மரண அறிவித்தல்


-->
                                           
                               திருமதி கனகம்மா செல்வத்துரை

              தோற்றம்                                                          மறைவு
             26-10-1915                                                          23-09-2017  

இலங்கையில் சங்கானையை பிறப்பிடமாகவும் மொனறாகலை  மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  திருமதி கனகம்மா செல்வத்துரை அவர்கள், 23-09-2017 ஆம் திகதி சனிக்கிழமை லண்டனில் காலமானார். அன்னார் காலம்சென்ற தாமோதரம் பிள்ளை - ஆச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,  காலம் சென்ற வல்லிபுரம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலம்சென்ற சரஸ்வதி பொன்னுத்துரையின் அன்புச்சகோதரியும், காலம்சென்ற வல்லிபுரம் செல்வத்துரையின் அன்பு மனைவியும், பத்மாவதி ( மெல்பன்), ஜெயபிரகாஷ் (லண்டன்),  செல்வரஞ்சன் (லண்டன்), ரஜனி (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
         காலம்சென்ற கந்தையா விமலதாசன், மற்றும் ஜெயந்தா( லண்டன்) காந்திமதி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், அரவிந்தன் (மெல்பன்), நந்தலால் ( மெல்பன்),  சாயிபிரகாஷ் (லண்டன்), சியாம் பிரகாஷ் (லண்டன்), சந்தீப் (லண்டன்), கெளதீப் (லண்டன்), தீபிகா (லண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டியாரும்,  அபிராமி, பிரசாந்த், விசாகன் ( மெல்பன்) ஆகியோரின் அன்புப்பூட்டியாரும், யாழினி,  ஆதவன் (மெல்பன்) ஆகியோரின் கொள்ளுப் பூட்டியுமாவார். 
இறுதி நிகழ்வுகள்:
பார்வைக்கு: 01-10-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10-00 மு. ப. - 12-00 பி.ப. லண்டனில் City of London Cemetery & Crematorium, Alders brook Rd, Manor Park , London E12 5DQ,UK.
இறுதிக்கிரியை:
  01-10-2017 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 12-00 மு. ப. - 01-00 பி.ப. லண்டனில் South Chapel,  City of London Cemetery & Crematorium, Alders brook Rd, Manor Park , London E12 5DQ,UK.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்: விமல் அரவிந்தன் - அவுஸ்திரேலியா (03) 980 38 787


No comments: