நெல் வயல் - கவிதை - சாண்டில்யன் (கந்தர் பாலநாதன்)

.

கிழக்கினில் ஆதிக்கமணி உதயம்
உறக்கத்தில் செயலிழந்த 
உயிர்களுக்கு உணர்வளிக்க,

வேப்ப மரக் கிளைகளில்
உறங்கிய சேவல்கள்
தம்மின பாணியில்
சிறகடித்து இசை அமைக்க, 

உலுகாரிகள் ஒற்றுமை நோக்கில்
கா! கா! என்று கத்தி அழைக்க,  

துயில் கொண்ட விவசாயிகள்
அவ்விசையில் மனம் கவர்வு கொண்டு  
உவந்து தூக்கத்திலிருந்து எழ,

உழவரின் மனைவி துயிலெழுந்து
சுப்பிரபாத இசை பாடி,
தம் காதலர்-கணவருக்கு
 காலை உணவளிக்க,


விவசாயிகள் ஏர், உழுபடை  
சாதனங்கள் கையெடுத்து,
தம் வயல்களை நோக்கி
நாட்டுப் பாடல் பாடி
வரம்பு வழியே நடந்து செல்ல,

பறல்கள்  மேலே தம்மின பாணியில்
இசைபாடி பறந்து செல்ல,

உழவர் மனம் ஆனந்தம் கொண்டு
ஆண்டவனை வேண்டியது ஒன்றே,  

ஆண்டவனே, எம் வயலுக்கு
வேண்டிய நீசகம் நீ கொடு,
எம்குடும்பம் உனக்கு அளிப்போம்
நன்றிக்கடனில் ஓர் வேள்வி!
 

…………………………… சாண்டில்யன் (கந்தர் பாலநாதன்)