'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் இளைஞர் அணியினராகிய நாம் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களின் விபரங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் காலடி வைத்திருக்கின்றோம். நல்ல தரமான தமிழ் எழுத்தாளர் இம்மண்ணில் இருக்கின்றார்கள், அவர்களின் திறமைகளை உலகுக்குப் பறை சாற்றும் முயற்சியே இப்பணியாகும். எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ம் 22ம் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில், அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் விபரங்களை காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மேலும், எதிர்வரும் காலங்களில் இவ்விபரங்களை அவுஸ்திரேலியக் கம்பன் கழக இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யவுள்ளோம். அத்தோடு, ஒவ்வொரு வருடமும் இவ்விபரங்கள் மேம்படுத்தப்பட்ட வண்ணம் இருக்கும் என்பதும் எம் திட்டமாகும்
இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நாங்கள் எழுத்தாளர் பெயர்ப் பட்டியல் அடங்கிய விபரக்கொத்தொன்றை ஒன்றை எம்மால் முடிந்தளவு தயாரித்து, அவர்களிடம் வினாக்கொத்து ஒன்றைச் சேர்ப்பித்து, அதன் மூலம் அவர்களின் படைப்புகள்
பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறோம். பதில் அனுப்பிய சில எழுத்தாளர்கள் பதிலுடன் தமது பாராட்டுகளையும் தெரிவித்து எம்மை ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். அவற்றுள் சில:
'தாங்கள் மேற்கொண்டிருக்கும் ஆக்கபூர்வமான பணிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்பு முழுமையாகவும் சிறப்பாகவும் அமையவேண்டும் என வாழ்த்துகின்றேன்.' - முருகபூபதி
'நல்ல முயற்சி. அதே வேளை வல்ல முயற்சி! இலக்கிய முயற்சிகள் மேலும் வளர்ச்சியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.' - எம் . ஜெயராமசர்மா.
'உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுகள்' - கே.எஸ்.சுதாகர்
'நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒரு நல்ல பயன் தரக் கூடிய விடயம். வெற்றி பெற வாழ்த்துக்கள்' - பொன் பூலோகசிங்கம்
'ஆவணப் படுத்துதல் என்பது எமது கலாச்சாரத்தில் ஒரு அங்கம். இளைஞர்களாக நீங்கள் முன் வந்து இப்பிடி ஒரு செயற்பாட்டைச் செய்யவது மிகவும் பாராட்டத்தக்க விடயம். உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்' - நந்திவர்மன்
மேலும் இந்த திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (ATBC) வானொலியில் கவிஞர், எழுத்தாளர் மற்றும் அறிவிப்பாளர் திரு. செல்லையா பாஸ்கரனுடன் 15.09.2016 அன்று நடாத்தி இருந்தோம்.
பலரிடமிருமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட வினாக் கொத்துகள் இன்னும் வர இருக்கின்றன, அவற்றை விரைவில் எம்மிடம் அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம். அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் பற்றிய விபரங்களை நீங்கள் தெரியப்படுத்த விரும்பினால் info@ kambankazhagam.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளவும் .
உங்கள் வரவால் கம்பன் விழாவைச் சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
'கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்'
மாதுமை கோணேஸ்வரன்
திட்ட ஒருங்கிணைப்பாளர் - படைப்பிலக்கியத் தேடல்
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்
https://www.youtube.com/watch?v=AE86rewx_Y4&authuser=1
No comments:
Post a Comment