தமிழ் சினிமா


ஹரஹர மஹாதேவகிதொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்து வந்த கவுதம் கார்த்திக் தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். ரங்கூன், இவன் தந்திரனையடுத்து ஹரஹர மஹாதேவகியும் காப்பாற்றியதா பார்ப்போம்.
ஹரஹர மஹாதேவகி இந்த வார்த்தையை கேட்டதுமே இளைஞர்கள் சிரிக்கத்தொடங்கி விடுவார்கள். இதற்கு காரணம் அந்த வாட்ஸ்அப் சாமியாரின் ஆடியோக்கள் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே.
18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய படம் தான். படத்தின் முதல் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை சிரிப்புக்கு பஞ்சமிருக்காது.
டைட்டில் கார்டிலேயே அந்த வாட்ஸ்அப் சாமியாரின் அத்தனை வசனங்களும் இடம்பெற்று விடுகிறது. படத்தில் கதை நகரும்போது பின்னணியில் ஒலிக்கும் குரல் கூட அதே சாமியாரின் குரலில் தான் உள்ளது.

 

கதைக்களம்

ஆளுங்கட்சி ஊர் முழுவதும் கொடுத்திருக்கும் மேக்கப் கிட் பேக் ஒன்றில் வெடிகுண்டு வைத்து தன்னுடைய மேடையில் வெடிக்க வைத்தால் அனுதாப ஓட்டில் ஜெயித்துவிட பிளான் செய்கிறார் அரசியல்வாதி ரவிமரியா.
இதற்காக அவருடைய அல்லக்கை மூலமாக கருணாகரன், மொட்டை ராஜேந்திரனிடம் பேக்கை கொடுக்கிறார்.
அதேநேரம் நிக்கி கல்ராணியை பிரேக்அப் செய்த கௌதம் கார்த்திக் அவர் வாங்கித்தந்த பொருட்களை அதே பேக்கில் போட்டுக்கொண்டு நண்பர் சதீஷுடன் செல்கிறார்.
மற்றொரு பக்கம் அதே பேக்கில் பாலசரவணன் கள்ளநோட்டை மாற்றுவதற்காக சுற்றுகிறார். ஆனால் இந்த மூன்று பேக்குகளும் சூழ்நிலையால் ஒவ்வொருவர் கையாக மாற கடைசியில் ஹரஹர மஹாதேவகி ரெசார்ட்டில் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. மேலும் கடத்தப்பட்ட குழந்தையை தேடும் போலிசாக ஆர்.கே சுரேஷும் வருகிறார்.
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணியின் இருவரும் சந்திக்கும் காட்சிகள் அண்ணாமலை ரஜினி போலத்தான் கடவுளே கடவுளே காட்சி தான். காதல் காட்சிகளை விட இரட்டை அர்த்த வசனங்கள் தான் அதிகம் இருக்கும்.
சதீஷ் தன்னுடைய வழக்கமான சிரிப்பே வராத சில காமெடிகளை பயன்படுத்தினாலும் க்ளைமேக்ஸில் வரும் முத்தத்தை திருப்பி தரும் காட்சியில் அப்லாஸ் அள்ளுகிறார்.
மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் காமெடி கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
ரவி மரியா, நமோ நாரயணன், மயில்சாமி என ஒவ்வொரு நடிகர்களும் கைத்தட்டல் வாங்குகின்றனர்.
இயக்குனர் சன்தோஷ் இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து வசனங்கள், திரைக்கதை மூலம் வெற்றி பெற்றுவிட்டார். போலிச்சாமியார், பாதிரியார்களின் காட்சிகள், எம்.எல்.ஏக்களை அடைத்துவைத்து அரசியல், இலவசங்களை காட்சி அரசியல் என சமூக அவலங்களையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்.
டாஸ்மார்க்கில் குடிக்காதே என்று போராடுபவர்களை அடிப்பதும், குடிக்கப்போறோம் என்றதும் மரியாதையோடு போங்க சார் என்று பொலிஸ் அனுப்பி வைப்பதும் போன்ற தற்போதைய காட்சிகளும் சூப்பர்.
படம் முழுவதும் கலர்புல்லாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். பின்னணி இசை, பாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது.

பேக் மாறிப்போகும் காட்சியெல்லாம் பிரபு நடித்த தேடினேன் வந்தது படத்தின் அப்பட்டமான காப்பிதான்.
இளைஞர்களை மட்டுமே டார்க்கெட் செய்து எடுத்துள்ளார் இயக்குனர். மற்ற வயதினர், பெண்கள் பார்த்தால் முகச்சுளிப்பை உண்டாக்கலாம். இந்த வசனங்களுக்கு இளைஞர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.

க்ளாப்ஸ்

மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் காமெடி, போலிச்சாமியார்கள் காட்சி, அனகோண்டா காமெடி, நகைச்சுவையோடு கூடிய சமூககருத்து
வாட்ஸ்அப் சாமியாரின் வசனங்களை படம் முழுவதும் நிறைத்தது.

பல்ப்ஸ்

பெண்கள், குடும்பமாக பார்க்க முடியாத படியான காட்சிகளும், வசனங்களும்.
பேக் மாறிப்போவது போன்ற ஏற்கனவே பார்த்த சில காட்சிகள்.
மொத்தத்தில் இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு ஜாலியான படம்.

நன்றி  CineUlagam

No comments: