மௌன அநீதி - தி. சுவாமிநாதன் - நாமக்கல்

.                                                                      
இன்றைக்கு கல்வி வேலைவாய்ப்பு, நகரமயமாக்கல், உலகமயமாக்கல், கணினி, பேஸ்புக், செல்போன் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறது. தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு காதல் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வயது வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ நிச்சயமாக உரிமை உள்ளது. ஆனால், காதல் மணம் புரிபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை மிகவும் அவலமானது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.
தழிழகத்தில் சமீபத்திய நிகழ்ந்த காதல்கள் மீதான படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25.05.2014 அன்று 25 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, லாகூர் உயர்நீதி மன்றத்துக்கு வெளியே சொந்த குடும்பத்தாரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக கவனத்தை பெரிதும்; ஈர்த்தது. குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்து விட்டால் தம்பதிகளை பிரித்து வைக்கவும், ஊர் நீக்கம் செய்யவும், தற்கொலைக்கு தூண்டவும் கூட சிலர் தயாராகி விடுகின்றனர்.




சில நிகழ்வுகளில் பல அப்பாவிகள் கௌரவ கொலைக்கு ஆளாகின்றனர்.
உலகில் நடக்கும் கௌரவ கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வாழ்வைத் துவங்கினாலும் சொந்த குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படுதல் போன்ற கௌரவ சித்ரவதைகளை சந்திக்க நேருகிறது. சில பெற்றோர் தங்களுக்கும், மகளுக்கும் எந்த உறவும் இல்லை எனவும், சொத்தில் பங்கு தர மாட்டோம் எனவும் காவல் துறையில் எழுதித் தருபவர்களும் உள்ளனர். நாகரீக நிலையை நமது சமூகம் இன்றும் அடையவில்லை. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்ற நிஜத்தை ஏற்க மனப்பக்குவமில்லை.
இன்னமும் பெண்கள் ஆண்களைவிட கீழானவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். இந்தியச் சட்டப்படி திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணும்ää ஒரு பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. இதில் யாருமே சட்டப்படி தலையிட முடியாது. பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்லலாம். தோழமையோடு அறிவுரை சொல்லலாம். மற்றபடிää கொலை செய்யவும்ää தண்டிக்கவும் பெற்றோருக்கு உரிமையில்லை. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நம் குடும்ப உறுப்பினர்க்கு (நோயாளிக்கு) ரத்தம் தந்தவர் யார் என்று பார்ப்பதில்லை. ஆனால் திருமணத்தில் மட்டும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. கௌரவ கொலைகள் மிகவும் காட்டுமிராண்டித்தனமானது. பெரும்பாலும் ஜாதிää மதம் காரணமாகவே கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றன. மகனோää மகளோ செய்தது பிடிக்கவில்லை என்றால் அதிகபட்சம் உறவை முறித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினை. உலகம் முழுவதும் இந்த சிக்கல் உள்ளது.
மனிதன் தனது சமூக அந்தஸ்துக்கு பங்கம் வரும்போது கொலை செய்யும் அளவுக்கு போய்விடுகிறான். சில இடங்களில் காதல் திருமணம் செய்பவர்கள் காதலுக்காக மதம் மாற சம்மதித்தால் காதல் அங்கு அனுமதிக்கப்படுகிறது. அது கூட ஒரு வழி பாதைதான். உள்ளே வரலாம். வெளியே போக முடியாது. கடல் போல நிறைந்திருக்கும் சாதி மத நச்சுகளில் இருந்து பல இளம் காதலர்களை காப்பாற்ற முடிவதில்லை.
நம்நாட்டில்ää ஹரியானாவில் உள்ள காப் பஞ்சாயத்துக்கள்தான் கௌரவ கொலைகள் செய்வதில் முன்னனியில் இருக்கிறது. சமயங்களின் அடிப்படை நோக்கங்கள் சிதைந்துவிட்டன. எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. உலகம் தடுமாறி தறிகெட்டு செல்கிறது. மதத்தின் பெயரால்ää இனத்தின் பெயரால்ää சாதியின் பெயரால் மனிதக் கொலைகள் மலிந்துவிட்டன. கௌரவ கொலை என்பது பழைய சமுதாய வழக்கம். ஆனால் இன்னும் நடைமுறையில் உள்ளது. காதலால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாகவும்ää குடும்பத்தின் களங்கத்தை துடைக்க தங்கள் பிள்ளையை குடும்பத்தினரே கொன்று விடுகின்றனர்.
இது போன்ற கௌரவ கொலைகள் தடை செய்யப்படவேண்டும். மனித உயிர் விலை மதிப்பற்றது. பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை மறுப்பதுää சாதி மத எல்லைகளைத் தாண்டி திருமணம் செய்து கொல்வதை சமூகத்தால் ஜீரணிக்க முடியவில்லை. சில இடங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அப்பாவிப் பெண்ணை கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு நல்ல விஷயங்களும்ää அதே நேரத்தில் காலத்திற்கு ஒவ்வாத சில வழக்கங்களும் இருக்கவே செய்கின்றன. மனிதனின் தவறான புரிதலும் குற்றங்களுக்கு காரணமாகிறது. வருடந்தோறும் சுமார் 5000 பெண்கள் கௌரவ கொலைகளுக்கு ஆளாகின்றனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. உண்மையில் கொலை செய்வதில் எந்த கௌரவமும் இருக்க வாய்ப்பில்லை. சுயமாக தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை இன்றைய பெண்களுக்கு உள்ளதா? என்பது கேள்விக்குறியதாக உள்ளது. மனிதாபிமானமற்றää ஈவிரக்கமற்றவர்களால் அப்பாவி காதலர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாக உள்ளது
நல்ல கல்வி இந்த தீமையை குணமாக்கும். வட இந்தியாவில் கௌரவ கொலை இன்றைக்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. எந்த மதமும்ää நாடும் கௌரவ கொலைக்கு விதி விலக்கல்ல. தென் அமெரிக்கா முதல் ஆசியா கண்டம் வரை உலகம் முழுவதும் கௌரவ கொலை நடைபெறுகிறது. இது ஒரு பண்பாட்டு சிக்கல். மனிதனுக்கு தனது சாதிää மதää இன அந்தஸ்து பறிக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சம் ஏற்படுவதால் தான் பெற்று வளர்த்த பிள்ளையை கொல்லவும்ää அதனால்ää தானே பிள்ளையை இழந்துää அனாதையாகவும் தயாராகி விடுகிறான். பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யவும்ää ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெற்றோருக்கு வர வேண்டும். கடுமையான சட்டங்கள் கௌரவ கொலைகளுக்கு எதிராக இயற்றப்பட வேண்டும். புகார் தரப்படாமலும்ää தண்டிக்கப்படாமலும் உள்ள அவல நிலை மாற வேண்டும்.
வயதுக்கு வந்த ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தங்கள் வாழ்க்கையை தங்கள் விருப்பம் போல் அமைத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது. பெரும்பாலான குடும்பங்களில் தமது பிள்ளைகளைவிட சமூக நிலைää அந்தஸ்து ரொம்ப முக்கியமானதாக கருதுகிறார்கள். அந்தஸ்துக்காக தங்கள் பிள்ளைகளை இழக்கவும் துணிந்து விடுகிறார்கள். தீவிரவாதிகள் கூட முன்பின் தெரியாதவர்களைத்தான் கொல்கிறார்கள். இதயமற்ற சிலர் தங்கள் பிள்ளைகளையே கௌரவத்திற்காக கொன்று விடுகிறார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்தெனத் தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். கௌரவ கொலைகளில் அப்பாவிகள் பாதுகாக்கப்பட வேண்டும். நம் பிள்ளைகள் நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்புதான். அன்பானää இனிய வார்த்தைகளுக்கு நிச்சயம் கட்டுப்படுவார்கள். அழுத்த அழுத்த காதல் அமுங்கிப் போய்விடுவதில்லை. வெட்ட வெட்ட முன்னிலும் வேகமாய் துளிர்க்கிறது. இளம் காதலர்கள் மீது பூக்களை வீசுவோம். கற்களை அல்ல. அவர்கள் சாதிää மத சுவர்களை தகர்க்கிறார்கள். வரதட்சனை இன்றிää சாதி மத பேதங்களை பொருட்படுத்தாமல் புது சமுதாயம்ää சமத்துவம் மலர முதல் அடி எடுத்து வைக்கிறார்கள். பெற்றோராகிய நாம் ஏன் அதற்கு தடையாக இருக்க வேண்டும்.