உலகச் செய்திகள் வரலாற்று சாதனை படைத்த பராக் ஒபாமா.!


ராஜீவ் படு­கொலை : பதறவைக்கும் 10 மர்­மங்கள்

பாடசாலை விடுதியில் தீ : 17 மாணவிகள் உடல்கருகிப் பலி

500 மதுபான சாலைகள் மூடப்பட்டன : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கினார் ஜெ.

ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.!

பாப்பரசர் - கெய்ரோ பள்ளிவாசல் இமாம் சந்திப்பு 

மல்லையாவின் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு.!

வரலாற்று சாதனை படைத்த பராக் ஒபாமா.!












ராஜீவ் படு­கொலை : பதறவைக்கும் 10 மர்­மங்கள்

23/05/2016 'ராஜீவ் காந்தி படு­கொ­லையின் நேரடி சாட்­சி­யான 'புகைப்­பி­டிப்­பாளர் ஹரி­பாபு உயி­ரோடு இருக்­கிறார்' என்று வெளி­யா­கிய செய்­திக்கு பலரும் மறுப்பு தெரி­வித்­த­தோடு அவர் 'உயி­ரோடு இருக்க வாய்ப்­பில்லை' என்ற கருத்தை ராஜீவ் கொலை வழக்கின் தலைமை விசா­ரணை அதி­கா­ரி­யான ரகோத்­தமன் மற்றும் தட­ய­வியல் துறை பேரா­சி­ரியர் சந்­தி­ர­சேகர் ஆகியோர் வலி­யு­றுத்­தினர். இந்­நி­லையில் நேற்­று­முன்­தினம் காலை ராஜீவ் படு­கொலை தொடர்­பான மர்­மங்கள் குறித்த ஆவ­ணப்­படம் ஈரோட்டில் வைத்து ஆவ­ணப்­படக் குழு­வி­னரால் வெளி­யி­டப்­பட்­டது. ராஜீவ் காந்தி படு­கொ­லையின் மர்­மங்கள் குறித்து 'பைபாஸ்' என்ற தலைப்பில் குறித்த ஆவ­ணப்­ப­டத்தை ரமேஷ் மற்றும் புக­ழேந்தி ஆகிய மருத்­து­வர்கள் எடுத்­துள்­ள­தோடு இவ் ஆவ­ணப்­ப­டத்தை திரா­விடர் விடு­தலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி முன்­னி­லையில் வெளி­யிட்­டனர்.
ஆவ­ணப்­படம் பற்­றி­கொ­ளத்தூர் மணி கருத்து தெரி­விக்­கையில், "பல புதிய ஆதா­ரங்­க­ளையும் புதிய செய்­தி­க­ளையும் உல­குக்குச் சொல்­கி­றது இந்த ஆவ­ணப்­படம். இது­வ­ரையில் ராஜீவ்­காந்தி படு­கொ­லையின் மர்மம் குறித்து வெளி­யான செய்­தி­க­ளை­விட, இது முற்­றிலும் மாறு­பட்டு நிற்­கி­றது. புல­னாய்வு அதி­கா­ரி­களின் விசா­ரணை குள­று­ப­டிகள், ஏன் அவ்­வாறு செய்­தார்கள்? பொலி­ஸாரின் கடு­மை­யான, மிக மோச­மான தவ­றுகள் என அனைத்­தையும், விசா­ர­ணையின் ஆவ­ணங்­களில் இருந்தே சுட்டிக் காட்­டி­யி­ருக்­கி­றார்கள். ஒரு கொலை வழக்கில் புதிய ஆதா­ரங்கள் கிடைத்தால், குற்­ற­வாளி என்று சொல்­லப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­தலை செய்ய முடியும். ஆவ­ணப்­ப­டத்தில் காட்­டப்­படும் ஆதா­ரங்­களைக் கொண்டே, இந்­திய நீதித்­து­றையின் மரபை உடைக்கும் வகையில், புதிய விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஆட்­சி­யா­ளர்கள் அதற்­காகப் போதிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். 25 ஆண்­டு­க­ளாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் சட்­டப்­பி­ரிவு 72 மற்றும் 161 ஆவது பிரி­வு­க­ளின்­படி விடு­தலை செய்ய வேண்டும். 'பைபாஸ்' ஆவ­ணப்­படம் ராஜீவ்­காந்தி படு­கொலை வழக்கின் மிக முக்­கி­ய­மான ஆவணம்" என்றார்.
ஆவ­ணப்­படம் சொல்லும் ஆதா­ரங்­களை மறுத்துப் பேசிய சி.பி.ஐ முன்னாள் அதி­காரி ரகோத்­த­மனும், தட­ய­வியல் துறை பேரா­சி­ரியர் சந்­தி­ர­சே­கரும், " சம்­பவ இடத்தில் இருந்து கைப்­பற்­றப்­பட்­டது ஹரி­பா­புவின் உடல்தான். சிறு­நீ­ரகக் கோளாறு கார­ண­மாக சிறு­வ­ய­தி­லேயே அவர் சுன்னத் செய்­தி­ருந்தார். அவ­ரது பெற்­றோர்தான் உடலை அடை­யாளம் காட்­டி­னார்கள். சம்­பவ இடத்தில் ஹரி­பாபு சட­ல­மாக இருக்கும் படம் விக­ட­னிலும் வெளி­யாகி இருந்­தது" என்­கின்­றனர். ஆனால், ஆவ­ணப்­படம் எழுப்பும் சந்­தே­கங்கள் அதிர வைக்­கின்­றன.
1. மே மாதம் 21-ஆம் திகதி இரவு 10.20 மணிக்கு, ராஜீவ் காந்தி படு­கொலை சம்­பவம் நடந்­தது. இரவு 10.35 மணிக்­கெல்லாம், 'ராஜீவ்­காந்தி இறந்­து­விட்டார்' என்­பதை உறுதி செய்­து­விட்­டார்கள். 22-ஆம் திகதி மதியம் 3 மணிக்கு, காஞ்­சி­புரம் அரசு மருத்­து­வ­ம­னையில், ஒரு சட­லத்­திற்கு பிரே­த­ப­ரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அந்த நிமிடம் வரையில் அந்த சட­லத்­துக்கு யாருமே உரிமை கொண்­டாட வர­வில்லை. 23-ஆம் திக­திதான் அது ஹரி­பா­புவின் உடல் என அவ­ரது தந்தை சுந்­த­ர­மணி உரிமை கொண்­டா­டினார். ஒருநாள் முழு­வதும் அவர்கள் வராமல் இருந்­தது ஏன்?
2. ஹரி­பாபு என்று இவர்கள் சொல்லும் உடலில், 'முகம் முழு­வதும் எரிந்து போய்­விட்­டது. அடை­யாளம் காண முடி­யாத அள­வுக்கு சிதைந்து போய்­விட்­டது' என்­கி­றார்கள். பிறகு எப்­படி ஹரி­பா­புதான் என உறு­தி­யாக நம்­பி­னார்கள்?
3. படு­கொலை நிகழ்ந்த இடத்தில், ஹரி­பாபு விழுந்து கிடக்கும் புகைப்­படம் விக­டனில் வெளி­யா­னது. அந்தப் புகைப்­ப­டத்தில் அவ­ரது முகம் தெளி­வாக இருக்­கி­றது. ஆனால், போஸ்ட்­மார்ட்டம் அறிக்­கையில், 'முகம் முற்­றிலும் சிதைந்­து­போய்­விட்­டது. அடை­யாளம் காண­மு­டி­ய­வில்லை' எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த அறிக்­கையை புல­னாய்வு அதி­கா­ரிகள் படித்துப் பார்க்­க­வில்­லையா? சம்­பவ இடத்தில் ஹரி­பாபு மயக்க நிலையில் இருந்­த­போது, இந்தப் படம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என ஆவ­ணப்­படக் குழு சொல்­கி­றது. பிறகு எப்­படி அந்த சட­லத்தின் முகம் சிதைந்து போனது? மயக்க நிலையில் இருந்த அவ­ருக்கு, சிகிச்சை அளித்து தப்ப வைத்­து­விட்டு, முற்­றிலும் சிதைந்து போன ஒரு முகத்தைக் காட்டி, 'இது ஹரி­பா­புவின் உடல்' என மற்­ற­வர்­களை நம்ப வைத்­தி­ருக்­கி­றது பொலிஸ் என்­கி­றது ஆவ­ணப்­படக் குழு.
4. ஹரி­பாபு எனக்­காட்­டப்­பட்ட உடலில் இருந்து தனி­யாக தலையை துண்­டித்து எடுக்க என்ன காரணம்? சூப்பர் இம்­போ­ஷிசன் முறையில் அடை­யாளம் காண முடியும் என்­ப­தால்தான் தலை துண்­டிக்­கப்­பட்­டது என அதி­கா­ரிகள் சொல்­கி­றார்கள். இதை ஏற்றுக் கொண்­டாலும், ஹரி­பா­பு­வுக்கு அப்­போது 22 வய­துதான். போஸ்ட்­மார்ட்டம் அறிக்­கையில் 30 வயது எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால், இறந்து கிடந்­தது யார்?
5. ஹரி­பா­புவின் அப்பா சுந்­த­ர­ம­ணி­யிடம், சட­லத்தைக் காட்­டி­ய­போது தலை­யில்­லாத முண்­ட­மா­கத்தான் உடல் இருந்­துள்­ளது. அந்த சட­லத்தின் உடலில் நீலக்கலர் காற்­சட்டை போடப்­பட்­டி­ருந்­தது. இது ஒன்­றுதான் ஹரி­பாபு எனக் கண்­ட­றியக் காரணம் என்­கி­றார்கள். ஆனால், வீட்டில் இருந்து கிளம்­பிய போது, ஹரி­பாபு கிரீம் கலர் சட்டை அணிந்­தி­ருந்தார். சட­லத்தில் பச்சை நிறக் கலர் சட்டை இருந்­தது. இந்தக் கேள்­வியை ஹரி­பா­புவின் அக்கா பதிவு செய்­தி­ருக்­கிறார். இந்தக் குள­று­படி ஏன்?
6. அந்த சட­லத்­திற்கு ஏற்கனவே, சுன்னத் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்றால், உட­லுக்கு உரிமை கோரு­ப­வர்­க­ளிடம், 'உங்கள் பைய­னுக்கு சுன்னத் செய்­தீர்­களா?' என்ற அடிப்­படைக் கேள்­வியை பொலிஸார் கேட்­டி­ருக்க வேண்டும். அப்­படி எங்­குமே கேட்­க­வில்லை. ஆவ­ணத்தின் எந்தப் பக்­கத்­திலும் சிறு­வ­யதில் ஹரி­பா­பு­வுக்கு சுன்னத் செய்­யப்­பட்­டி­ருந்­தது எனவும் பதி­வா­க­வில்லை. சாதா­ரண ஒரு சட­லத்­தையே பல கேள்­வி­க­ளுக்குப் பிற­குதான் உரி­ய­வர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­பார்கள். ஹரி­பாபு சடலம் என்­பது மிகப் பெரிய படு­கொ­லைக்குப் பின்னால் இருக்கும் முக்­கி­ய­மான சாட்சி. இந்த விஷ­யத்தில் பொலிஸார் வேண்­டு­மென்றே தவறு செய்­தார்­களா?
7. ஆவ­ணப்­ப­டத்தில் இருக்கும் இன்­னொரு முக்­கிய ஆதாரம். ஹரி­பா­புவின் பக்­கத்­தி­லேயே ஜெய­பாலன் என்­பவர் புகைப்­படம் எடுப்­ப­தற்­காக நின்­றி­ருக்­கிறார். இவர் இசை­ய­மைப்­பாளர் சங்கர் கணேஷின் ட்ரூப்பில் புகைப்­ப­டக்­கா­ர­ராக இருந்­தவர். ''ஹரி­பா­புவின் தோள்­பட்­டையை துணை­யாக (சப்­போர்ட்­டாக) வைத்துக் கொண்டு படம் எடுத்தேன். சம்­பவ இடத்தில் என்ன நடந்­தது என்று தெரி­ய­வில்லை. விழித்­த­போது வீட்டில் இருந்தேன். என் ட்ரூப்பில் இருந்­த­வர்கள் என்னை ஆஸ்­பத்­தி­ரிக்குக் கூட்­டிட்டுப் போய் சிகிச்சை அளித்­தி­ருக்­கி­றார்கள்''என அவர் வாக்­கு­மூலம் கொடுத்­தி­ருக்­கிறார். இவர் முகத்­திலும் காயம் ஏற்­பட்­டி­ருந்­தது. அவ­ரு­டைய கேம­ராவும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இவ­ரோடு ஹரி­பா­புவும் சம்­பவ இடத்தில் மயக்க நிலை­யில்தான் இருந்­தி­ருக்­கிறார் என்­கி­றது ஆவ­ணப்­படக் குழு. இது உண்­மையா?
8. சட­லத்தை ஹரி­பா­புவின் பெற்­றோ­ரிடம் கொடுத்த பொலிஸார், 'உடலை புதைக்­கத்தான் வேண்டும். எரிக்கக் கூடாது' என உறு­தி­யாகக் கூறி­ய­தா­கவும், 'அதையும் மீறி அவர்கள் எரித்­து­விட்­ட­தாக' இவ்­வ­ழக்கு தொடர்­பான பொலிஸின் ஆவணம் சொல்­கி­றது. பொலிஸார் அவ்­வாறு உறு­தி­படக் கூறிய பின்பும், சடலம் எரி­யூட்­டப்­பட்­டது ஏன்? புதைத்­தி­ருந்தால், எலும்பு சோத­னையில் உண்மை வெளி­யாகும் என பொலிஸார் விழிப்­போடு செயல்­பட்­டார்கள் என்­கி­றார்கள். ராஜீவ்­காந்தி நடந்து வரும்­போது பூ போட்­ட­வர்கள் இட­து­பக்கம் நின்­றி­ருந்­தார்கள். அவர்கள் இரு­வரும் முஸ்­லிம்கள். இதில் இறந்து போன ஒரு முஸ்லிம் இளை­ஞரை ஹரி­பாபு என நம்ப வைத்­து­விட்­டார்கள் என்­கி­றார்கள். இது உண்­மையா?
9. படு­கொலை சம்­ப­வத்தை புல­னாய்வு செய்த அதி­கா­ரிகள் கார்­பெட்டின் கீழ், பூ மாலையில் வெடி­குண்டு, பூக்­கூ­டையில் பாம், கடை­சி­யாக மனித வெடி­குண்டு என நான்கு திய­ரி­களை முன்­வைத்­தார்கள். இதில், பூ போடு­வ­தற்­கான வேலையைச் செய்த சுலைமான் சேட்­டிடம், 'நாங்கள் சொல்­வ­து­படி கேட்­கா­விட்டால் பூக்­கூ­டையில் பாம் எனக் கதை­கட்­டி­வி­டுவோம்' என பொலிஸார் மிரட்­டி­யி­ருக்­கவும் வாய்ப்பு இருக்­கி­றது. அத­னால்தான் இறந்­து­போன இஸ்­லா­மி­யரின் உடலை 'கிளைம்' செய்­வ­தற்கு யாரும் முன்­வ­ர­வில்லை. அதையே ஹரி­பா­புவின் உட­லாக சித்­த­ிரித்து வெளி­யு­லகை நம்ப வைத்­து­விட்­டார்கள். ஓர­ளவு சிதைந்­தி­ருந்த அந்த முகத்தை, பொலி­ஸாரே முற்­றிலும் சிதைத்­தி­ருக்­கலாம் என்­கி­றது ஆவ­ணப்­படக் குழு.
10. ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமி­ஷனில் இரண்டு வீடி­யோக்கள் ஆதா­ர­மாகக் காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. அந்த வீடியோக்களில், ராஜீவ்காந்திக்கு மாலை போடும் நேரத்தில் மட்டும் கோளாறு செய்திருக்கிறார்கள். அதாவது அந்தக் காட்சியை மட்டும் அழித்திருக்கிறார்கள். இதுபற்றி நீதிமன்றம் கேட்டபோது, 'நாங்கள் வைத்திருந்தோம். மழை வந்து பூஞ்சை படிந்ததால் அந்தப் பகுதி அழிந்துவிட்டது' என காரணம் சொல்லியிருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆதாரங்களை அழிப்பதில் கூடுதல் அக்கறை காட்டியிருக்கிறது புலனாய்வுத்துறை என்கிறார்கள் ஆவணப்படத்தை இயக்கிய மருத்துவர்கள்.
இந்நிலையில் இணைய உலகில் 'பைபாஸ்' படத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக பதிவேற்றியுள்ளார்கள் ஆவணப்படக் குழுவினர். ஈரோட்டில், கலர் பலூன்களோடு இவ் ஆவணப்படத்தின் சி.டியை மேகக் கூட்டங்களோடு கலக்க வைத்தனர். 1991ஆம் ஆண்டு இதேநாள் இரவில்தான் (மே 21) மனித வெடிகுண்டுக்கு பலியானார் ராஜீவ்காந்தி.   நன்றி வீரகேசரி 










பாடசாலை விடுதியில் தீ : 17 மாணவிகள் உடல்கருகிப் பலி

23/05/2016 பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப்பலியான சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்திலுள்ள வியாங் பா பாவ் மாவட்டத்திலுள்ள பிதாகியட்ர் வித்யா என்ற பாடசாலை விடுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் பழங்குடியினத்தை சேர்ந்த 6 முதல் 13 வயது வரையிலான மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர்.
அந்தப் பாடசாலை வளாகத்தில் மாணவிகளுக்கான தங்குமிட விடுதி அமைந்துள்ளது.
அந்த விடுதியில் 38 மாணவிகள் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. 
அப்போது விழித்திருந்த மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்ததால் தப்பித்துக் கொண்டனர். நித்திரையில் இருந்த மாணவிகள் தீயில் சிக்கிக் கொண்டனர். 
இந்த விபத்தில் 17 மாணவிகள் உடல் கருகிப் பலியாகியுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 2 மாணவிகளை காணவில்லை என  அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீட்பு பணிகள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி











500 மதுபான சாலைகள் மூடப்பட்டன : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கினார் ஜெ.



23/05/2016 தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி, மதுபான சாலைகள் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) ( நேற்று) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.
முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:
பயிர்க்கடன் தள்ளுபடி
1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
மின் கட்டணச் சலுகை
2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
திருமண உதவித் திட்டம்
3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும்நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு பவுண் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை
4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.
மதுபான சாலைகளின் பாவணை நேரம் குறைப்பு
5) மதுவிலக்கு படிப்படியாக அமுல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயற்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மதுபான சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.    நன்றி வீரகேசரி










ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி


25/05/2016 ஆஸ்­தி­ரிய ஜனா­தி­பதி தேர்­தலில் சுயேச்சை வேட்­பா­ள­ரான அலெக்­ஸாண்டர் வான் டெர் பெலென் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வென்­றுள்ளார்.
இந்தத் தேர்­தலில் அவர் 50.3 சத­வீத வாக்­கு­களைப் பெற்று, 49.7 சத­வீத வாக்­கு­களைப் பெற்ற வலது சாரி விடு­தலைக் கட்­சியின் வேட்­பாளர் நோர்பேர்ட் ஹொபெரை தோற்­க­டித்­துள்ளார். அளிக்­கப்­பட்ட 4.64 மில்­லியன் வாக்­கு­களில் 31,000 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நோர்பேர்ட் ஹொபெரை விடவும் அவர் முன்­னி­லையில் உள்ளார்.
நோர்பேர்ட் ஹொபெர் மேற்­படி தேர்­த­லி­லான தோல்­வியை ஒப்புக் கொண்­டுள்ளார். அவர் வெற்றி பெற்­றி­ருப்பின் ஆஸ்­தி­ரி­யாவின் முத­லா­வது வலது சாரி தலை­வ­ராக இருப்பார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
அலெக்­ஸாண்­டரின் வெற்­றி­யா­னது ஐரோப்­பிய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு ஆறுதல் அளிப்­ப­தாக உள்­ள­தாக ஜேர்மன் வெளி­நாட்டு அமைச்சர் மானுவேல் வல்லெஸ் தெரி­வித்தார்.
குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு எதி­ரான கொள்­கையைக் கொண்ட ஹொபெர் வெற்றி பெற்­றி­ருந்தால், அது பல ஐரோப்­பிய நாடு­களில் தேசி­ய­வாத மற்றும் குடி­யேற்­றத்­துக்கு எதி­ரான கட்­சி­களின் எழுச்­சிக்கு வித்­தி­டு­வ­தாக அமையும் என அஞ்­சப்­பட்­டது.
தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்­றிய ஐரோப்­பிய ஒன்­றிய ஆத­ரவு வேட்­பா­ள­ரான அலெக்­ஸாண்டர் (72 வயது), மக்­களின் பயம் மற்றும் சினத்தை செவி­ம­டுக்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.
அதற்கு வேறு­பட்ட பேச்­சு­வார்த்தைக் கலா­சா­ரமும் அர­சியல் முறை­மையும் தேவை­யா­க­வுள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், நோர்பேர்ட் ஹொபெரின் வாக்­கா­ளர்­க­ளது நம்­பிக்­கை­யையும் வென்று அனைத்து ஆஸ்­தி­ரிய மக்­க­ளுக்­கு­மான கட்சி சார்­பற்ற ஜனா­தி­ப­தி­யாக சேவை­யாற்ற விரும்­பு­வ­தாக கூறினார்.
குடி­யேற்­ற­வா­சி­க­ளான ரஷ்ய தந்­தைக்கும் எஸ்­தோ­னிய தாயா­ருக்கும் வியன்­னாவில் பிறந்­த­வ­ரான அலெக்­ஸாண்டர் வான் டெர் பெலென், தன்னை ஒரு சிறுவர் அகதியாக குறிப்பிட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி












விமானம் விழுந்த இடத்திலிருந்து துண்டுதுண்டுகளாக சிதறிய 80 மனித எச்சங்கள் மீட்பு.!


25/05/2016 எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்த இடத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட மனித எச்­சங்கள் அந்த விமா­னத்தில் பாரிய வெடிப்பு இடம்­பெற்­றுள்­ள­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ள­தாக எகிப்­திய தட­ய­வியல் அலு­வ­ல­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரி­யொ­ரு­வரை மேற்கோள் காட்டி ஏ.பி. ஊடகம் செவ்­வாய்க்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அந்த விமானம் கடந்த 19 ஆம் திகதி 66 பேருடன் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­த­தை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது இது­வரை ஒரு கரம் அல்­லது ஒரு கால் என்ற ரீதியில் சுமார் 80 உடல் பாகங்கள் துண்­டு­ துண்டுகள­ாக சித­றிய நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளன.
இதன்­போது முழு­மை­யாக எந்த உடலும் மீட்­கப்­ப­டாத நிலையில் அவ்­வாறு உடல்கள் சித­றி­ய­மைக்கு விமா­னத்தில் இடம்­பெற்ற பாரிய வெடிப்பே கார­ண­மாக இருக்­கலாம் என நம்­பப்­ப­டு­வ­தாக அந்த அதி­காரி தெரி­வித்­துள்ளார்.
எனினும் மேற்­படி தக­வ­லுக்கு அந்­நாட்டு நீதி அமைச்சின் தட­ய­வியல் திணைக்­களத் தலைவர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
மேற்­படி தகவல் வெளி­யா­வ­தற்கு முதல் நாள் எகிப்­திய அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் வானில் பறக்கும் விமா­னங்­களின் இடத்தைக் கண்­ட­றியும் வேவையை வழங்கும் ஸ்தாப­னத்தின் தலைவர், அந்த விமானம் ஏற்­க­னவே கிரேக்க பாது­காப்பு அமைச்­சரால் தெரி­விக்­கப்­பட்­டது போன்று திரும்­ப­ல­டை­யவோ அல்­லது சடு­தி­யாக செங்­குத்­தாக விழவோ இல்லை என தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களின் உடல் பாகங்­களை அடை­யாளம் காண மர­பணு பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக க கூறப்படுகிறது.    நன்றி வீரகேசரி









பாப்பரசர் - கெய்ரோ பள்ளிவாசல் இமாம் சந்திப்பு 



25/05/2016 பாப்பரசர் பிரான்சிஸ், எகிப்திய கெய்ரோ நகரிலுள்ள அல்–அஸார் பெரிய பள்ளிவாசலின் இமாமான ஷெய்க் அஹ்மெட் அல்–தாயிப்பை ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாடியுள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும் பள்ளிவாசலுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பான 5 வருட கால தாமதத்தையடுத்து இந்த முக்கியத்துவம் மிக்க சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு மதத் தலைவர்களும் மத்தியகிழக்கில் நிலவும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையிலான பதற்றநிலை குறித்து கலந்துரையா டியுள்ளனர். இமாம் ஷெய்க் அஹ்மெட் அல்–தாயிப் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெறும் முஸ்லிம்களும் கத்தோலிக்கர்களும் கலந்து கொள்ளும் கூட்டமொன்றுக்கு செல்லும் வழியிலேயே பாப்பரசருடனான சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதற்கு முன் பாப்பரசராக இருந்த 16 ஆம் ஆசீர்வாதப்பரால் தெரிவிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எதிர்மறையான கருத்தைக் கொண்டதென கூறப்படும் விமர்சனமொன்றையடுத்து 2011 ஆம் ஆண்டில் இரு தரப்பு சந்திப்புகளும் ஸ்தம்பிதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










மல்லையாவின் தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு.!



26/05/2016 காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை விவரங்கள் மீதான விசாரணையை ஜூன் 6ஆம் திகதிக்கு ஹைதரபாத் நகர நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹைதராபாதில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தை ஜி.எம்.ஆர். விமான நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த விமான நிலையத்தில் தங்கள் விமானங்களை நிறுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கிங்ஃபிஷர் நிறுவனம் ஜி.எம்.ஆர். விமான நிறுவனத்துக்கு கொடுத்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிங்ஃபிஷர் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தலா 50 இலட்சம் ரூபா மதிப்பிலான இரு காசோலைகள், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின.
இதுகுறித்து ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் ஜி.எம்.ஆர். நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி விசாரித்த நீதிமன்றம், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவை குற்றவாளியாக அறிவித்தது.
மேலும், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டது. அப்போது, விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரங்களை மே 5 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் விஜய் மல்லையா ஆஜராகாததால் மே 9 ஆம் திகதிக்கு உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 353 ஆவது பிரிவின்படி (குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகாதபோதும் தண்டனை அறிவித்தல்) அன்றைய தினம் தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த வழக்கு ஹைதராபாத் நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது,"தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பாக குற்றவாளி தரப்பு வாதத்தையும் கேட்டறிய வேண்டியது அவசியமாகிறது' எனக் கூறிய நீதிபதி தீர்ப்பு விவரத்தை நேற்று அறிவிப்பதாகத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தண்டனை விவரம் நேற்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் மீதான உத்தரவை ஜூன் 6 ஆம் திகதிக்கு நீதிபதி மீண்டும் ஒத்திவைத்துள்ளார்.   நன்றி வீரகேசரி












வரலாற்று சாதனை படைத்த பராக் ஒபாமா.!


27/05/2016 அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்போதே போரின் நினைவுச் சின்னமான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிரோஷிமாவில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீசப்பட்ட அணுகுண்டினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் குறித்த அதே வருடத்தில் உயிரிழந்தனர்.
இதேவேளை, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பராக் ஒபாமா முதலாவது அணுகுண்டு வீசப்பட்ட பகுதியான ஹிரோஷிமாவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.   
அங்கு, அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை புமியோ கிஷிடா ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.    நன்றி வீரகேசரி