ஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்
முதல்வரானார் பன்னீர் செல்வம்
2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
டொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு
சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா
அவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான தமிழன்
ஹிலாரி கிளின்டன் மற்றும் பில் கிளின்டன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ள டொனால்ட் டிரம்ப்
11/10/2016 பெண்களை பாலியல் ரீதியில் பற்றுவது மற்றும் முத்தமிடுவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியுள்ள அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனின் கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டன் ஆகியோர் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்துள்ளார்.
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பில் மறுப்புத் தெரிவித்துள்ள அவர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஹிலாரி கிளின்டனுடன் பங்கேற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு பில் கிளின்டன் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை வாரி இறைத்துள்ளார்.
அரசியல் வரலாற்றில் பெண்கள் தொடர் பில் பில் கிளின்டன் அளவிற்கு துஷ்பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என அவர் கூறினார்.
இந்நிலையில் தனது கணவர் தொடர்பில் டொனால்ட் டிரம்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விமர்சனம் எதனையும் வெளியிட ஹிலாரி மறுத்துள் ளார்.
டொனால்ட் டிரம்ப் பெண்களை பற்றுவது மற்றும் முத்தமிடுவது குறித்து தற்பெருமை பேசும் 2005 ஆம் ஆண்டு கால காணொளிக் காட்சி தொடர்பில் அந்த விவாத நிகழ்ச்சியின் நடுவரான அன்டர்ஸன் கூப்பர் வினவியதையடுத்தே டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதன் போது ஹிலாரி கிளின்டன், வெளியாகியுள்ள குறிப்பிட்ட காணொளிக் காட்சியானது டொனால்ட் டிரம்ப் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை காண்பிப்பதாக உள்ளதாகக் கூறினார்.
சென்.லூயிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த விவாத நிகழ்ச்சியானது டொனால்ட் டிரம்பும் ஹிலாரியும் இணைந்து பங்கேற்கும் 3 ஜனாதிபதி தேர்தல் பிரசார விவாத நிகழ்ச்சிகளில் இரண்டாவது விவாத நிகழ்ச்சியாகும்.
இதன்போது டொனால்ட் டிரம்ப், தான் ஜனாதிபதியாக தெரிவானால் ஹிலாரி கிளின்டன் அரசாங்க விவகாரங்களை தனது தனிப்பட்ட இலத்திரனியல் அஞ்சல் மூலம் பரிமாறிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட விசாரணையாளரை நியமிக்கவுள்ளதாகவும் அத னால் அவர் சிறை செல்ல நேரிடும் எனவும் சூளுரைத்தார்.
அத்துடன் ஹிலாரியின் ஆதரவாளர்களை வருந்தத்தக்கவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஹிலாரி பதிலளிக்கையில், தன்னுடைய விவாதம் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் பற்றியது அல்ல எனவும் அது அவரது வெறுப்பூட்டும் பிரிவினைவாத பிரசாரம் பற்றியதாகும் என்று கூறினார்.
மேற்படி விவாத நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப், பில் கிளின்டன் பாலியல் ரீதியில் தம்மை தவறாக நடத்தியதாக குற்றஞ்சாட்டிய 4 பெண்களுடன் பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டார்.
முன்னாள் அர்கன்ஸாஸ் மாநில பணியாளரான போலா ஜோன்ஸ், அர்கன்ஸாஸ் மாநில மருத்துவ பராமரிப்பு நிலையமொன்றின் நிர்வாகியான ஜுவானிதா புரோட்றிக், வெள்ளை மாளிகை முன்னாள் உதவியாளரான கத்லீன் வில்லே மற்றும் கதே ஷெல்டன் ஆகியோரே மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அந்த 4 பெண்களுமாவர்.
போலா ஜோன்ஸால் தாக்கல் செய்யப்பட்ட பாலியல் தாக்குதல் வழக்கின் நிமித் தம் பில் கிளின்டன் 1999 ஆம் ஆண்டு அவருக்கு 850,000 அமெரிக்க டொலரை செலுத்தியிருந்தார். அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில் அந்தப் பணத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜுனைதா, 1978 ஆம் ஆண்டு ஹோட்டல் அறையொன்றில் வைத்து பில் கிளின்டன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்ததாக தெரிவித்திருந்தார்.
அதேசமயம் கத்லீன் வில்லே, 1993 ஆம் ஆண்டு பில் கிளின்டன் தன்னை பாலியல் ரீதியல் தவறான முறையில் பற்றியிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இதற்கு முன்னர் அப்படியொரு சம்பவமே இடம்பெறவில்லை என வாதிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இந்தப் பத்திரிகையாளர் மாநாட்டில் பங்கேற்ற நான்காவது பெண் ணான கதே ஷெல்டன், தான் 12 வயதில் பில் கிளின்டனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பில் கிளின்டனுக்கு ஆதரவாக ஹிலாரி நீதிமன்றத்தில் வாதிட்டதாகவும் குற்றஞ் சாட்டினார்.
நன்றி வீரகேசரி
முதல்வரானார் பன்னீர் செல்வம்
12/10/2016 முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த துறைகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2016-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
11/10/2016
2016-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்க ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிவர் ஹார்ட் மற்றும் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் பெங்ட் ஹோம்ஸ்ட்ரோம் ஆகியோருக்கு அறிவிக்கபட்டுள்ளது.
குடிமக்கள், அரசுகள், வர்த்தகங்கள், பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னிலை நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனம் மற்றும் கார் முதலாளிகள் என்று ஒப்பந்த உறவுகளை, அதாவது வாழ்க்கையில் உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதற்காக இவர்களுக்கு இந்த நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்களில் பொதுகாக எதிரெதிர் இரட்டை நலன்கள் இருப்பது வழக்கம் எனவே ஒப்பந்தங்களை வடிவமைப்பதில் இருதரப்பினரும் பயனுள்ள முடிவுகளை எடுக்கும் விதமான ஒப்பந்தங்களை வடிவமைக்க வேண்டும்.
இந்த நோபல் பொருளாதார அறிஞர்கள் ‘ஒப்பந்தக் கோட்பாடு’ ஒன்றை உருவாக்கினர். ஒப்பந்த வடிவமைப்பில் உள்ள பல்வேறு சட்டகங்கள், சிக்கல்கள், ஆகியவற்றை ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தின் கீழ் வடிவமைப்பின் கீழ் கொண்டு வர இவர்களது ஆய்வு உதவி புரிகிறது.
உதாரணமாக முதன்மை செயலதிகாரிகளின் வேலைத்திறமைக்கேற்ப சம்பளம் நிர்ணயம் செய்வது, பொதுத்துறை நடவடிக்கைகளை தனியார்மயப்படுத்துவது குறித்த ஒப்பந்த வடிவமைப்புகள் என்று இவர்கள் ஆய்வு ஒருங்கிணைந்த ஒப்பந்தம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியதற்காக நோபல் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய ஒப்பந்தங்கள் பலவும் இவரது ஒப்பந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்றால் மிகையாகாது, அரசியல் சட்ட வடிவமைப்புகள் முதல் திவால் சட்டங்கள் வரை அனைத்துக் கொள்கை வடிவமைப்புகளுக்கும் இவர்களது கோட்பாடுதான் ஒரு அறிவார்த்த சட்டகத்தையும் அடித்தளத்தையும் வழங்குகிறது. நன்றி தேனீ

14/10/2016 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தமது சம்மதமின்றி தம்மை பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்ததாக 5 பெண்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேற்படி பெண்களில் முன்னாள் பெண் வர்த்தகப் பிரமுகரான ஜெஸிக்கா லீட்ஸ் (தற்போது 74 வயது) மற்றும் ரேசல் குறூக்ஸ் ஆகிய இரு பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க 'நியூயோர்க் டைம்ஸ்' ஊடகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
தான் 38 வயதில் விமானமொன்றில் வைத்து டொனால்ட் டிரம்பால் பாலி யல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஜெஸிக்கா தெரிவித்தார். விமானத்தின் முதல் வகுப்பில் டொனால்ட் டிரம்பின் ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில் தான் அமர்ந்து பயணித்த போது அந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
டொனால்ட் கடல்வாழ் உயிரினமான 'ஒக்டோபஸ்' போன்ற ஒருவர் எனவும் அவருக்கு எல்லாவிடத்திலும் கரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் மின்டி மக்கில்லிவ்ரே (36 வயது) என்ற மூன்றாவது பெண் பாம் பீச் போஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், 13 வருடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் மார்ஏலோகோ மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் புகைப்படம் எடுக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவருக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியில் தவறான முறையில் பற்றிப் பிடித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நான்காவது பெண்ணான முன்னாள் அமெரிக்க அழகுராணிப் போட்டியாளர் கஸ்ஸண்ட்ரா சியர்லெஸ் தனது பேஸ் புக் இணையத்தளப் பக்கத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டில், டொனால்ட் டிரம்ப் தன்னை அவரது ஹோட்டல் அறைக்கு வரவழைத்து பாலியல் உறவில் ஈடுபட முயற்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்த ஐந்தாவது பெண் 'பீப்பிள்ஸ்' சஞ்சிகையின் எழுத்தாளரான நடாஷா ஸ்ரோய்னோப் ஆவார். பேட்டியொன்றை எடுக்க டொனால்ட் டிரம்பை சந்திக்கச் சென்ற போது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயற்சித்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில் மேற்படி பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித் துள்ளார். நன்றி வீரகேசரி
சுவிஸிலுள்ள இலங்கை அகதிகள் குறித்து முக்கிய சந்திப்பு நவம்பரில் ; தர்சிகா
15/10/2016 சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார்.
சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதியின் அழைப்பின் பெயரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் நான் இச்சந்திப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளேன். என் மீது நல்லதொரு நம்பிக்கை சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் முக்கிய சந்திப்பின் போது எமது மக்களின் பிரச்சினைகளை தெளிவாக அவர்களுக்கு எடுத்துத்துரைப்பேன்.
சுவிற்ஸர்லாந்தில் தற்போது அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாழும் இலங்கையர்களின் இருப்புக்கு இன்று பாரிய கேள்விக்குறியேற்பட்டுள்ளது.
இது குறித்து சுவிஸர்லாந்து மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிஸ் அரசாங்கத்தின் இந்த முடிவில் எப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அல்லது இதற்கான மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்த முடியும். அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சுவிஸர்லாந்தில் எப்படியான நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளேன்.
சுவிஸில் தஞ்சமடைந்துள்ளவர்கள் என்னுடன் அன்றாடம் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணமுள்ளனர். அவர்களுக்கு நான் சந்திப்பின் பின்னர் சரியான நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவிற்ஸர்லாந்தின் உப ஜனாதிபதியும் நீதி மற்றும் பொலிஸ்துறை அமைச்சருமான சைமனேட்டா சொமாருகா, புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் மிக முக்கிய ஒப்பத்தத்தில் இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அவுஸ்ரேலிய இராணுவத்தில் மேஜரான தமிழன்
14/10/2016 புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment