மெல்பேர்ணில் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா

.
            

கடந்த வாரம் சனிக்கிழமை (18/03/17) வெலிங்டன் பாடசாலை மண்டபதில் பாவேந்தர் பாரதிதாசன் விழா மிகச்சிறப்பாக நடந்தேறியது  மனம் நிறைந்த சந்தோசத்தோடு மக்கள் வீடு சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. மெல்பேர்ணில் முதல் முதலாக கேசி தமிழ் மன்றம் மற்றும் சுடரொளி ஆகிய அமைப்புக்களுனடன் இணைந்து பன்னிரண்டு அமைப்புக்கள் விழாவை ஒழுங்கமைத்திருதார்கள். மாலை 5.30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்துடன். ஆரம்பித்த நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்தினை ஒளவை தமிழ் பள்ளி மாணவகளும், தமிழ் பள்ளி மாணவர்களும் மிக அழகாக சுருதியோடு பாடி சபையோரை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார்கள். வரவேற்பு நடனத்தை நர்த்தனாலயா இந்தியன் இசைக் கல்லூரி ஆசிரியை சிறிமதி றூபினி கனகசபை அவர்களின் மாணவர்கள் பாவேந்தர் பாரதிதாசனின்  சங்கே முழங்கு அழகிய நடனத்தை தந்தார்கள். நடன ஆசிரியரையும் மாணவிகளையும் கரகோசத்தால் மகிழ்வித்தார்கள் சபையோர்.அடுத்து இரண்டு பாவேந்தரின் பாடல்கள் முதலாவது பாடலை தமிழ் பள்ளி மாணவர்களும் இரண்டாவது பாடலை ஒளவை தமிழ் பள்ளி மாணவர்களும் இசைத்துப் போக  மக்கள் கரகோசம் செய்து பாராட்டினார்கள் பாவேந்தர் விழாவில் ஒரு புதிய நிகழ்வு மேடை ஏறியது அதை சொல்லியே ஆகவேண்டும்



பல் குரல் நிகழ்வு என்று அறிவித்தார்கள்.  அறிவித்ததும் யாரோ ஒருவர் வருவார் பல குரலில் நடிகர்களைப் போல பேசிக் காட்டுவார்களென்று ஆனால் இது அனைத்திலும் மாறுபட்டதாக ஆறுபேர் மேடையில் தோன்றி அழகான குரல் வழத்தோடும் நடிப்போடும் அவர்கள் செய்து காட்டியதும் உண்மையாகவே நாம் அவர்களை வாயார வாழ்த்தினோம். இனி வரும் மேடைகளிலும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து இன்னும் பட்டை தீட்டப் பட்டால் மிக அருமையாக மக்கள் கூட்டம் ரசிக்கும்.
உருத்ரா விஜயராகவன்  மாணவிகளான ஹரனி, மோகனா லட்சுமி சர்மா சகோதரிகள்   வாய்ப்பாட்டில் துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து மீட்ட மாட்டாயாஅந்த அருமையான பாடலுக்கு அணிசேர்க்கும் வகையில் பக்கவாத்தியம் இசைத்து மகிழ்வித்தார் மிருதங்கக் கலைஞரான திரு.கண்ணன் அவர்கள்  


மூன்று பாடல்களில் பாரதி தாசனின் புதிய இசைக் கோர்வையில் உருவான அவளும் நானும்பாடலை கேசவ் இராமச்சந்திரன் தந்துள்ளார். அவரின் அமைதியான குரல் கேட்டவர்களின் மனது நிறைந்து ததும்பியதை காணக்கூடியதாக இருந்தது..


இடைவேளையின் பின்பு பிரதம பேச்சாளர் பேராசிரியர், முனைவர் திரு மணிகண்ட ஐயா அவர்கள் பாரதி தாசனை  கண் முன் நிறுத்தி எம்மை இலக்கியம், யாப்பிலக்கணம், தொல்காப்பியம், வள்ளுவம் என்பதெல்லாம் அள்ளித் தந்தார். மெல்பேர்னில் இப்படியான நிகழ்வுகள் நிறைவு கண்டதன் பின்பு தான் தாங்கள் தவற விட்டு விட்டோம் என்று ஏங்குவார்கள் பலர் பாவேந்தர் பாரதி தாசன் விழாவினை ஒழுங்கு படுத்திய ஐந்து அமைப்புக்களையும்  நாம் பாராட்ட வேண்டும்  இந்த நிகழ்வை போல் எதிர்காலத்திலும் நல்ல நிகழ்ச்சிகளை இணைந்து தரவேண்டும். பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் நிறைவாக நன்றி உரையினை கேசி தழ் மன்றத்தின் நடப்பாண்டுத் தலைவர்  திரு. மணிவண்ணன்  வழங்கினார் இந்த நிகழ்வை எல்லாம் அழகு தமிழில் தொகுத்து வழங்கிய சிவசுதனை இடைவாளையின் போது பார்வையாளர்கள் அவரிடம்  நேரடியாகப் பாராட்டியதை காணக்கூடியதாக இருந்ததை நாமும் பாராட்டுவோம்.