கம்பன் விழாவிற்கான அன்பு அழைப்பு - ஒக் 21, 22 23.


உலகம் உவக்கும் முத்தமிழ்க் கம்பன்
அக்கவிப் புலவனால்,
நம் தமிழினம் உலகில் தலை நிமிர்கின்றது.
கம்பனுடைய கவிதையினால்
உலகம் முழுவதையும் தரிசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டிற்று.
கம்பகாவியம் ஒர் அற்புத அமுதபாத்திரம்.
அறத்தினை அள்ளி அள்ளி எடுக்கக் குன்றாது,
பல நூற்றாண்டுகளாய் அது கொட்டித்தருகின்றது.
இக்கவிஞரின் விரிந்த ஆழமான உண்மையான சிந்தனை,
தமிழர்களின் பெருமையை உலக அரங்கில்,
இன்றுவரை நிலைநிறுத்தி நிற்கிறது. 
கம்பன் காட்டிய வழியிலேயே,
தமிழினம் இன்றுவரை தலைநிமிர்ந்து நடக்கிறது.
அப் பெரும் புகழோன்தன்னைப் போற்றிப் பாராட்டுதல் நம் தலைக்கடன்.
நம் அடுத்த தலைமுறையினருக்கு, பொருட் சொத்தைக் கொடுப்பதைவிட, கம்பனது அருட்சொத்தைக் கொடுப்பதே நம் தலையாய கடமை. 
அக்கடமையை இயற்ற, தாய்நாட்டைக் கடந்த பின்பும்,
தமிழர்களான நாம் முயலவேண்டும்.நம் குழந்தைகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்களாய் வளர்த்தெடுக்க, கம்பன் ஒருவனே நமக்குக் கைகொடுப்பான்.
அக் கவிச் சக்கரவர்த்தியை, நம் இளையோர்தமக்கு அறிமுகம் செய்யவும்
அவன் கவிக்கடலில் ஆழ்ந்து மூழ்கி,
கவி இன்பம் - அற இன்பம் - பக்தி இன்பம் என,
இவ்வின்பங்களை ஏற்றமுற அனுபவிக்கவும்,
நாம் கம்பனுக்கு விழா எடுக்கத் துணிகின்றோம்.
இக் கம்பன் விழா வெறும் கம்பன் விழா அல்ல.
தமிழர்களைத் தமிழர்களாக்கும் விழா!
தமிழர்களை அறவோர் ஆக்கும் விழா!
தமிழர்களை மானுடராக்கும் விழா!
இவ்வுயரிய விழாவை நாம் உணர்ந்து உயர்ந்து பயன்படுத்துவோம்.
உங்கள் வரவால் விழாவைச் சிறப்பித்தருள்க.


இவ்வேளையில் எம் அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள்,
நண்பர்கள், தமிழார்வலர்கள், ஊடகங்கள் மற்றும் கம்பன் குடும்பத்தவர்
அனைவருக்கும் எம் உளமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

நன்றி.
'கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்.'

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

https://www.youtube.com/watch?v=LbhAT10B2cs&feature=youtu.be
Sydney Kamban Vizha 2016 Dates: 21, 22 & 23 Oct. Location: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville, NSW. சிட்னிக் கம்பன் விழா 2016 நிகழ்வு நாட்கள்:...


No comments: