தமிழ் சினிமா


கவலை வேண்டாம்ஜீவா-காஜல் அகர்வால் இருவருமே தற்போது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்கள். இந்நிலையில் யாருமிக்க பயமே படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் கவலை வேண்டாம். இப்படம் ஜீவா-காஜலுக்கு ஹிட் கொடுத்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஜீவா-காஜல் ப்ரேக் அப்புடன் தொடங்குகின்றது. ஜீவா சொந்த ஊரில் இதையெல்லாம் மறந்து நண்பர்களுடன் ஜாலியாக இருக்கின்றார்.
காஜல் தன் ஸ்டேட்டஸுக்கு ஏற்ற மாப்பிள்ளையாக பாபி சிம்ஹாவை தேர்ந்தெடுக்கின்றார், அதற்காக ஜீவாவிடம் விவாகரத்து வாங்க செல்கின்றார்.
நண்பர்கள் கொடுக்கும் யோசனையால் ஜீவா ஒரு வாரம் என்னுடன் மனைவியாக சேர்ந்து வாழ் என்று சொல்ல, அதன் பிறகு காஜல் எடுக்கும் முடிவு என்ன? என்பதே இந்த கவலை வேண்டாம்.

படத்தை பற்றிய அலசல்

ஜீவா இது தான் நம்ம ரூட்டுன்னு பல வருஷம் கழிச்சு பிடிச்சிருக்கிறார். பெரும்பாலும் என்றென்றும் புன்னகை சாயல் நிறையவே தெரிகின்றது, என்ன சந்தானம் மட்டுமே மிஸ்.
காஜல் முதன் முதலாக படம் முழுவதும் ‘நடித்துள்ளார்’. ஆம், வெறும் பாட்டு மட்டுமில்லாமல் தன் குண்டு கண்களை உருட்டி ரசிகர்களை கவர்ந்து செல்கின்றார்.
பாலாஜி போன வாரம் என்ன பார்த்தோம், கடவுள் இருக்கான் குமாரு, அந்த வசனத்தின் அப்கிரேட் தான் இந்த கவலை வேண்டாம். சந்தானத்தை மிஸ் செய்கின்றோமோ என தோன்ற வைக்கின்றது.
படம் அடல்ட் ஒன்லீ என கூறிவிடலாம், ஏனெனில் பல இடத்தில் கத்திரி விழுந்துள்ளது. அதிலும் போலிஸ் ஸ்டேஷனில் செய்யும் அட்டகாசம் சிரிப்பு கேரண்டி.
படத்தின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படம் போல் உள்ளது. கலர்புல்லாக இருக்க, அனைவரும் அழகாகவும் நடித்துள்ளனர், லியோன் ஜேம்ஸ் இசையும் ரசிக்க வைக்கின்றது.

க்ளாப்ஸ்

ஜீவா-காஜலின் கலர்புல் ஜோடி.
மயில்சாமி எல்லாம் நிறைய கதாபாத்திரம் கொடுங்கப்பா..என்று கூறும் அளவிற்கு கலக்கியுள்ளார்.
படத்தின் முதல் பாதி, ஒளிப்பதிவு, இசை.

பல்ப்ஸ்

கொஞ்சம் இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது போல் பீலிங்.
பாபி சிம்ஹா உங்களுக்கு என்ன தான் ஆச்சு?
மொத்தத்தில் எந்த ஒரு லாஜிக்கும் பார்க்காமல் ஒரு முறை கவலையை மறந்து ஜாலியாக சென்று வரலாம்.
Direction:
Production:
Music:

நன்றி  cineulagam

No comments: