துபாயில் டிசம்பர் 9-ஆம் தேதி எஸ்.பி.பி. 50 சிறப்பு இசை நிகழ்ச்சி

.


துபாய் : துபாயில் டிசம்பர் 9-ஆம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பங்கேற்கும் சிறப்பு இசை நிகழ்ச்சி துபாய் டூட்டி பிரி டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 
எஸ்.பி.பியின் 50 ஆண்டு கால இசைப்பயணத்தை நினைவு கூறும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக துபாயில் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. 
அமீரக ரசிகர்களை தனது குரல் வளத்தால் கட்டிப்போட்டுள்ள எஸ்.பி.பி பங்கேற்கும் இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் கே.எஸ். சித்திரா, எஸ்.பி. சைலஜா, எஸ்.பி. சரண், ஸ்வேதா மோகன் மற்றும் கார்த்திக் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர். 
இந்திய திரையுலகுக்கு தனது குரல் வளத்தால் மிகப்பெரிய பங்களிப்பினை அளித்துள்ள எஸ்.பி.பி-க்கு இந்த நிகழ்ச்சி மேலும் கௌரவம் சேர்க்கும் வகையில் அமையும். ஒவ்வொரு பாடகரும் தனக்கு பிடித்த எஸ்.பி.பியின் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்த இருக்கின்றனர். 
தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார் எஸ்.பி.பி. 
இப்படிப்பட்ட சாதனை நாயகனின் இசை நிகழ்ச்சியைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை பெற 056 7605166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.   

No comments: