இலங்கைச் செய்திகள்


சீரற்ற காலநிலை : விரைவில் புதிய தேசிய அடையாள அட்டை

சீரற்ற காலநிலை : இதுவரை 92 பேர் பலி

நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

 உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்

லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

ரோஹிதவுக்கு பிணை.!

யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை

வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது  : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்


தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்

ஜப்பான் பறந்தார் ஜனாதிபதி.!

அரநாயக்க பகுதியில் : அமெரிக்க தூதுவர்.! 

கிழக்கு மாகண முதலமைச்சருக்கு தடை.!

கடற்படை அதிகாரி சம்பவம் : மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை

வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.!

நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் புல­னாய்­வா­ளர்கள் அணியை வழிநடத்திய ஆதவன் மாஸ்டர் கைது

ஜீ - 7 மாநாட்டில்  பல நாட்டு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ( மேலதிக படங்கள் இணைப்பு )

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

சீரற்ற காலநிலை : விரைவில் புதிய தேசிய அடையாள அட்டை


23/05/2016 நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டைகளை பறிக்கொடுத்தவர்களின் தகவல்களை விரைவாக பெற்று தருமாறு, கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கவுள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை இன்றே ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி சீரற்ற காலநிலை : இதுவரை 92 பேர் பலி


23/05/2016 நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரைக்கும் 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.  
அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 506 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 995 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 
நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

23/05/2016 முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமா மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். 
கல்கிசை பகுதியில் வாங்கிய காணியொன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே  பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 


உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்

23/05/2016 வீடு, சொத்து, சுகம், பிறப்­புச்­சான்­றிதழ் என அனைத்­தையும் இழந்து நடு வீதியில் அக­தி­க­ளாக நிற்­கிறோம். நாங்க கன­வுல கூட நினைக்­கல இப்­படி ஒரு துய­ரத்தை அனு­ப­விப்போம் என்று. கடந்த ஆறு நாட்­க­ளாக ஒரே உடுப்­போட இருக்­கிறோம். சில பொருட்­களை வெளிப்­ப­டை­யாக வாய் திறந்து கேட்க முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்­டப்­பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்­லாமல் போய்­விட்­டது என வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு வீதி­க­ளிலும் விகா­ரை­க­ளிலும் முகாம்­க­ளிலும் தங்­கி­யி­ருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரி­வித்­தனர். நாட்டில் கடந்த சில நாட்­க­ளாக ஏற்­பட்ட சீரற்­ற­கால நிலை கார­ண­மாக இது­வரை 84 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 150 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இதில் குறிப்­பாக கொழும்பில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 47 ஆயி­ரத்து 666 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 5 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் கொழும்பின் பிர­தான வீதி­களின் இரு­ம­ருங்­கிலும் விகா­ரை­க­ளிலும் பாட­சா­லை­க­ளிலும் என 84 இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற கால­நிலை கடந்த மூன்று நாட்­களில் வழ­மைக்கு திரும்­பி­யுள்ள போதும் மக்­களின் வடுக்கள் இன்­னமும் மாற­வில்லை. வீடுகள் இன்­னமும் 6 அடி நீர்­மட்­டத்­துக்குள் மூழ்­கி­யுள்­ளன.
வீடு, சொத்து, சுகம் என அனைத்­தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்­ளி­வி­டப்­பட்­டுள்­ள­னர். இந்த இயற்கை அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் குறை­களை கேட்­ட­றி­வ­தற்­காக நாம், கொலன்­னாவ மீதொட்­டு­முல்ல, சேதவத்த, வெல்­லம்­பிட்­டி, லன்­சி­வத்த, பெரண்­டியா வத்த, நவகம்­புர மற்றும் களனி உள்­ளிட்ட கொழும்பின் பல பகு­தி­க­ளுக்கு விஜயம் செய்­தி­ருந்தோம். களனி கங்­கையின் நீர்­மட்டம் படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்­துள்­ளது. கடந்த இரு நாட்­க­ளாக கொழும்பில் கடு­மை­யான வெயில் காணப்­ப­டு­கின்­றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் இன்­னமும் 6 அடிக்­குமேல் தண்ணீர் நிற்­ப­தோடு குறித்தப் பகு­தி­களில் கழிவு நீர் கலந்து கரு­நி­றத்­துடன் காணப்­ப­டு­வ­தோடு கடு­மை­யான துர்­நாற்­றமும் வீசு­கின்­றது.
பாதிக்­கப்­பட்ட மக்கள் கருத்து தெரி­விக்­கையில்,
என்­னு­டைய பெயர் நியாஸ். மீதொட்­டு­முல்ல பகு­தியில் சுமார் பல்­லா­யிரக்கணக்­கான மக்கள் இருக்­கின்றோம். கடந்த சில நாட்­களாக பெய்த மழை எங்­க­ளுக்கு பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. இது­வ­ரையில் அர­சாங்­கத்­துல இருந்து வந்து எங்­க­ளுக்கு எந்­த­வொரு உத­வியும் செய்­யல. உணவு கிடைப்­ப­துல எந்த பிரச்­சி­னையும் இல்ல. எங்­கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்­ளப்­பட்டு இருக்­காங்க. எங்­கட பெண்கள் ரொம்ப கஷ்­டத்தை எதிர்­கொள்­ளு­றாங்க. நாங்க எப்­ப­டியும் இருந்­துட்டு போயி­ருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்­தை­யால சொல்ல முடி­யாது. எங்­கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்­றிதழ் விவாகப் பத்­திரம் பொருட்கள் என அனைத்தும் இல்­லாமல் போய்­விட்­டன. தண்­ணீ­ரால சேத­மான எங்­கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்­பார்க்­கல இப்­படி எல்­லாத்­தையும் இழப்போம் என்று. இந்த வான்­க­த­வு­கள திறக்­கப்­போ­றாங்­கனு முன்­னாடி சொல்­லி­யி­ருந்தா உடுத்த உடுப்­பு­கள சரி எடுத்­து­கிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்­போட இன்­னமும் இருக்­கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்­தாலும் அர­சாங்கம் எங்­க­ளுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவ­லை­யுடன் தெரி­வித்தார்.
சரீபா என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில். சுமார் 25 வரு­டங்­க­ளுக்கு மேலாக நான் இங்கு இருக்­கின்றேன். இது­வ­ரைக்கும் இந்­த­மா­திரி ஒரு நிலைமை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்து வைத்­த பணத்­துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்­கள வாங்­குனேன். ஆனால் இன்­றைக்கு எல்லாம் ஒன்றும் இல்­லாம போயி­ருச்சு என்று கண்­க­லங்­கு­கின்றார்..! என்­னால கூட கதைக்க முடி­யல. அர­சாங்கம் தான் எங்­க­ளுக்கு நல்ல தீர்வை பெற்­று­த­ரனும்.
காந்தி என்ற சிங்­கள பெண்­மணி கருத்து தெரி­விக்­கையில், நான் பஸ் டிப்­போ­வுக்கு பக்­கத்­துல தான் இருக்­கின்றேன். எனது வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­யிருச்சு. பொருட்கள் எல்­லாமே இல்­லாமல் போய்­விட்­டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்­பித்த அவர் தன்னை அறி­யா­மலே அழு­கிறார். கண்­ணீரை துடைத்­து­கொண்டு மீண்டும் கதைக்க ஆரம்­பிக்­கின்றார்.
தண்ணீர் கறுப்பு நிற­மாக இருக்­கின்­றது. பக்­கத்­துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்­துல இருந்து வந்த தண்­ணீர்தான் எங்­கட வீட்­டுக்­குள்ள இருக்கு. பொருட்­களை எல்லாம் மீள எடுக்க முடி­யாது. சரி­யான துர்­நாற்றம் அடிக்­கின்­றது. அந்த கிரு­மி­நா­சி­னிகள் நிறைந்த வீட்­டுக்­குள்ள போய் எவ்­வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்­ச­மாக சேர்த்த எல்­லாமே அழிந்து போய் விட்­டது. நாங்க தேங்காய் துரு­வியில் இருந்து எல்­லாமே புதி­தாக எடுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்டு இருக்­கிறோம்.
வசந்தி சந்­தி­யானி ஜெய­வர்­தன என்ற பெண் கருத்து தெரி­விக்­கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்­போது சாப்­பி­டு­வ­தற்கு ஒரு பீங்கான் கூட எங்­க­ளிடம் இல்லை. எங்­க­ளது குறைய தீர்க்க யார் வரு­வார்கள் என்று எதிர்­பார்த்து இருக்­கின்றோம். நான் நோயாளி. இந்த தண்­ணீர பார்க்கும் போது உங்­க­ளுக்கு தெரி­கி­றது எவ்­வ­ளவு துர்­நாற்றம் அடிக்­கின்­றது என்று. இத­னால எங்­க­ளுக்கு நோய் தான் அதி­க­ரிக்­கின்­றது. எங்­க­ளுக்கு சாப்­பாடு மூன்று நேரமும் கிடைக்­கி­ன்­றது. ஆனால் படுப்­ப­தற்கு பாய், தலை­யணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடு­த­லாக தேவைப்­ப­டு­கின்­றது. நாங்க இப்ப நடு வீதில நிற்­கிறோம். எங்­க­ளால தொழி­லுக்கும் செல்ல முடி­யாமல் உள்­ளது. எங்­க­ளு­டைய வாழ்க்­கையே கேள்­விக்­கு­றி­யா­கி­விட்­டது என நொந்­து­கொள்­கிறார்.
சேதவத்தை பகு­தியைச் சேர்ந்த விம­ல­சேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக கொண்டு வரப்­படும் நிவா­ரண பொருட்­களை இடை­ந­டுவே மறித்து பாதிக்­கப்­ப­டாத நபர் எடுத்து செல்­கி­றார்கள். இது தொடர்பில் நகர சபை அவ­தானம் செலுத்த வேண்டும் என்­கிறார்.
சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் எங்­கட வீட்டை கழு­வுவ­தற்கு டெட்டோல், சவர்க்­காரம் இது­ போன்றவற்­றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்­ணீர்ல நிறைய கிரு­மிகள் இருக்­கின்­றன என்­கிறார்.
தண்­ணீரால் நிறைந்­தி­ருக்கும் தனது வீட்டை பார்த்­த­வாறு இருந்த ரசேனி வின்­துனி என்ற பாட­சாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்­வி­கற்­கிறேன். எங்க வீடு முற்­றாக நீர்ல மூழ்­கி­விட்­டது. எனது பாட­சாலை புத்­தகம், சப்­பாத்து என எல்­லாமே ஒன்றும் இல்­லாமல் போய்­விட்­டது. நான் இப்ப பாட­சா­லைக்கு போக­கூட வழி­யில்­லாமல் இருக்­கின்றேன். இந்த துய­ரத்­துல இருந்து எப்ப மீளப்­போ­கின்றோம் என்று எங்­க­ளுக்கு தெரி­யல என்றார்.
மிகவும் பரி­தாப நிலையில் காணப்­பட்ட சுவர்னா என்ற வயோ­திப பெண் தனக்கு ஏற்­பட்ட நிலை­மையை விளக்கும் போது நான் தூங்­கி­கொண்­டி­ருந்த போது விடி­யற்­காலை 3 மணி­யி­ருக்கும். திடீ­ரென காலில் தண்ணீர் படு­வது போல இருந்­தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்­டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்­ளது. என்னால் எனது பொருட்­களை பாது­காக்க முடி­யாமல் போய்­­விட்­டது. நான் எல்­லா­வற்­றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடை­யின்றி அநா­தை­யாக நிற்­கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடி­யுள்­ளது. என்னால் இந்த துய­ரத்தை தாங்­கி­க்கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என கூறி­ய­வாறு அழுதார். கன்­னத்தில் கையை வைத்­து­கொண்டு ஆழ்ந்த யோச­னையில் இருந்த ஜரீ­னாவை நாம் அணு­கிய போது, கண்ணீர் சிந்­து­கின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்­வாறு ஒரு மழை பெய்­தது இல்ல. இப்­படி ஒரு வெள்ளம் ஏற்­படும் என நாங்க கன­வு­லையும் நினைக்­கல. மீதொட்­டு­முல்ல பகு­தியில் 20 வரு­டத்­துக்கு மேல இருக்­கிறேன். இப்­படி ஒரு வெள்ளம் வீடு­க­ளுக்­குள்ள வந்­ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்­டுல இருந்து வெளியே­றிய போது உடுத்­தி­ருந்த உடுப்­போட தான் இன்­னமும் இருக்­கின்றோம். அழு­கின்றார்...! எங்­க­ளுக்கு சாப்­பாடு கிடைக்­குது. சில பொருட்­கள எங்­க­ளாள வெளிப்­ப­டை­யாக கேட்க முடி­யாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படு­வார்கள். இவை­கள வாயால கேட்­டு­கொள்ள முடி­யாது. என்ன செய்­வது என அழு­து­கொண்டே தனது பேச்சை நிறுத்­தினார். தண்ணீர் வழிந்­தோ­டிய பின்னர் தனது வீட்டை கழு­விக்­கொண்­டி­ருந்த நபர் ஒருவர் கருத்து தெரி­விக்­கையில், தண்­ணீ­ரால மூழ்கிய எங்­கட வீட இப்­பதான் கழு­வி­கிட்டு இருக்­கின்றோம். வீட்­டுக்­குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்­தி­யா­ல­மாக கழு­வி­கிட்டு இருக்­கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்­டுக்­குள்ள அட்டை மற்றும் சில கிரு­மி­கள் இருந்­தன. இதை சுத்­தப்­ப­டுத்த முடி­யாமல் உள்­ளது என்றார்.
தண்ணீர் நிறைந்து காணப்­பட்ட ஒரு பகு­தியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்­தவர் போல தேடிக்­கொண்­டி­ருந்த வயோ­திப பெண் ஒரு­வரை நாம் அணுகி எதனை தேடு­கின்­றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழி­களை தேடி­கொண்­டிருக்­கின்றேன். செல்லப் பிரா­ணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்­த­ளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்­டையும் தூக்­கி­கொண்டு வந்து விட்டேன். ஆனால் எனது சேவலை காண­வில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரி­யல என்­கிறார் 60 வய­து­டைய அய்சா. வெள்ளத்தால் பாதிக்­கப்­பட்டு அப­ய­சிங்­க­ராம விகா­ரையில் தங்­கி­யி­ருக்கும் கொலன்­னாவ நாக­முல்ல பகு­தியைச் சேர்ந்த அந்­தோ­னி­யம்மா தனக்கு ஏற்­பட்ட நிலையை விளக்­கியபோது, எங்­கட வீடு முற்­றாக நீரில் மூழ்­கி­விட்­டது. துர்­நாற்றம் அடிக்கும் இந்த தண்­ணீர்ல பாதிக்­கப்­பட்ட எந்­த­வொரு பொரு­ளையும் மீள கழுவி எடுப்­பது பொய்­யான விடயம். அனைத்­தையும் இழந்து அக­தி­க­ளாக இருக்கும் எங்­க­ளுக்கு அர­சாங்கம் நல்ல­தொரு தீர்வை பெற்றுத் தர­வேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்­வதால் ஒன்­றுமே நடக்­கப்­போ­வ­தில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழ­மை­யாகும் என்றார்.
உணவு வேண்டாம் உடை தாருங்கள்
வெள்ளம் ஏற்­பட்­டுள்ள குறித் பிர­தே­சத்து மக்­க­ளுக்கு அன்­றாட உணவு சுத்­த­மாக குடிநீர் என்­பன கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. இருந்த போதிலும் வெள்ள நீர் குடி­யி­ருப்­பு­களை சூழ்ந்­துக்­கொண்­டி­ருக்கும் போது உயிரை காப்­பாற்­றினால் போதும் என ஓடிய மக்கள் தங்­க­ளுக்­கான மாற்­று­டை­களை பற்­றியோ அல்­லது உடை­மை­களை பற்­றியோ சிந்­தித்­தி­ருக்க வாய்ப்­பில்லை. இந்­நி­லையில் அர­சாங்­கமும் பல தொண்டு நிறு­வ­னங்­களும் தங்­க­ளுக்­கான நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இருந்த போதிலும் அவர்கள் அனை­வரும் உணவை மட்­டுமே கொடுத்து விட்டு செல்­கின்­றனர். இதனால் ஒரு வாரத்­துக்கு மேலாக மாற்­றுடை இல்­லாமல் தவித்து வரு­வ­தாக மக்கள் கூறினர். எனவே நிவ­ரண உத­வி­களை வழங்க முன்­வ­ருவோர் தங்­க­ளுக்­கான உடை­களை கொடுத்­து­த­வு­மாறு கேட்­டுக்­கொண்­டனர்.
தொற்று நோய் அபாயம்
வெள்ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சங்கள் அனைத்தும் கழி­வுநீர் தேங்­கி­யுள்ள பிர­தே­ச­மாக துர்­நாற்­றத்­துடன் காணப்­ப­டு­கின்­றது. சிறு­வர்கள், முதி­யோர்கள், கர்ப்­பிணி தாய்­மார்கள் உள்­ளிட்டோர் தங்­க­ளுக்கு நோய்கள் பர­வுமோ என்ற அச்­சத்­துடன் மருத்­துவ உத­வி­களை எதிர்ப்­பார்­த்­தி­ருந்­தனர். மேலும் தற்­போது நீர் வடிந்து செல்­கின்­ற­மை­யினால் சிறு நீர்­நி­லை­களில் நுளம்பு பெருக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இதனால் டெங்கு, வயிற்­றுப்­போக்கு உள்­ளிட்ட நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான அதி­க­ளவி­லான சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­டு­கின்­றன.    நன்றி வீரகேசரி 

லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர்


24/05/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி குற்றப் புலனாய்வு பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் பாரிய நிதி மோசடி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.    நன்றி வீரகேசரி 
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு

24/05/2016 நாட்டில் ஏற்­பட்ட சீரற்ற கால­நி­லை­யினால் பாதிக்கப்­பட்ட மக்­களின் தொகை 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768ஆக குறை­வ­டைந்­துள்­ளது. அத்துடன் 41ஆயி­ரத்து 460 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 பேர்கள் இன்னும் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
மேலும் நாட­ளா­விய ரீதியில் அனர்த்­தங்­களில் சிக்கி உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 93ஆக அதி­க­ரித்­துள்­ள­து என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒரு­வார கால­மாக நாட்டில் நில­விய சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­மைகள் தொடர்பில் தக­வல்கள் வெளி­யிடும் வகையில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று முக்­கிய ஊடக சந்­திப்­பொன்று நடை­பெற்­றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்
சீரற்ற கால­நி­லை­யினால் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தொகை இந்­த­வாரம் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. குறிப்­பாக முதல் மூன்று நாட்கள் முடிவில் பாதிக்­கப்­பட்­டோரின் தொகை 3 இலட்­சத்து 70 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மாக இருந்த நிலையில் இப்­போது அது 2 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 768 குறை­வ­டைந்­துள்­ளது. இப்­போது 71 ஆயிரம் குடும்­பங்­களை சேர்ந்த 288768 நபர்கள் நாட­ளா­விய ரீதியில் பாதிக்கப் பட்­டுள்­ளனர். 1 இலட்­சத்­துக்கு அண்­மித்த தொகை­யி­லான மக்கள் தமது இருப்­பி­டங்­க­ளுக்கு திரும்­பி­யுள்­ளனர். வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லி­க­மாக அமைத்துக் கொடுக்­கப்­பட்ட முகாம்­களின் எண்­ணிக்­கையும் வெகு­வாக குறை­வ­டைந்­துள்­ளது. இப்­போது நாட­ளா­விய ரீதியில் 1 இலட்­சத்து 85 ஆயி­ரத்து 933 நபர்கள் தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
எனினும் இந்த அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்த பொது­மக்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. தற்­போ­தைய நிலை­மையில் அனைத்து பகு­தி­க­ளிலும் அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்த பொது­மக்­களின் எண்­ணிக்கை 93 ஆகும். கேகா­லையில் அர­நா­யக பகு­தியை தவிர்ந்த ஏனைய பகு­தி­களில் மீட்பு நட­வ­டிக்­கைகள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அர­நா­யக மண்­ச­ரிவில் சிக்­கி­யுள்ள பொது­மக்­களை மீட்கும் நட­வ­டிக்கை மாத்­திரம் இன்னும் இடம்­பெற்று வரு­கின்­றது.
கால­நிலை
மேலும் தற்­போ­தி­ருக்கும் நிலை­மையில் கால­நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒரு­வா­ர­கா­ல­மாக நாட்டில் நில­விய மோச­மான கால­நி­லையில் இருந்து விடு­பட்டு இப்­போது சாத­க­மான நிலை­மைக்கு திரும்­பி­யுள்­ளது. எனினும் மலை­யகம், சப்­ர­க­முவ, ஊவா மற்றும் வட­மத்­திய மாகா­ணத்தில் மழை­வீழ்ச்சி பதி­யப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­மைகள் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­யாது.
வடி­கா­ல­மைப்பு
அதேபோல் அதிக மழை­வீழ்ச்சி கார­ண­மாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்­மித்த பகு­தி­களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்த நிலையில் தற்­போது வெள்ள நீர் வழிந்­தோடும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக களனி பிர­தே­சத்தில் வெள்­ள­நீர் குறை­வ­டைந்­துள்­ளது. எனினும் சில பகு­தி­களில் நீர் தேங்­கி­யுள்­ள­தனால் அவற்றை வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.
கல்­விசார் உத­விகள்.
மேலும் ஏற்­பட்­டுள்ள மோச­மான நிலை­மையில் பல பாகங்­க­ளிலும் கல்வி சார் நட­வ­டிக்­கை­களை பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக குரு­நாகல் மாவட்­டத்தில் பல பகு­தி­க­ளிலும் கொழும்பில் சில பகு­தி­க­ளிலும் பாட­சாலை நட­வ­டிக்­கை­கள் முடங்­கி­யுள்­ளன. அதேபோல் பல பாட­சா­லைகள் சேத­ம­டைந்­துள்­ளன. மாண­வர்­களின் சீரு­டைகள், புத்­த­கங்கள் என்­பன சேத­ம­டைந்­துள்­ளன. எனவே மண்­ச­ரிவு மற்றும் வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்­கான அனைத்து நிவா­ர­ணப்­ப­ணி­க­ளும் அர­சாங்­கத்தின் மூல­மாக செய்­து­கொ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இல­வச பாட­சாலை சீரு­டைகள், புத்­த­கங்கள் உட­ன­டி­யாக பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­துடன் பாதிக்­கப்­பட்­டுள்ள பாட­சா­லை­களை புன­ர­மைக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.
சட்டம் மற்றும் ஒழுங்கு.
அதேபோல் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது வீடு­க­ளையும் சொத்­துக்­க­ளையும் விட்­டு­விட்டு இடம்­பெ­யர்ந்­துள்ள நிலையில் அவர்­களின் சொத்­துக்கள் கள­வா­டப்­படும் நிலைமை உள்­ள­தாக மக்கள் தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்­ளத்­தே­வை­யில்லை. மக்­களின் சொத்­து­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை பொலிஸ் மற்றும் இரா­ணுவம் மேற்­கொண்டு வரு­கின்­றது. அதேபோல் முகாம்­களின் உள்ள மக்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­யையும் பொலிசார் மேற்­கொண்டு வரு­கின்­றனர். முகாமில் இருக்கும் இறுதி நபர் தனது இருப்­பி­டத்­துக்கு செல்லும் வரையில் பொது­மக்­க­ளுக்­கான பூரண பாது­காப்பை பாதுகாப்பு வழங்கும்.
நிதி விவ­காரம்.
மேலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொண்டு வரு­கின்­றது. அனர்த்­தத்தில் இது­வ­ரையில் நான்­கா­யிரம் வீடுகள் முற்­றா­கவும் 3ஆயிரம் வீடுகள் பகுதி அள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன. எனவே முற்­றாக சேத­ம­டைந்த வீடு­க­ளுக்கு 25இலட்சம் ரூபாய் பெறு­ம­தியும் பகுதி அளவில் பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு 1 இலட்­சத்தில் இருந்து சேதா­ரத்­திற்கு ஏற்ற வகையில் பணம் வழங்­கப்­படும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நாட­ளா­விய ர்தியில் இருந்தும் சர்­வ­தேச ரீதியில் இருந்தும் பல்­வேறு நிவா­ர­ணங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
அதேபோல் அர­சாங்கம் பதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 145 மில்­லியன் ரூபாய் தொகையை ஒதுக்­கி­யுள்­ளது. அதேபோல் சர்­வ­தேச நாடுகள் நிதி­யு­தவி செய்ய விரும்பும் பட்­சத்தில் அதற்­கான வச­தி­க­ளையும் மத்­திய வங்கி செய்து கொடுத்துள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த நபர்கள் தாம் விரும்பும் பணத்தை அவர்களின் நாட்டு பணமாகவே செலுத்தும் வகையில் ஐந்து வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற உதவிகளையும், மீட்புப்பணிகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது முப்படைகளை கொண்டே சசல நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பின் மூலமாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.        நன்றி வீரகேசரிரோஹிதவுக்கு பிணை.!


24/05/2016 அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபயகுணவர்தனவுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஒரு இலட்சம் ரொக்கப் பிணையிலும் 100 இலட்ச நான்கு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முறைக்கேடான முறையில் சொத்து திரட்டியுள்ளார் என்ற குற்றஞ்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், அவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி
யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை

25/05/2016 யாழ்.மாவட்­டத்தில் அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்டு உள்­ளிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் உடன்கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தோடு சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் கைது செய்­யப்­ப­டு­வார்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர உறு­தி­ய­ளித்­துள்ளார்.
அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீல­கண்டன் உள்­ளிட்ட புத்­தி­ஜீ­விகள் குழு­விடம் மேற்­கு­றித்த உறு­தி­ய­ளிப்பை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­தர நேற்று வழங்­கி­யுள்ளார்.
சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம் புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெய­சுந்­த­ர­விற்கும் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நதான் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்­றத்தின் தலைவர் கந்­தையா நீல­கண்டன் உள்­ளிட்ட குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான இந்த சந்­திப்பு நடை­பெற்­றது.
சந்­திப்­பின்­போது யாழ் மாவட்­டத்தில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்ள வாள்­வெட்­டுச்­சம்­ப­வங்கள் ஆவா உள்­ளிட்ட குழுக்­களின் குற்­றச்­செ­யல்கள் மற்றும் வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் போன்­ற­வற்றை உடன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ருதல், பொது­மக்கள் பாது­காப்பு நிலை­மைகள் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது.

இதன்­போது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெய­சுந்­தர, குறித்த விட­யங்கள் தொடர்­பாக அதிக கவனம் செலுத்­து­வ­தாக தெரி­வித்­த­தோடு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சிலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­மை­யையும் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் வாள்­வெட்டு மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய அனை­வரும் கைது செய்­யப்­ப­டு­வார்கள் எனவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.
இச்­சந்­திப்பு தொடர்­பாக கருத்து வெ ளியிட்ட அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், பொலிஸ்மா அதி­ப­ரு­ட­னான சந்­திப்பு திருப்­தி­க­ர­மாக அமைந்­தி­ருந்­தது. யாழில் இடம்­பெறும் குற்றச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் எமது கருத்­தோடு பொலிஸ்மா அதி­பரும் இணங்­கி­யுள்ளார். அத்­தோடு பொலிஸ் மா அதிபர் இவ்­வி­ட­யத்தில் நேர­டி­யாக தலை­யீடு செய்­ய­வேண்­டு­மென கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க கூடிய வகையிலான தமிழ் மொழியிலான துரித தொலைபேசி அழைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டுமெனக் கோரியுள்ளேன் என்றார்.   நன்றி வீரகேசரிவற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது  : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

25/05/2016 கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது.
தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன.
இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நன்றி வீரகேசரிதோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. இதனால் தமிழ் முற்போக்கு முன்னணியினர் நாளை திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி காலாவதியாகியிருந்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி ஒருவருடமும் 2 மாதங்களும் ஆகின்றபோதிலும் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா கூட சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இயற்கை அனர்த்தம் ஒரு பக்கம் அவர்களை வாட்டிவருகின்றது. மறுபக்கம் விலைவாசி ஏற்றம் அவர்களை படாத பாடுபடுத்துகின்றது. இந்த நிலையில் விலைவாசிக்கு ஏற்ற சம்பள உயர்வு இன்மையினால் அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்த விடயம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தன. 7 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் இணக்கம் தெரிவிக்கவேயில்லை.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழச்சியடைந்துள்ளதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பள அதிகரிப்பு விவகாரமானது இழுபறி நிலைக்கு சென்றிருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றிருந்தது. இந்தத் தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் இதனை பெற்றுக்கொடுப்போம் என்றும் மலையகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் உறுதிவழங்கியிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது சம்பள உயர்வு விடயம் தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிய மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தன. இதனால் தேர்தலின் பின்னர் தமக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னரும் சம்பள உயர்வு என்பது வெறும் கானல்நீராக மாறியிருக்கின்றது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் விரக்திநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் மறுப்பு தெரிவித்ததையடுத்து தொழிலமைச்சர் ஜோன் செனவிரட்ணவின் தலைமையில் தொழிற்சங்கத்தினரும் முதலாளிமார் சம்மேளனத்தினரும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதிலும் எந்தவித இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை. அரசாங்கம் இருதரப்பையும் இணங்கச்செய்வதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சியும் தோல்வியடைந்திருந்தது.
இதனையடுத்து கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் தனியார்துறையினருக்கு வழங்கப்படவேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டுமென்று அரசாங்கம் அறிவித்திருந்தது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இதற்கான பரிந்துரையைச் செய்ததுடன் இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.
ஆனாலும் 2500 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாத சம்பளத்துடன் இந்தத் தொகை அதிகரிக்கப்படவேண்டுமென்றும் இல்லையேல் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியநிலை ஏற்படும் என்றும் தொழில் அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்த ஏப்ரல் மாத சம்பளத்துடனாவது 2500 ரூபா அதிகரிப்பு சேர்க்கப்படுமென்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
இந்தப் பின்னணியில் கடந்த 10 ஆம் திகதிக்குள் இந்த சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்றும், இல்லையேல் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு முன்ணணியினர் அறிவித்திருந்தனர். கடந்த மே தினத்தன்று தலவாக்களையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய முன்ணணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உபதலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், ஆகியோர் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் வழங்கிய காலக்கெடுவும் தற்போது முடிவடைந்திருக்கின்றது. இதனாலேயே இன்றைய தினம் தொழிற்சங்க ரீதியிலான போராட்டத்தை தமிழ் முற்போக்கு முன்னணியினர் ஆரம்பிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம் ஆகியோருக்கும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அபிவிருத்தி உபாய முறைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஆகியோருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தே முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டபின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் மாறாக தொழிலாளர்களுக்கு தோட்டங்கள் தோறும் 2 ஏக்கர் நிலமளவில் வழங்கி அதில் உப பயிர்ச்செய்கைகளை தொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு வசதி செய்வதாகவும் இதன் மூலம் தோட்டத்தொழிலாளர்கள் வருவாயை தேட முடியும் என்று முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனை முன்வைத்ததாகவும், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார்.
முதலாளிமார் சம்மேளனத்தினரின் இந்த யோசனையை சாதகமாக பரிசீலிக்க முடியும் என்றும் ஆனால் முதலில் இடைக்கால நிவாரணமாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சாதகமான பதில் கிடைக்காமையினால் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது என்று தமிழ் முற்போக்கு முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.
உண்மையிலேயே 1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தற்போதைய நிலையில் சாத்தியப்படாத ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்குக்கூட தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் பின்னடிப்பதும் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது நழுவல்போக்கை கடைப்பிடிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.
எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நா .ௌான்றுக்கு 100 ரூபா வீதம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அழுத்தங்களை மலையக அரசியல் தலைமைகளும் தொழில்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து வழங்கவேண்டும். முதலில் தற்காலிக நிவாரணமாக இந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிக்கவேண்டும். இதனைவிடுத்து அரசியல் போட்டா போட்டிகளில் அரசியல் தலைமைகள் ஈடுபடுமானால் இறுதியில் பாதிக்கப்படப்போவது மலையக தோட்டத் தொழிலாளர்களேயன்றி வேறு யாருமில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.         நன்றி வீரகேசரிஜப்பான் பறந்தார் ஜனாதிபதி.!


25/05/2016 ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் EK 348 விமானத்தினூடாக ஜப்பான் பயணமானார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.      நன்றி வீரகேசரி
அரநாயக்க பகுதியில் : அமெரிக்க தூதுவர்.! 


25/05/2016 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உட்பட ஒரு குழுவினர் இன்று காலை அரநாயக்க பகுதியிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையின் உறுப்பினரான பய்சல் முஸ்தப்பா மற்றும் பேரிடர் அபாய குறைப்பு தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டாக்டர் மைக்கல் ஜே அர்னஸ்ட் போன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
அமெரிக்கா அரயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கிய  நன்கொடையை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே இவ்வாறானதொரு விஜயத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி


கிழக்கு மாகண முதலமைச்சருக்கு தடை.!

26/05/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு முப்படை தளங்களுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை “ இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு ”  திட்டிய காணொளி இணையத்தளங்களில் வெளியானது.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பிலான அறிக்கை பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி
கடற்படை அதிகாரி சம்பவம் : மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை


26/05/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர்  நஷீர் அஹமட் கடற்படை அதிகாரியொருவரிடம் தரக்குறைவாக நடந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான  விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் படையினரிடம் இவ்வாறு தரக்குறைவாக நடந்துக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அறிக்கையில், 
திருகோணமலை - சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை  அவ மரியாதையாக பேசியமை கண்டிக்கத்தக்கதாகும்.
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்துக்கொண்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும். 
இவ்வாறு படையினரை வடக்கு அரசியல்வாதிகள் அவமதிப்பது முதற்தடவையல்ல. சில நாட்களுக்கு முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அனுமதியின்றி  இராணுவப்படை முகாமுக்குள் பிரவேசித்திருந்தனர்.
குறித்த  விடயத்தில் தற்போதைய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில்  அரசாங்கம்   அமைதியாக செயற்பட முடியாது. முறையான விசாணையை மேற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கெதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி
வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

26/05/2016 யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக இன்று வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு  நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.  
'வடமாகாணத்தில் 750 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னர் கூறியது. தொடர்ந்து 850 பேருக்கு வழங்கவேண்டியுள்ளது என்று கூறினர். அதன் பின்னர் 1,000 பேருக்கு மேல் வழங்கவேண்டியுள்ளதாக கூறுகின்றனர். 

யாழ்ப்பாணத்தில் 350 பேர் இருக்கின்றோம். இதனைத்தவிர வடமாகாணத்தின் மிகுதி மாவட்டங்களையும் சேர்த்தால் 1000 என்ற தொகை வராது. எண்ணிக்கை எவ்வாறு கூடுகின்றது என்பது தெரியாமல் உள்ளது' என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
'ஏற்கெனவே 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் வரையில் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனத்தை தராமல், ஏன் எண்ணிக்கையை கூட்டிச் செல்கின்றார்கள் என்று தெரியாது. 

மத்திய அரசாங்கத்தால் 1,000 பேருக்கான நியமனம் தரப்பட்டால், எங்களுக்கான நியமனமும் வழங்கப்படும் என்கின்றனர். முதலில் எங்களுக்குத் தாருங்கள். அதன் பின்னர் புதியவர்கள் பற்றி சிந்தியுங்கள்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். 
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த முதலமைச்சர், இரண்டு கிழமைக்குள்  நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற  உறுதிமொழியை வழங்கினார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.   நன்றி வீரகேசரி


ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.!

01-Welcome-by-two-Children’s
26/05/2016 ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர். 
msatjapan_2016526
இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது. 
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
msatjapan_20165262
இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது. 
இதனையடுத்து, ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புகளின் வர்த்தக அமைப்பின் தலைவர் மற்றும் ஒனோமிச்சி டொக்யார்ட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 
03-Welcome-by--Hon.Hideaki---Oomura,-Governor--of-Aichi-Prefecture
ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி  இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரிநாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

26/05/2016 மேல்மாகாணத்தின்  முன்னாள்  பொலிஸ் மா அதிபரும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான  அனுர சேனநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும்  ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் தொடர்பில் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வசீம் தாஜூதினின் கொலை வழக்கு தொடர்பாக   கடந்த திங்கட்கிழைமை (23) கைதுசெய்து   விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொழும்பு மேலதிக நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரிஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது

26/05/2016 அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல  பணம் பெற்றுக்கொண்டதாகக்  கூறப்படும்  இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நான்கு பேரை இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் நால்வரையும் தமிழ்நாடு கோயம்புத்தூர்  பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன்  (31),  தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கும்புடிப்பூண்டி, கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த அறுவரிடம்  தலா 70,000 ரூபா வீதம் 370, 000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை பறிகொடுத்த கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த முத்துராஜ்  என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
கொத்தூர்  அகதி முகாமைச் சேர்ந்த  முத்துராஜ் உட்பட வின்சன் ராஜ் , சிவராஜன், ராமஜெயம்,சதீஸ், ஜெயந்தன்  ஆகியோரே இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு தற்போது சென்னை புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கோயம்புத்தூர் பொலிஸார் தெரிவித்தனர்.   நன்றி வீரகேசரி

விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் புல­னாய்­வா­ளர்கள் அணியை வழிநடத்திய ஆதவன் மாஸ்டர் கைது

27/05/2016 தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்தர் எனக் கூறப்­படும் ஆதவன் மாஸ்டர் எனும் அய்­யாத்­துரை மோகன்தாஸ் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல் கள் தெரி­விக்­கின்­றன.
இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்ட போது, கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து அவர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவ­கச்­சேரி - மற­வன்­பு­லவு பிர­தேச வீடொன்றில் தற்­கொலை அங்கி உட்­பட வெடிப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராக கரு­தியே அவர் கைது செய்­யப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.
இது குறித்து பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் கீழ் முன்­னெ­டுக்­கப்பட்டு வரும் விசா­ர­ணை­களில் இது­வரை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தைச் சேர்ந்த புல­னாய்­வா­ளர்கள் 15 இற்கும் மேற்­பட்டோர் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் குறித்த அணியை ஆதவன் மாஸ்­டரே வழி நடத்­தி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளியாகியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில், யாழ்ப்­பா­ணத்தில் உள்ள ஆதவன் மாஸ்­டரின் வீட்டை பயங்­க­ர­வாத புல­னாய்வு பிரி­வினர் சோத­னை­யிட்­ட­போதும் அவர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்தார். இந் நிலை­யி­லேயே நேற்று முன் தினம் கட்­டு­நா­யக்க ஊடாக இந்­தி­யா­வுக்கு தப்பிச் செல்ல முற்­பட்­ட­போது ஆதவன் மாஸ்டர் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.
போர் நடை­பெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிர­தே­சங்­களில் புலி­களின் புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக செயற்­பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.   நன்றி வீரகேசரிஜீ - 7 மாநாட்டில்  பல நாட்டு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ( மேலதிக படங்கள் இணைப்பு )

27/05/2016 ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பல நாட்டு அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

28/05/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது கடற்படை அதிகாரியிடம் தரக்குறைவாக நடந்தமைக்கு முதலமைச்சருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், “யுத்த வெற்றி வீரர்களை பாதுகாப்போம்'  போன்ற பல பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன.    நன்றி வீரகேசரி