இலங்கைச் செய்திகள்


வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு வெளியானது.!

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை.!

ஆஸி. மனிதக் கடத்தலுடன் தஸநாயக்கவுக்கு தொடர்பு?

இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்

தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குகளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம் 

தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.!

வேஷ்டியுடன் நல்லூரில் வழிபட்ட பஷில் பொதுமக்களையும் சந்தித்தார்


வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு வெளியானது.!

27/09/2017 யாழ்.புங்குடுதீவில் கடந்த 2015 மே 13ஆம் திகதி கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட “வித்தியா“ படுகொலை வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது. 
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் 30 வருட கடூழிய சிறைதண்டனையும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.   நன்றி வீரகேசரி   






வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை.!

27/09/2017


மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி













ஆஸி. மனிதக் கடத்தலுடன் தஸநாயக்கவுக்கு தொடர்பு?

27/09/2017 சட்­ட­வி­ரோ­த­மாக அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் முன்னாள் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்­க­வுக்கு நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தா­கவும் அது தொடர்பில் கடற்­ப­டையில் இடம்­பெற்ற உள்­ளக விசா­ர­ணையில் உறு­தி­யா­ன­போதும் அந்த விசா­ரணை அறிக்கை மறைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 
குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுத்­துள்ள, 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணையின் போதே இந்த தகவல் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் கோட்டை நீதி­மன்­றுக்கும் அறிக்கை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு ஆட்­களை கடத்­தி­யமை தொடர்பில் கொமாண்டர் டி.கே.பி. தஸ­நா­யக்க,  லெப்­டினன் கொமாண்டர் வீர­சிங்க ஆகிய இரு அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக  ரியர் அட்­மிரல் சேனா­ரத்ன, கொமாண்டர் போல் ஆகியோர் அடங்­கிய விசா­ரணைக் குழுவால் உள்­ளக விசா­ரணை ஒன்று நடத்­தப்­பட்­டுள்­ளது. அதில் குறித்த  தஸ­நா­யக்­க­வையும் வீர­சிங்­க­வையும் உட­ன­டி­யாக கடற்­ப­டையில் இருந்து  நிறுத்­து­மாறு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளது.
எனினும் தஸ­நா­யக்க குறித்த காலப்­ப­கு­தியில் கடற்­படை பொலி­ஸுடன் இணைந்த பதவி ஒன்றில் இருந்­துள்ள நிலையில், மனிதக் கடத்தல் தொடர்பில் அவர் பிரத்­தி­யேக விசா­ரணை செய்­துள்ளார். அதன்­படி வீர­சிங்க அந்த சட்­ட­வி­ரோத செயல் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யுடன் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.
இந் நிலையில் ரியர் அட்­மிரல் சேனா­ரத்ன உள்­ளிட்­டோரால் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ரணை அறிக்­கையை கடற்­படை சி.ஐ.டி. கோரி­ய­போதும் வழங்­காது இழுத்­த­டிப்பு செய்­வ­தாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு கோரும் போது தஸ­நா­யக்­க­வுக்கு சார்­பான, அவர் செய்த விசா­ரணை அறிக்­கையை மட்­டுமே கடற்­ப­டையின் முன்னாள் உளவுத் துறை பணிப்­பாளர் நிஷங்­கவின் கையொப்­பத்­துடன் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டிய குறித்த உயர் அதி­காரி, தற்­போது நிஷங்க இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யிலும் புதி­தாக கடற்­ப­டையின் தள­ப­தி­யாக சின்­னையா பொறுப்­பேற்­றுள்ள நிலை­யிலும் ரியர் அட்­மிரல் சேனா­ரத்­னவின் விசா­ரணை அறிக்­கையை மீள கோரி  கடற்­படை தள­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.
தஸ­நா­யக்க உள்­ளிட்ட 7 சந்­தே­க­ந­பர்கள் 5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில் கைதாகி விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு எதி­ ராக கடற்­ப­டையின் கப்டன் வெல­கெ­தர, முன்னாள் சிப்பாய் பந்து குமார உள்­ளிட் டோர் பிர­பல சாட்­சி­யா­ளர்­க­ளாக உள்ள நிலையில், அந்த சாட்­சி­யா­ளர்கள் ஆஸி. மனிதக் கடத்­த­லுடன் தொடர்புபட்­ட­வர் கள் எனவும் அவர்­களை தான்  தண்டிக்க முற்­பட்­டதால் இந்த கடத்­தல்­களுடன் தம்மை இணைத்து சாட்சியம் வழங்கியுள் ளதாகவும் தஸநாயக்க தொடர்ந்து மன்றில் கூறிவந்தார். அந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளிலேயே தஸநாயக்கவுக்கும் மனிதக் கடத்தலுக்கும் இடையில் இருந்த தொடர்பு வெளிப்படுத் தப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி












இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ்

26/09/2017 இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது.
இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச  நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி












தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு

26/09/2017 தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  அவ் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அனுவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்தப்பட்டது.  நன்றி வீரகேசரி











ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் இருந்த இடம் பிக்குகளால் முற்றுகை : பொலிஸார் வரவழைப்பு ; தெஹிவளையில் பதற்றம்

26/09/2017 ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளை பகுதியில் குடியமர்ந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனைவரும் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐ.நா. வின் கண்காணிப்பின் கீழ் தெஹிவளைப் பகுதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் குடியமர்த்தப்பட்ட வீட்டினை, பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொலிஸாரால் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த அகதிகளை தாம் கைதுசெய்யவில்லையெனவும் அவர்களை ஆர்ப்பாட்டக்கார்களிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில் அவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் பதற்றம் நிலவிவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி










தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.!

01/09/2017 சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினர் பங்குகொள்ளும் 8வது மாநாடு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்துகொளும் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் நாளை மறுநாள் இலங்கை வந்தடைவார்கள்.

எதிர்வரும் 4 ஆம் திகதி  தொடக்கம்  6 ஆம் திகதிவரை  சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற குழுவினரின் 8வது மாநாட்டு கொழும்பில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையினை நிகழ்த்தி மாநாட்டை ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி














வேஷ்டியுடன் நல்லூரில் வழிபட்ட பஷில் பொதுமக்களையும் சந்தித்தார்

30/09/2017 ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று  யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திறகு விஜயத்தை மேற்கொண்ட பஷில் ராஜபக்ஷ, நல்லூர் ஆலயத்திற்கு அவரது குழுவினருடன் இன்று முற்பகல் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றிலும் கலந்துகொண்டு உரையாற்றிய பஷில் ராஜபக்ஷ, நல்லை ஆதீனத் தலைவர், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிலையில் கூட்டத்தின் நிறைவில் அங்கிருந்த பொதுமக்களுடனும் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக பஷில் ராஜபகஷ நேற்றையதினம் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் கட்சிப் பணிகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி




No comments: