வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை - பேராசிரியர் சி.மௌனகுரு

.
எளிமையும்,அழகும்,சிருஸ்டித்துவமும் மிகுந்த சாமத்தியச் சடங்கு


அண்மையில் சிவரத்தினம்-அருந்ததி தம்பதியினர் தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வித்தியாசமான முறையில் வடிமைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர்
சிவரத்தினம்-அருந்ததி தம்பதியினர் மட்டக்களப்பிலுள்ள கழுதாவளை எனும் அழ்கான கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
கழுதாவளை குல மரபுகளையும்,பாரம்பரியங்களையும் இற்றைவரை பேணிவரும் ஒரு கிராமம்
கூத்துகள்,பறைமேளம்,கரகம்,வசந்தன்,கொம்புமுறி என பல்வேறு கலைகளையும் தன்னுள் வைத்திருந்த கிராமம்
கதிர்காமத்துக்கு வருடந்தோறும் கால்நடையாகச் செல்லும் முருக பக்தர்கள் தங்கி இளைப்பாறிச் செல்லும் சுயம்புலிங்க பிள்ளையார் கோவில் இங்குதான் உண்டு
கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் வளர்ந்து சடைத்து நிற்கும் மருத மரங்களும் அவை தரும் நிழல்களும்,கோவில் சூழலும்.கோவில் முன்னால் அமைந்திருக்கு கேணியும் என ஒரு முறை போனோர் என்றும் மறக்க முடியாத இடம் அதுஅக்கிராமத்தில் பிறந்து அக்கிராமச் சூழ்லோடு வளர்ந்தவரான சிவரத்தினம் கிழ்க்குப் பல்கலைக் கழகச் சுவாமி விபுலானந்த அழ்கியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலக் கலை விரிவுரையாளரகவும்,அத் துறையினை நடத்தும் இணைப்பளராகவும் திகழ்கிறார்
நிறைந்த வாசிப்புத் திறனும்,
சிந்தனைத் திறனும்,யதார்த்தவாதியுமன இவர்
தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வடிவமைத்த வித கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்திருந்தது
மரபைப் புதுமை செய்யும் சிருஸ்டித்துவம் அச்சடங்கில் அமைந்திருந்தது
இயற்கைப் பொருட்களான தென்னம் குருத்தோலை,தென்னோலை,பனம் குருத்தோலை,வாளைத்தண்டு,மாவிலை,என்பன கொண்டு எளிமையாகவும் அழ்காகவும் அமைக்கப்பட்ட மேடை
பாரம்பரியச் சடங்குகளையும் இணைத்து புதுமைகளையும் புகுத்தி அச்சடங்கை அவர் வடிவமைத்த பாங்கு
அன்றைய தினம் சாமத்தியச் சடங்கு சம்பந்தமாக அவர் வெளியிட்ட நூல்
இந்நூலில் இடம் பெறும் சாமத்தியச் சடங்கும் அதன் சமூகப் பின்னணியும் எனும் அவரது கட்டுரையும் அவரது நண்பரான கலாநிதி சந்திரசேகரத்தின் மட்டக்களப்பு மக்களின் உணவுப் பழக்கங்கள் எனும் கட்டுரைகள்
என ஒரு வித்தியாசமான முறையில் அச்சடங்கு விழாவினை அவர் வடிவமைத்திருந்தார்
அந்நூலினை வெளியிட்டு சாமத்தியச் சடங்கும்,சடங்குகள் வாழ்வில் பெறும் முக்கியத்துவமும் அவை காலம் தோறும் மாறி வரும் தன்மையும் பற்றி உரையாற்றி அச்சிறு நூலை விளியிட்டு வைக்குமாறு என்னை அழைத்திருந்தார்
வெறும் விழாவாக மாத்திரமன்றி அறிவூட்டும் ஒரு விழாவாக அவர் அதனை அமைத்திருந்த விதம் எனக்கு வெகுவாகப் பிடித்துக் கொண்டது
அது சிலருக்குப் பிடியாமலும் இருந்திருக்கலாம்
நான் அவர் தொகுத்த நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றினேன்.
அந்நுலின் முதற் பிரதியை கழுதாவளை கிராமத்தின் முதற் பேராசிரியரான குணரத்தினம் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்
கழுதாவளை கிராம மக்கள் அனைத்தையும் அவதானித்துக் கொண்டிருந்தனர்
மதிய உணவு கூட அருமையாக இருந்தது
ஆடம்பரமும் அதீத அலங்காரமும் ஆர்ப்பாட்டமும் மிகுந்த திருமண,சாமத்தியச் சடங்குகளை நடத்தும் நம்மவர் மத்தியில் சிவரத்தினம் தம்பதியினர் தனித்துத் தெரிந்தனர்
எல்லாம் முடிந்து திரும்புகையில் கழுதாவளை வாழ் மக்கள் இன்று இவ்விழா பற்றி என்ன கதைப்பார்கள் என்று எண்ண்க்கொண்டு வந்தேன்


இயற்கைப் பொருள்களாலான ஒரு சாமத்தியச் சடங்கின் மேடை அலங்காரம்
.-----------------------------------------------------------------------
சாமத்தியச் சடங்கு அரங்க மேடையினை வெறும் தென்னை ,பனைக் குருத்தோலைகளான இயற்கைப் பொருட்களை மாத்திரம் கொண்டு அழ்கு,எளிமை மிளிர வடிவமைத்திருந்தார் .சிவரத்தினம்
இதனை வடிவமைத் தவர் கட்புலக் கலை விரிவுரையாளரான ரமணன்
பழ்மையை விட்டு விடாமல் புதுமையானதும் அறிவு பூர்வமானதும் சிருஸ்டித்துவம் மிக்கதுமான ஒரு சாமத்தியச் சடங்கின் மேடை அமைப்பு இது
1.பின்னால் முழுமையாக விரிந்திருப்பது ஒரு இளம் பனை ஓலை
2. முன்னால் தெரிவன தென்னை ஓலைகளும் வாளைத் தண்டுகளும் கொண்டு வடிவமைத்த இரு பெரும் நிறை குடங்கள்
3. ஓலைக் குடத்தின் மேல் வளத்தைப் பறை சாற்றும் விரிந்து மலர்ந்தஇரண்டு தென்னம் பாளைப் பூக்கள்
4.இடது புறம் தென்னம் குருத்தோலைகளால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு தூண்
6.அதன்மேல்தென்னம் குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்ட ஒரு குடம்
7. நிறை குடத்தின் மேல் மாவிலை வைப்பது போல அக் குருதோலைக் குடத்தின் மேல் வைக்கபட்டுள்ள தென்னம் குருத்தின் இளம் ஓலைகள்
8.பெண் அமர முன்னால் வெறும் மரத்தால் செய்யப்பட்டகுசன் பதிக்காத ஓர் ஆசனம்
.9.பெண்ணின் மீது கவிந்திருக்கும் குடை
10.குடையின் கீழ்க் குஞ்சம் போலத் தொங்கும் குருத்தோலைகள்
11.பாரம்பரியக் கூரை முடிபோல அமைக்கப் பட்டு அதன் மீது வைக்கப்படும் மூன்று பாரம்பரியக் கூரை முடிச் செம்புகள்
12.அச்செம்புகள் மேல் வைக்கப்பட்டுள்ள மும் மூன்று மாவிலைகள்
13. ஆகவும் முன்னால் மஞ்சள் நிறக் குருத்தோலையாலும் இளம் பச்சை நிறக் குருத்தோலையாலும் உருவாக்கப் பட்ட அன்றலர்ந்த தாமரை மலர்
14,முன்னால் அழகாக தென்னோலைகளாலும் வாழித் தண்டுகளாலும் அலங்கறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெரும் குடம்
இயற்கை அழகெல்லாம் மேடைமீது வாரி இறைத்திருந்தனர்
திட்டம் தந்த சிவரத்தினத்துக்கும்,செயற்படுத்திய ரமணனுக்கும் என் பாரட்டுகள்
இந்த அழகைத்தான் நான்
கூத்திலும்,
வசந்தனிலும்,
பறைமேளத்திலும்,
கரகத்திலும்,
கோவிற் சடங்குகளிலும் எதிர்பார்க்கிறேன்
இயற்யோடியைந்த அலங்காரம் இது
என்ன செய்ய? நம் சமூகம்
இயற்கையை விட்டு வெகுதூரம் வந்து விட்டதே
போலிகளும் தகதகப்புகளும் புகுந்து விட்டதே
ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் மிகுந்து விட்டதே
அதுவே மரபு,அதுவே பழமை என்று ஆர்ப்பரிகிறதே
அதனையே ஊடகங்கள் பெரிது படுத்துகின்றனவே
அதுவா மரபு?
அதுவா பழமை?
அதுவா அழகு?
இல்லை அது அலங்கோலம்,
சீரழிவு

பாரதி பாடல்தான் ஞாபகம் வருகிறது

பழமை பழமை என்று
பாவனை பேசலன்றி
பழமை இருந்த நிலை-கிளியே
பாமரர் அறியாரடி- கிளியே
பாமரர் அறியாரடி