04/11/2016 சென்னை அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலை அறிக்கை
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பலோ வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பாதுகாப்பு 
ஜெயலலிதாவின் சுகயீன செய்தியை அறிந்த ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அப்பலோ வைத்தியசாலை வளாகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெண்கள் கதறி அழுது வேண்டுதல்ஜெயலலிதாவின் உடநிலை சீராக வேண்டும் என கோரி ஆயிரம் கணக்கான பெண்கள் நடு வீதியிலும் வைத்தியசாலை வளாகத்திலும் கதறி அழுது வானத்தை மன்றாட்டம் செய்தனர்.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
 அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி