தோசை - கவிதை - சௌவி, ஓவியம் ஸ்யாம்

.

ன்னபூர்ணாவில் மசால் தோசை
ஆரிய பவனில் வீட்டு தோசை
சரவண பவனில் ஆனியன் தோசை
வசந்த பவனில் பொடி தோசை
கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை
அஞ்சப்பரில் சிக்கன் தோசை
ஹரி பவனில் காடை தோசை
ஆனந்த பவனில் பூண்டு தோசை
முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை
முனியாண்டி விலாஸில் முட்டை தோசை
ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை
தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை
இவை எதுவும்
சின்னப் பலகையின் மேலமர்ந்து
புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே
அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை
காய்ந்த மரக்குச்சியில் கட்டி
கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும்
எண்ணெயைத் தொட்டுப் பூசி
ஓரங்கள் கருக நீ வார்த்துத் தந்த
தோசைபோல ருசியில்லை அம்மா.

1 comment:

Divya said...

Is it possible to contact the artist behind this? Mr.Shyam?