உலகச் செய்திகள்


அவுஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!

தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..!

பிரித்தானிய மகாராணியின் ஒப்புதலுடன் சட்டமாகிறது பிரெக்ஸிட்..! 


அவுஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கையர்கள் நாடு கடத்தல்..!

15/03/2017 இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் 25 பேரை அவுஸ்திரேலிய குடியகழ்வு திணைக்களம் நாடுகடத்தியுள்ளது.


இலக்காயிலிருந்து கடந்த வருடம் விமானம் மூலம் மலேசியா சென்று, இவ் வருடம் ஜனவரி மாதமளவில் அவுஸ்திரேலியா சென்றிருந்த 25 பேர், விஷேட விமானம் மூலம் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற, அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








தொழுகை இடம்பெற்ற பள்ளிவாசல் மீது தாக்குதல்: 42 பேர் பலி: சிரியாவில் சம்பவம்..!

17/03/2017  பள்ளிவாசலிலுள் பிராத்தனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியிலுள்ள அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அல்ஜினா கிராமத்தில், பிராத்தனைகள் இடம்பெற்ற பள்ளிவாசல் மீது, நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் பகிர்ந்துள்ளது.
குறித்த தாக்குதலால் பள்ளிவாசலின் கட்டிடம் இடிந்துவிழுந்துள்ளதுடன், இடிபாடுகளில் சிக்கிய நிலையிலே அநேகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக அலெப்போ பகுதியை பொறுத்த வரையில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்களே வான்வெளித் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் குறித்த பிராந்தியத்தில் ஐஎஸ் அமைப்பினரின் ஊடுருவல்கள் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதோடு, இதுவரை தாக்குதல் நடத்திய விமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










பிரித்தானிய மகாராணியின் ஒப்புதலுடன் சட்டமாகிறது பிரெக்ஸிட்..! 

17/03/2017 பிரிட்டனின் வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த சட்ட பிரேரணையாக பார்க்கப்படும் பிரெக்ஸிட் சட்டவரைபை, பிரித்தானிய மகாராணி அனுமதித்ததனால், அது சட்டமாக மாற்றம்பெறவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறும் பிரேரணைக்கு பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபத் அங்கீகாரம் வழங்கியுள்ளார். இதனுடாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கு அடுத்தபடியான சட்ட நகர்வை மேற்கொள்ளுவதற்கான அதிகாரம் கிடைக்கப்பட்டுள்ளதாக ஆண்ட்டி ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மேலும் கடந்தாண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 52 சதவீதமானவர்கள் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விளக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். குறித்த தீர்மானத்துக்கு எதிராக இருந்த முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தெரிவாகினார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, விலகுவதற்கு அனுமதி பெறுவதற்கான சட்ட வரைபு பிரிட்டன் பாராளுமன்றத்தில் விவாதத்திற்குட்பட்டு, ஏற்படுத்தப்பட்ட வாக்களிப்பில், சட்ட திருத்தத்துக்கு எதிராக 335 உறுப்பினர்களும், ஆதரவாக 287 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இருப்பினும் மக்களின் கருத்துப்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரேரணைக்கு பிரிட்டன் பாராளுமன்றம் இம்மாதம் 14 ஆம் திகதி அனுமதியளித்திருந்தது.
குறித்த அங்கீகாரம் பெற்ற பிரெக்ஸிட் பிரேரணை பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அனுமதியை பெற அனுப்பட்ட நிலையில் அவர் அனுமதி அளித்துள்ளார். 
அத்தோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஒன்றிய நாடுகளுக்கு வசிக்கும் மக்களின் இரட்டை குடியுரிமையின் நிலைப்பாடு தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற தலைவருடன், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஆலோசனை செய்து முடிவுகளை அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி