு­கணைப் பரி­சோ­த­னை­க­ளுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் படை பலத்தைக் காண்­பிக்க  உத்­த­ர­விட்­டுள்ளார். இந்த உத்­த­ரவின் பிர­காரம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இரா­ணுவப் பயிற்­சி­களின் போது 4  தென் கொரிய போர் விமா­னங்கள் நிஜ­மான குண்டு வீச்­சு­களை நடத்­தின.
 ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபே கூறு­ கை யில், வட கொரிய ஏவு­கணைப் பரி­சோ­தனை குறி த்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­புடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய போது வட கொரி­யா­வுக்கு கடும் அழுத்­தத்தைக் கொடுப்­ப­தற்கு தாம் இரு­வரும் இணங்­கி­ய­தாகத்  தெரி­வித்தார்.
 வட கொரி­யாவின் பிந்­ திய ஏவு­கணைப் பரி­சோ­த­னையை அமெ­ரிக்­கா­வுக்கு ஒரு அச்­சு­றுத்­தலாக கரு­த­வில்லை எனத் தெரி­வித்­துள்ள அமெ­ரிக்கப் பாது­காப்பு அமைப்­பான பென்­டகன்,  எனினும் அது தொடர்பில் மேல­திக புல­னாய்வு தக­வல்­களை சேக­ரிக்கும் செயற்­பாட்டில் இரா­ணு வம் ஈடு­பட்­டுள்­ள­தாக கூறி­யது.  
அதே­ச­மயம் ரஷ்­யாவும் வட கொரி­யாவின் இந்த செயற்பாடு குறித்து  கவலையை வெளியிட்டுள்ளது.
கொரிய பிராந்தியத்திலான நிலை மை குறித்த தனது நாடு பெரிதும் கவலையடைந்துள்ளதாக ரஷ்ய பிரதி வெளிநாட்டு அமைச்சர் செர்கேயி ரயப்கோவ் தெரிவித்தார்.
இந்நிலையில் வட கொரியா தனது ஆறாவது அணுசக்திப் பரிசோதனை யை நடத்தத் தயாராகியுள்ளதாக அங் கிருந்து வரும் சில அறிக்கைகள் கூறு கின்றன.   நன்றி வீரகேசரி 










சசிகலா , தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து ஓதுக்கி வைப்பு : முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்

29/08/2017 சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று  அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.  இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் பங்குபற்றினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு,
• விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு.
• சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு.
• நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் சசிகலா, தினகரன் அறிவித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லாது.
•  அதிமுகவுக்கு சொந்தமான ஊடகங்களை (நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி) கைப்பற்றவும் நடவடிக்கை.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகளை நீக்கி தினகரன் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
நன்றி வீரகேசரி










ஈராக்கில் தலை துண்டித்த நிலையில் 500 உடல்கள் கண்டுபிடிப்பு

28/08/2017 ஈராக்கில் 2 புதைகுழி­களில் 500 இற்கும் மேற்­பட்­டோரின் உடல்கள் தலை துண்­டிக்­கப்­பட்ட நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. ஈராக்கில் கடந்த 2014ஆம் ஆண்டில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆதிக்கம் தொடங்­கி­யது. அப்­போது ஈராக்கின் 2 ஆவது பெரிய நக­ர­மான மொசூல் மற்றும் அதைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களை கைப்­பற்றி இஸ்­லா­மிய தேசம் என்ற தனிநாட்டை உரு­வாக்­கி­னார்கள்.
தற்­போது அமெ­ரிக்க இரா­ணு­வத்தின்  உத­வி­யுடன் ஈராக் இரா­ணுவம் மொசூல் உள்­ளிட்ட பெரும்­பா­லான பகு­தி­களை மீட்­டது. அதை தொடர்ந்து அங்கு இரா­ணுவம் ஆய்வுப் பணியில் ஈடு­பட்­டுள்­ளது.
மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்­திய சிறைச்­சாலை உள்­ளது. அங்கு இரு மிகப் பெரிய புதைகுழிகள் இருந்­தன. அவற்றை இரா­ணுவ வீரர்கள் தோண்டி ஆய்வு மேற்­கொண்­டனர்.
அந்த இரு புதைகுழி­க­ளிலும் 500 இற்கும் மேற்­பட்­டோரின் உடல்கள் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவை தலை துண்­டிக்­கப்­பட்ட நிலையில் இருந்­தன. ஒரு குழியில் 470 உடல்­களும், மற்­றொரு குழியில் 30 உடல்­களும் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன.
இவர்கள் அனை­வரும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கைது செய்­யப்­பட்டு தண்­டனை நிறைவேற்­றப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கலாம் என்று அஞ்­சப்­ப­டு­கி­றது. 2014ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி படவுஸ் சிறையில் 600 கைதிகள் படு­கொலை செய்யப்பட்டனர். அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஈராக் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 








அமெ­ரிக்­க வெள்ள அனர்த்தம் இர­சா­யனத் தொழிற்­சா­லையில் வெடிப்­புகள்

01/09/2017 அமெ­ரிக்­காவை தாக்­கிய ஹார்வி சூறா­வ­ளியால் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் பாதிக்கப்­பட்­டுள்ள  ஹுஸ்டன் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள இர­சா­யனத் தொழிற்­சா­லையில்  வெடிப்­புகள்  இடம்­பெற்­றுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
குரொஸ்பி பிராந்­தி­யத்­தி­லுள்ள அர்­கெமா  இர­சா­யனத் தொழிற்­சா­லையில் இரு வெடிப்­பு­க­ளை­ய­டுத்து கரும் புகை வெளிப்­பட்ட வண்ணம் உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. ஹார்வி சூறா­வ­ளி­யை­ய­டுத்து அந்த இர­சா­யனத் தொழிற்­சா­லை­யி­லுள்ள இர­சா­யன உள்­ள­டக்­கங்­களை குளிர்­விப்­ப­தற்கு தேவை­யான குளி­ரூட்டல் வசதி செயற்­படத் தவ­றி­ய­தை­ய­டுத்து  அதிக வெப்பம் கார­ண­மாக இந்த வெடிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
 அந்தத் தொழிற்­சா­லையில் வெடிப்பு இடம்­பெ­று­வதைத் தவிர்க்க வேறு வழி கிடை­யாது என அந்த தொழிற்­சாலை நிர்­வாகம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தது.
இத­னை­ய­டுத்து அந்தத் தொழிற்­சா­லையைச் சூழ்ந்து 1.5  மைல் தூரம் வரை­யுள்ள பிராந்­தி­யங்­களில் வசிக்கும் மக்கள் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக வெளி­யேற்­றப்­பட்­டனர்.
 அந்தத் தளத்­தி­லி­ருந்த   தொழி­லா­ளர்கள் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மையே வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
வெடிப்­பு­க­ளை­ய­டுத்து பாரிய தீ ஏற்­பட்டு பெரு­ம­ளவு நச்சுப் புகை வெளி­யேறும்  அபாயம் உள்­ளதால் மேற்­படி தொழிற்­சா­லைக்கு அருகிலுள்ள பிராந்தியங்களுக்கு மேலாக விமா­னங்கள் பறப்­ப­தற்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
அர்­கெமா இர­சா­யனத் தொழிற்­சா­லை­யி­லான உற்­பத்­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.
 ஹார்வி புய­லை­ய­டுத்து இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 33  பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அமெ­ரிக்க தேசிய கால­நிலை சேவைகள் கூறு­கி­றது.  அமெ­ரிக்க கென்­துக்கி மற்றும் லூஸி­யானா மாநி­லங்­களில்  3  நாட்­க­ளாக அடை மழை பெய்து வரு­கி­றது. அதே­ச­மயம் ஹுஸ்டன் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிர­தான எண்ணெய் விநி­யோகக் குழாய் மூடப்­பட்­டுள்­ளதால் அமெ­ரிக்க சக்­தி­வள விநி­யோ­கங்கள் கடும் பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் மீட்புப் பணி­யா­ளர்கள் வெள்­ளத்தில் சிக்­கி­யுள்­ள­வர்­களை கண்­டு­பி­டித்து மீட்கும் முக­மாக வீடு வீடாக தேடுதல் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ளனர்.  நன்றி வீரகேசரி











கராச்சி நகரில் வெள்ள அனர்த்தம் : 23 பேர் பலி
02/09/2017 பாகிஸ்­தா­னிய கராச்சி நகரில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை  இடம்­பெற்ற  வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி 7  சிறு­வர்கள் உட்­பட 23  பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்நாட்டு ஊடக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

மேற்­படி  வெள்ளம் கார­ண­மாக அந்­ந­க­ருக்­கான விமானப் போக்­கு­வ­ரத்­து­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொண்டு சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றுள்ள  சிந்து மாகாண முத­ல­மைச்சர் செய்த் முராத் அலி சாஹும் ஆளுநர் மொஹமட் ஸுபைரும்  வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக மேற்­கொள்ள மாகாண அமைச்­சர்­க­ளுக்கும்  பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி













 மருத்துவராகும் கனவுடன் பயணித்த அனித்தாவிற்கு தற்கொலையா முடிவு ?

02/09/2017 நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த தமிழக மாணவி அனித்தா நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிளஸ்டூவில் 2000 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்களை எடுத்திருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியிலும் வேதனையிலுமே அனித்தா இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என உறவினர்கள் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் என்பனவும் பதிவுகளை வெளியிட்டுள்ளன.
தமிழகத்தை மட்டுமல்லாது இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள அனித்தாவின் மரணம் தொடர்பாக பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக மத்திய மாநில அரசுக்கெதிராக  கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.
சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகளான அனித்தா பத்து வருடங்களுக்கு முன்னரே தனது தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் மாத்திரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பின்தங்கிய  நிலையில் இருந்தும் சாதிக்க வேண்டும் என துடித்த திறமையுள்ள இளம் மாணவி ஆவார்.
தமிழக அரசின் கல்வி முறையில் பிளஸ்டூவில் 1176 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தடைதாண்டல் பரீட்சையில் 700 மதிப்பெண்களுக்கு 86 புள்ளிகளை மாத்திரம் பெற்ற அனித்தாவால் மருத்துவ கல்வியை தொடர முடியாது போனது.
தமிழக அரசின் கல்வி முறையில் கல்வி பயிலும் மாணவர்களால் “நீட் பரீட்சை”யை எதிர் கொண்டு வெற்றி பெறுவது கடினம் எனவும் தமிழக மாணவர்களுக்கு நீட் பரீட்சையிலிருந்து தமிழக மாணவர்கள் விலக்களிக்கப்படல் வேண்டும் என நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்தும் உச்ச நீதி மன்றம் அவரின் கேகாரிக்கையை நிராகரித்து விட்டது.
அனித்தாவிற்கு ஏற்பட்டுள்ள அநியாயத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரஜினி, கமல், பார்த்தீபன் உள்ளிட்ட பல நடிகர்களும் தங்களது அனுதாபங்களையும், மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த அனித்தாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு 7 இலட்சம் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக அறிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி




No comments: