.
" இலங்கையின் மூத்த எழுத்தாளர் என அறியப்பட்டவரும் சமூக மற்றும் வரலாற்று
நாவல்களும் ஆய்வுகளும்- நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும்
பல பாட நூல்களும் எழுதியிருக்கும் பிரபல படைப்பாளி செங்கைஆழியான் கலாநிதி கந்தையா
குணராசா ( 1941 -2016) தனது தந்தை வழித்தோன்றல் ஆறுமுகசாமிதான் பாரதியின்
ஞானகுரு என்று நிறுவ முயன்றுள்ளார்.
ஈழத்தின் வரலாற்று
தகவல்களை தொடர்ந்து பதிவுசெய்த செங்கைஆழியான், ஏன் இவ்வாறு
ஒரு வரலாற்று திரிபுக்கும் வழிவகுத்தார் என்பதுதான்
புரியவில்லை.
பாரதி நூற்றாண்டு
(1982 - 1983 ) கால கட்டத்தில் அவர் தமது மூதாதையர் ஆறுமுகசாமிதான் பாரதியின் ஞானகுரு
என்று ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தால் அதற்கு
எதிர்வினையாற்ற பல பாரதி இயல் ஆய்வாளர்கள் அப்போது
இலங்கையில் இருந்தார்கள்.
முக்கியமாக பேராசிரியர்
க. கைலாசபதி.
காலம் கடந்து 2006 ஆம் ஆண்டில்
பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுகசாமி என்னும்
நூலை வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். "
இவ்வாறு இலங்கையில் பாரதி தொடரின் இரண்டாவது அங்கத்தில் பதிவுசெய்திருந்தோம்.
ஞானம் கலை, இலக்கிய மாத இதழ் பாரதி தொடர்பாக
வெளியிட்ட விடயதானங்கள் பற்றிய தகவல் குறிப்புகளை எழுதும்வேளையில், செங்கை ஆழியான் எழுதிய நூல்பற்றிய ஓர் எதிர்வினையை
ஞானம் ஆசிரியர் தி. ஞானேசகரனும் ஞானம் 78 ஆவது இதழில் ( நவம்பர் 2006) எழுதியிருந்தார்.
பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுவை நகரில்
அரசியற் காரணங்களுக்காக மறைந்துவாழ நேரிட்டது.
அக்கால கட்டத்தில் அவர் ஞானியர் சிலருடன் நெருங்கி உறவாடியுள்ளார் என்பதை அவர்
தனது பாடல்களில் பதிவாக்கியுள்ளார். குள்ளச்சாமி
(மாங்கொட்டைச் சாமி), கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சுவாமி, குவளைக் கண்ணன் ஆகியோர்
இவர்களிற் சிலர். ஞானியர்களைச் சந்திப்பதில்
பாரதியார் எத்தகைய தீவிரங்கொண்டவராக இருந்தார் என்பதனை அவரது பின்வரும் பாடல்மூலம்
அறியலாம்.
பற்றியகை திருகியந்தக் குள்ளச்சாமி
பரிந்தோடப் பார்த்தான்; யான் விடவேயில்லை
சுற்றுமுற்றும் பார்த்துப் பின் முறுவல் பூத்தான்
தூயதிருக் கமலபதத்துணையைப்
பார்த்தேன்! குற்றமற்ற தேசிகனும் திமிறிக்கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன் பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்
பாரதியார்
ஞானியர்களைச் சந்திப்பதிலும் அவர்களின் உபதேசங்களையும் அருளையும் பெறுவதிலும் பெருவிருப்புடையவராக
இருந்தார் என்பதனை அறிந்து ஞானியர்கள் சிலரை குவளைக் கண்ணன் என்பார் பாரதியாரிடம் அழைத்துச்
சென்று சந்திக்க வைத்துள்ளார். யாழ்ப்பாணத்துச்
சுவாமியையும் குவளைக் கண்ணனே பாரதியாரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பதனை
பாரதியாரின் பின்வரும் பாடலில் அறியலாம்.
மகத்தான முனிவரெல்லாம் கண்ணன் தோழர்
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்
ஜகத்தினிலோர் வமையிலா யாழ்ப்பாணத்துச்
சாமிதனை யிவனென்றன் மனைக் கொணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன் ;
'அன்றேயப் போதே வீடதுவே வீடு”
பாரதியார்
போற்றிய இந்த யாழ்ப்பாணத்துச் சாமி யார்...?
இதற்கு
வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சாரார் விடை பகர்ந்துள்ளனர்.
இலங்கை
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பத்தாம் வகுப்புக்கான சைவநெறி என்ற பாடநூலின் திருத்திய
பதிப்பை 1985 இல் வெளியிட்டுள்ளது. அதில்
8 ஆவது பாடமாக ‘எங்கள் ஞானியர்’ என்ற பாடமுண்டு. அப்பாடத்தில் ஒரு பகுதி பின்வருமாறு அமைகிறது.
“இலங்கையிலே
இத்தகைய ஞானநிலையை அடைந்து ஒரு ஞான பரம்பரைக்கும் வித்திட்டவர் யாழ்ப்பாணத்துக் கடையிற்
சுவாமி என்பவராவர்”
“குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத் தான்
தேவிபதம்
மறவாத தீர ஞானி
சிதம்பரத்து
நடராச மூர்த்தியாவான்
பாவியரைக்
கரையேற்றும் ஞானத்தோணி
பரமபத
வாயிலெனும் பார்வையாளன்
காவிவளர்
தடங்களிலே மீன்கள் பாயும்
கழனிகள்
சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்
தங்கத்தாற்
பதுமை செய்தும் இரதலிங்கம்
சமைத்து
வமற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு
பக்தர் பலர் புவிமீதுள்ளார்
தோழரே
எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்
சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்
கோன் யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென்
றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால்
அதுகண்டீர் சர்வசித்தி”
என்று தம் சுயசரிதையிலே தம் குருநாதரான யாழ்ப்
பாணத்துச் சுவாமியின் புகழைப் பாரதியார் பாடுகிறார்”.
மேற்குறிப்பிட்ட
பகுதியை வாசிக்கும் போது, யாழ்ப்பாணத்துக் கடையிற் சுவாமியே பாரதியார் பாடிய யாழ்ப்பாணத்துச்
சுவாமி என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. மேலும்
இந்நூலில் ஞானியர் வரிசையில் மலைநாட்டில் குயின்ஸ்பரித் தோட்டத்தில் வாழ்ந்த நவநாதசித்தர்,
கதிர்காமத்தில் வாழ்ந்த முத்துலிங்க சுவாமிகள், மட்டக்களப்பு காரைதீவிற் சமாதியடைந்த
சித்தானைக் குட்டிச் சுவாமி, கடையிற் சுவாமியின் நேர்ச்சீடரான செல்லப்பர் சுவாமி, செல்லப்பர்
சுவாமியின் சீடரான யோகர் சுவாமி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அறுபதுகளில்
முற்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமியின் சமாதி வியாபாரி மூலையில்
இருப்பதாகக் கண்டறிந்து அங்கு மகாநாடு நடத்தினர்.
பாரதியார் புதுவையில் மறைந்து வாழ்ந்த காலகட்டத்தில் இடையிடையே இரகசியமாக நாகபட்டினத்துக்கு
வந்துபோவது வழக்கம். அவ்வேளையிலே தான் பாரதியார்
தனது ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமியைச் சந்தித்து அருள் பெற்றார். பாரதியாரின் ஞானகுருவின் பெயர் அருளம்பலசுவாமி
(மோனசுவாமி). அவரைப் பற்றி செல்லையா என்பவர்
கூறிய ஆதாரங்களின்படி எழுத்தாளர் அ.ந.கந்தசாமி
ஸ்ரீலங்கா அரசாங்க சமாச்சாரத் துறைப் பத்திரிகையில் கட்டுரை எழுதினார்.
அருளம்பலச் சுவாமியின் சமாதி வியாபாரி மூலை அல்வாய்
முத்துமாரியம்மன் கோவில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது எனக் கூறி 1963 இல் அவர்கள்
வியாபாரி மூலையில் இலக்கிய மாநாடு நடத்தினார்கள், பேராசிரியர் சைலாசபதி, பேராசிரியர்
கார்த்திகேசு சிவத்தம்பி, அ.ந. கந்தசாமி, பிரேம்ஜி ஞானசுந்தரன் உட்படப் பல எழுத்தாளர்களும்
அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். திரு. ஞானக்குமரன்
என்பவர் அருளம்பல சுவாமியே பாரதியின் ஞானகுரு எனத் தான் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்பிட்டுள்ளார். அருளம்பல சுவாமியின் சமாதியில் முற்போக்கு எழுத்தாளர்கள்
எழுதி மாட்டிய பாரதியாரின் பாடலை உள்ளுர் அரசியல்
காரணங்களால் யாரோ கழற்றி விட்டதாகவும் அறியப்படுகிறது.
தற்போது
செங்கை ஆழியான் கலாநிதி க. குணராசா ‘பாரதியின்
ஞானகுரு யாழ்ப்பாணத்து ஆறுமுக சுவாமி’ என்ற நூலை
எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலில் ‘பாரதியின்
ஞானகுருவாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்துச் சுவாமியின் பேரன் நான்’ என்று தன்னைக் குறிப்பிடுகிறார். அதற்கான ஆதாரங்களையும் அந்நூலில் அவர் விபரமாகக்
தருகிறார்.
ஆறுமுகம்
1863 இல் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே
தேவிபதம் மறவாத பத்தனாக விளங்கியவர். 1891இல்
கடையிற் சுவாமி சமாதி அடைந்தவேளை அருகே அவர் இருந்தார். 1891 இல் திருமணம் செய்தார். ஆறுமுகத்திற்கு ஆறு
பிள்ளைகள். 1908 ஆம் ஆண்டு மார்கழி மாதம் அவர்
குடும்ப வாழ்வைத் துறந்து வள்ளம் ஏறி இந்தியா சென்று சித்தர்களுடனும் துறவிகளுடனும்
சேர்ந்து அலைந்து திரிந்தார். இறுதியில் ஸ்ரீ
வில்லிபுத்தூருக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்.
அவ்வேளையில் அவருக்கு நன்கு தெரிந்த அருணாசலக் குருக்கள் என்பார் யாழ்ப்பாணத்திலிருந்து
சூடிக் கொடுத்த சுடர்க் கொடி கோதையைத் தரிசிக்க வில்லிபுத்தூர் சென்றிருக்கிறார். தற்செயலாக அவர் அவ்வூரில் ஆறுமுக சுவாமியைச் சந்திக்க
நேர்ந்தது. அருணாசலக் குருக்களிடம் ஆறுமுகவாமி
யாழ்ப்பாணத்திலுள்ள தனது குடும்பம் பற்றி விசாரித்துள்ளார். அருணாசலக் குருக்கள் அங்கிருந்த வேளையிலேயே ஆறுமுகசுவாமி
சமாதி அடைந்துள்ளார். ஆறுமுகசுவாமி பற்றிய
விபரங்கள் யாவற்றையும் இலங்கைக்கு திரும்பி வந்து அவரது குடும்பத்தினருக்கு அருணாசலக்
குருக்கள் கூறியுள்ளார்.
ஆறுமுகசுவாமி
ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்த வேளை, அச்சுற்றாடலில் இருந்த சாலியார் சமூக மக்கள் சுவாமிடம்
பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய துன்பங்களைத் தீர்க்கும் மகானாக அவர் விளங்கியுள்ளார்.
ஆறுமுகசுவாமி
சமாதியடைந்ததும் சாலியார் சமூக மக்கள் அங்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். ஆறுமுகசுவாமி கோயிலின் உட்சுவரில் யாழ்ப்பாணத்துச்
சுவாமியின் புகழைப் போற்றும் சுப்பிரமணிய பாரதியின் பாடல்கள் பலகையில் எழுதி மாட்டப்பட்டுள்ளது. இதுவே செங்கை ஆழியான் எமக்குத் தரும் செய்தி. தனது கூற்றுக்கு ஆதாரமாக ஸ்ரீ ஆறுமுகசுவாமி சமாதிக்
கோவிலின் பலதரப்பட்ட புகைப்படங்களையும் வரலாற்றுச்
செய்திகளையும் அவர் இணைத்துள்ளார். பாரதியார்
போற்றிப் பாடிய குள்ளச் சாமியின் சமாதியும், ஆறுமுக சுவாமியின் சமாதிக்குப் பக்கத்தில்
அமைந்திருப்பதை ஒரு புகைப்படம் காட்டப்படுகிறது.
ஸ்ரீ
யாழ்ப்பாண ஆறுமுக சுவாமி சமாதிக் கோயிலின் மகாமண்டபத்தினை வில்வளைவு அலங்கார மண்டபமாக
அமைப்பதில் செங்கை ஆழியான் முன்நின்று செயற்பட்டுள்ளார் என்பதும் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய
செய்தி.
யாழ்ப்பாணத்து
ஆறுமுகசுவாமிதான் பாரதியின் ஞானகுரு என்பதற்கான ஆதாரங்களை செங்கை ஆழியான் தனது நூலில்
தந்திருக்கிறார். ஆனாலும் மேலே குறிப்பிடப்பட்ட
பத்தாம் வகுப்புக்கான சைவநெறி பாடநூலில் குறிப்பிடப்பட்ட ஞானியர் பட்டியலில் ஆறுமுகசுவாமி
பற்றியோ பருத்தித்துறை அருளம்பல சுவாமி பற்றியோ தகவல் எதுவும் இல்லை. செங்கை ஆழியான் தனது நூலில் கடையிற் சுவாமி சமாதி
அடைந்தது 1891 ஆம் வருடம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சைவநெறி பாடநூலில் அவர் சமாதி அடைந்தது
1882 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பௌர்ணமி தினத்தன்று எனக் குறிப்பிட்டுள்ளது. இப்படியான தகவல்கள், ஆராய்ச்சிகள் மூலம் சரிப்படுத்தவேண்டியவை.
கடையிற்
சுவாமி சமாதி அடைந்தவேளை அருகே இருந்தவர் ஆறுமுகசுவாமி. “அவரது சமாதி நிலைச் சரீரத்தைத் தூக்கிக் குழிக்குள்
இறக்கியபோது என்னைத் தூக்கி அதற்குள் இறக்குவது போன்ற பிரமை ஏற்பட்டது. அப்பிரமை என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.”
என பிற்காலத்தில் ஆறுமுகம் தன் மூத்த மகன் அருளம்பலத்திடம் அந்த அனுபவத்தினை எடுத்துரைத்
துள்ளார். வாங்கில் அமர்ந்தபடி தனது தந்தையின்
நினைவுகளைப் பலதடவைகள் அருளம்பலம் அம்மான் ஆறுமுக சுவாமியின் மூத்த மகன், மருமகனான
என்னிடம் எடுத்துரைத்துள்ளார் எனக் குறிப்பிடுகிறார் செங்கை ஆழியான்
ஆறுமுகசுவாமி
இறுதிக் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் தங்கியிருந்தபோது அச்சுற்றாடலில் உள்ள சாலியர்
சமூக மக்கள் அவரிடம் நம்பிக்கையும் பக்தியும் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆறுமுக சுவாமியே பாரதியின் ஞானகுரு
என்பது கட்டாயம் தெரிய வந்திருக்கும் அதன் காரணமாகவே ஆறுமுகசுவாமி சமாதி அடைந்ததும்
கோவில் அமைத்து அங்கு அவர் தொடர்பான பாரதியாரின் பாடலையும் பொறித்துவைத்துள்ளனர்.
செங்கை
ஆழியான், தான் யாழ்ப்பாணத்துச் சுவாமியின் பேரன் என்பதைத் காட்டும் வகையில் தனது குடும்ப
வம்சாவழி வரைபு ஒன்றினை நூலில் சேர்ந்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணம்
நூலை வாசிப்பவர்களுக்கு ஏற்படலாம். ஆனால் செங்கை
ஆழியானின் நோக்கம் அதுவல்ல. பாரதியாரின் ஞானகுரு
யாழ்ப்பாணத்து ஆறுமுகசாமி என்பதனைத் தெளிவு படுத்துவதே அவரது நோக்கமாகும்."
இவ்வாறு ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் எதிர்வினையாற்றியிருப்பதுபோன்று,
பாரதியார் புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் கடலூரில் கைதாகி தடுத்துவைக்கப்பட்ட
செய்தி தொடர்பாகவும் பாரதி அன்றைய கவர்னருக்கு
எழுதிய கடிதம் பற்றியும் சென்னையில் காந்தியை
பாரதி சந்தித்த திகதிகள் பற்றியும் எதிர்வினைகள் பதிவாகியிருக்கின்றன. இது இவ்விதமிருக்க பாரதி கவர்னருக்கு ஆங்கிலத்தில்
எழுதிய கடிதம் பின்வருமாறு:
Bharathi's letter to Pentland:
OM SAKTHI
District Jail, Cuddalore
28 November-1918.
28 November-1918.
To
His Excellency Lord Pentland
Governor,
Fort St. George
His Excellency Lord Pentland
Governor,
Fort St. George
The Humble petition of C. Subramania Bharathi.
May it please your Excellency.
It has been more than a week now
since I was
arrested at Cuddalore on my way from Pondicheery
to Tinnevelly which is my native district. After
many loyal assurances on my part as your Excellency
may well remember the Dy. I. G. (CID) was sent by your
Excellency's Government a few months back to
interview me at Pondicherry. The Dy. I G after being
thoroughly satisfied with my attitude towards the
Government asked me if I would be willing to be
kept interned purely as a war measure. in any two
districts of the Madras Presidency during the war..
I could not consent to that proposal, because having
absolutely renounced politics I see no reason why
any restraint should be placed on my movement
even while the war lasted.
arrested at Cuddalore on my way from Pondicheery
to Tinnevelly which is my native district. After
many loyal assurances on my part as your Excellency
may well remember the Dy. I. G. (CID) was sent by your
Excellency's Government a few months back to
interview me at Pondicherry. The Dy. I G after being
thoroughly satisfied with my attitude towards the
Government asked me if I would be willing to be
kept interned purely as a war measure. in any two
districts of the Madras Presidency during the war..
I could not consent to that proposal, because having
absolutely renounced politics I see no reason why
any restraint should be placed on my movement
even while the war lasted.
Now that the war
is over and with such signal
success to the Allies, I ventured to leave Pondicherry.,
honestly believing that there would be absolutely no
difficulty whatsoever in the way of my settling
in British India as a peaceful citizen.. Contrary
to m y expectations however I have been detained and
placed in Cuddalore District Jail under conditions
which I will not weary your Excellency by describing
here at any length BUT which are altogether disagreeable
to a man of my birth and status and full of dangerous
possibilities to m y health.
success to the Allies, I ventured to leave Pondicherry.,
honestly believing that there would be absolutely no
difficulty whatsoever in the way of my settling
in British India as a peaceful citizen.. Contrary
to m y expectations however I have been detained and
placed in Cuddalore District Jail under conditions
which I will not weary your Excellency by describing
here at any length BUT which are altogether disagreeable
to a man of my birth and status and full of dangerous
possibilities to m y health.
I once again assure your
Excellency that I have
renounced every form of politics, I shall ever
be loyal to British Government and law abiding.
renounced every form of politics, I shall ever
be loyal to British Government and law abiding.
I therefore beg of your
Excellency to order
my immediate release. May God grant your Excellency
a long and happy life.
my immediate release. May God grant your Excellency
a long and happy life.
I
beg to remain
Your Excellency's
most obedient servant.
C. Subramania Bharathi
Your Excellency's
most obedient servant.
C. Subramania Bharathi
(தொடரும்)
No comments:
Post a Comment