ஆறாவது முறை “மம்மி ரிடர்ன்ஸ்” - வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்

.

பத்து கட்சிகள் போட்டியிட்டும் தனி ஆளாக ஆடாமல் ஜெயித்த ‘ஜெ
மக்களால் நான்,  மக்களுக்காகவே நான்’ நடத்திய மாயம்

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும் கொண்ட  கொள்கைகள் மாறும் ,
அரசியலில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்றதை மறந்து , ஏற்க  மறுத்துவிட்ட முது பெரும் அரசியல்வாதி இனி ஒரு முறை முதல்வராகவாய்ப்பில்லாமல் போனதற்கு காரணங்கள். 

புரியாத புதிர் அம்மாவாகிய கதை

தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர் , தவறாக சித்திரிக்கப்பட்டவர்தவறாகஅனுமானிக்கப்பட்டவர்தவறாக நிர்வாகிக்கப்பட்டவர்  இப்படி பலர் யானையைபார்த்த குருடனைப்போல பார்க்கப்பட்டவர் ஜெயலலிதா.


கணிக்க முடியாத நபர் என்று பாரதிய ஜனதா கட்சி வரை பேர் வாங்கியவர்.எதிரிகளுக்கு மட்டும் அல்ல நண்பர்களுக்கும் அவர் புரியாத புதிர்.

முரண்பாடுகளின் மொத்த ஒருவம் என்று மறைந்த  பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான  வலம்புரி ஜோன் குறிப்பிட்ட ஜெ ஜெ , எம் ஜீ ஆர் விட்டுச் சென்றஅரசியலை கட்டிக் காத்தவர் , தனக்கு அரசுக் கட்டிலாக்கி கொண்டவர் என்பதில்சந்தேகமேயில்லை.

அவரது  நேற்றைய தோல்விகள் இன்றைய வெற்றிகளின் அடித்தளம்பெண் தானே என்றுஎள்ளி நகையாடியவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நின்று அரசியலில் தனி மனுசியாகசிக்ஸர்களும் செண்சுரிகளும் அடித்தவர்.

ஆரம்ப காலத்தில் எம் ஜீ ஆரைக் கூட சக  நடிகராக மனிதராக மட்டுமே ஏற்றுக் கொண்டார்.வாசிப்புஎழுத்து,  பேச்சு,  நடிப்பு , பாட்டு இப்படி அனைத்துமே சினிமாவில் தொடங்கிஅரசியலுக்கு வரத் தேவையான அடிப்படைத்தகுதிகளாக அமைந்தன.வெண்ணிற ஆடைதொடங்கி  , நதியைத் தேடி வந்த கடலுடன் நிறைவுற்றது சினிமா வாழ்க்கைஎண்பதுகளில்காவிரி தந்த கலைச் செல்வி நாட்டிய  நாடகம் மதுரை உலகத் தமிழாராய்ச்சி மா நாட்டுடன்,எம் ஜீ ஆருடன் ஆன திரைத் தொடர்பு அரசியல் தொடர்பாக முகிழ்த்தது.கொள்கை பரப்புசெயலாளராக  தி மு  கட்சிக்குள் வந்தவுடன்  நசுக்கப் பார்த்தது ஒரு கூட்டம்.

பரிசாகக் கிட்டிய நம்பிக்கைத் துரோகமும்பெண் என்று செய்த ஏளனமும் வார்த்தெடுத்தனவைராக்கியத்தை.
சினிமா திரை  தொடங்கிய வாழ்வு  அரசியல் பயணமாக ஆரம்பமானது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண் அதுவும் அரசியலில் காலடி எடுத்த காலம் முதல்முதல்வராக பதவியேற்கும் வரை இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டது இல்லை..அப்படி எதிர்நீச்சல் போட்டு முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவர் ஜெயலலிதா.

இறுதி அஞ்சலிக்காக எம்.ஜி.ஆர்உடல் வைக்கப்பட்டு இருந்ததுஎம்  ஜி யாரின் இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள  ஜெ அனுமதிக்கப் படவில்லைபின்னர்  ராணுவஅதிகார்களும் மத்திய அரசும் தலையிட்டு ஒருமாதிரியாக எம் ஜி ஆரின் தலைப்பகுதியில்அவர் துக்க தோய்ந்த முகத்துடன் இருக்க முடிந்தது.
இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்எம்.ஜி.ஆர்உடல் இருந்த பீரங்கி வண்டியில்ஜெயலலிதா ஏறினார்ஆனால்அவர் அனுமதிக்கப்படவில்லைஅப்போது பலத்த எதிர்ப்புகுரல் கிளம்பியதுகே.பி.ராமலிங்கம் எம்.எல்.வேகமாக ஓடிவந்தார்நடிகர் தீபன் பீரங்கிவண்டியில் ஏறி ஜெயின் நெற்றியில் அடித்தார்ஜெயை வெளியே தள்ளினார்கள்ராணுவஅதிகாரிகள் உதவ  முயன்றனர்திரும்பவும் அடித்து தள்ளப்பபட்டார்ஏற முயன்று அவரைகீழே பிடித்துத் தள்ளியவுடன்  பெரும் சர்ச்சை வெடித்ததுஅஇதிமுக இரண்டு பிரிவுகளாகபிரிந்ததுஏம் ஜீ அரின் முன் பேசப் பயப்பட்ட அமைச்சர்கள் பிரிந்து நின்று   மனைவி ஜானகிராமச்சந்திரன் தலைமையிலும்ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள்உருவாக்கினர்.அனைத்தையும் மீறி ஜெயலலிதா அரசியல் வாதியானார்அண்ணியானார்,முதல்வரானார்தமிழகத்தின் அம்மாவானார்.

தேர்தல் 2016
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றதுதஞ்சாவூர்அரவக்குறிச்சி ஆகியதொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால்,மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர்ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள்அதிகமாக வாக்களித்தனர்.
முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சட்டப்பேரவைத்தேர்தலில் இதுவரை போட்டியிட்ட தொகுதிகளின் விபரங்கள் :

முதல்முறையாக கடந்த 1989ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கியஜெயலலிதாஅந்த ஆண்டு தேனி மாவட்டத்தின் போடி நாயக்கனூர் தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பர்கூர்காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில்போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் களம் இறங்கிய ஜெயலலிதாதிமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வி அடைந்தார்.

2001ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டிகிருஷ்ணகிரிபுவனகிரி,புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்தேர்தல்நடத்தை விதிகளை மீறி அதிக தொகுதிகளில்  வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததாகக் கூறிதேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் 4 வேட்பு மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

2002ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டுமீண்டும் சட்டப்பேரவைக்கும் தேர்தெடுக்கப்பட்டார்.

2006ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார்.

2011ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையால்சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்த ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றம் அவரைநிரபராதி என தீர்ப்பளித்ததையடுத்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார்.இதையடுத்து 2015ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது 2016ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில்மீண்டும் போட்டியிடுகிறார்.

இதுவரை 6 முறை சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா 5 முறைவெற்றி பெற்று ஒரு முறை தோல்வி அடைந்துள்ளார். 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அவர்களம் காணும் 7வது பொதுத் தேர்தல்

இடைத் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு 2 முறையும் வெற்றி பெற்றுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒன்றரை  லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதாவெற்றி பெற்றார்.
வட சென்னையின் முக்கிய தொகுதிகளில் ஒன்று ஆர்.கே.நகர்ஆர்.கே.நகர்அடித்தட்டுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்இந்த தொகுதியில் அதிமுக 6 முறை வெற்றிபெற்றுள்ளதுதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளதுகாங்கிரஸ் 2 முறை வெற்றிபெற்றுள்ளது.


தமிழக முதல்வர்

ஜெயலலிதா தமிழக முதல்வராக  பணியாற்றிய காலகட்டங்கள்

1.            ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர்.
2.            மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவிமுடக்கப்பட்டது)
3.            மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.
4.            2011 முதல் - செப்டம்பர் 27, 2014 வரை - தமிழகத்தின் 16 வது முதல்வர் (இப்பதவிமுடக்கப்பட்டது),
5.            ஜுன் 23, 2015 மீண்டும் 5 வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
6.            இம்முறை பதவியேற்பது ஆறாவது முறை.

ஜெயின் தன்னம்பிக்கை , ஜெ மக்கள் மீது வைத்த நம்பிக்கை இதுதான் ஜெயின் பலம்தேர்தல்நேரத்தில் போடப்பட்ட பல கூட்டல்கழித்தல் கணக்குகளை காலம் தகர்த்தெறிந்தவரலாறுகளில் ஜெயின் இந்த வெற்றியும் ஒன்று.
அதே  சமயம் தி.மு.கவின்  தோல்வி தான்  தி மு  வெற்றிக்கு வழி வகுத்தது என்பதையும்மறுக்க முடியாது.

தி.மு. மீதான வெறுப்பு!
காங்கிரஸ் கட்சி துணையுடன் .மு. அரசியல் நடத்தியது தி.மு. மீது மக்களுக்கு வெறுப்பைஏற்படுத்தியது.
தி.மு. தலைமையின் குடும்ப அரசியல் நிலப்பறிப்புகுடும்ப ஆதிக்கம்அனைத்துத்தொழில்களிலும் தி.மு. நிர்வாகிகளின் தலையீடு ஆகியவ்ற்றால் தமிழகத்தைக்
அனைத்துக்கும் மேலாக 2ஜி முறைகேட்டில் குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்புபோன்றவை தி.மு.-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன.
மதுவிலக்கு என்ற கோரிக்கையை தி.மு. முன் வைத்த போது., எதிர் தரப்பில் , சொன்னதி.மு.-வினரே மது ஆலைகளை நடத்துகிறார்கள் என்ற  குற்றச்சாட்டுக்கு தி.மு.தரப்பினரிடம் இருந்து எந்தவித  மறுப்பும்  இல்லை.
தவிர ஏனைய விமர்சனங்களுக்கு தி.மு. தரப்பில் இருந்து சரியான பதில்கள் இல்லை.


ஸ்டாலினா ? கருணாநிதியா?
கருணாநிதி விட ஸ்டாலின் வரவேண்டும் என்றே தி.மு.-வினர் பலரும் குறிப்பாக இளையதலைமுறையினர்.  எதிர்பார்த்தார்கள்.
வாக்குகள் சிதறல்!
கட்சிகள் சிதறி , கடந்த முறை .தி.மு. வெற்றிக்குக் காரணியாக இருந்த தே.மு.தி.-விலகிகூட்டணி அமையாதது , பா..-வும் இப்போது கூட்டணியில் இல்லைபோன்றகாரணங்களால் ஏற்பட்ட வாக்குகள் சிதறல்,

களத்தில் ஆளில்லை
தேர்தல் களத்தில் மு..ஸ்டாலின் மட்டுமே கடுமையாக உழைத்தார்.
கனிமொழிகூட்டணி கட்சித் தலைவரான .வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின்பிரசாரம் சுமாராகவே எடுப்பட்டது.சிதம்பரம் , குஷ்புநக்மா என காங்கிரஸில்இருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி என்பது அலட்சியப்படுத்தப்பட்டது?
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே, ‘‘ஸ்டாலின் முதல்வர் என்றால் தி.மு.-வுடன்கூட்டணி” என்று ட்விட்டரில் அறிவித்தார்பி.ஜே.பி-யின் சுப்பிரமணியன் சுவாமிஆனால்தி.மு. தலைவர் , ஸ்டாலின்தான் முதல்வர் என்று உறுதியான நிலைப்பாட்டைஎடுக்கவில்லைதன்னையே முன்னிலை படுத்த்தினார்.

காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்
கோலங்கள் மாறும்
கொண்ட  கொள்கைகள் மாறும் , அரசியலில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்றதை ம்றந்துஏற்க  மறுத்து விட்ட முது பெரும் அரசியல்வாதி இனி ஒரு முறை முதல்வராகவாய்பில்லாமல் போனதற்கு இவையே காரணங்கள்.